நம்பிக்கை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
* எடுத்த காரியத்தில் நம்பிக்கை வை, உன் நம்பிக்கைக்கு வாழ்க்கை கை கொடுக்கும்.
* "என் பெயர் XY /XX நான் ஒரு மனிதன், மனுஷி. எனக்கென்று ஒரு குடும்பம் - தொழில் . என் வாழ்வின் நோக்கம் இதுதான். நான் உடல், மன அளவில் நன்றாக இருக்கின்றேன்!"
என்ற சில நம்பிக்கைகளை அச்சாணியாக வைத்துதான் மனிதர்கள் தெளிந்த மனநிலையில் வாழ்கின்றனர்.
சில நம்பிக்கைகளில் ஏற்படும் குளறுபடிதான், மனிதரின் மனதைக் குளறுபடியாக்கிப் பைத்தியம் ஆக்குகிறது.
சில நம்பிக்கைகள், முழுவதுமாக மனதைவிட்டு வெளியேறுவதும் உடலைவிட்டு உயிர்பிரிவதும் ஒன்றாய் நிகழும் போது, மனிதர்கள் இறந்து விடுகின்றனர்.
* உன் வாழ்க்கையின் தரம், உங்கள் நம்பிக்கையின் தரத்தைப் பொறுத்தது.
நம்மில் சிலருக்கு உடனே நடந்து விட வேண்டும். அலாவுதீனும் அற்புத விளக்கும் கதையில்தான் இந்த மாதிரியாக மாயாஜாலம் நடக்கும். ஆனால், வாழ்க்கை என்பது கதையோ, படமோ அல்ல. இங்கே வெற்றி கிடைக்க வேண்டுமென்றால், பல ஆண்டுகாலம் காத்திருக்க வேண்டும்.
விவசாயத்தில் எவ்வளவோ புரட்சிகள் நடந்து விட்டன. என்றாலும், நெல் விளைவதற்குக் குறைந்த பட்சம் மூன்று மாதங்கள் பொறுத்துத்தான் ஆக வேண்டும்.
அதைப் போலவே, ஒரு தாயின் வயிற்றில் குழந்தை கருவாகி, உருவாகி வளர்வதற்கு ஒன்பது மாதங்களும் சில நாட்களும் காத்திருக்கத்தான் வேண்டும்.
ஏர்னெஸ்ட் ஹெமிங்வே நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர். அவர் எழுதிய ‘கடலும் கிழவனும்’ என்கிற நாவலுக்கு நோபல் பரிசு கிடைத்தது. இந்த நாவலில் வரும் கிழவர், நம்பிக்கையின் உருவகமாகவே இருக்கிறார். அந்த நம்பிக்கையின் அடிப்படை பொறுமைதான். பொறுமையாக இல்லாதவரின் நம்பிக்கைதான் முதலில் சோதனைக்குள்ளாகிறது.
நம்பிக்கைதான் வாழ்க்கை. நம்புங்கள்... உங்களை நம்புங்கள் ! எதை நீங்கள் நம்புகிறீர்களோ, அதுவாகவே நீங்கள் மாறுவீர்கள். கிருமியாலேயே செத்துப்போகிற உயிர்களும் உண்டு. மார்பில் துப்பாக்கிக் குண்டுகளை வைத்திருந்து வாழ்க்கையை ஓட்டுகிறவர்களும் உண்டு.
வாழ்வதற்கும் சாவதற்கும் இடையே இருக்கிற ஒரே வித்தியாசம் நம்பிக்கைதான்.
ஒரு கதையை உங்களுக்குச் சொல்கிறேன்.
ஓர் ஆழமான கடல். அதன் நடுவில் ஒரு மலை. மலையின் உச்சியில். பாறை இடுக்கில் ஒரு பறவை கூடு கட்டிக்குஞ்சு பொரித்திருந்தது. தன் குஞ்சுப் பறவைகளுக்கு உணவு தேடுவதற்காக, அது ஒரு நாள் காலை எங்கோ பறந்து போயிற்று.
குஞ்சுப்பறவைகளுக்கோ பசி. எதிரே பார்த்தால் சிவப்பு வண்ணத்தில் கண்களை மிரட்டுகிற சூரியன். கீழே பார்த்தால் அலைக்கரங்களை மேலே எழுப்பும் கடல்.
நான் கீழே குதிக்கப் போகிறேன் என்றது ஒரு குஞ்சுப் பறவை. அதற்கு, வேறு ஒரு பறவை “நீ குதித்தால், கடலில் மூழ்கிச் சாவது உறுதி” என்று சொன்னது. சற்றுநேரம் தயங்கிய அந்தக் குஞ்சுப்பறவை, பிறகு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கடலில் குதித்தது. குதித்த பிறகுதான் அது தண்ணீரில் மூழ்கமுடியாது என்பதைத் தெரிந்துகொண்டது.
அது கடலின் மேற்பரப்பில் மிதந்து சின்னச் சின்ன மீன்களைக் கொத்தித் தின்றது. அதைப் பார்த்த மற்ற குஞ்சுப் பறவைகள் எல்லாம் கடலில் விழுந்தன. தாங்கள் மிதக்கத்தான் முடியும், மூழ்க முடியாது என்பதை அப்போது அவை தெரிந்து கொண்டன.

நம்பிக்கைதான்
வாழ்க்கை!
நம்பிக்கைதான்
பிரச்சனை!
நம்பிக்கைதான்
தீர்வு!
இந்தக் கதையில் வருகிற முதல் பறவை நம்பிக்கை இல்லாது இருந்திருந்தால்... உடன் பிறந்த தன் குஞ்சுப் பறவைகளோடு பசியால் மாண்டு போயிருக்கும். அதன் நம்பிக்கையே அதை வாழ வைத்தது.
அறிவால் நம்பிக்கை உருவாவது தவறில்லை. ஆனால் உணர்வால் உருவாகிற நம்பிக்கை உடனே பலன் தருகிறது. வெறும் அறிவு எதையும் கேள்வி கேட்கும். எதையும் நம்பாது. கேள்வி கேட்பதில் தவறில்லை. ஆனால் கேள்விகளிலேயே வாழ்க்கையை முடித்துக் கொண்டுவிடக்கூடாது.
மரணித்துப் போகிற மனிதரை மனிதர்
பார்க்கிறார். ஆனாலும் தனக்கு மரணம் வராது
என்பதைப் போலத்தானே நடந்து கொள்கிறார்.
இது தவறான நம்பிக்கை என்றாலும் இந்த
நம்பிக்கைதான் மனிதரை இயங்க வைக்கிற
உந்து சக்திகளில் ஒன்றாக இருக்கிறது.
பெரிய ஏரியில் மீன்பிடிக்கப் போகிறவர்கள் தூண்டிலைப் போட்டுக்கொண்டு எவ்வளவு நேரம் பொறுமையாகக் காத்துக் கொண்டிருக்கின்றனர்? தூண்டிலில் எந்த மீனும் சிக்காது என்கிற அவநம்பிக்கை வந்து விட்டால், ஏரிப்பக்கம் யார் போவார்கள்? நம்பிக்கையோடு காத்திருப்பது, திட்டமிடுதல், புத்திசாலித்தனமாக உழைத்தல், ஆகிய வெற்றிப் படிக்கட்டுகள், அடிப்படை அஸ்திவாரங்களாக உள்ளன.
மனிதன் காற்றைச் சுவாசிப்பதால் மட்டும் வாழ்வதில்லை; தன்னம்பிக்கையையும் சுவாசிப்பதால்தான் வாழ்கின்றனர்.
சுவாசிக்கும் காற்று மாசடைந்திருந்தால் நம் ஆரோக்கியம் நாசமடைவது உறுதி.
அதேபோல் தன் மீது கொண்ட நம்பிக்கை மாசடைந்திருந்தால் நம் வாழ்க்கை நாசமடைவது உறுதி.
நான் மோசமானவன் என்று கூறித் தாழ்வுமனப்பான்மையில் நோக வைப்பது அவரது தவறான நம்பிக்கைதான். நான் பெரியவன் என்று நினைக்க வைத்து உயர்வு மனப்பான்மையால் நோகவைப்பதும் அவரைப் பற்றிய தவறான நம்பிக்கைதான்.
ஒருவனின் நம்பிக்கைதான் அவரது மன, குணச் செயற்பாட்டின் அச்சாணி. தன்னம்பிக்கை என்னும் அச்சாணியில் நெளிவு ஏற்படும் போதும் வாழ்க்கைச் சக்கரத்தின் இயக்கம் பாதிக்கப்படும். மனிதர்கள் தடுமாறுவார்கள்.
கற்பனையை நிஜம் என்றும், பொய்யை உண்மை என்றும் தவறைச் சரி என்றும் நம்பும் மாசடைந்த நம்பிக்கையை மையமாகக் கொண்டு உருவாகும் மனதின் செயல்பாடும், குணத்தின் வெளிப்பாடும் தன்னம்பிக்கையின் கலங்கிய தன்மையைப் பொறுத்தவை.
இதைப்பொறுத்துத்தான் வாழ்க்கைச் சக்கரத்தின் இயக்கம் உற்சாகமா? இல்லை உள் சோகமா? என்று முடிவு செய்யப்படும்.
தவறை அறிந்து சரியாகப் புரிந்து கொண்டால் நம்பிக்கையைச் சுற்றிக் கொண்டிருந்த மாசு நீங்கிவிடும். மாயம் கலைந்து விடும்; வாழ்க்கைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைத்துவிடும்.
நம்பிக்கை திடமானால் வாழ்க்கை திடமாகும்; தன்னம்பிக்கை சரியானால் வாழ்வு சரியாகும்.
உங்கள் தன்னம்பிக்கையின் தன்மையைப் பொறுத்துத்தான் அது வாழ்வா? இல்லை பிரச்சனையா? இல்லை தீர்வா என்று முடிவு செய்யப்படும்.
நம்பிக்கையை வளப்படுத்துங்கள் வாழ்வு வளமாகும்!
> மனிதன் காற்றைச் சுவாசிப்பதால் மட்டும் வாழ்வதில்லை. > தன்னம்பிக்கையையும் சுவாசிப்பதால்தான் வாழ்கின்றனர். > > நம்பிக்கை திடமானால் வாழ்க்கை திடமாகும். தன்னம்பிக்கை > சரியானால் வாழ்வு சரியாகும்.
தி
ட
ம்