KAILASA Library/கதவைத் திற ... காற்று வரட்டும்!/தியானம் செய்வது எப்படி?Sign in
கதவைத் திற ... காற்று வரட்டும்!

தியானம் செய்வது எப்படி?

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

★ மனமோ கட்டுப்படுத்துகிறது எண்ணங்களோ அலைக்கழிக்கிறது

  • இரண்டுக்கும் இடையில் சிக்கிக்கொண்ட மனிதர்கள் - கூண்டுக்குள் அடைக்கப்பட்ட கிளி, சிறகிருந்தும் சுதந்திரமாய் பறக்க முடியாமல் தடுமாறுவது போல தடுமாறுகிறார்கள்.

★ ‘எண்ணங்களால் என்னை அழைக்கழிக்கும் அகங்காரமே நீ எங்கே இருக்கிறாய்?’ என உள்ளோக்கிப் பிரயாணித்தலே தியானம் செய்தல்.

★ இந்தப் பிரயாணத்தில் ஒரு முக்கிய விதி - பிரயாணி பார்வையாளராக மட்டுமே இருக்க வேண்டும்.

★ நம்பி பிரயாணித்தால்... மனிதரை அடிமைப்படுத்தி, கொக்கரிக்கும் அகங்காரத்தை மூக்கறுத்து, சுதந்திரமாய் ஆரப்பரிப்பது என்பது தியானத்தால் நிச்சயம் சாத்தியமாகும்.

★ இது விசித்திரமான பிரயாணம்.
பிரயாண வேகம் அதிகமானால்,
எண்ணங்களின் வேகம் குறையும்.

★ எண்ணங்களின் ஓட்டம் குறையக் குறைய உன் சுதந்திரத்தின் அளவு அதிகரிக்க ஆரம்பிக்கும்!

அறுபது வயது தாத்தாவுக்கும் ஆறு வயது பேரனுக்கும் நடந்த சுவையான உரையாடல்...

பேரன், "தாத்தா, மனம் ஒரு குரங்காமே! என் டீச்சர் சொன்னார்கள். மனதை அடக்கிவிட்டால் நல்லா படிக்கலாமாம். மனதை ஜெயித்தவர் உலகையே ஜெயிப்பாராம். முயன்றால் இது முடியுமாம். மனதைக் கட்டுப்படுத்த எவ்வளவு நாள் ஆகும் தாத்தா?" எனக் கேட்டதற்கு,

கோபப்பட்ட தாத்தா, "எவ்வளவு நாள் என்றா கேட்டாய்? உன் டீச்சர் உங்களுக்கெல்லாம் தவறான செய்திகளையே கற்றுத் தருகிறார். அவரை நம்பாதே.

நாட்களில்லை... அறுபது வருடங்களானாலும் ஒருவரால் மனதைக் கட்டுப்படத்த முடியாது" எனச் சொன்ன விதத்தை வினோதமாக பார்த்தான் ஆறுவயது பேரன்.

★ மனதை அடக்க முடியாது.

மனமானது அடங்க வேண்டும்.

எவ்வளவுக்கெள்ளவு மனதைக் கட்டுப்படுத்த, அடக்க, ஒடுக்க முயற்சிக்கிறீர்களோ - அவ்வளவு மனம் திமிரும். உங்களுடைய கட்டுபாட்டை இழந்துவிடுவீர்கள்.

மனம் தானாய் அடங்க என்ன செய்வது? கட்டுரைக்குள்ளே...

இத்தலைப்புக்குப் பதில் தெரிந்து கொள்ள இன்று பலர் ஆர்வமாக இருக்கிறார்கள்.

காரணம், இவர்கள் தியானத்தில் அமர்ந்தால் சாதாரண நேரங்களில் வரும் எண்ணங்களைவிட அதிகமான எண்ணங்கள் வருவது போலவே தோன்றுவதுதான்

Nithyananda Paramashivam

தியானம் செய்ய
மாலையை விட
காலையை
தேர்ந்தெடுங்கள்.
தினசரி நடவடிக்கையின்
கடைசி நடவடிக்கையாக
ஒதுக்கி வைக்காமல்
அதை முதல் காரியமாக
செய்து முடியுங்கள்!

அப்படித் தோன்றக் காரணம். அப்போதுதான் நீங்கள் வாழ்வில் முதல் முறையாக தங்களினுள் தொடர்ந்து ஓடி கொண்டிருக்கும் மனக்குதிரையை நேருக்கு நேர் சந்திக்கிறீர்கள்.

"இயல்பாக இருக்கிறேன்"
என்றெண்ணிக் கொண்டிருந்தவர்களின்
உள்ளே இருக்கும் இயல்பற்ற தன்மைதான்
தியானத்தில் அமரும் போது ஒருவருக்குத்
தெரியவரும்.

ஒரு சுவாராஸ்யமான சம்பவம்,

இந்தியா சுதந்திரம் பெற்ற இருபத்தைந்தாவது நாள்...

தமிழ்நாட்டின் திருவண்ணாமலை ரமணாச்சரமம் நோக்கி ஆந்திராவிலிருந்து உள்சுதந்திரம் தேடி தியானம் கற்க வந்திருந்தார் அந்த இளைஞர்.

என்றும் போல், இன்றும் காலார நடந்து வர ரமண மகரிஷி புறப்பட்டுவிட்டிருந்தார்.

உள்சுதந்திர தீ கொழுந்து விட்டு எரிந்ததால் நிமிட நேரத்தையும் வீணாக்க அந்த இளைஞர் தயாராக இல்லை.

ரமண மகரிஷியை வழி மறித்து, "சாமி, நான் தியானம் செய்வதற்காக வெகு தூரத்திலிருந்து புறப்பட்டு வந்திருக்கிறேன்.

ஆஸ்ரமத்தில் தியானம் செய்ய உகந்த இடம் எது என்று எனக்குத் தெரியவில்லை. தாங்கள் எங்கே தியானம் செய்யச் சொல்கிறீர்களோ அங்கேயே செய்கிறேன்" என்று கேட்டுக்கொண்டார் இளைஞர்.

கேட்டவரின் கேள்வியை, ரமணர் கண்டுகொண்ட மாதிரியே காண்பிக்கவில்லை.

ரமணர் சிரித்துக்கொண்டே, கால்களையும், கணுக்கால்களையும் தேய்த்துக் கொண்டு, நடப்பதற்குப் புறப்பட்டார்.

இளைஞனின் பொறுமை சோதிக்கப்பட்டது.

ரமணர் தமது ஊன்றுகோலை எடுத்துக்கொண்டு கேள்வி கேட்ட இளைஞன் முன்னே நிற்க, பின்னால் இருந்தவர்களை நோக்கித் திரும்பி, "எந்த இடத்தில் தியானம் செய்ய வேண்டுமென்று கேட்டால் என்ன சொல்வது? தானிருக்கும் இடத்திலேயே இருப்பதுதான் நல்லது. மிகச் சரியானது.

அந்த இடத்திலேயே இருந்து தியானம் செய்" என்ற வரிகளைச் சிரித்துக் கொண்டே உதிர்த்துவிட்டு நகர்ந்து விட்டார்.

கேள்விக்குப் பதில் வேள்வி போல் இருந்ததால் இளைஞன் எரிச்சலடைந்து விட்டான்.

பக்கத்திலிருந்தவர்களிடம், "என்னங்க இவர்! நீ இருக்கும் இடத்திலேயே இரு என்கிறார். இதைக் கேட்கவா நான் ஆந்திராவில் இருந்து வந்தேன்.

இவர் பெரியவர், அதனால் எனக்குத் தகுந்த இடம் பார்த்துச் சொல்வாரென்று கேட்டால், தானிருக்கும் இடத்திலேயே இரு என்கிறாரே. இந்த சோபாவின் அருகில் நான் இருக்கிறேன்.

அநோய்கள் மற்றும் மனவேதனைகளை...
குவரும்முன் காக்கும்
மவந்தபின் போக்கு,
ருஅருமருந்து தியானம்!
ந்
து

ஆகவே, நான் இங்கேயே இருக்கட்டும் என்றா அர்த்தம் கொள்வது? இதென்ன வீண் விளையாட்டு"என்று நொந்து போய் பேசினான்.

ரமண மகரிஷி எவ்வளவு பெரிய ரகசியத்தை மிக எளிமைப்படுத்தி அவரிடம் சொன்னார் என்பது அப்போது அவருக்குப் புரியவில்லை.

பின் பக்தர் ஒருவர் அந்த இளைஞரைத் தனியே அழைத்துச் சென்று, "நண்பா, பகவான் தமாஷாகச் சொன்னாலும் சரி, விளையாட்டாகச் சொன்னாலும் சரி, அவர் பேசுவது சத்தியத்தைப் பற்றி மட்டுமே.

| விழித்து, கொல் விழித்துக்கொள்! உன் உள் நுழை | 'நான்' என்கின்ற அகங்காரம் எங்கிருந்து கொண்டு இருக்கிறதோ, அதுவே நீ இருக்கும் இடம். அகங்காரம் இருக்கும் இடத்திற்கு விழிப்புணர்வோடு சென்று பார்வையாளனாகப் பார்த்துக் கொண்டிருத்தலே தியானம். |

நீ (அகங்காரம்) இருக்கும் இடத்தில் விழிப்புணர்வோடு இருப்பதுதான் தியானம். அதை விட்டுவிட்டு 'இங்கே உட்கார்ந்தால் நன்றாக தியானம் செய்ய முடியுமா? அங்கே உட்காரலாமா?' என்று கேட்பது எல்லாம் நேர விரயம்" என்று விளக்கம் கூறி முடித்தார்.

'ஓஹோ! தியானம் என்ற பெயரில் தியானத்தில் ஈடுபடாமல், வெளி விஷயங்களில்தான் விளையாட்டுத்தனமாக இருப்பதைத்தான் மகரிஷி விளையாட்டாய் குத்திக்காண்பித்திருக்கிறார்' என்பதைப் புரிந்துகொண்டார். தியானத்தில் முழுமையாக ஈடுபட்டார்.

"உங்களுக்குள்ளே இருக்கும் சலனமற்ற உணர்வு நோக்கி ஊடுருவுங்கள்"- இதைப் புரிந்துகொள்ளக் கடினமாக இருந்தால்... ஒரு பார்வையாளனாக மாத்திரம் உங்கள் எண்ணங்களை மனதைப் பார்க்க முதலில் கற்றுக்கொள்ளுங்கள்.

| தி யா ன சூ த் தி ர ம் | தியான சூத்திரம் சாட்சியாக மாத்திரம் பார். எண்ணங்களை, மனக்காட்சிகளை நிறுத்தாதே! தொடராதே! உருவாக்கதே! எண்ணங்களையும், காட்சிகளையும் உணர்ச்சிகளையும் தொடர்ந்து பார். எண்ணங்களும் காட்சிகளும் உணர்ச்சிகளும் நிற்க ஆரம்பிக்கும். பின் நின்றுவிடும். ஆனந்தம் பொங்கும்! |

இதை இன்னும் எல்லோரும் நன்றாகப் புரிந்துகொள்ள ஒரு உதாரணம்.

சினிமாவை தியேட்டரில் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்... சினிமாவில் உங்களுக்குப் பிடித்தக் காட்சி ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது. உங்களுக்குப் பிடிக்கிறதென்பதற்காக அதே காட்சிகள் தொடர்ந்து வராது.

அதேபோல் உங்களுக்குப் பிடிக்காத காட்சி ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக சினிமாவில் காட்சிகளை அந்த நேரம் தடுக்க முடியாது.

இந்தப் படம் சரியில்லை. சலிப்பைத்
தருகிறது என்பதற்காக அந்த நிமிடமே
புதுசினிமாவை அங்கே திரையிட முடியுமா?
முடியாது.

சினிமாவில் என்ன வந்தாலும் வரட்டும் என்று ஒரு மூன்று மணி நேரம் உட்கார்ந்து வெறுமனே பார்த்து விட்டுத்தானே வருவீர்கள்.

அதே காரியத்தைத் தியானத்திலும் செய்யுங்கள், வெறுமனே பாருங்கள். சாட்சி மாத்திரமாக பாருங்கள். 30 நிமிடம் உள்ளே ஒரு சினிமா பாருங்கள்.

  • ஒருவேளை! வந்த எண்ணங்கள் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக, அந்த எண்ணங்களை, காட்சிகளை நிறுத்த வேண்டாம்.
  • வந்த எண்ணங்கள் உங்களுக்கு பிடித்த எண்ணங்கள் என்பதற்காக அந்த எண்ணங்களைக் காட்சிகளை தொடர வேண்டாம்.
அம்மா மற்றும் குழந்தை

சும்மாயிருத்தலே 'தியானம்.'

சும்மாயிருந்தாலே
சுகமாயிருப்பது
'ஆனந்தம்.'

சும்மாயிருத்தலின்
சூட்சுமமே
'ஞானம்.'

★ புதிதாக எந்த ஒரு எண்ணத்தையோ, காட்சியையோ உருவாக்க முயற்சிக்க வேண்டாம். அவ்வளவுதான்.

இந்த மூன்று விதிகளைக் கடைப்பிடித்தால் சாட்சியாக மாத்திரம் பார்ப்பது சுலபம். தியானத்தில் நன்றாக ஈடுபட முடியும். தியானித்துப் பாருங்கள்

அர்த்தமுள்ள சம்பவம்...

தியானம் செய்ய ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே மிகவும் சந்தோஷமாயிருப்பதைச் சொன்ன நிட்டியின் வார்த்தைகள்...

"தேடித் தேடிப் பார்த்தேன் என்னுள், கவலைப்பட ஒரு காரணங்கூட இல்லை. இதைவிட பெரிய சந்தோஷம் என்ன இருக்கிறது".

தியான பாதையின் வெளிப்பாடுகள் இவை:

முதலில், கவலைகள் கலையும்.
அடுத்து, சந்தோஷம் பொங்கும்.
கடைசியாக, ஆனந்தம் நிலைக்கும்!

ஒவ்வொரு நொடியும் தியானமாக்க வழி...

| தியான

துளிகள் | நில் நட ஓடு ஆடு ருசி |

நுகர்

சிரி

பார்

கேள்

பேசு

பாடு

யோசி

உட்கார்

சாப்பிடு

விளையாடு

ஏன் கோபங்கூட படு!

எதை வேண்டுமானாலும் செய்.

அதைச் செய்யும்போது, அதை மட்டும் செய்.

அந்தச் செயல் பற்றி முழுப்பரிமாணத்தில் சிந்தி.

இது சம்பந்தப்பட்ட எல்லா சாத்தியகூறுகளையும் காண்.

ஐம்புலன்களையும்

அச்செயலுக்குள் ஆர்வங்கொள்ளச் செய்.

செய்யும் செயல் தியானமாகும்.

செய்யும் செயல் வெற்றியாகும்.

| நிற்கையில் நடக்கையில் படுக்கையில் செய்கையில் விழிப்போடிரு! விழிப்போடிரு! விழிப்போடிரு! - பிரம்ம விஹாரம் |