KAILASA Library/கதவைத் திற ... காற்று வரட்டும்!/துக்கம் நரகத்திற்கு வழிSign in
கதவைத் திற ... காற்று வரட்டும்!

துக்கம் நரகத்திற்கு வழி

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

* சொர்க்கத்தை எட்டிப் பார்க்க வேண்டுமா?

  • சிரி.

நரகத்தை எட்டிப்பார்க்க வேண்டுமா?

  • துக்கப்படு.

* மனம் உற்சாகமாக இருந்தால் புல்கூட ஆயுதமாகத் தோன்றும். தோல்வியும்கூட குருவாகத் தோன்றும். சாத்தியம் இல்லாததிலும்கூடச் சாத்தியம் ஆவதற்கான சிறு சாத்தியக்கூறுகள் மட்டும் மனக்கண்களுக்குத் தெளிவாகத் தெரியும்!

* மனம் சோர்வுற்றிருந்தால் படையே உடன் இருந்தாலும் பயம் இருக்கும், வெற்றிகூட இப்போ இது ஓ.கே. அடுத்த தோல்வி எப்போது வருமோ என்று யோசிக்கத் தோன்றும். சாத்தியமாகக்கூடியதில் இருக்கும். சிறிய சாத்தியமின்மைகள் மட்டும் மனக்கண்களுக்குத் தெளிவாகத் தெரியும்.

“இந்த நூற்றாண்டில் மனிதரை அதிகம் பாதித்த வியாதி எது?” என்று ஒரு கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டது. அது எய்ட்ஸ், கேன்சர், இரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதி, வறுமை போன்றவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம் என்ற நோக்கில் கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டது.

கருத்துக் கணிப்பின் முடிவு சற்றும் எதிர்பாராதது. மனிதரை அதிகம் பாதிப்பது துக்கம்தான் என்பது தெரிய வந்தது. துக்கத்துக்குக் காரணம், மனச்சோர்வு... DEPRESSION. இந்த நூற்றாண்டிலேயே மனிதருக்கு மிகப்பெரும் பிரச்சனையாக இருப்பது இந்த மனச்சோர்வுதான்.

இவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்திய துக்கம் அல்லது மனச்சோர்வு எப்படி உருவாகிறது? ஒரு சிறிய கதையைச் சொல்கிறேன், கேளுங்கள்.

பலருக்கு இந்தக் கதை ஏற்கெனவே தெரிந்திருக்கும். இந்தக் கதையின் கருத்தாழத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தக் கதையைக் சொல்கிறேன்.

ஒரு கிராமத்தில், நகரத்தில் வாழும் தன் மகன்களை நினைத்து எப்போதும் கஷ்டப்பட்டுக் கொண்டே இருந்தார் ஒரு பெண்மணி. பக்கத்து ஊருக்கு ஒரு ஞானி வந்திருப்பதாகவும் அவர் மக்களின் கஷ்டங்களைத் தீர்த்துவைப்பதாகவும் பெண்மணியின் காதுக்குச் செய்தி எட்டியது. பெண்மணி ஞானியைத் தரிசிக்கக் கிளம்பினார்.

“சாமி, எம் பையன்களைப் பற்றிய கவலைதான் எனக்கு எப்போதும். எம் பையன்களுக்கு நல்லகாலம் பொறக்கணும். அதுக்கு ஏதாவது வழி சொல்லுங்க” என்று ஞானியிடம் பெண்மணி வேண்டினார்.

ஞானி, “அப்படியாம்மா...சரி... ஏன் எப்போதும் உங்கள் மகன்களை நினைத்தே கவலைப்படுகிறீர்கள்?” என்று கேட்டார்.

பெண்மணி, “இப்பப் பாருங்க... இது நல்ல மழைக்காலம். என்னோட மூத்த மகன் உப்பு வியாபாரம் செய்கிறான். மழையில் உப்பு எல்லாம் நனைந்துவிடும். வெயில் முழுசாக இல்லாததால் உப்பளம் கட்டமுடியாது. இன்னும் கொஞ்ச காலம் கழித்து வெயில் காலம். என்னோட இளைய மகன் கம்பளி, குல்லா வியாபாரம் செய்கிறான். வெயிலினால் வியாபாரமே நடக்காது.

இப்படிப் பெரிய மகன் வருடத்தில் பாதிக் காலமும் சிறிய மகன் பாதிக் காலமும் சரியாகச் சம்பாதிக்காத போது, நான் எப்படிச் சந்தோஷமாக இருக்க முடியும்?” என்றார்.

portrait

கவலை
முற்றினால்
துக்கம்.
துக்கம்
முற்றினால்
மனச்சோர்வு.
மனச்சோர்வு
முற்றினால்
மனக்கோளாறு!

ஞானி, “ஏம்மா, உங்களைத் தேவையே
இல்லாமல் வருத்திக்கொள்கிறீர்கள்? வெயில்
காலத்தில் பெரிய மகன் நன்றாக உப்பு
வியாபாரம் செய்வதை நினைத்துச்
சந்தோஷப்படுங்கள். இறைவனுக்கு நன்றி
சொல்லுங்கள்.

மழைக் காலத்திலும் குளிர் காலத்திலும்
இளைய மகனின் கம்பளி, குல்லா வியாபாரம்
நன்றாக நடப்பதை நினைத்துச்
சந்தோஷப்படுங்கள். அப்புறம் பாருங்கள்,
துக்கம் எங்கே போகிறது என்று!” என்றார்.

இது போலத்தான் பலர் எதையாவது
நினைத்துக்கொண்டு துக்கப்பட்டுக்
கொண்டே இருக்கிறார்கள். இன்னும் சரியாகச்
சொல்ல வேண்டுமென்றால், பலர்
துக்கப்படுவதற்குக் காரணங்களைத் தேடிக்
கண்டுபிடித்து துக்கப்படுகிறார்கள்.

அந்த ஞானி கூறியதுபோல் நிச்சயம் அந்தப் பெண்மணியால் வருடம் முழுவதும் ஆனந்தமாக இருக்க முடியும். சந்தோஷமும் துக்கமும் வாழ்க்கையை நாம் எப்படி அணுகுகிறோம் என்பதைப் பொறுத்துத்தான் அமைகிறது. சரியான மனத்தெளிவு இல்லாமல் போனால்தான் துக்கம் ஏற்படும். இறந்தகாலத்தின் கசப்பான அனுபவங்களும் எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையின்மையும் பயமும்தான் துக்கமாக வெளிப்படுகிறது.

வாழ்வில் எப்போதாவது துக்கம் அனுபவிப்பது சாதாரண விஷயம். ஆனால், எப்போதுமே துக்கம் அனுபவிப்பது கொடுமையிலும் கொடுமை!

துக்கம் என்பது ஒரு மனப்பழக்கமாகவே (HABIT) மாறிவிட்டது. துக்கமோ, மனச்சோர்வோ உங்களை ஆட்கொள்ளாமல் இருக்க ஒரு எளிய வழி...

எப்போதும் உற்சாகமாக, சுறுசுறுப்போடு இருங்கள். வெறுமனே உற்சாகமாக இருப்பது என்பது இயலாத விஷயம். பல புத்தகங்களைப் படித்து, "நான் உற்சாகமாக இருக்கிறேன். நான் உற்சாகமாக இருக்கிறேன்" என்று பலமுறை மனதில் சொல்லிக்கொள்வதால் மட்டும் உற்சாகம் வந்துவிடாது.

எப்போதும் உற்சாகமாக இருப்பது என்பது உங்களுக்குள் மலர வேண்டிய ஒன்று.

நீங்கள் மாணவனாக இருந்தாலும் சரி, குடும்பஸ்தராக இருந்தாலும் சரி, உங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து முழுமையாகச் செயல்படுங்கள்.

மனம் உற்சாகமாக இருந்தால் புல்கூட ஆயுதமாகத் தோன்றும். தோல்வியும் கூட குருவாகத் தோன்றும். சாத்தியம் இல்லாததிலும்கூடச் சாத்தியம் ஆவதற்கான சிறு சாத்தியக்கூறுகள் மட்டும் மனக்கண்களுக்குத் தெளிவாகத் தெரியும்.

எவ்வளவுக்கெவ்வளவு பொறுப்பு எடுத்துக்கொள்கிறீர்களோ, அந்த அளவுக்கு உற்சாகமும் சுறுசுறுப்பும் பெற்று சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வீர்கள். மனச்சோர்வு உங்களை அணுகவே அணுகாது!

அஎவ்வளவுக்கெவ்வளவு பொறுப்பு எடுத்துக்கொள்கிறீர்களோ,
ணுஅந்த அளவுக்கு உற்சாகமும் சுறுசுறுப்பும் பெற்று சந்தோஷமான
காவாழ்க்கையை வாழ்வீர்கள். மனச்சோர்வு உங்களை அணுகவே
துஅணுகாது!