KAILASA Library/கதவைத் திற ... காற்று வரட்டும்!/கள்ளம், கபடம்Sign in
கதவைத் திற ... காற்று வரட்டும்!

கள்ளம், கபடம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

* 'யாரை எப்படி ஏமாற்றலாம்?

* நடிப்பால் மற்றவரை நம்ப வைத்து நம் காரியத்தை மட்டும் சாதிப்பது எப்படி?

* அப்படிச் சாதித்தபின் மற்றவர் படப்போகும் கஷ்டத்தை கணக்கில்கூட எடுத்துக்கொள்ளாமல் விடுவது எப்படி?' என்ற மூன்று கேள்விக்குப் பதில் தரும் குண அமைப்பிற்கு பெயர்தான் கள்ளம், கபடம்.

* கள்ளம் உள்ளத்தில் குடியிருக்கும் வரை
இல்லத்திலோ. உள்ளத்திலோ,
நிம்மதி இருக்காது. இருக்கவும் முடியாது.

* கள்ளங்களை உள்ளங்களிலிருந்து
களையும் கலை நுணுக்கமானது.
மில்லிமீட்டர் மில்லிமீட்டராய்
உள்ளத்தை ஆராயுங்கள்.
உள்ளதெல்லாம் வெளிச்சத்துக்கு வரும்.

விடிந்தால் இரு நாடுகளுக்கும் பெரும் யுத்தம். மன்னரும் மந்திரியும் பக்கத்து நாட்டு அரசரின் உதவி பெறுவது பற்றி பேசும் போது, மன்னர், “என்ன லஞ்சம் கொடுத்தால் பக்கத்து நாட்டு அரசன் நமக்கு மயங்குவான்?” எனக் கேட்டதற்கு, “மன்னரே, தப்பத்தவறி அந்தத் தவறை மட்டும் செய்து விடாதீர்கள். அவன் ஒரு ஒழுக்கவாதி. லஞ்சம் கொடுத்தால் நமக்கு எதிரானவனாகி விடுவான்" என மந்திரி சொன்னார்.

ஒரு வாரம் கழித்து அரசவையில், போரில் வெற்றி பெற்றதைக் கொண்டாடிக் கொண்டிருக்கும்போது, மந்திரி மதுமயக்கத்தில் மன்னரிடம் கேட்டார். "மன்னா அப்படி என்ன சொக்குபொடி போட்டீர்கள்? பக்கத்து நாட்டு மன்னன் நம் காலைச் சுற்றும் பூனையாகி விட்டானே!".

"எதிரி நாட்டு அரசர் கொடுக்கச் சொன்னதாக சொல்லச் சொல்லி, நம் ஒற்றனிடமே லஞ்சம் கொடுத்தனுப்பினேன். அவன் நமக்கு நண்பனாகி விட்டான். என கண்டித்து, மயக்கத்தில் உளறியதை, பக்கத்து நாட்டு அரசன் கேட்டு விட்டான்.

அப்புறம் என்ன! அடுத்த ஒரு வாரத்திற்குள் நிலைமை தலைகீழாகி விட்டது".

* ஏமாற்றப்பட்டவர்களுக்கு... அது பாடம். பண்படுவார்கள்.

ஏமாற்றுபவர்களுக்கு... அது படமெடுக்கும் பாம்பு. ஆபத்து!

கள்ளம் கொண்ட உள்ளம், அது மற்றவர்களை தீண்டுவது போல் குறைந்தது இரண்டு மடங்கு தீண்டப்படும். துன்பப்படும்.

கள்ளங்கபட குணம் ஏதோ சைக்கோக்கள் மாத்திரமே திட்டம்போட்டு நடத்தும் ஒரு குரூரம் என்று நினைத்து, 'இந்தக் கட்டுரை எனக்கல்ல' என்று தவிர்த்து விடாதீர்கள்.

கட்டுரைக்குள் செல்லும் முன்...

நமக்குத் தேவையானதை மற்றவர்களின் மூலம் சாதிக்க நாம் மாற்றும் முகபாவங்களை ஒருமுறை மனத்திரையில் கொண்டுவாருங்கள். அதேபோல், உங்களுக்கு நன்கு பழக்கப்பட்டவர்கள் உங்களிடம் தங்களுக்குத் தேவையானதைச் சாதிக்க அவர்கள் காட்டும் முகபாவங்களையும் மனத்திரைக்கு கொண்டுவாருங்கள். அது உங்களின் முகபாவங்களைக் கண்டுபிடிக்க வழிகாட்டியாக செயல்படும்.

தொடர்ந்து படியுங்கள். கள்ளம், கபடம் புரியும்.

அன்பு செலுத்தும்போது நீங்கள் உங்களையும் உங்கள் கர்வங்களையும் மறக்கிறீர்கள். மனம் அமைதியாகிறது. இதனால் உடலும் ஆரோக்கியம் பெறும்.

கள்ளத்தில், கபடத்தில் ஒருவர் செயல்படும்போது அவரின் காரியம் நிறைவேறியே ஆக வேண்டும் என்ற நோக்கில் நடிக்கிறார். உடலால், குரலால், வார்த்தைகளால் அன்பொழுகப் பேசினாலும் மற்றவர் பெருமைப்பற்றி பேசினாலும், மற்றவருக்கு ஏக மதிப்பளித்தாலும் இவற்றைச் செய்பவரின் தனிப்பட்ட வாழ்வில் இவற்றால் பலன் ஏதும் இல்லை.

வேண்டுமானால் வெளி உலகத்தில் சில
காரியங்களை அந்த மனிதர் சாதித்துவிட
முடியும். அதுகூட சரியாக நடித்தால்
(ஏமாற்றினால்) தான் சாத்தியம்.

இப்படிப்பட்டவர்களின் உடலானது
நல்லவன் போல் நடித்துக் கொண்டிருக்க,
உண்மையில் மனதில் கள்ளக்காரராய்,
கொடியவராய் இருந்து கொண்டிருப்பார்கள்.

கள்ளத்தனத்தைக் கலைப்போல ஒருவர்
கற்றுக் கொண்டால் மாத்திரமே, அவர்
நினைத்தப்படி மற்றவர்களை
ஆட்டிப்படைத்து நினைத்த காரியத்தைச்
சாதிக்க முடியும். இது தீமையின் உச்சம்.

இந்தக் கட்டுரைக்குப் பொருத்தமான ஒரு வழக்கு.

வழக்குக்கு மாறாக இந்த வழக்கு விசித்திரமாயிருந்தது.

"இந்த இடத்தில், இந்த நேரத்தில் இந்த
நபரை, இந்த ஆயுத்தால், இந்தக் கை
மூலமாகத்தான் கொலை செய்தேன்.

கொலை செய்த எனக்கு அரசாங்கம் வழங்கும் தண்டனை எதுவானாலும் இந்தக் கொலைகாரன் அதை இனிதே ஏற்றுக்கொள்ளத் தயார்" என்று தன்னிடம் வந்து சரணடைந்த கொலையாளியை நீதிமன்றத்தில் ஒப்படைத்தது காவல்துறை.

portrait

நீ கடந்து வந்த
வாழ்க்கையனுபவங்களை
ஒன்றுதிரட்டி
புத்தகமாக்கும்.
அதைப் புரட்டிப் பார்.
அதை மிஞ்சிய வேதம்
அவசியமாயிருக்காது.
கள்ளம் காண, களைய
இவ்வேதம் மிகவும் உதவும்!

நீதிமன்றம்... விசாரணை நேரம்:

நீதிபதி, “ராக்ஸிமேனை நீ கொலை செய்தது உண்மையா?” எனக் கேட்டார்.

கொலையாளி, “என்னுடைய வாக்கு மூலத்தை நீங்கள் படிக்கவில்லையா...? சரி. மீண்டும் சொல்கிறேன்.

நான் தான் ராக்ஸி மேனைக் கொலை செய்தேன். ராக்ஸி என்னுடைய நண்பன்.

நாளை காலை 7 மணிக்கு உன்னைக்
கொலை செய்யப்போகிறேன் என்று சொன்னேன்.
முட்டாள் ராக்ஸி நம்பவில்லை.

எப்போதும் போல் நான் விளையாடுவதாக நினைத்து விட்டான் - பாவம்!

ராக்ஸி நம்பாவிட்டாலும், நான் அடுத்த நாள் காலை 7 மணிக்கு ராக்ஸியைக் கொலை செய்து விட்டேன்” என நிதானாமாகச் சொல்லி முடிக்க... நீதிபதி கொஞ்சம் தடுமாறிவிட்டார். இதுபோன்ற ஒரு குற்றவாளியை இதுவரை தன் வாழ்வில் அவர் சந்தித்ததில்லை.

குற்றம் செய்தவன் தடுமாற்றமில்லாமல் தெளிவாகப் பேசுவது எப்படி? நீதிபதிக்குக் கொஞ்சம் உறுத்தியது. குற்றவாளியின் சிரிப்பை பார்க்கும்போதும் அவன் செயலுக்குப் பின் ஏதோ ஒன்று இருக்க வேண்டும். ஆனால், இவன் அப்பாவி போல் தெரிகிறானே என்று யோசித்துக்கொண்டே...

தொ ட ர் புஉடலின் ஒரு மூலையிலிருக்கும் மூளைக்குள் மட்டுமே மனிதன் வாழ்கிறான். இது ஒரு கள்ளத்தொடர்பு!

நீதிபதி, "ஏன் கொலை செய்தாய்?" எனக் கேட்டார்.

"சொன்னால் நம்பமாட்டீர்கள். தனிப்பட்ட காரணம் எதுவும் இல்லை!"

நீதிபதியும், பொது மக்களும் அதிர்ந்துவிட்டார்கள்.

"எந்தக் காரணமும் இல்லை என்றால் ஏன் கொலை செய்தாய்?".

"அவன் சமூக விரோதச் செயல் பல செய்து வருகிறான். அதை நிரூபிக்க ஆதாரம் எதுவும் இல்லை. இவன் ஒருவனை விட்டு வைத்தால் பிற்காலத்தில் ஒரு ஊரையே அழித்தாலும் அழிப்பான். யோசித்தேன். முடிவு செய்தேன். கொலை செய்து விடுவது என்று.

அன்று காலை 7 மணிக்கு நண்பன் ராக்ஸியை கொலை செய்ய வீடு தேடிச் சென்றேன். வா... வா... என்று வரவேற்றான. 'புதிதாக வாங்கிய என் துப்பாக்கியைப் பார்..' என்று காண்பித்தான்.

துப்பாக்கியை வாங்கினேன்.

ராக்ஸி சிரித்துக்கொண்டே... ஏதோ இன்று காலை 7 மணிக்கு என்னைக் கொலை செய்யப் போவதாகச் சொன்னாய் என்று சிரித்தான்.

சிரித்த வாய் மூடுவதற்குள் 'டூப், டூப், டூப்' மூன்று முறை டிரிக்கரை அழுத்தினேன். மூன்று குண்டுகளும் வாயில் நுழைந்து பின்ன தலை வழியாக வெளியேறியது.

ராக்ஸி சரிந்தான். என் வேலை முடிந்ததால் நேரடியாக போலீஸ் ஸ்டேஷன் சென்றுவிட்டேன். அவனைக் கொல்ல எனக்குத் தனிப்பட்ட காரணம் ஏதும் இல்லை. இப்போதுகூட அவன் என் நண்பன்தான்.

நான் நல்லாதான் இருக்கேன். நான் மனநோயாளியாக இருப்பேனோ, அதுவோ, இதுவோ! என்று இந்த போலீஸ்காரர்கள் குழம்பி கொண்டிருக்கிறார்கள். பாவம்.

தீர்ப்பு என்ன சொல்ல நினைக்கிறீர்களோ அதை சீக்கிரம் சொல்லுங்கள்" என்றான்.

நீதிபதி 'இவன் சொல்வதைப் பார்த்தால் மிகவும் நல்லவனாகத் தெரிகிறான். இதுபோன்ற நல்லவர்கள் காப்பாற்றப்பட வேண்டும்' என்று எண்ணிக்கொண்டே,

தேஉன்னில் உலவும் போலியானவனைக் காலியாக்கு.
ள்நிம்மதி உணர்வைக் கொட்டும் தேள்கள் - கள்ளம், கபடம்!

"கொலைக்கான தனிப்பட்ட முன் விரோதம் இல்லை. மேலும் நடுக்கமில்லாமல் வாக்குமூலம் தரும் முதல் குற்றவாளிநீங்கள் தான். திட்டமிட்டுச் செய்ததால் தூக்கு தண்டனைக்கு நீங்கள் பாத்திரவானாக இருந்தாலும், நான் தூக்குதண்டனைக்குத் தீர்ப்பு எழுத முடியாது".

"நீங்கள் எது கொடுத்தாலும் அது எனக்குச் சரியே. ஏனென்றால் அது என் வேலைக்கு நீங்கள் தரும் கூலி. அவ்வளவுதான்".

"குறைந்தபட்ச தண்டனையான பத்து
ஆண்டுகள் கடுங்காவல் தண்டனைத்
தருகிறேன்".

"தண்டனையைக் கொண்டாட நான்
விரும்புகிறேன். அதனால் ஒரு சிறிய
வேண்டுகோள்".

"என்ன?"

"கொலை செய்தது என் கை மாத்திரம்
தானே. எனவே என் கைக்குப் பத்து வருட
கடுங்காவல் தண்டனை கொடுங்கள்".

"அது எப்படி கை மாத்திரம் சிறையில் தண்டனை பெறும்?".

"அது என் பிரச்சினை. நீங்கள் ஏன்
அதைப் பற்றியெல்லாம்
கவலைப்படுகிறீர்கள்?".

"கொலை செய்த இவன் கைக்குப் பத்து வருட கடுங்காவல் தண்டனை தருகிறேன்".

கொலையாளி நிஜம் போலத் தோன்றும்
தன்னுடைய அதி நவீன எலக்ட்ரானிக்
செயற்கை கையை கழட்டி வைத்துவிட்டு.

"இதற்குத்தான் பத்து வருடத்
தண்டனை" என்று சொல்லி விறுவிறுவென்று
கூண்டிலிருந்து இறங்கி நடக்க
ஆரம்பித்துவிட்டான்.

portrait

உன்னையும் மீறி, உன்னை
இயற்கை காப்பாற்றிக்
கொண்டிருக்கிறது.

எனவேதான்
செரிமானம்,
இரத்த ஓட்டம், ஏன்
மூச்சோட்டம்கூட
உன் பங்கு இல்லாமலேயே
நிகழுமளவுக்கு,
முன்னேற்பாடுகளையும்
கடவுள் செய்து
வைத்திருக்கிறார்!

கள்ளத்தனத்தையும், கபடத்தனத்தையும் கலை போலத் கற்று ஊரையே ஏமாற்றத் திட்டம் தீட்டி புறப்பட்டு இருக்கும் புற்று இவன் என்பதை நொடியில் உணர்ந்த நீதிபதி சுதாரித்துவிட்டார்.

நீதிபதி, "முட்டாள்! ஏன் அவசரப்பட்டாய். என் தீர்ப்பு இன்னும் முடியவில்லை. கைக்குப் பத்து வருடக் கடுங்காவல் தண்டனை உண்மைதான். ஆனால் அது மனரீதியான கைக்கு. உடல்ரீதியான கைக்கு என்று சொல்லவில்லை. இப்போது சொல்கிறேன் அது மனரீதியான கைக்கு".

அன்பொழுக பேசினால்
அற்ப கரரியங்களை அழகாய்
சாதிக்கலாம்.
‘நீங்கள் சொன்னால் சரி’!
‘உங்களைப் போல் உண்டா’!
‘ஞாபகத்திலேயே இருக்கீங்க.
‘எவ்வளவு நல்லவர் நீங்கள்’!
‘ஹீ...ஹீ... சொல்லுங்க!
என வார்த்தைகளை வசீகரமாய்
கையாள்வதைத் தாண்டி உண்மையாக
உணர்வுபூர்வமாக உள்ளத்தின்
ஆழத்திலிருந்து உணர்ந்து பேசினால்...
அற்ப காரியங்களைச் சாதித்தாலும்
சாதிக்காவிட்டாலும் அற்புதமான
ஆனந்த உணர்வு எப்போதும்
உங்களோடே இருக்கும்!

நீதிமன்றமே அதிருமளவுக்கு
பொதுமக்கள் கைத்தட்டினார்கள்.
கொலையின் உண்மைக் காரணம்
பின்னாலில் கண்டுபிடிக்கப்பட்டு
அவனுக்கு தூக்குத் தண்டனை
வழங்கப்பட்டது.

இந்த உதாரணம் கள்ளத்தனத்தின்
உச்சம், நீதிபதி புத்திசாலித்தனமாக
செயல்பட்டதால் தண்டனை கிடைத்து
விட்டது.

நடைமுறை வாழ்க்கையில்
ஒவ்வொருவரும் ஒவ்வொரு
காரியத்திற்காக கள்ளத்தனத்தையும்,
கபடத்தனத்தையும் குறைந்த அளவில்
பயன்படுத்தும்போது அவர்கள் தண்டனை
பெறுவதில்லை.

உங்கள் கள்ளக்கபடகூத்தால் அதிகம்
பாதிக்கப்படுவது நீங்கள்தான் என்ற
உண்மை உங்களுக்குத் தெரியுமா?

மனம் இரண்டாகப் பிரிந்து செயல்பட்டால் அதற்குப் பெயர் மனச்சிதைவு. முற்றினால் மனச்சிதைவு நோய்.

கள்ளம் செயல்படுத்தப்படும் போது மனம் பிரிந்து செயல்படுகிறது.

உடலின் முழு இயக்கமும் மனதால் கட்டுப்படுத்தப்படுகிறது. அப்பொழுது நல்லவன் போல் தன் காரியத்திற்காக ஒருவர் நடிக்கும் போது, மனதின் ஒரு பகுதி நல்லவராக செயல் பட்டே ஆக வேண்டும்.

கள்ளங்கபடத்தை (நல்லவன் போல் நடிப்பை) செயல்படுத்த காரணகர்த்தாவாக இருக்கும் கள்ளத்தனம் ஆழமாகச் செயல்பட்டால் மாத்திரமே சரிவர நடிக்க முடியும். இந்த நடிப்புக்குக் காரணமான மனதின் இன்னொரு பகுதி கெட்டவனாகச் செயல்பட்டே தீர வேண்டும்.

ஒரே நேரத்தில் மனமானது பாதி கெட்டவனாகவும் பாதி நல்லவனாகவும் இரண்டாய் பிளவுபட்டுச் செயல்பட்டால் என்ன ஆவது? உடலில் சக்தியின் அளவு அதிகம் இருக்கும் வரை கள்ளத்தனத்தோடு வாழலாம். மனச்சிதைவு வெளியே தெரியாது. விசுவரூபம் எடுக்காது.

வயது ஆக, ஆக சக்தி குறையக் குறைய பிளவு ஆழமாகும். மனம் சிதையும். உடலும் மனமும் கட்டுப்பாட்டை இழக்கும்.

மனமும் உடலும் மோசமாவது ஏமாற்றுபவருக்குத்தான் அதிக அளவில் இருக்கும்.

ஒருவரின் எதிர்கால நிம்மதி நாசமாவதற்கு, இக்காலத்தில் அவரே அவருக்குச் சேர்த்து வைக்கும் பாதகங்கள்தான் கள்ளம், கபடம்.

கள்ளம், கபடம் சிறிதளவில் இருந்தாலும் சரி, அது வேண்டவே வேண்டாம். தூக்கி எறிந்து விடுங்கள்.

அதனால் பாதகம் மட்டுமே மிஞ்சும்.

கள்ளங் கபடமற்ற குழந்தையாக மாறுங்கள்.

மனம் சுத்தமாகும். உடல் ஆரோக்கியம் பெறும்.

அர்த்தமுள்ள சம்பவம்...

குல்ஜித் ஒரு கருமி. அவரின் கழுதையை கடனாய் பெற அவ்வூர்க்காரர் வந்தார். அவரிடம், "மன்னிக்கவும். கழுதையை ஏற்கெனவே ஒருவரிடம் கடன் தந்துவிட்டேன்" என குல்ஜித் சொல்லிக்கொண்டிருக்க... குல்ஜித்தின் கழுதை கத்தியது!

"ஆனால், நான் கழுதை கத்தும் சத்தத்தைக் கேட்கிறேனே!" என்றார் ஊர்க்காரர்.

குல்ஜித், "அப்படியென்றால், இப்போதே சொல்லுங்கள். நீங்கள் யாரை நம்ப போகிறீர்கள்? கழுதையையா என்னையா" என்றார்?.

  • கள்ளம் பேசினால் தப்பிக்கலாம். ஆனால் உள்ளத்திடம் மாட்டிகொள்வீர்கள்!

யாரையும் எதற்காகவும் கஷ்டப் படுத்தாதீர்கள்...

நல்லவற்றிற்காகக்கூட!

|

உங்களின் எல்லா கள்ளங்கபடத்திற்கும் நீங்கள் காரணமல்ல. உங்களுக்கே தெரியாமல் உங்களிடமிருந்து வெளிப்படும் கள்ளங்கபடங்கள் விசித்திரமானவை. அவை எளிதில் கண்டுபிடிக்கப்பட முடியாதவை.

காரணம், அந்தக் கள்ளத்தனங்களை நல்லத்தனங்கள் என நீங்கள் நம்புவதே.

* அறிவுரைகளை மற்றவர்களுக்குச் சொல்லும்போது...மனதில் 'என்னால்தான் முடியவில்லை. இவர்களாவது திருந்தட்டும். என நினைத்துக் கொள்வது.'

* குத்தும் வார்த்தைகளை வீசும்போது... [எல்லாம் அவர்களின் நல்லதுக்குத்தான் என நினைத்துக்கொள்வது, மற்றவரின் குறைகளை மட்டுமே குறிப்பாய் சுட்டிப் பேசும்போது.... உள்ளதைச் சொன்னேன் எனச் சாக்கு சொல்லி, அவர்களின் நிறைகளை மதிக்காமல் அவமதிப்பது.]

  • என்று எல்லாச் சூழ்நிலைகளிலும் நல்லத்தனங்கள் என்ற பெயரில் கள்ளத்தனங்களே எட்டிப் பார்க்கின்றன.

உங்களின் நல்லத்தனங்கள் எல்லாமே மற்றவர்களைக் கஷ்டத்துக் குள்ளாக்குகின்றன.

தன்னால் கடைப்பிடிக்க முடியாததை, இன்னொருவரிடம் கடைப்பிடி எனச் சொல்லி அறிவுரை தருவது நல்லத்தனமா? கள்ளத்தனமா?

அவரின் எதிர்கால நலனுக்காகத்தான் குத்திப் பேசுகிறேன் எனச் சொல்லி இக்காலத்தை துக்கமாக்குவது நல்லத்தனமா, சிந்தியுங்கள்.

தான் கடைப்பிடிக்க முடியாமல் கஷ்டப்பட்டது போலவே, இன்னொருவரும் கஷ்டப்படுவதற்கான கருத்துக்களைக், நீங்கள் தெரிந்தே பிரயோகிப்பதில்லை.

இந்தச் சமுதாயம் அந்தப் பழக்கத்தை உங்களுக்குக் கற்று தந்துவிட்டது.நீங்கள் தொடர்கிறீர்கள்.

நல்லத்தனங்கள் என்ற போர்வையில், நம்முள் கள்ளத்தனங்கள் உலவும் என்ற புரிந்துகொள்ளுதல் நிகழ்ந்தகணமே இதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.

உங்களின் நல்லத்தனங்களை நேர்மையோடும் தைரியத்தோடும் நீங்கள் அலசி ஆராயும்போது, ‘யாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்’ எனச் செயல்படும் கள்ளமனம் கையும் களவுமாக சிக்கிக் கொள்ளும். அப்புறம் அதை தூக்கியெறிவது எளிதானதே.

| திருத்துகிறேன் | | எனச் சொல்லி | | வருத்துவது | | கள்ளத்தனம்! |

யாரையும் எதற்காகவும் கஷ்டப்படுத்தாதீர்கள். நல்லதுக்காககூட!

நல்லதை நல்லாவிதமாய் சொல்லத் தெரிந்தால் சொல்லலாம். இல்லாவிட்டால் சும்மாயிருப்பதே பெரும் புண்ணியம்.

நல்லதை நாரசமாகச் சொல்லும் வரை, உங்களின் உள் வேதனைகள் இன்னும் கொஞ்சம் புரையோடும். அதைத் தடுக்க....

எப்போதும் நல்லதைக்கூட நல்லவிதமாக மட்டுமே சொல்லுங்கள்!