KAILASA Library/கதவைத் திற ... காற்று வரட்டும்!/அகநடுக்கம்Sign in
கதவைத் திற ... காற்று வரட்டும்!

அகநடுக்கம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

★ "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" என்பதைவிட "அகநடுக்கத்தின் அளவு முகத்தில் தெரியும்" என்றால் எல்லோரும் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.

அழகுக்கும் அகநடுக்கத்திற்கும் நேரடிச் சம்பந்தம் இருக்கிறது.

★ அகநடுக்கம் நிலநடுக்கத்திற்குச் சமம். அகம், நடுங்கும்போது நரம்பு மண்டலமே நடுங்கும்.

இது மிகைப்படுத்தல் அல்ல. அறிவியல் பூர்வமானது!

★ அகநடுக்கம் ஏற்படும் ஒவ்வொரு நிமிடமும், உடலின் உயிர்ச்சக்தி சேதமாகும்.

★ வாழ்வின் சாதாரண விஷயங்களை அசாதாரணமாகப் பார்க்கப் பழகியதால் உள்ளே உருவாகும் 'அவசரகால நிலை' தான் அகநடுக்கம்.

கிரகாம்பெல்லின் தொலைபேசி முறை அப்போதுதான் புழக்கத்திற்கு வந்து சூடுபிடித்துக் கொண்டிருந்தது. புதியது என்பதால் தொலைபேசிக் கட்டணம் வெகு அதிகமாக இருந்தது.

எப்போதும் படபடப்பாக இருக்கும் அந்த ஜெர்மானிய தூதுவர் ஜப்பான் தூதரகத்திற்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “நான் பேசி முடிக்க மூன்று நிமிடங்களுக்கு மேல் ஆகாது. நான் பேசும் போது நீங்கள் குறுக்கே எதுவும் கேட்கக்கூடாது. கவனமாகக் கேட்க வேண்டும். எனக்கு ஏதேனும் பதில் சொல்ல விரும்பினால் அதை இப்போது சொல்லக்கூடாது. தந்தி மூலமாக பதில் சொல்லலாம். புரிந்ததா?” என முன்னுரை அளித்து தான் சொல்ல வேண்டிய அலுவலகச் செய்திகளை வேகவேகமாகச் சொல்லி முடித்தார்.

மேலும் தொடர்ந்த ஜெர்மானிய தூதுவர், “சொல்லவேண்டியதையெல்லாம் சொல்லி விட்டேன். மூன்று நிமிடம் முடிய இன்னும் முப்பது வினாடிகள் இருக்கிறது. நீங்கள் ஏதேனும் சொல்ல நினைக்கிறீர்களா?” எனக் கேட்டதற்கு, ஜப்பான் தூதரகத்திலிருந்தவர் சொன்ன பதில், “ஆமாம்... எல்லாம் சொன்னீர்கள். மிக வேகத்தோடு படபடப்பாக நீங்கள் சொல்லி முடித்த செய்தியின் ஒரு வார்த்தைகூட என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை!”

ஜெர்மானிய தூதவர், “இதை ஏன் முன்பே சொல்லவில்லை?” எனக் கேட்க, ஜப்பான் தூதரகத்திலிருந்தவர், “குறுக்கே பேசக்கூடாதென்று சொன்னது நீங்கள்தானே!” என்று சொன்னவுடன் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது.

* படபடப்பும் தேவையற்ற பரபரப்பும் சுறுசுறுப்பு அல்ல. சுறுசுறுப்பு என்ற பெயரில் பதட்டத்தைத்தான் மனிதர்கள் தங்களுக்குள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

பதட்டத்தால் நடுங்கும் விரல்கள், சிக்கலான நூல்கண்டை விடுவிப்பதற்கு பதில் இன்னும் கொஞ்சம் சிக்கலை அதிகப்படுத்தும் அவ்வளவே. அகநடுக்கம்தான் உங்களின் சாதா பிரச்சனைகளை உடல் மன வேதனைகளாக மாற்றுகின்றன.

நம்முடைய நிம்மதி அலைக்கழிக்கப்படும் எல்லா நிமிடங்களும் நாம் வாழ்வது அகநடுக்கத்தில்தான்.

* கெஞ்சினால் மிஞ்சுவது! மிஞ்சினால் கெஞ்சுவது!

★ வெளியில் ஆடு! வீட்டில் புலி!

★ அமைதியாக இருந்திருக்க வேண்டிய இடத்தில் கோபப்படுவது. கோபப்பட வேண்டிய இடத்தில் அமைதியாக இருந்து விடுவது. - இவைதான் அகநடுக்கத்தின் காரணகர்த்தாக்கள்.

portrait

சாதாரண மனிதனிடம்

எதிர்பார்க்க முடியாத

அமைதி,

தெளிவு,

அன்பைப்

பெற்றிருப்பவரே

மகான்!

கோப, தாப உணர்ச்சிகளால் உலுக்கப்படும்போது, அதை எதிர்க்கும் மனிதர்கள் மிருகமாவார்கள். இதுதான் அகநடுக்கம்.

அடிவயிறு கலங்க வேண்டிய சூழலில்கூட அகத்தில் நடுக்கமில்லாமல் நிம்மதியாக இருப்பவரே மகான் என்று அழைக்கப்படுவார்.

அசோக சக்ரவர்த்தியை கருணைக்காற்றாய் மாற்றியதுகூட ஒரு மகான்தான்.

கி.மு. 270 - புத்த பிட்சு வாகும் முன் அசோகர் ஒரு கொடூரனாக வாழ்ந்த நேரம். ஆட்சி சூழ்ச்சியும், பதவி வெறியும் அகக்கண்ணை மறைக்க சகோதரனைப் பழிதீர்க்கப் புறப்பட்டுவிட்டார் அசோகர்.

தன் சகோதரனைக் கொல்ல முயற்சித்தார்.

ஆனால், சகோதரன் தப்பவிட்டார். தப்பிய சகோதரன் ஒரு புத்தபிட்சுவிடம் தஞ்சம் புகுந்தார்.

சகோதரன் ஒரு புத்தபிட்சுவிடம் ஒளிந்து கொண்டிருப்பதாகச் செய்தி கிடைத்தது.

தஞ்சம் புகுந்தவரை வஞ்சம் தீர்க்க வாளோடு புறப்பட்டார் அசோகர்.

புத்த பிட்சுகளுக்கு மிக நல்ல மதிப்பும், மரியாதையும் இந்தியாவில் இருந்த நேரம் அது.

ஆனால் அசோகர் தன் கையாட்களோடு புத்த மடாலயத்திற்குள் நுழைந்து, "ஏய்! இங்கே ஒளிந்து கொண்டிருப்பவன் எங்கே?" என்றார் வெறி கலந்த குரலில்.

புத்த பிட்சு சாந்தமாக, "இங்கே பாரப்பா, பழிதீர்ப்பது பொல்லாதது. கோபத்தைக் கோபத்தால் தணிக்க முயற்சிப்பது தவறு.

கோபத்தை அன்பால் வெல்ல வேண்டும்.

பழிக்கு, பழிவாங்குவது தீர்வு அல்ல.

ஒரு தீமைக்குப் பதிலாக இன்னொரு தீமை செய்வதால் ஏற்கனவே நடந்து விட்ட தீமையைப் போக்க முடியாது.

அதனால் சொல்கிறேன். தீங்கு செய்ய
நினைக்காமல் திரும்பிப் போப்பா" என்று
கனிவான குரலில் சொன்னார்.

அசோகர், "உன்னுடைய
போதனையை உன் மடத்துறவிகளோடு
நிறுத்திக்கொள்.

இவ்வளவு தூரம் பேசும் நீ உள்ளே ஒளிந்திருப்பவனுக்காக சாகத் தயாரா. எங்கே! என் கோபத்தை உன் அன்பால் வெல்லேன்! பார்ப்போம்!" என்று சவால் விட்டார்.

> அகநடுக்கம் மனிதனைத் தடுமாறச்
> செய்யும். தடம் மாறச் செய்யும்.
>
> உங்களின் நியாயமான
> உணர்வுகளை யாருக்காகவும்
> எதற்காகவும் நசுக்காதீர்கள்!

புத்த பிட்சு அதே சாந்தத்தோடு, "சரி, என்னை வெட்டு. ஆனால் மடாலயம் புனிதமானது. அது கறைபடக்கூடாது. வெளியே வருகிறேன், வெட்டு!" என்று கூறி, மடாலயத்தை விட்டு வெளியே வந்துவிட்டார். தன் சவாலை, மிகச் சாதாரணமாக புத்தப் பிட்சு ஏற்றுக்கொண்டது அசோகருக்கு முதல் அதிர்ச்சி.

இருந்தும் கோபமும், எரிச்சலும் ஒருசேர அசோகரைத் தூண்ட, உறையிலிருந்து வாளை உருவி, "சரியான முட்டாள்யா நீ..." என்று கூறிக்கொண்டே வெட்ட முயற்சிக்க... எந்தச் சலனமும் இல்லாமல், கண்களில் கலக்கமே இல்லாமல், தொடக்கத்திலிருந்த அதே சாந்தத்தோடு இருக்கும் புத்த பிட்சுவின் நடுங்காத தன்மை அசோகரை நடுங்க வைத்தது.

இது இரண்டாவது அதிர்ச்சி.

அ
க
நஅகநடுக்கத்தின் சல்லிவேர்கள் வரை உணர்வால் பரவு.
டுஅகம், சுகம் நோக்கி ஒடுக்கெடுக்கப்படும். அகத்தில்
க்சுகம் பரவ நீ திகம்பரராவாய்!
க
ம்

புத்த பிட்சுவின் உறுதியையும், நடுக்கமில்லாத தன்மையையும் கண்டு திகைத்த அசோகரின் கை அப்படியே அந்தரத்திலேயே நின்று விட்டது.

அசோகரால் பிட்சுவை வெட்ட முடியவில்லை.

தன் முன் இருப்பது சராசரி மனிதரல்ல என்பது மட்டும் அசோகருக்கு அந்தக் கணத்தில் புரிந்தது.

"இப்படியும்கூட ஒரு மனிதரால் இருக்க முடியுமா? உயிரே நடுங்கும் சூழ்நிலையில்கூட சாந்தமாக இருந்தால்! இந்த மனிதர் சாதாரண நேரங்களில் எவ்வளவு சந்தோஷமாக இருப்பார்?" என்று யோசித்துக்கொண்டே, அசோகர், "இது எப்படிச் சாத்தியம்?..." என்று கோபம் மறைந்து ஆச்சரிய விழிகளோடு கேட்க, ஆனந்தத்தின் வழிகளை அன்போடு அசோகருக்குப் போதித்தார் அந்த புத்த பிட்சு. பின்னாளில் அசோகர் புத்த மதத்தைப் பரப்பும் ஒரு கருணைக் காற்றாக மாற, அசோகர் மனதில் விதை விதைக்கப்பட்டது அன்றுதான். ஒரு மகானால்தான் முரடனைக்கூட சாந்தப்படுத்த முடியும்.

"அகநடுக்கமே இல்லாமல் மிகச்
சுகமாக சுமுகமாக மனிதர்கள் வாழ
முடியும்" என்பதற்கு அப்படி வாழ்ந்து
காட்டிய மகான்கள்தான் அத்தாட்சி.
வாழும் மகான்கள்தான் சாட்சி.

நடுக்கத்திலிருந்து வெளி வர வழி தரும் ஒரு அழகான ஜென் கூற்று...

"தலைகீழானதை தலைகீழாக்கி
விடு!
தலைநிமிர்ந்து விடும் வாழ்க்கை!"

இந்தக் கூற்றை புரிந்துகொள்ள ஒரு

அதிகாரம் சீரழிக்கும்
-ஆக்டன் பிரபு
சீரழிப்பவனால்...
'அதிகாரம்' சீரழிக்கும்
சக்தி பெறுகிறது!
-சூட்சுமம்
மன்னர்களாகி மக்களை வதை
செய்யும் வாய்ப்பில்லாமல்
போனதால்...
மனிதன் தன்னையே தன்
அதிகாரத்தால்
சீரழிக்க ஆரம்பித்திட்டான்!
அவனின் அதிகார
வரம்பிற்குட்பட்ட
அவனின் விசுவாசமிகு உடலையும்
அறிவுமிகு மனதையும் கெடுக்க
ஆரம்பித்தான்.
உங்களின் உடலையும் மனதையும்
அதிகார குணத்திடம் இருந்து
காப்பாற்றும் வரையில் ஓயாதீர்!

சிறிய உதாரணம்.

தலைகீழாகப் புரண்டுவிட்ட வண்டோ, கரைப்பான்பூச்சியோ நிமிரப்படும் பாட்டைப் பார்த்திருப்பீர்கள்.

தலைக்கீழாகப் புரண்டுவிட்டதால் தவிக்கும் வண்டை மீண்டும் ஒருமுறை

புரட்டினால் (தலைகீழாக்கினால்) பிரச்சனை தீர்ந்தது. படபடத்து நடுங்கும் வண்டு பரவசத்தோடு பறக்க ஆரம்பத்து விடும்.

இதேபோலதான் உள்ளுக்குள் மனிதர் புரண்டு போயிருக்கிறார். அதனால்தான் தவித்துத் தத்தளிக்கிறார்.

வாழ்க்கையையும் மனிதர்களையும் நேர் எதிராக அணுகுகிறான். புரிந்துகொள்ள முடியாமல் படாதபாடு படுகிறார்.

அமைதியாகப் போக வேண்டிய இடத்தில் கோபப்படும் போதும் சரி, கோபப்பட வேண்டிய இடத்தில் அமைதியாக அடங்கிப்போகும் போதும் சரி - தடுமாறும் உணர்ச்சிகளால் உள்ளம் உலுக்கப்படும். நியாயமான உணர்வுகள் அடக்கப்படும்.

இவற்றால் உடலின் உயிர்ச் சக்தி துஷ்பிரயோகப்படுத்தப்படும்.

கொஞ்சம் கவனத்தோடு ஆராய்ந்தால் அகநடுக்கத்தைக் கண்டுகொள்ள முடியும்.

ஒருமுறை கண்டுகொண்டாலே போதும். அகநடுக்கத்தைத் தூக்கி எறிவது சுலபம்.

அகநடுக்கம் குறையக் குறைய அகம் தெளிவாகும். முகமும் தெளிவாகும்.

அகம் அழகாகி,

முகமும் அழகாகிவிட்டால்,

வாழ்க்கையில் நீங்கள் சிறகடித்துப் பறக்கலாம்!

அர்த்தமுள்ள சம்பவம்...

குல்ஜித்திடம் நிட்டி கேட்டார், "திருமணத்திற்கு முன் பின் அனுபவமென்ன?"

"முன் : 'அவளைக் கண்டாலே எனக்கு நடுங்கும்' - என என்னைப் பற்றி மற்றவர்கள் குறிப்பிடுவார்கள்".

"பின் : 'அவளைக் கண்டாலே அவன் நடுங்குகிறான்!' - என என்னைப் பற்றி மற்றவர்கள் குறிப்பிடுகிறார்கள்"!

  • ஆம்! நிஜவாழ்வில் மனிதரின் அகநடுக்கம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. உணர்கிறீர்களா!

அபாய காலங்களில்தான் நிதானம் அதிகமாக வேண்டும்.

நெருக்கமானவர்களுக்கு ஏதாவதொரு அபாயம் நிகழ்ந்தால் பதறிப்போவது...

பாசமா, வேஷமா, இயலாமையா?

"பெரும்பான்மையினரின் கதையில் அது இயலாமையின் வெளிப்பாடுதான்!" என்பது மனோ குண ஆராய்ச்சியாளர்களின் முடிவான கருத்து.

| அபாய | | :--- | | காலத்தில் | | பயம் | | நடுக்கம் | | பாயக் கூடாது! |

அன்பற்குரியவர் அடிபட்டு இரத்தம் சிந்துவதைப் பார்த்ததும் அடிவயிறு கலங்கி, பதறி, நீங்களும் மயங்கி விழுந்தால், உங்களின் அன்பற்குரியவர் இன்னும் கொஞ்சம் பரிதாபத்திற்குரிய நிலைக்குதானே தள்ளப்படுவார்கள். நீங்களும் மயங்கி விட்டால், யார் அவரைக் காப்பாற்றுவது.

அடிபட்டிருப்பவருக்குப் பரிவும், பாதுகாப்பும்தான் உடனடித் தேவை! பதற்றம் உங்களுக்கும் அவருக்கும் இன்னும் கொஞ்சம் தொல்லைகளை அதிகப்படுத்தும். அவ்வளவே.

பதற்றம் உங்கள் அன்பின் ஆழத்தைச் சொல்லும் அளவீடல்ல.

அது எதிர்பாராததை எதிர்த்துக் கையாளும் பக்குவம் இல்லாதிருப்பதை அளந்து சொல்லும் அளவீடு மட்டுமே. அகநடுக்கம் இல்லாத ஒருவரின் உடலும் மனமும் பதட்டந்தரும் சூழலில் முழுமையாய் விழித்துக்கொள்ளும்.

பதட்டம் தரும் சூழலில் உங்களிடமிருந்து வெளிப்படும் நிதானத்தின் அளவுதான் உடல் - மன ஆரோக்கியத்தின் அளவீடுகள்.

நிதானம் என்ற பெயரில் மற்றவரின் ஆபத்துக் காலத்தில் விட்டேரியாக, இயந்திரம் போல் நடந்து கொள்வது, அகஇறுக்கத்தின் வெளிப்பாடு.

பதறுவது அகநடுக்கம். விட்டேறியாயிருப்பது அகஇறுக்கம்.

அபாய
காலம்தான்...
அபய குணம்
பாயும் காலம்.
அந்த நொடியில்
விழிப்பு பொங்க
வாழ்!
உள் உலகில்
பரிவட்டம்
சூட்டப்படுவாய்!

இவை இரண்டுக்கும் பொதுவான அணுகுமுறையான பரிவுதான் -

ஒருவரிடமிருந்து வெளிப்பட வேண்டும்.

அபாயத்திலிருப்பவருக்கு...

அபாயத்தையும் பரிவையும் ஒன்றுசேர்த்து -

அதை நிதானமாக மாற்றி உங்கள் மூலமாக வெளிப்படுத்திடப் பழகுங்கள். வெளிப்படுத்துங்கள்!

இரண்டுமே உங்களை அடியோடு மாற்றும் தியானங்கள்.

எல்லா அபாய காலங்களையும் தியானகாலமாக்குங்கள்!