KAILASA Library/கதவைத் திற ... காற்று வரட்டும்!/மாயா! மாயா!Sign in
கதவைத் திற ... காற்று வரட்டும்!

மாயா! மாயா!

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

எல்லாம் மாயா!

* வெண்ணெயைக் கையில் வைத்துக்கொண்டு, நெய்யைத் தேடித்தேடி அலைவது போன்ற ஆர்வத்தையும் சக்தியையும் அள்ளி அள்ளித் தரும் வேடிக்கையான அம்சத்திற்கு பெயர் மாயா.

* ஞானமடையும் முன்வரை, மனிதர்கள் வாழும் அறுபது வருட வாழ்விற்கும் - ஆறுமணி நேர கனவிற்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. கால அளவில் வித்தியாசமுண்டு. அவ்வளவே.

ஒரு கனவு- ஆறு மணி நேரம்!
ஒரு வாழ்வு- அறுபது வருஷம்!

* கனவுகலைந்ததும் கனவு உலகம் காணாமல் போய்விடும்! அகங்காரம் கலைந்ததும் நினைவு உலகம் காணாமல் போய்விடும். ஆத்மன் விழித்ததும்தான் உண்மையாக உள்ள உலகமே கண்ணிற்குத் தெரியும்!

தூங்கும் மனிதருக்கு-கனவு மாயை
விழித்திருக்கும் மனிதருக்கு-நினைவு மாயை
விழித்துக் கொண்ட மனிதருக்கு-எல்லாம் மாயை

* நாமாய் துரத்தாத வரை தானாய் விலகாதது - மாயை! * உங்கள் வாழ்க்கையை வாழ வேண்டுமா? உண்மையான உலகை அனுபவிக்க வேண்டுமா?

கடவுளை நேரில் காண வேண்டுமா? வேறு வழியேயில்லை... மாயாதிரை கிழிக்கப்பட வேண்டும். அதுவும் உங்களாலேயே...

12 - B-க்காக காத்துக் கொண்டிருந்த
இரண்டு நண்பர்களும் குடிபோதையின்
உச்சத்திலிருந்தார்கள். இரவு மணி
இரண்டு என்பது தெரியாததால், "என் 12

  • B இன்னும் வரவில்லை" என விவாதித்த நண்பர்கள், நேரடியாக பஸ் டிப்போவிற்கே சென்றுவிட்டார்கள்.

"பஸ் டிப்போவிலிருக்கும் 12 - B
பஸ்ஸை நாமே எடுத்துக்கொண்டு நம்
வீட்டிற்கு ஓட்டிச்செல்லலாம்" எனப்
பேசிக்கொண்டே 12 - B பஸ்ஸைத்
தேடினார்கள்.

பஸ்டிப்போவில் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் நின்றிருந்தன. ஒவ்வொரு பேருந்திலும் ஏறி இறங்கி இது 12 - B இல்லை... "இது 12 - B இல்லை..." எனச் சொல்லி, தட்டுத்தடுமாறி ஒவ்வொரு பஸ்ஸாக ஆராய்ந்தார்கள்.

இரண்டு மணி நேரத் தேடுதலுக்குப் பின், "ச்சே... ஏமாந்து விட்டோம். இங்கு ஒரு 12 - B கூட இல்லையே!" என நொந்துகொண்டு வீட்டுக்கு நடந்தே சென்றார்களாம்.

★ மயங்கியிருந்தவர்களுக்கு எந்தப் பேருந்தை வேண்டுமானாலும் ஓட்டிச்செல்லலாம் என்பது உதிக்கவேயில்லை. 12 - B -ஐ மட்டுமே தீவிரமாய் தேடியிருக்கிறார்கள்.

> சிதைக்கப்படுவது
> புதுப்பிக்கப்படுவதற்காக
> - லாவோட் சூ
> லாவோட் சூவின் கூற்று
> முரண்பட்டதாகத் தோன்றலாம்.
> ஆனால், அவர் சொல்வது
> முரண்பட வைப்பதை
> நேர்பட வைக்கும் சூத்திரம்.
> நீங்கள் புதுமையானவராக மாற
> விரும்பினால், உங்களில் உலவும்
> பலவற்றையும் சிதைக்காமல்
> விட்டால்... நாளை அது உங்களைச்
> சிதைத்துவிடும்.
> எச்சரிக்கை
> ☞ சிதைப்பதை சிதை.
> சிதைப்பது, மாயா!
> மாயா மாயமாகட்டும்.

மாயாவும் இதைப் போன்றதே. வாழ்வின் ஏதாவதொரு அம்சத்தை மட்டுமே பிடித்துக்கொண்டு மனிதரைச் சிக்க வைத்துவிடும். விளைவு - வாழ்ந்து முடிந்தபின்தான் ஏமாந்துபோனதாக ஒவ்வொரு மனிதரும் உணர்வார்.

ஆஹா...#Ez#RÓð¹#¡æ$

அதோ! அங்கே சோலைவனம் இருப்பதுபோல்
நம் கண்களுக்குத் தெரிகிறதே, அது
சோலைவனமே அல்ல. அதுவும்
பாலைவனத்தின் ஓர் பகுதிதான்.

நம் தாகத்தைத் தீர்ப்பது நிச்சயமாக அங்கே
இல்லை என்று தெள்ளத் தெளிவாக
ஏற்கெனவே தெரிந்து கொண்ட ஒருவர் கானல்
நீர் வரை சென்று ஏமாறவே மாட்டார்.

மோகம்,
வேகம்,
புகழ்,

பணம் - என்று ஓடும் ஒருவருக்கு தன்
மோகத்தைத் தீர்ப்பது அங்கே இல்லை என்று
தெரிந்துவிட்டால் ஓடமாட்டார். திடீரென்று
எல்லோருக்குமே இந்த உண்மை
புரிந்துவிட்டால் மொத்த சமூக இயக்கமுமே
ஸ்தம்பித்துவிடும்.

தேடுவது தேடும் இடத்தில் இல்லை என்ற
உண்மையை யதேச்சையாக படித்துவிட்டால் கூட,
புரிந்துகொள்ளவிடாதபடி பார்த்துக்கொள்ளும்
ஒன்றுதான் மாயாசக்தி.

ரமண மகரிஷியிடம் பக்தர் ஒருவர், "சாமி, மாயா என்றால் என்ன? மாயாவின் மயக்கத்திலிருந்து விடுபடுவது எப்படி?" என்று கேட்டார்.

Sadhguru

மாயாசக்தியை
வெல்வதற்கு
இணையானதொரு
வெற்றி
இவ்வுலகில்
இல்லவேயில்லை!

ரமணர், “ஆத்ம விசாரம் என்னும் ஆன்மீக தியானத்தில் ஈடுபட்டால் எளிதில் வெளிவந்துவிடலாம். மாயாவின் மயக்கம் கல்லைக் கண்டால் நாயைக் காணோம். நாயைக் கண்டால் கல்லைக் காணோம் என்பது போன்றதுதான்” என்றார்.

பக்தருக்கு ரமணர் கூறியது சுத்தமாகப் புரியவில்லை.

ரமணர் சிரித்துக்கொண்டே, “புரியவில்லையா...! நீ (அகங்காரம்) இருக்கும் வரை எல்லாமே தூரத்தில் பசுமை போன்றுதான் தெரியும். இதுதான் மாயா.

கல்லைக் கண்டால் நாய் இல்லை என்றால், நீ கல்லைக் கண்டதால் நாய் ஓடிவிட்டது என்று அர்த்தமா? இதை விளக்க நல்ல கதை ஒன்று இருக்கிறது.

அரண்மனையைப் பார்க்கச்சென்றாராம் ஒருவர். போனவர் திடுக்கிட்டார். அரண்மனை வாசலில் இரண்டு பெரிய நாய்கள். மிக தத்ரூபமாக வடிக்கப்பட்டிருந்த அந்தக் கற்சிலைகள் தூரத்திலிருந்து பார்க்க நாய்கள் போன்றே தெரிந்ததாம்.

நாய்களுக்கு ஏற்கெனவே பயந்து நடுங்கும் அவர், ‘இரண்டு பெரிய நாய்களா!’ என்று நடுக்கமெடுத்து ஓட முயற்சித்தார்.

தூரத்திலேயே அந்த மனிதரின் உடல் நடுக்கம், முகக் கலவரம் மூலமாக மொத்தத்தையும் உணர்ந்த சாது, ‘பயப்படாதே! என்னோடு வா!’ என்று அழைத்துச் சென்றார்.

அருகில் சென்று பார்த்ததில் அவர் பயம் தெளிந்தது.

‘அப்பாடா! வெறும் கற்கள்தானா!’ என்றாராம்.

அவர் முதலில் நாயைக் கண்டதும் கல் இல்லை. இப்போது கல்லைக் கண்டதும் நாய் இல்லை. இதுதான் நாயைக் கண்டதும் கல்லைக் காணோம், கல்லைக் கண்டதும் நாயைக் காணோம் என்பது!” என்று வேகமாகச் சிரித்துக்கொண்டே சொல்லி முடிக்க விளக்கம் புரிந்த பக்தரும் வாய் விட்டுச் சிரித்தார்.

ஒரு சாது வந்து அழைத்துச் செல்லாதவரை அந்த மனிதருக்கு அச்சிலை எங்கும் நிறைந்திருக்கும் கல்லின் ஒரு வடிவம் என்று தெரிந்திருக்காது.

பா தைதொல்லைகூட எல்லையில்லா ஆனந்தத்திற்கான ஒரு பாதையே!

இந்த மனிதர் கல்லை நாய் என்று நினைத்துப் பயப்படுவதும் மற்றொருவர் மோகம், புகழ், பணத்தில் உச்சத்தைத் தொட்டுவிட்டால் சந்தோஷமாக இருக்கலாம் என்று நினைப்பதும் ஒன்றே.

அந்த மனிதர் கல்லை நாய் என்று நம்பியதுதான் மாயம்.

காமத்திலிருந்து, கடவுள் வரை,
மனிதமனது ஏதாவதொன்றை
நினைத்துக்கொண்டு, அதுதான் உண்மை
என்று நம்பிக்கொண்டு, அதைத்
தேடுவதுதான் மாயம். அப்போது
ஏற்படுவதுதான் மாயை தரும் மயக்கம்.

காமத்திலிருந்து கடவுள் வரை
பலவற்றை நேருக்கு மாறாகப் புரிந்து
கொண்டு மாயத்தால் தவிக்கும் மனிதருக்கு
மாயத்தை விளக்கி, மயக்கத்தை விலக்க
தன்னை ஜெயித்த ஒரு ஞானியால்தான்
முடியும்.

ஒரு சிறிய கதை,

ஜென் ஞானியிடம் சீடர் ஒருவர்,
"எல்லாமே மாயா என்றால்... நிஜத்தில்
சாத்தியமில்லாத ஒன்றைத்தான் மனிதர்கள்
மோகம், பதவி, புகழ், பணம் ஆகியவற்றில்
தேடுகிறார்களா?"

ஞானி, "ஆமாம்... இதில் சந்தேகமென்ன?"

"அப்படியென்றால், மனிதர்கள்
அவற்றின் மூலமாகச் சாதிக்கலாம் என்று
நினைப்பதெல்லாம் அங்கே இல்லாத
ஒன்றையா?"

ஒன்பதாவது சித்தி
வசியங்கள்...
அணிமா
மகிமா
இலகிமா
கரிமா
பிராப்தி
பிராகாமியம்
வசித்துவம்
என எட்டுவகை
சித்திகள் உண்டு.

இந்த அட்டமா சித்திகள்
ஞானபாதையில்
வரும் விதவிதமான
சக்தி விளையாட்டுகள்.

இத்தனையும் தன்வசமற்ற
அனைத்தையும் தனக்கென
வசியஞ்செய்திட உதவும்.

ஆனால் விநோதம்!
தன்னை வசியம் செய்ய இந்த
சித்திகளால் முடியாது.
சித்திகளால் முடியாது
சித்திகளில் சிக்குபவர்
மனம் விரித்த வலையில்
சிக்குபவர்.

தன் மனதை
வசியம் செய்வது
ஒன்பதாவது சித்தி
அது ஒப்பற்ற புத்தி.

“ஆமாம்...”

“இல்லாத ஒன்றைத் தேடி, அது கிடைக்காத இடத்தில் மனிதர்கள் எப்படி இவ்வளவு உற்சாகமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள்?”

“இப்படித்தான்... ஒரு கிராமத்துச் சிறுவன் முதல் முறையாக புகைவண்டியில் ஏறினான். அதுவும் சைகைக்காரர் இருக்கும் கடைசிப் பெட்டியில். ஏறிய சிறுவன் விளையாட்டாக பெட்டியின் கம்பி மேல் சாய்ந்து தள்ளவும், புகைவண்டி கிளம்பவும் சரியாக இருந்தது.

சிறுவன் தான் தள்ளியதால்தான் வண்டி கிளம்பியது என்று நினைத்துவிட்டான். இன்னும் கொஞ்சம் வேகமாகத் தள்ள புகைவண்டியின் வேகம் அதிகரித்தது.

சிறுவனுக்கு ஒரே குஷி... தான் எவ்வளவு சூப்பரா வண்டியைத் தள்ளிக் கொண்டிருக்கிறோம் என்று!

உண்மை புரியாத சிறுவன் உற்சாகமாக
புகைவண்டியை ஓட்டவில்லையா என்ன?” என்று
கண் சிமிட்டிச் சிரித்தார் ஞானி.

சீடன், “அது சரி குருவே.

இரண்டு விஷயங்கள்.

மனிதர்கள் தான் தேடும் ஒன்றை (சுகம்,
ஆனந்தம்) அது கிடைக்காத இடத்தில்தான்
உற்சாகமாகத் தேடுகிறார்கள் என்று புரிய
வைக்கவே முடியாதா?” என்றார்.

“ஒன்று... அந்தச் சிறுவனுக்குப் புகைவண்டி
தானாகவே ஓடுகிறது என்ற உண்மை சொல்லப்பட
வேண்டும்.

இரண்டாவது... அந்தச் சிறுவனுக்கு உண்மையைப் புரிந்துகொள்ளும் பக்குவமும் ஆர்வமும் வேண்டும்” என்று சொல்லி முடித்தார் ஞானி.

Nithyananda

பிறப்பிலிருந்து இறப்பு
வரையிலான நம் வாழ்வு ஒரு
நீண்ட கனவு மாத்திரமே!
இந்தக் கனவிலிருந்தும்
துயில் எழ முடியும்.
ஆனால்,
துயில் எழுப்ப முடியாது.
துயில் எழுங்கள்.
தூக்கம் கலையட்டும்
துக்கமும் கலையட்டும்!

ஒரு உண்மையைத் தெரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் வாழும் சமுதாயம்,

உங்களைச் சுற்றிய நிகழ்வுகள்,

உறவுகளின் தனி வாழ்க்கை,

ஏன், உங்களின் உடல் இயக்கம்கூட உங்களால் நடக்கவில்லை.

எல்லாம் உங்களை மீறியே நடந்து கொண்டிருக்கிறது.

"எல்லாமே நம்மை மீறி நடக்கும் போது, நம் வாழ்க்கை மட்டும் 100% நம் கையிலா இருக்கிறது. இருந்தாலும் எதையோ தேடுகிறோமே, அது என்ன?"

இந்தக் கேள்வி பிறந்துவிட்டால் போதும்.

மாயை விலக ஆரம்பித்துவிட்டது என்று அர்த்தம்.

இதற்குமேல் உள்ள படிகளைக் காட்டி ஆனந்தத்திற்கு அழைத்துச் செல்லத்தான் ஞானிகள் பிறப்பெடுக்கிறார்கள்.

தேடிக்கொண்டுதான் இருக்கிறீர்கள் என்பதை உணருங்கள்.

மாயை விலகட்டும்!

அர்த்தமுள்ள சம்பவம்...

நிர்வாண நிலையை விளக்குமாறு புத்தரிடம் ஒரு மாணவன் கேட்டதற்கு,

"சிறுவனாயிருக்கும் போது நீ கட்டிய மணல் வீட்டை,

விளையாட்டிலிருக்கும் உன் ஆர்வம் குறையாதவரைதான், அதை நீ கட்டிக்காப்பாய். உண்மையா?" என்று கேட்டார்.

"ஆமாம் சாமி" என்றான் மாணவன்.

"வாழ்வதில் ஆர்வம் உள்ளவரை வீடு, உறவு எல்லாம் ஈர்க்கும். ஆர்வம் குறைந்ததும் ஈர்ப்பு கலையும்.

பின் எல்லாவற்றிற்கும் விடுபடுவாய்.

நிர்வாண சக்தியாவாய்" என்றார் புத்தர்.

  • விளையாடுங்கள். அது, விளையாட்டு என்பதை உணர்ந்து விளையாடுங்கள். இது அடுத்த படி செல்லும் சூத்திரம்.

மாயா - ஒரு விஞ்ஞான விளக்கம்

உங்களின் மூளைக்கு எது நிஜம்?

எது கனவு?

எது கற்பனை?

எனப் பிரித்துப் பார்க்கத் தெரியாது என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா?

நரம்பியல் வல்லுனர்களால் உங்கள் மூளையின் செயல்பாடுகளைப் படிக்க முடியும்.

மூளையிலிருந்து பெறப்பட்ட செய்திகள் மூலம், நீங்கள் என்ன வகையான உணர்ச்சியில் அந்த நிமிடத்தில் இருந்தீர்கள் என்பதுவரை துல்லியமாகச் சொல்ல முடியும்.

நிஜத்தில் ஒரு குழந்தையைப் பார்க்கிறீர்கள்.

இரவு கனவில் அதேக் குழந்தையைப் பார்க்கிறீர்கள்...

கண் விழித்திருக்கும்போது கற்பனையில் அதேக் குழந்தையைப் பார்க்கிறீர்கள்.....எழு!எழு!எழு!எனஏழுமுறைகூடஎழுப்பமுடியும்.ஆனால்...எழணுமே!

இந்த மூன்று நிகழ்வுகள் பற்றி மூளை தரும் சமிக்ஞைகள் எல்லாமே ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றனவாம்.

மூளையின் சமிக்ஞைகளிலிருந்து 'நிஜம் எது? கனவு எது? கற்பனை எது?' எனப் பிரித்துப் பார்க்க முடிவதில்லை. மூளைக்கு மூன்றுமே ஒரேமாதிரியாகத்தான் தெரிகிறது.

அதாவது மூன்றுமே நிஜம் அல்லது மூன்றுமே மாயை என்ற ரீதியில் மூளை அணுகுகிறது.

மூளையால் பிரித்தறிய முடியவில்லை. ஆனால், உங்களால் பிரித்தறிய முடிகிறது.

'எது நிஜம்! எது கனவு!' என்று உங்களால் பிரித்து உணர முடிவது எதனால்...?

அது உங்களுடைய விழிப்புணர்வால் இரவு கனவை விட, பகல் கற்பனைக்கு விழிப்புணர்வு அதிகம்.

பகல் கற்பனையைவிட, நிஜவாழ்வுக்கு விழிப்புணர்வு அதிகம்.

நிஜவாழ்வு வரை அதிகமானால் இப்போது நீங்கள் வாழும் வாழ்வே மாயை எனப் புரியும். இதுவும் கனவே!

நிஜவாழ்வு நிஜ உலகம் என நீங்கள் நம்புவது இன்னும் கலைக்கப்படாத கனவு. இதுவும் மாயையையே. இது தாண்டப்பட வேண்டிய ஒரு நீண்ட கனவு மட்டுமே.

இரவு கனவு எவ்வளவு அருமையான கனவாக இருந்தாலும், என்ன பயன் அதனால்? அது, விழித்ததும் கலைந்து போகுமே.

கண்ணால்
காண்பதும்
பொய்.
காதால்
கேட்பதும்
பொய்.
தீர
விசாரித்து
அறிவதும்
பொய்.
ஆழ
உணர்ந்து
தெளிவதே
மெய்!

அதேபோல்தான் நிஜவாழ்வு எனும் மாயையும். இதையும் தாண்டிய இதைவிட மிகவும் நிதர்சனமாக சொர்க்க உலகம் இருக்கிறது. அது நிஜம். எல்லா ஞானியரும் சொல்லும் நிஜம்.

கனவில் ஒருவர் கயவரிடம் சிக்கிக்கொண்டு அடி உதைப்பட்டு கனவிலேயே அலற ஆரம்பித்தால்.... அருகேயிருக்கும் நீங்கள் என்ன செய்வீர்கள்.

பாவம் கனவில் ஏதோ பயந்துபோயிருப்பீர்கள். இந்தக் கனவு இன்னும் தொடர்ந்தால் இன்னும் அதிகமாக அவர்கள் கஷ்டங்களை அனுபவிக்கலாம்... என்றெண்ணி அவரை எழுப்பச் செய்வீர்கள்தானே.

காரணம் - தூங்குபவரை விட உங்களுக்கு விழிப்புணர்வு அதிகம். அதனால் அவரை எழுப்புகிறீர்கள்.

ஞானிகள் மனிதர்களைவிட பல ஆயிரம் மடங்கு விழிப்புணர்வு அதிகம் பெற்றவர்கள்.

இந்த மாயை வாழ்க்கையை நிஜமென்று நம்பி நீங்கள் படும் கஷ்டங்களைப் பார்த்தால்.... ஞானிகளுக்குக் கருணை பொங்கும். மனிதரின் பரிதாப நிலை புரியும்.

நிஜத்தின் பொய்மை அவர்களுக்குப் புரிந்துவிட்ட காரணத்தால்தான் தொடர்ந்து ஞானியால் மனிதகுல சேவைக்காக வருகிறார்கள்.

தூங்குபவரை எழுப்புகிறார்கள்.

நிஜவாழ்வெனும் கனவு இன்னும் ஆழமானது. ஞானிகள் எழுப்பினாலும் நீங்கள் எழ விரும்ப வேண்டுமே.

இந்த ஞானக் கருத்துக்களை ஆழமாய் தியானியுங்கள்

நீங்கள் விழித்துக்கொள்வீர்கள்!