கடவுளே நினைத்தாலும்...
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஜென் கூற்றுகள் எளிமையானவை! ஆனால் ஆழமானவை! வாழ்க்கைத் தத்துவங்களை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல எளிதாக விளக்குபவை!
★ இது வாழ்வின் விடிவுக்கு ஜென் கூறும் கூற்று: நீ, ஏங்கினாலும், ஏங்காவிட்டாலும். மழை பெய்யும் போது பெய்யும், மழைக்கு மட்டுமல்ல... இது வாழ்க்கையின் எல்லா எதிர்பார்ப்புகளுக்கும் பொருந்தும். பொருத்திப் பாருங்கள் கூற்றின் ஆற்றல் புரியும்.
★ உம் சத்தத்திற்கும் இறைவனின் சித்தத்திற்கும் சம்பந்தமே இல்லை. எனவே வருந்தாதீர்.
★ நாடகத்தில் தன்னை மறக்க மனிதர் நாடகத்தோடு சேர்ந்து உண்மையாகவே அழுவதும் சிரிப்பதும் இயற்கை.
உலக நாடகத்தில் தன்னை மறக்க மனிதரும் உலகத்தோடு சேர்ந்து உண்மையாகவே அழுவதும், சிரிப்பதும் இயற்கை.
★ உண்மை என்ன? நான் யார்? ஏன் வந்தேன்? என்ற எல்லாமே, நாடகம் முடியும்போது தெரிய ஆரம்பிக்கும்.
முகுந்தனுக்கு ஜலதோஷம் மிகுந்திருந்தது. மருத்துவரை பார்க்கச் சென்ற முகுந்தன் தன்னுடைய தொந்தரவுகளை விளக்கி முடித்ததும் பயந்த விழிகளோடு சுற்றும்முற்றும் பார்த்தார்.
அவர் ஊசி போட்டு விடுவாரோ என்ற பயத்தில் டாக்டரின் கைகளையே பார்த்துக்கொண்டிருந்த முகுந்தனின் சிந்தனையைத் தடுத்து மருத்துவர், "மருந்து தரும் முன் நீங்கள் ஒரு காரியத்தைச்செய்து முடிக்க வேண்டும்" என்றார்.
முகுந்தன், "என்ன அது? சொல்லுங்கள்".
"குறைந்தது ஒரு பத்து நிமிடமாவது உங்களின் உச்சந்தலையில் நீர் விழுமாறு டேப்பை திறந்து விட்டு நனையுங்கள். பின் குளிர்காற்று உடலில் படுமாறு ஒரு பத்து நிமிடமாவது நில்லுங்கள். இதை முடித்த உடனே என்னை வந்து பாருங்கள். மருந்து தருகிறேன் ".
"என்ன சொல்லுகிறீர்கள்! அப்படிச் செய்தால் ஜலதோஷம் போய் வீசிங் அல்லவா வந்துவிடும்?".
"என்ன செய்வது... எனக்கு வீசிங்குக்குதான் மருந்து கொடுக்கத் தெரியும்".
★ மருத்துவர் அரைகுறையாக இருந்தால் உடல் ஆரோக்கியம் கேள்விக்குறியாகிவிடும். கடவுளைப் பற்றிய உங்களின் கருத்துக்கள் அரைகுறையானதாக இருந்தால், வாழ்வே கேள்விக்குறியாகிவிடும்.
இறைவனைத் துதிக்கிறேன்! நமஸ்கரிக்கிறேன்! புகழ்கிறேன்!’ என்று ஆரம்பித்த மனிதர், இறைவன் ஒரு தனி நபர் என்று நம்ப ஆரம்பித்ததை, வெம்பும் மனது பிடித்துக் கொண்டது.
அதோடு நில்லாமல் இறைவனின் அன்பு, கருணை, கோபம் ஆகியவற்றை
தான்...

‘அன்பு’ என்று நினைக்கும் பாசம்;
‘கருணை’ என்று நினைக்கும் பட்சாதாபம்;
‘கோபம்’ என்று நினைக்கும் எரிச்சல்
ஆகியவற்றோடு சேர்த்துக் குழப்பிக்
கொண்டார்கள்.
இந்தக் குழப்பம்தான் மனிதர்கள் இறைவனை
முழுமையாகப் புரிந்துகொள்ளத் தடையாக
இருக்கிறது.
இறைவன் என்றழைக்கப்படும் இறைசக்தியின்
அன்பு, கருணை, கோபத்திற்கும் - மனிதரின்
அன்பு, கருணை, கோபத்திற்கும் சம்பந்தமே
இல்லை.
மனிதர்கள் தன் மனக்கண்ணோட்டத்தின்படி
இறைவனைப் புரிந்துகொள்ள ஆரம்பித்த
அன்றிலிருந்து இன்று வரை, இறைவனை
தவறாகவே புரிந்துகொண்டிருக்கிறார்.
இறைவனைப் பற்றி மதப் பிரசாரம் செய்யும் ஒரு மதப் பிரசாரகரின் வாழ்க்கைச் சம்பவம்.
“இறைவன் நமக்காக வேதனைப்படுகிறார். அன்பு செலுத்துகிறார். நமக்காக காத்துக் கொண்டிருக்கிறார்!” என்ற ரீதியில் இறைவனை சராசரி பாச உணர்வுகளின் அடிப்படையில் விளக்க முயற்சிப்பவர் அவர்.
அது மழை பெய்ய வேண்டிய காலம். பருவம் மாறிப்போனதால் மழை பெய்யவில்லை. அப்போது... அந்த மதப் பிரசாரகர், “மழை பெய்யச் செய்யுங்கள்!” என்று வெகு உருக்கத்தோடு மக்களுக்காக வேண்டினார். வேண்டின சில மணித் துளிகளில் மழை பெய்ய ஆரம்பித்தது.
உடனே மதப் பிரச்சாரகர், “பார்த்தீர்களா! இறைவன் என் வேண்டுதலைக் கேட்டு மழையை வரவழைத்து விட்டார்.அவர் நமக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறார்” என்று கூறினார்.
மக்களும் “ஆமாம்! ஆமாம்!” என்று தலை ஆட்டினார்கள்.
சில நாள் கழித்து... “இன்று ஒரு மழை பெய்தால் நன்றாக இருக்குமே. நீங்கள் எங்களுக்காக இறைவனிடம் வேண்டக்கூடாதா?” என்று மக்கள் கேட்க, “மழை பெய்யச் செய்யுங்கள்” என்று வெகு உருக்கத்தோடு வெகு நேரம் இறைவனிடம் வேண்டினார். வேண்டி ஒரு மணி நேரமாகியும் மழை வரவில்லை. மீண்டும் வேண்டினார். பலனில்லை. தொடர்ந்து ஐந்து முறை வேண்டியும் பலனில்லை.
“மழை பெய்யவே இல்லை. இதை தொடர்ந்து அந்த மதப் பிரசாரகர், “பார்த்தீர்களா, இது இறைவனின் சோதனை. அவர் மீது எவ்வளவு பயபக்தியோடு நாம் இருக்கிறோம் என்று அவர் நம்மைச் சோதிக்கிறார்” என்று சொல்ல, மக்களும், “ஆமாம்! ஆமாம்! சரிதான்” என்று மீண்டும் தலையாட்டினார்கள்.
மக்கள் எல்லாம் கூடியிருக்கும்போது ஒருநாள் அவர் வேண்டாமலேயே மழை பெய்ய ஆரம்பித்து விட்டது.
| சொ | இறந்தபின் சொர்க்கம் செல்வேன் எனக் கனவு காணாதே.
| :---: | :---: |
| ர் | அது நடக்காது. | க் | ஏனென்றால் ஏற்கெனவே நீ சொர்க்கத்தில்தான் | க | வாழ்கிறாய்!
| ம் | |
உடனே மதப் பிரசாரகர் "பார்த்தீர்களா, இறைவன் மிகவும் நல்லவர். நம் தேவை அறிந்து நாம் கேட்காமலேயே உதவி செய்யும் உள்ளம் படைத்தவர்" என்று சொல்ல.
மக்களும், "ஆமாம்! ஆமாம்!" என்று உற்சாகத்தோடு தலையாட்டினார்கள்.
"என்ன நடந்து கொண்டிருக்கிறது நம்மைச் சுற்றி?" என்று யோசிக்கவும் முடியாமல், புரிந்துகொள்ளவும் துணியாமல் மக்களும் தலையாட்டினார்கள். மதப் பிரசாரகரும் பேசிக்கொண்டே இருந்தார்.
இது சரியா? நியாயமா?
பதில் தெரிய... தொடர்ந்து மிகக் கவனத்தோடு கட்டுரையைப் படியுங்கள்.
சதா இறைவனோடு, இறைச்சக்தியோடு இதயப்பூர்வமாக தொடர்பு வைத்திருப்பது நல்லது. சதா இறைவனைப் பற்றி கற்பனை செய்து கொண்டே இருப்பது நல்லதல்ல.
இப்படிக் கற்பனை உலகில் தொடர்ந்து வாழ்வது இறைசக்தியை, இறைவனை அடையும் பாதையில் முன்னேற்றம் நடப்பதற்கான அறிகுறி அல்ல.
காரணம், மனம் இறைவனைப் பற்றிய கற்பனைகளில் சிக்கிக்கொண்டால் இறைவனே நினைத்தால்கூட காப்பாற்ற முடியாது. "மனம் சிக்கிக் கொண்டு விட்டது" என்று இறைவனே நேரில் வந்து சொன்னால் கூட புரிந்துகொள்வது கடினம்.
மனம் பக்குவப்பட்டுக் கொண்டிருக்கும் போது, "எல்லாவற்றையும் இறைவன் செய்கிறார். எல்லாம் அவன் செயல்" என்று சொல்வது உண்மையாக இருக்க முடியாது. காரணம் மனம் கிளிப்பள்ளையைப் போல் மற்றவர்கள் பேசுவதைப்
| ச | சரணாகதி நிகழாதவரை எல்லாம் அவன் |
|---|---|
| ர | பார்த்துக் கொள்வான் என்பது ஆறுதல் |
| ணா | வாசகம் தான்! |
| க | |
| தி |
பிடித்துக் கொண்டு பேச ஆரம்பிக்கும். அது வார்த்தைரீதியானது.
மனம் பக்குவப்பட்ட பின், மனம் கடந்த நிலையில், "எல்லாம் இறைவன் செயல்" என்பதை அனுபவித்து இதயப் பூர்வமாக சொல்லும்போது மட்டுமே அது உண்மை. இது உணர்வு ரீதியானது.
மனப் பக்குவமில்லாதவர், இது போன்ற பெரிய பெரிய அனுபவ உண்மைகளை தன் மனக் கண்ணோட்டம் மூலம் புரிந்துகொண்டு பேச ஆரம்பித்தால், கடைசி வரை உண்மை தெரியாமலே வாழ்க்கை முடிந்துவிடும் அபாயம் இருக்கிறது.
இது போன்ற மக்களுக்காக...
"எல்லாம் அவன் செயல்.
எல்லாம் இறைவன் பார்த்துக்கொள்வான் என்றால்!
நீங்கள் எதற்காக இருக்கிறீர்கள்?
சதா அதைக் கொடு, இதைக் கொடு எனப் பிச்சை கேட்கவா?
அல்லது சதா என்னைக் காப்பாற்று என்று பயப்படுவதற்கா?
சதா மேல் நோக்கியே இறைவனைத் தேடும்
நீ எப்போது இறைவன் உள்நோக்கித் தேட
ஆரம்பிக்கிறாயோ, அப்போது இந்த உடலிலேயே
இறைவனைக் கண்டுகொள்வாய். அப்போது
இந்த உலகத்திலேயே மொத்த சொர்க்கத்தையும்
அனுபவிப்பாய்.
இது புரியாவிட்டால் உன்னைக் கடவுளே நினைத்தால்கூடக் காப்பாற்ற முடியாது!".

ஞானமடைவது
ஒரு புது அனுபவம் அல்ல
உஷா!
எந்தத் தருணத்திலும்
நீ ஞானியாகலாம்.
உன் வாழ்நாளில்
பல முறை
பல சம்பவங்களில் உன்
ஆத்மத்தை தொட்டுக்
கொண்டேயிருக்கிறாய்.
"ஆஹா... இதுதான் வானமா!"
என வானம் தேடி அலையும்
வானம்பாடி திடீரென
உணர்ந்துகொண்டதுபோல்
ஞானியாகலாம் நீ!
என்னும் ஜூமல்கியின் வாசகங்கள் இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கவை.
மனிதர்கள் அந்தக் காலத்திலிருந்தே மந்த மனம் விரிக்கும் வலைகளில் சுலபமாகச் சிக்கிக்கொள்கிறார்கள்.
சிக்கிக்கொண்டதுகூடத் தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். கட்டுரையை மீண்டும் படித்துப் பாருங்கள். உண்மையைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். எல்லாம் சாத்தியமே!
அர்த்தமுள்ள சம்பவம்...
சேலம் தியானம் சத்சங்கம் ஒன்றில்...
"தன்னைப் போல் மனிதனை கடவுள் படைத்தாராம் - இதை பற்றிய உங்களின் கருத்து என்ன?" என ஒருவர் கேட்டார்.
"தன் உருவில் கடவுள் மனிதனைப் படைக்கவில்லை. தன் உருவில் மனிதன்தான் கடவுளைப் படைத்திருக்கிறான்" எனப் பதில் சொன்னேன்.
• "உன்னை உருவாக்கியது நான்.
என்னை உருவாக்கியது நீ.
இருவரில் யார் பெரியவர்?
சொல் மானிடா!" எனக் கடவுள் கேட்டால்,
என்ன பதில் சொல்வீர்கள்
'ஆன்மீகத்தை நம்புபவர் நான்' எனச் சொல்லாதீர்கள்.
உங்களின் பேச்சு குறைந்து, செயல் அதிகரித்திருக்கும். செயலில் படபடப்பு குறைந்து, நிதானம் அதிகரித்திருக்கும். கவலைகள் குறைந்து, சந்தோஷமும் சுதந்திர உணர்வும் அதிகமாகி இருக்கும். இதுவரை இப்புத்தகத்தைச் சோதித்திருந்தால்!
சோதிக்காமல், வெறுமனே படித்திருந்தால்... உங்களின் பேச்சு இன்னும் கொஞ்சம் வலிமை அதிகரித்திருக்கும். இந்நேரத்திற்குள், உங்களை நாலுவிஷயம் தெரிந்தவர் என நாலுபேர் சொல்லியிருப்பார்கள். ஆனால் நீங்கள் அப்படியே இருப்பீர்கள்.
இன்னும் உங்களுள் மாற்றம் நிகழாவிட்டால்...
மீண்டும் ஒரு முறை படித்துச் சோதியுங்கள்.
இனி படிக்கப்போவதையெல்லாம் சோதியுங்கள்.
மனம், மனிதர்கள், வாழ்வு பற்றிய ரகசியங்கள் அனுபவமாக மாற்றப்பட வேண்டும்.
படி.
மனதில்
அதை பிடி.
பின்
உணர்வால்
சோதி...
நீ
அது ஆகவே
மாறிப் போவாய்!
அனுபவமாக மாற்றத் தயாராக இல்லாதவர், ஞானக் கருத்துக்களை மூளைத்தீனி போல் மட்டுமே எடுத்துக்கொள்வது அவர்களுக்கும் அடுத்தவர்களுக்கும் பேராபத்தைத் தரும்.
அவர்களின் அனுபவமாகாத, அரைகுறை கருத்துக்கள் கேட்பவரின் மனதில், குளறுபடிகளாகவே பதிவாகும். தன்னைப் போலவே இன்னுமொரு குழப்பவாதியை மட்டுமே இவர்களால் உருவாக்க முடியும்.
படித்த ஞானக்கருத்துகளைத் சோதிக்கத் தவறாதீர்கள்.
'ஆன்மீகத்தை நம்புபவர் நான்' எனச் சொல்லாதீர்கள்.
ஆன்மீகக் கருத்துக்கள் இறுதியான உண்மைகள். ஆனால், அவற்றை அனுபவமாக்கியவருக்கே அவை உண்மைகள்.
புதிதாய் படிப்பவருக்கு ஆன்மீகம் ஒரு நல்ல தத்துவம் மட்டுமே. தத்துவங்களை நம்ப முயற்சிக்க கூடாது. நம்ப முடியாது.
அப்படியே நம்பினாலும் அவை உண்மைகளாகிவிடாது. ஏனென்றால் அவை இன்னும் அனுபவமாகவில்லை!
தேன் இனிக்கும் என எவ்வளவு ஆழமாக நம்பினாலும் என்ன பயன்? அப்படி நம்புபவருக்குத் தேனின் சுவை தெரியாது. தேனைப் பற்றி ஒரு வார்த்தைகூட தெரியாதவருக்கும் இவருக்கும் என்ன வித்தியாசம்.?
தேனை நம்புகிறேன் எனச் சொல்பவருக்கும் தேனை நம்ப மாட்டேன் எனச் சொல்பவருக்கும் தேனின் இனிமை பற்றித் தெரியாது. இருவரும் ஒரே தளத்தில்தான் இருப்பார்கள்.
நம்புகிறேன்... நம்பவில்லை எனச் சொல்லி விளையாடுவதை விட்டுவிட்டு, ஒரே ஒரு சொட்டுத் தேனை நாக்கிலிட்டுச் சோதித்தால் பிரச்சனை தீர்ந்தது. தேன் இனிக்கும் என்ற தத்துவம் உண்மை அனுபவமாகும்.
இந்தப்
புத்தகம்
தூவும்
விதைகள்,
விழும்
ஆழம்
பொறுத்தே,
வளர்ச்சி அடையும்.
வேகமும்
எழுச்சி வரும்
காலமும்
நிர்ணயமாகும்.
ஆன்மீகம் ஆனந்தமயமான வாழ்வைத் தருகிறதா என சோதித்துப் பாருங்கள்... பிரச்சனை தீர்ந்துவிடும்.
சோதிக்காவிட்டால்... ஆன்மீகத்தை நம்புபவர், ஆன்மீகத்தை நம்பாதவரின் நிலையிலேயேதான் இருப்பார். எனவே சோதியுங்கள். முழுமையாய் சோதியுங்கள்!