KAILASA Library/கதவைத் திற ... காற்று வரட்டும்!/கோயில்கள்,Sign in
கதவைத் திற ... காற்று வரட்டும்!

கோயில்கள்,

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

சக்தி நிலையங்கள்

கோயில்கள் என்ற அமைப்பை பெரிதும் ஆதரித்திருக்கிறார்.

★ மதம் எதுவானாலும்
தெய்வம் எதுவானாலும்
கோயில்கள் எல்லோருக்கும் பொதுவானது.

★ மனிதரின் சக்தித் தேவையைப் பெருமளவில் பூர்த்திசெய்யும் சக்தி சிகிச்சையளிக்கும் மையங்கள், கோயில்கள்.

★ கோயில், ஆலயம், மசூதி என்ற பெயரில் எல்லா மதங்களும் கோயில் தத்துவத்தை வரவேற்கின்றன.

கோயிலின் தத்துவம் : குணமளிக்கும் சக்திகளைத் தொடர்ந்து வெளியிடும் புனிதக் கட்டடங்களுக்குப் பெயர் கோயில்கள். கோயில்கள் தெய்வ சக்தியான ஆனந்த சக்தியூட்டும் மருத்துவமனைகள்.

★ க...ட...வு....ள்.... இந்த நான்கு எழுத்துக்குள் சுருங்கிப் போகும் அளவுக்கு சிறுசா கடவுள்?

★ கடவுள் என்ற வார்த்தையைத் தெரிந்து கொண்டதாலேயே கடவுளைப் புரிந்துகொண்டுவிட்டீர்களா?

என்ன தெரியும் கடவுள் பற்றி?

  • மேற்கண்ட கேள்விகள் முதலில் ஆத்திகவாதிகளுக்கும் பின் நாத்தீகவாதிகளுக்கும் கேட்கப்படுகிறது.
portrait

கடவுள் உண்டு

என்ற வார்த்தையை

உதிர்த்தால் நீங்கள்
ஆத்திகவாதியாகிட
முடியாது.

வார்த்தை உங்களின்

அனுபவமாகாதவரை

ஆத்திகம் நிகழவில்லை!

ராமகிருஷ்ணர் சொன்ன அழகான கதையொன்று...

அந்த அரசருக்கு பகவத்கீதையைத்
தினம் போதிக்கும் பண்டிதர் கேட்கும்
கேள்வி, "அரசே! நான் இன்று
சொன்னதையெல்லாம் புரிந்து
கொண்டீர்களா?" என்பதே. இதற்கு
எப்போதும் அரசர் சொல்லும் பதில்
கேள்வி, "முதலில் நீங்கள்
இதையெல்லாம்புரிந்துகொண்டீர்களா?"
என்பதே. எவ்வளவோ தயார்செய்தும்,
எவ்வளவு அழகாக விளக்கியும் அரசர்
அதே கேள்வியையே எப்போதும்
கேட்பதால் மனதுக்குள் சஞ்சலப்பட்டுக்
கொண்டேயிருந்தார் பண்டிதர்.

அன்று காலை கீதை வகுப்பிற்குப்
பண்டிதருக்குப் பதில் அரசரைப் பார்க்க
ஒரு ஓலை வந்தது. அதில், "அரசே!
இன்று புரிந்துகொண்டேன். இனி
வரமாட்டேன்" என எழுதியிருந்தது.

பற்றற்று இருப்பது பற்றியும் புலன்களின் சிக்கலிலிருந்து விடுபடுவது பற்றியும் மணிக்கணக்காய் பேசியவருக்கு தான் பேசும் வார்த்தைகள் தனக்கே இன்னும் அனுபவமாகவில்லை என்பது அன்றுதான் துல்லியமாய் புரிந்தது. ஊருக்கு உபதேசம் செய்வதை நிறுத்தி, அன்றிலிருந்து தான் உருப்படுவதற்குச் செயல்பட ஆரம்பித்தார் அவர்.

★ பண்டிதர் தான் புரிந்துகொள்ளவில்லை என்பதைப் புரிந்துகொள்வதற்கே அவ்வளவு காலமானது என்றால்... நம் நிலை! உலகைப் பற்றி நான்கு வார்த்தை பேசத் தெரிந்ததால் உலகம் புரிந்ததா நமக்கெல்லாம்?

வானொலி நிலையங்கள் - ஒலி அலைகளை (Sound waves) கிரகித்து ஒலிபரப்புவது போல், கோயில்கள் - சக்தி அலைகளை (Energy waves) கிரகித்து சக்தியைப் பரப்பும் சக்தி நிலையங்கள்தான் கோயில்கள்.

ஞானிகள் பிரதிஷ்டை செய்து வைத்த கோவில்கள் எப்போதும் சக்தியை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கும் சக்திகேந்திரங்கள். அதனால்தான் மன அழுத்தத்தோடும் மனக்கஷ்டத்தோடும் கோயிலுக்குள் செல்பவர்கள் வெளியில் வரும்போது புதுத்தெம்போடு, புதுநம்பிக்கையோடு வெளியே வருகிறார்கள்.

புதுத் தெம்பும், புதுத் தெளிவும் அந்தக் கோயில்களில் இருக்கும் ஞானசக்தியால் கிடைத்தது. கோயிலுக்குள் செல்பவர்கள் எவ்வளவு பக்தியோடும் எவ்வளவு திறந்த மனதோடும் செல்கிறார்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு சக்தியைப் பெற்றுக்கொண்டு திரும்புவார்கள்.

சக்தி (Energy) உங்களுக்குள் நுழைய உதவும் ஒரு நுழைவாயிலே பக்தி. பக்தி என்னும் நுழைவாயிலின் கதவை எவ்வளவு திறக்கிறீர்களோ அந்த அளவுக்கு சக்தி என்னும் தென்றல்காற்று உங்களுக்குள் புகும். உங்களை ஆனந்தமயமாக்கும்.

பக்தியில்லாமல், சிரத்தையில்லாமல் கோயிலுக்கு ஏதோ கடமைக்குச் சென்றால் பலன் ஏதும் இல்லை. பக்தி கதவைத் திற... சக்தி காற்று வரட்டும்.

கோயில்கள் ஏன் உருவாக்கப்பட்டது?

மனிதர்கள் இறைசக்தியோடு தொடர்புகொள்ள உருவாக்கப்பட்ட புனிதமான சக்தி நிலையங்கள்தான் (ENERGY STATION) கோயில்கள்.

டாக்டர் பராங் ருடால்ஃப் ஓர் அறிவியல் அறிஞர். அமேசான் காட்டில் பழங்குடி இனத்தார் மத்தியில் தங்கி முப்பது வருடங்கள் தொடர் ஆராய்ச்சி செய்துள்ளார்.

அங்கு ஒரு விசித்திரமான வழக்கம் இருந்ததாக அவர் நூலில் குறிப்பிடுகிறார்.

சொபக்தி ஆத்திகவாதிகளுக்கு
ந்மட்டுமே
தசொந்தமல்ல!
ம்

அவர்கள் தங்கள் எதிரியைத் தண்டிக்க வேண்டும் அல்லது நோயால் பாதிப்படையச் செய்ய வேண்டும் என்றால்,

அந்த எதிரியைப் போன்றே ஒரு சிலையைச் செய்து அந்தச் சிலைக்கு எதிரியின் பெயரை வைத்து, சில மந்திரங்களை உருவேற்றிய பின் அந்த சிலையின் கால்களை உடைத்தால்...எதிரி எத்தனை மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் ஏதோவொரு விபத்து நிகழ்ந்து அவரது கால்கள் உடைந்துவிடும்.

அதேபோல் நோய் குணமாக வேண்டுமென்றாலும் நோயாளியைப் போல ஒரு சிலையைச் செய்து, நோயாளியின் பெயரை வைத்து மந்திரம் சொல்லி உருவேற்ற, நோய் குணம் அடைகிறது.

இப்படி ஒரு விசித்திரமான நிகழ்ச்சி நடைபெறுவதை முதன்முதலில் கேட்டபொழுது, டாக்டர் பராங் ருடால்ஃப் நம்பவே இல்லை.

பிறகு முப்பது ஆண்டுகள் அங்கு தங்கி செய்த ஆராய்ச்சி பற்றி தனது சுயசரிதையில் எழுதும் போது, "நூறு முறை நான் இதனைச் சோதனை செய்தேன். நூறுமுறையும் வெவ்வேறு மனிதர்களுக்கு இதுபோன்ற நிகழ்வுகள் நிகழ்வதை கண்களுக்கு நேராகக் கண்டேன். இது 100% உண்மை" -இதை ஒரு சாதாரண மனிதர் சொன்னால் புரளி எனச் சொல்லி ஒதுக்கிவிடலாம்.

ஒரு சாதாரணச் சிலையை வைத்து நூறு மைல்களுக்கு அப்பால் இருக்கும் ஓர் உயிருள்ள மனிதருள் மாற்றத்தை நிகழந்த முடியும்போது, ஏன் ஒரு ஞானியின் உருவச் சிலையை வைத்து ஞானியோடும் இறைசக்தியோடும் தொடர்புகொள்ள முடியாது.

ஞானியால் பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் தொடர்ந்து சக்தியை வெளிப்படுத்தும் சக்தி படைத்தவை.

இது உண்மை. முழுபக்தியோடு வருபவர்களுக்கு மட்டுமே இந்த உண்மை அனுபவபூர்வமாகப் புரியும்.

பக்தி உங்களின் இதயத்தில் அதிகமாக அதிகமாக அகங்காரம், கோபம், பொறாமை, வெறுப்பு என்று உங்களைப் பாதிக்கும் அற்ப உணர்ச்சிகள் உங்களை விட்டு மறைய ஆரம்பிக்கும்.

இப்படி ஒன்று நிகழ்ந்தால்....

| நாத்திக தியானம் | கடவுள் இல்லை என்ற வார்த்தைவலைக்குள் தொக்கி நின்றுவிடாதீர்கள். அவ்வார்த்தைகள் அனுபவமாக மாறுமளவுக்குப் பக்தியோடு தியானியுங்கள், உங்களின் உயிரோட்டத்திற்குக் காரணமான அந்த ஆனந்தசக்தியால் ஆட்கொள்ளப்படுவீர்கள். எது உண்மை என்பது உதயமாகும்! |

திடீரென்று உலகப் போர் மூண்டு கிட்டத்தட்ட உலகமே அழிந்து விடுகிறது. எஞ்சிய சிலரிடம் எப்படியோ தப்பிக்க ஒரு செல்போன் மட்டும் கிடைக்கிறது.

ஒன்றிரண்டு தலைமுறைகளுக்குப் பின் வருபவர்களிடம் அந்த செல்போனைக் காட்டி, இதன் பெயர் செல்போன், ஒரு காலத்தில் இதன் மூலம் மக்கள் உலகத்தின் எந்த ஒரு மூலை முடுக்கில் இருப்பவரிடமும் பேச முடியும்" என்று சொன்னால் நம்புவார்களா? நம்பமாட்டார்கள்.

ஏனென்றால், செல்போனைப்
பயன்படுத்தக்கூடிய அறிவியல் தொழில்நுட்ப
முறை இப்போது அழிந்துவிட்டது. அதனால்
செல்போனின் மகத்துவத்தைப் புரிந்துகொள்ள
முடியாது. புரிய வைக்கவும் முடியாது.

அதேபோல்தான் ஞானிகள் இருந்த
போது உருவாக்கப்பட்ட கோயில்களின்
மகத்துவம் நாளடைவில் மறைக்கப்படுகிறது.
கோயில்கள் மனித வாழ்க்கையிலும் ஆன்மீக
வளர்ச்சியிலும் எவ்வளவு முக்கியமான ஒரு
வழிமுறையாக இருக்கின்றன என்பது
பலருக்குத் தெரிவதே இல்லை.

கடமைக்காகச் செய்யும் பூஜைகளால்
எந்த ஒரு பலனும் கிடைக்கப்போவதில்லை.
பக்தியில்லாத பூஜை உணவில்லாத
இலைக்குச் சமம்.

பக்தியோடும் சிரத்தையோடும் செய்யும்
பூஜை, வெறும் பூஜையோ சடங்கோ இல்லை.
அது இறைசக்தியோடு நேரடிச் தொடர்புக்கு
உதவும் தியானத்திற்குச் சமம்.

சிரத்தையோ, முழுஈடுபாடோ
இல்லாமல் செய்யும் தியானம்கூட வெறும்
சடங்கே. சிரத்தையோடும்
முழுஈடுபாட்டோடும் செய்யும் சடங்குகூட
தியானம்தான்.

ஏகப்பட்ட ஞானிகளையும் கோயில்களையும் கொண்ட புண்ணிய பூமி இந்தியா. இந்தப் புண்ணிய பூமியில் பிறப்பதற்கே கொடுத்து வைத்திருக்க வேண்டும். இந்தப் புண்ணிய பூமியில் இருக்கும்

கோயில்களுக்குச் செல்வதும், வெகுநேரம் நின்று தரிசிப்பதும் பூஜிப்பதும் ஒரு வகையான தியானமுறைதான்.

இறைச்சக்தியை அனுபூதியாக உணர்வதற்கான ஆன்மீகப் பயணத்தில் கோயில்களுக்குச் செல்வதும் தெய்வச்சிலைகளை வழிபடுவதும் ஒரு முக்கியமான அம்சமே.

portrait of a spiritual figure with quote

இவை ஏதோ படிப்பறிவில்லாதவர்களும்
ஒன்றும் தெரியாதவர்களும் மட்டுமே செய்ய
வேண்டியது என்று நினைத்துவிடாதீர்கள்.
படித்தவரானாலும் படிக்காதவரானாலும் சரி,
உணர்வுப்பூர்வமாக வாழும் ஒவ்வொருவரின்
மிகச் சிறந்த மார்க்கம் பக்தி மார்க்கம்.

சுயலாபத்திற்காகப் பேசப்படும் சில மேடைப் பேச்சுகளையும் எழுதத் தெரியும் என்பதற்காக எதையாவது எழுதி பக்தியை ஏளனம் செய்யும் கருத்துக்களையும் உங்கள் மனதில் பதிய வைத்து உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்.

நீங்கள் உங்களுக்குள் மிகச்சிறந்த
ஆத்திகவாதியாக இருக்கலாம். தவறாக கிடைத்த
சில கருத்துகளை மனதில் பதித்துக்கொண்டு
"பக்தியாவது, மண்ணாவது அதெல்லாம்
எனக்கு வராது" என்று உங்களை நீங்களே
ஏமாற்றிக்கொண்டால் நஷ்டம்
உங்களுக்குத்தான். நிச்சயம் உங்களுக்கு
மட்டும்தான்.

இறைச்சக்தியை உணர, அடைய ஏகப்பட்ட
வழிகள் இருக்கிறது. இந்த எல்லா வழிகளிலும்
மிக எளிமையான வழி எது என்றால் அது
நிச்சயம் பக்தி மார்க்கம்தான்.

வாயிருந்தும் ஊமை
கண்ணிருந்தும் குருடு
காதிருந்தும் செவிடு

என்பது உண்மை தெரிந்தும் மகத்துவம் தெரிந்தும் அதைப் புரிந்துகொள்ளாதிருக்கும் கல்மனங்கள்தான்.

கல்மனத்தை மாற்றும் வெண்பஞ்சு போன்று மிருதுவாக்கும் பக்தியை வாழ்க்கையில் எடுத்து வாருங்கள் - ரோகம், சோகம், துக்கம் இவற்றிற்குக் காரணமான நம் உடல், மன, சக்திகுறைபாடு ஆகியவை இறைசக்தியின் பூரணப் பொழிவால் பூரணத்துவம் பெறுவதை அனுபவமாக உணர்வீர்கள்.

சூரிய ஒளி அல்லது வெப்பம் தேவையான அளவு கிடைக்கப் பெறாத ஈரத்துணி நாற்றம் எடுப்பது போலத்தான் நம் உடலின் ஆரோக்கியத்திற்குத் தேவையான சக்தி தேவையான அளவு கிடைக்காத போது ஆரோக்கியம் குறைந்து ரோகம் உருவாகிறது.

அதேபோல்தான் மனதின் சந்தோஷத்திற்குத் தேவையான சக்தி, தேவையான அளவு கிடைக்காத போது உற்சாகம் குறைந்து சோகம் உருவாகிறது.

ரோகம், சோகம், துக்கம் எல்லாமே உடல், மன, உயிர் இருப்புநிலை ஆகியவற்றிருக்கும் சக்திக் குறைபாடுகளின் வெவ்வேறு வெளிப்பாடுகள். சக்திக் குறைபாடு என்ற ஒரே ஒரு பிரச்சனையை மாத்திரமே சரிசெய்தால் போதும். எல்லா பிரச்சனைகளும் தன்னால் சரியாகிவிடும்.

சிலருக்கு இந்த உண்மையை நம்புவதற்குக் கடினமாகத் தோன்றலாம்... சக்தி குறைபாடு என்ற ஒரே ஒரு பிரச்சனைதான் எல்லாக் கஷ்டங்களுக்கும் ஆணிவேர்.

உண்மையை நம்புவது கடினம். ஏற்றுக்கொள்வது எளிது. அனுபவமாக்குவது வெகு சுலபம்.உண்மையை நம்புவது போல நடிப்பது சுலபம். ஏற்றுக்கொள்வது போல நடிப்பதும் சுலபம்.

அனுபவ அறிவு பெற்றவர் போல நடிப்பது இயலாத காரியம்.

பக்தி நிறைந்தவர் போல நடித்துக்கொண்டு உள்ளுக்குள் கொடூரமானவராக, ஏமாற்றுக்காரராக, துக்கம் நிறைந்தவராக வாழ்வது சுலபம்.

ஆனால், பக்தி நிறைந்தவராக வாழ்வதும் கடினம். உங்களின் குறைபாடுகள் அதைக் காட்டிக் கொடுத்துவிடும்.

ஏனென்றால்,
பக்தி நிறைந்தவர் சக்தி நிறைந்தவர்!
பக்திமான் சக்திமான்!
பக்தி சக்தி!

பக்தியும் சக்தியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். உங்கள் பக்தி எந்த அளவுக்கு இருக்கிறதோ அதே அளவுக்கு சக்தியும் இருக்கும்.

நீங்கள் சக்திக்குறைவை உணர்ந்தாலோ அல்லது ரோகம், சோகம், துக்கம் இருப்பதை உணர்ந்தாலோ நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள்... அது சக்தியின்மையின் வெளிப்பாடு.

செசெல்போன் மூலமாக உங்கள்
ல்நண்பர்களோடு பேசலாம்.
போதெய்வ விக்கிரகங்கள் மூலமாக
ன்உங்களின் தெய்வத்தோடு பேசலாம்.

சக்தியின்மையைப் போக்க, பக்தியின்மையை மாற்ற ஆரம்பித்தாலே போதும். பக்தியை வளர்க்க ஆரம்பித்தால் போதும். ஒளி வந்த கணத்தில் மறைய ஆரம்பிக்கும் இருள் போல, பக்திப்பரவசமாவது சக்திக் குறைவை நிறைவாக்கிவிடும்.

பக்தி என்பது நம்பிக்கை, மரியாதை, நன்றியுணர்வு என்ற மூன்று உணர்வுகளின் கூட்டு வெளிப்பாடு.

இந்த மூன்று உணர்வுகளின் குறைபாடுகள்தான் பக்தியின்மையாக வெளிப்படும்.

இந்த மூன்று உணர்வுகளின் போலித்தன்மைதான் போலி பக்தியாக வெளிப்படும்.

'எது பக்தி?' என்பதை யார் வேண்டுமானாலும் எளிதாய் உணர்ந்துகொள்ளலாம். கீழே குறிப்பிடப்பட்டிருப்பது பக்தியுணர்வின் ஒரு சில வெளிப்பாடுகள்.

நாம் பிறப்பதற்குக் காரணமாக இருந்த பெற்றோர்கள்.

நாம் வளர்வதற்கு உதவியாக இருந்த சமுதாயம்.

நாம் வாழ்வதற்கு ஆதாரமாக இருந்த இறைசக்தி.

> கோயில் சென்றால்
> தவறாமல் ஒரு இருபது
> நிமிடமாவது அமைதியாய்
> அமர்ந்து தியானம்
> செய்யுங்கள்.
>
> உடல், மனம், உயிர் ஒருசேர
> உற்சாகப்படும்.
>
> செய்யத் தவறாதீர்கள்.

ஆகியவற்றின் மீது நமக்கிருக்கும் மரியாதையும் நன்றியுணர்வும் நம்பிக்கையும் சேர்ந்ததே பக்தி.

இந்தப் பக்தியை எல்லோரிடமும் எல்லா இடத்திலும் வெளிப்படுத்தும் பக்குவம் பெறும் போது பக்தியின் முழுவெளிப்பாடு நிகழும்.

நாம் காணும் ஒவ்வொரு விஷயத்திலும் இறைசக்தியை உணர்வதுதான் பக்தி.

இந்தப் பக்திதான் ஞானம்.

இவ்வளவு பக்குவம் நிறைந்த பக்தியை வெகுசுலபமாக, வெகு இயல்பாக மக்கள் பெறுவதற்காக ரிஷிகளும் ஞானிகளும் உருவாக்கிக் கொடுத்த தெய்வீக தத்துவ வெளிப்பாடுதான் கோயில்கள்.

கோயில்கள் சக்திநிலையங்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. மாறாத நிஜம்.

ஞானிகள் பிராணப்பிரதிஷ்டை செய்து வைத்த கோயில்களில் நன்றியுணர்வும் மரியாதையும் நம்பிக்கையும் முழுமையாக கொண்டு, அங்கிருக்கும் விக்கிரகங்களின் மூலம் இறைசக்தியைத் தொடர்புகொள்ள முயன்றால் சக்திப் பிரவாகத்தைப் பூரணமாக உணர முடியும்.

நன்றியுணர்வும் மரியாதையும் நம்பிக்கையும் இல்லாமல்... கடமைக்காகச் சென்றால் விக்கிரகங்கள் வெறும் கற்சிலையாக மாத்திரமே தெரியும்.

கோயில்கள், வேதங்கள், யாகங்கள் மக்களைச் சகதிக்கடலில் இருந்து சக்திக் கடலுக்கு அழைத்துச் செல்ல உருவாக்கப்பட்ட மந்திரப் படகுகள்.

விக்கிரகங்களை கடவுள் சக்தியாக உணர்வதும் வெறும் கருங்கல்லாகப் பார்ப்பதும் அவரவரின் நன்றியுணர்வு, மரியாதை, நம்பிக்கையைப் பொறுத்தது.

கோயில்களின் ஒவ்வொரு அம்சமும்

ஞானசக்தியை வெளிப்படுத்தும் அம்சங்கள்.

கோயில்களுக்குச் செல்வதைப் பொழுதுபோக்காகவோ, கடமையாகவோ பயன்படுத்தாமல் பக்தி சிரத்தையோடு கோயிலுக்குள் நுழைத்தால், உங்கள் பொழுதின் ஒவ்வொரு நிமிடத்தையும் பொலிவாக்கும் இறைசக்தியை உணர முடியும்.

பக்தி சிரத்தையோடு கோயில்களில் தியானத்தில் ஈடுபட்டு கோயில்களின் தத்துவத்தை முழுமையாக உணர்ந்து ஆனந்தமாக இருங்கள்!

அர்த்தமுள்ள சம்பவம்...

குல்ஜித்திடம் பல் மருத்துவர் "உங்களுக்கு ஒரு நல்ல செய்தியையும் ஒரு கெட்ட செய்தியையும் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்" என்றார்.

"சரி. நல்ல சேதியை முதலில் சொல்லுங்கள்"

"உங்கள் பற்கள் மிக உறுதியாக இருக்கின்றன."

"ரொம்ப சந்தோஷம்! கெட்ட செய்தியைச் சொல்லுங்க..."

"உங்களின் இரு தாடை எலும்புகளும் மிகவும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. அதனால் உங்களுடைய எல்லா பற்களையும் பிடுங்கியாக வேண்டும்!"

திட உடலாலும், பெருத்த மூளையாலும் என்ன பயன்?

அவற்றை இயக்கும் சக்தியும் புத்தியும் மோசமாகியிருந்தால்

அந்தப் பற்களின் கதிதானே அவற்றிற்கும்.

சக்தியைப் பெருக்குங்கள்!