நீங்கள் ஏன் கடவுளாகக்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
கூடாது?
கண்ணாடிக் கோப்பையில் மட்டுமே ப்ரூட் சாலட் சாப்பிட்டுப் பழகிய இஸ்ரேலிய சிறுமி தன் குடும்பத்தோடு இந்தியாவிற்கு வந்திருந்தாள். பெட்டிக்கடையில் தொங்கிய வாழைத்தாரை முதன்முறையாகப் பார்க்க, அச்சிறுமிக்கு மிக ஆச்சரியமாக இருந்தது.
"கண்ணே! நீ விரும்பிச் சாப்பிடும் ப்ரூட் சாலட் போலவே இதுவும் சுவையாய் இருக்கும்" எனச் சொல்லி ஒரு வாழைப்பழத்தை அச்சிறுமிக்கு தந்தை உரித்துக் கொடுத்தார்.
அதைச் சுவைத்துச் சாப்பட்டு முடித்த சிறுமி, கடைக்காரரிடம் வாழைப்பழத்தோலை நீட்டினாள்.
கடைக்காரர், "பாப்பா, உனக்கு என்ன வேண்டும்?" என கேட்க, சிறுமி, "எனக்கு இந்த தோலை மீண்டும் நிரப்பித் தாருங்கள்" என்றாள்!
★ இக்குழந்தை போலத்தான் மனிதமனம் கடவுளைப் பற்றி கணித்து வைத்திருக்கிறது.
தோலில் பழத்தை நிரப்ப முடியுமா? மனதால் கடவுளைப் புரிந்துகொள்ள முடியுமா?
★ கடவுளைக் காண முடியும்
கடவுளை உணர முடியும்
கடவுளை அனுபவிக்க முடியும்! - நீங்கள்
கடவுளான மறுநிமிடமே!
★ கடவுள் என்றால் கட+உள். எல்லாவற்றையும் கடந்துவிட்டால் உள்ளேயிருப்பது கடவுளைத் தவிர வேறேதுவும் இல்லை.
★ கடவுளாகவே மனிதர்கள் மாறும்வரை... கடவுளை மனிதரால் கற்பனை செய்ய முடியாது. கடவுளை மனிதரின் மிக உயர்ந்த வடிவமாகவோ அல்லது

எல்லா பாவங்களையும்
எல்லாக் கர்மங்களையும்
நொடியில் எரித்து
மண்ணை
மாணிக்கமாக்கும்
மகாசக்தி
ஒவ்வொரு மனிதருள்ளும்
மறைந்திருக்கிறது.
மாணிக்கமாக நீங்கள் தயாரா?
கடவுளை அதிசய அமானுஷ்ய
சக்திகளின் தொகுப்பாகவோ
மட்டுமே மனிதரால் கற்பனை செய்ய
முடியும்.
★ கடவுளை மனிதனால் புரிந்து
கொள்ளவே முடியாது கடவுளை
கடவுளால்தான் புரிந்துகொள்ள முடியும்.
எனவே, கடவுளாகுங்கள்!
ஒரு மாமரத்தின் இரு கிளைகள் பேசிக்
கொண்டன. வேகமாய் வளரும்
மாங்கிளையைப் பார்த்து, மெதுவாய்
வளரும் மாங்கிளை கேட்டதாம்...
“ஏன் நீ மட்டும் இவ்வளவு வேகமாக வளரத் துடிக்கிறாய்?”
“நான் ஒரு மாமரமாக மாற
விரும்புகிறேன். அதனால்தான்...”
என்றதாம், வேகமாய் வளரும் மாங்கிளை.
★ மாங்கிளை தனி மாமரமாக
முடியாது. அது மாமரம் தானென உணர
வேண்டும். அதே விதிதான் மனிதன் எனும்
கடவுளுக்கும்.
மீண்டும் ஒரு முறை தலைப்பை உணர்ந்து
படித்து விட்டுக் கட்டுரையைத் தொடர்ந்து
படியுங்கள்.
நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் உங்கள் உடல் காற்றைச் சுவாசிக்கிறது. காற்றில் வாழ்கிறீர்கள்.
அதேபோல், நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் உங்கள் ஆத்மா கடவுள் சக்தியைக் கிரகிக்கிறது. நீங்கள் கடவுள் சக்தியில் வாழ்கிறீர்கள்.
ஒரு நாய்க்கு, அது நாய் என்ற விஷயம் தெரியாது. ஒரு மாட்டுக்கு, அது மாடு என்ற விஷயம் தெரியாது. நாய், மாடு என்பது நாம் உருவாக்கிய பெயர்கள். நாயையும், மாட்டையும் பொருத்தவரையில் அது அதுவாக உணரும். அவ்வளவுதான்.
மனிதருக்கு மாத்திரம்தான், அவர்கள் மனிதன் என்ற விஷயம் தெரியும். புரியும். காரணம் மனம்.
மனிதர்களுக்குத் தெரிந்த மனம் தாண்டிய ஒரு நிலை இருக்கிறது. அதற்குப் பெயர்தான் மனம் கடந்த நிலை.
மனம் கடந்த ஆத்ம உணர்வு ஒருவருக்குள்ளிருந்து வெளிப்பட்டால் கடவுளையே தன்னுள் ஒருவராகக் காண முடியும்.
கடவுள் தன்மையை ஒரே ஒருமுறை உணர்ந்து விட்டால், கடவுள் என்ற வார்த்தை அனுபவப் பூர்வமாக விளங்கிவிடும்.
தானே எல்லாமாகவும், எல்லாம் தானாகவும் மாறிவிடும்.
ஒரு சிறிய சம்பவம்...
“கடவுளை நேரில் காண முடியுமா?” என்ற தீவிரத்தேடலில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தவர் மதுவாதன்.
மதுவாதன் பல வருடங்களுக்கு முன் பிரிந்த தன் பால்ய சிநேகிதன் ராககீர்த்தனைச் சந்திக்க நேர்ந்தது. ராககீர்த்தன் வெகு குதூகலத்தோடும் பளிச்சிடும் கண்களோடும் உற்சாகமாக இருந்தார்.
ராககீர்த்தனின் ஆனந்தக் கூத்தின் ரகசியத்தை அறிந்து கொள்ளும் ஆசையில் மதுவாதன், “இவ்வளவு குதூகலமாக நீ இருப்பதின் ரகசியம் என்ன?” என்றார் ஆச்சரியம் மேலிட.
ராககீர்த்தன் வெகு இயல்பாக,“நான் கடவுளோடு வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அதுதான் ரகசியம்!” என்றார்.
மதுவாதன், “என்ன சொல்கிறாய்!!!” என்றார் ஆச்சரியத்தின் உச்சியில். காரணம் “கடவுளைக் காண முடியுமா?” என்பது அவருடைய இரண்டு வருட தேடல்.
| க | தியானிக்கையில் | |
|---|---|---|
| ட | கடவுளாகிறீர்கள். | |
| வு | கடவுளாகையில் | |
| ள் | தியானிக்கையில் இருப்பீர்கள். |
ராககீர்த்தன், “கடவுளை பார்க்க விரும்புகிறாயா?” என்றார்.
மதுவாதன், “அது சாத்தியம் என்றால் உடனே என்னை அங்கு அழைத்துச் செல்” என்றார்.
போகும் வழியெல்லாம் தன் கடவுளைப் பற்றிய முழுவிவரத்தையும் ராககீர்த்தன் சொல்லிக் கொண்டே வர, மதுவாதனின் கடவுளைப் பார்க்கும் ஆர்வம் அதிகமாகி விட்டது. மதுவாதன் ஓட்டமும் நடையுமாக ஓட ஆரம்பித்துவிட்டார்.
கடைசியாக, ஒரு பெரிய ஆலமரத்தின் பின்புறம் மதுவாதனை கூட்டிச் சென்ற ராககீர்த்தன், “முன்னால் சென்று பார்! என் கடவுள் ஆனந்த அமைதியில் அமர்ந்திருப்பார்” என்று தன் சத்குரு சாக்கிய முனியிடம் அழைத்து வந்தார்.
மதுவாதன் சாக்கிய முனியைப் பார்த்த நிமிடம், தன்னுள் ஓர் அற்புத உணர்வு பரவுவதை உணர்ந்தார். இதுவரை அவர் அனுபவித்திராத ஆனந்த உணர்வு அது!
மதுவாதனைப் பார்த்துப் புன்னகைத்த சாக்கிய முனி, “என்ன?” என்றார்.
மதுவாதன், “நீங்கள் கடவுளா?” என்றார்.
சாக்கியமுனி, “உன் பிரச்சனை என்ன?” என்று கேட்டார்.
மதுவாதன், “நான் உலகத்தில் செய்யாத பாவங்களே இல்லை. என் கொடூரங்களிலிருந்து என்னை மன்னிக்கக் கடவுள் ஒருவரால்தான் முடியும். எனவேதான் கேட்கிறேன். நீங்கள் கடவுளா?” என திரும்பவும் கேட்டான்.
சாக்கிய முனி, “ஒரு விஷயம் உறுதி. நான் நிச்சயமாக நீ நினைத்துக் கொண்டிருக்கும் கடவுள் கிடையாது. ஆனாலும் உன் பிரச்சனைக்கு என்னால் தீர்வு தர முடியும்” என்றார்.
மேலும், “உன் பிரச்சனை என்ன? சொல்” என்று கேட்டார்.
“நான் நினைக்கும் கடவுள் இவர் இல்லை. அப்படியென்றால் கடவுளைவிட இவர் பெரியவரோ!” என்று சிந்தித்துக்கொண்டே மதுவாதன்,
“ஐந்து பெண்களின் வாழ்வை நாசப்படுத்தியிருக்கிறேன். எனக்குப் பிடிக்காத நான்கு பேரை சித்ரவதை செய்து கொலை செய்திருக்கிறேன். என்னுடைய மூத்தமகனைக் கதறக் கதற நானே வெட்டி என் இஷ்ட தேவதைக்குப் பலி கொடுத்திருக்கிறேன்.
| க | |
|---|---|
| ற் | மனிதன் தெரிந்துவைத்திருக்கும் கடவுள் என்பதே வெறும் |
| ப | கருத்துக்களின் - கற்பனைகளின் தொகுப்பு மட்டுமே! |
| னை |
பல குடும்பங்களை நடுத்தெருவுக்குக் கொண்டுவந்திருக்கிறேன்" என்று தன்னுடைய கொடூரங்களை ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டு மிக்க மனவருத்தத்தோடும், கவலையோடும் சொன்னார்.
மேலும், தொடர்ந்த மதுவாதன், "விவரம் தெரிந்த நாள் முதல் ஏதோ ஒன்றைத் தேடித்தேடி அலைகிறேன். அது கிடைக்கவேயில்லை.
'அதில் கிடைக்குமா? இதில் கிடைக்குமா?' என்று கிடைத்த வழியிலெல்லாம் நான் சென்றதின் விளைவுதான் இத்தனை கொடூரங்களும்! நான் செய்த கொடுமைகள் என்னை வாட்டுகின்றன.
என்னை முழுமையாக விடுவித்துக்
கொள்ள வழி என்ன? எவ்வளவு கஷ்டமான
பரிகாரமாக இருந்தாலும் சரி, நான்
செய்யத்தயார்!" என்றார்.
சாக்கிய முனி, "பரிகாரம் மிக எளிது" என்றார்.
மதுவாதன், "அப்படியா! என்ன அது?" என்று கேட்டார்.
சாக்கிய முனி, "கடவுளாகிவிடு" என்று எளிமையாகச் சொன்னார்.
மதுவாதன், "என்ன சொல்கிறீர்கள்!
நான் ஒரு மகா கொடுமைக்காரன். கிட்டத்தட்ட
ஒரு சைத்தான். என்னைப் போய்..." என்று
குழப்பமாக கூச்சலிட்டு விட்டார்.
சாக்கிய முனி, "நீ ஏன் கடவுளாகக்
கூடாது?" என்று மீண்டுமோர் முறை
அழுத்தம் திருத்தமாகக் கேட்டார்.
சாக்கிய முனியின் வார்த்தைகளில்
இருந்த உறுதித்தன்மை மதுவாதனை
உலுக்கிவிட்டது.
"ஏன் நான் கடவுளாகக் கூடாது?" என்று யோசித்து, யோசித்து பல நாட்களுக்குப் பின் யோசனைகளைத் தாண்டிய நிலையை அடைந்தார்.

அஹம் பிரம்மாஸ்மி
நான் பிரம்மன்
I am Brahman
- வேத ரகசியம் நான்தான் அது I am that -நிஸர்க்கதத்தா தத்வ மஸி நீதான் அது That though are -உபநிடதம் அனல் ஹக் நான் தெய்வம் I am God -மன்சூர் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் நம்பினாலும் நம்பாவிட்டாலும் நீங்கள் கடவுள்தான்! நீங்கள் ஞானமடைகையில் இது உண்மையெனப் புரியும்! மனம் கடந்த நிலையை அனுபவித்தார்.
எங்கும் நிறைந்திருக்கும் கடவுள் தன்மை தன்னுள்ளேயே இருப்பதைக் கண்டு கொண்டார். கடவுளை உணர்ந்து ஆனந்தத்தைக் கொண்டாட ஆரம்பித்தார்.
அவர்தான் பிற்காலத்தில் மிக அருமையான ஆன்மீகவாதியான ஸ்ரீ ஸ்ரீ மதுவாதனர் என்றழைக்கப்பட்டார்.
நீங்கள் யாராக இருந்தாலும் சரி, உங்களாலும் கடவுளாக முடியும். கடவுளை உணர முடியும்.
ஆனால், கடவுள் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் கடவுளாக மாற நிச்சயமாக முடியாது. உங்கள் நினைவுக்கும் மனதிற்கும் அப்பாற்பட்ட ஒரு நிலைதான் கடவுள்தன்மை.
கடவுள் என்று நீங்கள் நினைப்பதெல்லாம் கடவுளைப் பற்றிய உங்கள் மனக்கருத்துக்களும் அதீத கற்பனைகளும்தான்.
மனித மனத்தால் கடவுளைக் கற்பனை செய்ய முடியாது. அப்படி கற்பனை செய்ய முடிந்தால் அது கடவுளாக இருக்கமுடியாது.
நீங்கள் கடவுளாக, தனி அவதாரம் எடுக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் கடவுளாக மாற இந்தப் பிறவியே போதுமானது.
கடவுளைப் பற்றிய கருத்துக்களைக் கடந்து கடவுளைக் கண்டுகொள்ளுங்கள். நீங்களும் கடவுளாக முடியும்.
அதற்கு முதல் படி,
"நான் ஏன் கடவுளாகக்கூடாது?" என்ற கேள்வியை முழுஉணர்வோடு கேளுங்கள். வழி பிறந்துவிட்டது.
அர்த்தமுள்ள சம்பவம்
"நான் எப்போது புத்தனாவேன்?" எனக் கேட்ட சீடனின்
கன்னத்தில் பளாரென அறைந்தார் ஜென் குரு.
"புத்தா எப்படி புத்தாவாக முடியும்?
உள்ளே தூங்கும் நீ விழிக்கும்போது,
பித்தனான நீ புத்தனாவாய்" என ஆசீர்வதித்தார்.
கடவுள் தன்மை கதிர் வீசட்டும்!
‘நான் கடவுள் என்பதை நிரூபிப்பதற்காக வரவில்லை. நீங்கள் ஒவ்வொருவரும் கடவுள் என்பதை நிரூபிப்பதற்காகவே வந்திருக்கிறேன்.
என்னவொரு விறுவிறுப்பான வாசகம் இது!’ என நினைக்காதீர்கள். காரணம் அப்படி நினைக்கையில் அது வெறும் நினைவாகவே நின்று விடக்கூடும். அப்படி நின்று விடக்கூடாது! இது முழுக்க முழுக்க நிஜம். உண்மை. சத்யம். எனவே, இந்த வாசகத்தைத் தியானியுங்கள். அது அனுபவமாக மாற வேண்டும்.
★ கடவுள் பெரியவர்
எனச் சொல்லி உங்களின் தரத்தைக் குறைப்பது,
★ கடவுள் நண்பர்
எனச் சொல்லி கடவுளின் தரத்தைக் குறைப்பது ஆகிய இரண்டுமே தரம்குறைத்த செயல்கள்.
“நீங்கள்தான் கடவுள்” எனும் வேதவாக்கியத்தை ஆழமாய் தியானியுங்கள். இப்படிச் செய்தே ஞானமடைந்தவர்களின் எண்ணிக்கை பல வரலாற்றில் பதிந்திருக்கிறது.
அளவில்லா
அன்பு - அமைதி -
ஆனந்தம்
கடவுளின்
தன்மைகள்!
இதையெல்லாம் படித்தபின்...
கடவுளுக்குக் கிடைக்கும் மரியாதைகளைப் பிடித்துக்கொண்டு, மனம் கனவு காண அனுமதிக்காதீர்கள்.
இப்பொழுதிலிருந்து கடவுளின் குணாதிசயங்களை - உங்களின் குணாதிசயங்களாக்குங்கள். கடவுள் தன்மை உங்களுக்குள் புகுந்து பரவட்டும்.
உங்கள் வழியாக கடவுள்தன்மை கதிர் வீச... கதிர் வீச... நீங்களே கடவுளாகி விடுவீர்கள்!