உங்கள் புத்திநேந்திரத்திற்குள் சக்தி பாயட்டும்!
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
பார்ப்பவரை ஆச்சரியப்பட வைக்கும் தஞ்சை பெரிய கோயிலை கற்களாலேயே கட்டிய ராஜராஜசோழன், நிச்சயம் தான் தங்குவதற்கு அதேபோல் உறுதியான ஒரு அரண்மனையை கட்டியிருப்பார்தானே.
இன்று அது இருக்கிறதா?
எல்லாப் பழமைவாய்ந்த கோயில்களையும் கட்டியவர்கள் மன்னர்கள்தான். இன்று வரை அக்கோயில்கள் உயிர் வாழ்கின்றன.
அந்த மன்னர்களின் அரண்மனைகளும் சொகுசு மாளிமைகளும் எங்கே? எப்படி அழிந்தன?
எவ்வளவு படையெடுப்புகள், ஆக்கிரமிப்புகள்... ஆனால், இன்று வரை கோயில்கள் பத்திரமாகவே இருக்கின்றன என்றால், அக்கோயில்களை ஏதோ ஒரு பெரிய சக்தி அல்லது சங்கதி காப்பாற்றுகிறது என்பது புரிகிறதா?
கோயில்கள் மட்டும் காக்கப்பட்டிருப்பது
தற்செயலானது எனச் சொல்லி
சாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது.
ஞானியரால்
பிராண
பிரதிஷ்டை
செய்யப்பட்ட
கோயில்களே
சக்தி
கேந்திரங்கள்!
இது ஆச்சரியப்பட வேண்டியது மட்டுமல்ல... ஆராயப்பட வேண்டியது.
நீங்கள் பிறக்க, வெட்டவெளியில் பூமி பிறக்க, அணுவிலிருந்து அண்டம் வரை ஒழுங்காய் இருக்க,
காரணமான காரணசக்தியின் (Super Natural Power) சக்தி நிலையங்களாகக் கோயில்கள் இருப்பதால்தான், அவை இயற்கையாகவே காக்கப்பட்டிருக்கின்றன.
கோயில்கள் மற்றும் சம்பிரதாயங்களைச் சுற்றி ஏதோ சிறு சிறு மூடநம்பிக்கைகள் இருக்கின்றதென பெரிதுபடுத்தி பார்க்க வைத்து, கோயில்களில் இருக்கும் மகா சக்தியை நீங்கள் இழக்கக் காரணமாயிருக்கும் மனதைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். நம்மை மீறிய சக்தி நம் அருகிலேயே இருக்கிறது. நம் அறியாமையால், குறை மதிப்பீட்டால் அவற்றை இழந்துவிடக் கூடாது.
சக்திக்கேந்திரங்களுக்கு உங்கள் புத்திக்கேந்திரத்தில் மதிப்பளியுங்கள். சக்தி புத்திக்குள் பாயட்டும். புத்தி புதுக்கோணத்தில் வாழ்வை அணுகட்டும்!
