ஏன்? ஏன் பொறுக்கமுடியவில்லை?
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
- மிருகங்களுக்குப் பொறுத்துக்கொள்வது எப்படி என்பது தெரியாது. பொறுத்துக்கொள்வது என்பது மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் பெற்றிருக்க வேண்டிய பண்பு.
- மனிதரின் மனவளர்ச்சியின் ஆரம்பப்படிக்கட்டுகளில் ஒன்றுதான் இந்தப் பொறுத்துக்கொள்ளும் தன்மை (Tolerance).
- பொறுத்துக்கொள்ள முடியாமல் (Intolerance) போவது மனிதரின் பண்பு அல்ல. மனம் என்ற ஒன்றை ஆறாவது அறிவாகப் பெற்றதால்தான் மனிதன் ஐந்தறிவு கொண்ட மிருகத்திலிருந்து மாறி, மனிதன் என்று அழைக்கப்படுகிறான். மனவளர்ச்சி சரியான முறையில் இல்லை என்பதற்கான அடையாளம்தான் பொறுத்துக்கொள்ள முடியாமை.
புத்தரின் வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு சம்பவமும் மிகப்பெரிய உண்மையை எடுத்துச் சொல்லும். அப்படியொரு சம்பவத்தை இப்போது சொல்கிறேன்.
ஒருமுறை புத்தரும் அவரது பிரதம சீடர் ஆனந்தா உள்படப் பலரும் ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்கள்.
காடு, மலை, மேடு தாண்டிச் செல்கையில் வழி மாறிப் போனார்கள். எந்த ஊருக்குப் போய்ச்சேர வேண்டுமோ, அந்த ஊரிலிருந்து வெகுதொலைவு சென்ற பிறகுதான் அவர்களுக்கு விஷயம் புரிந்தது.

மனிதர் தன் பொறுத்துக் கொள்ளும் தன்மையை இழக்கும் ஒவ்வொரு நிமிடமும் மிருகமாகிறார்!
மீண்டும் சரியான பாதையைக் கண்டறிந்து
நடக்க ஆரம்பித்தார்கள். சிறிது தூரம்
நடந்தபிறகு, "நகரத்தைச் சென்றடைவதற்கு
இன்னும் எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்?"
என்று அங்குத் தென்பட்ட மக்களிடம்
கேட்டனர்.
"இன்னும் இரண்டு மைல் நடந்தால் நீங்கள்
தேடிச் செல்லும் ஊர் வந்துவிடும்" என்று
அவர்கள் சொல்ல, உற்சாகமாக நடக்க
ஆரம்பத்தார்கள். இரண்டு மைல் தூரம் நடந்த
பிறகு எந்த நகரமும் வரவில்லை.
மீண்டும் தென்பட்ட மக்களிடம் "நகரத்தை சென்றடைவதற்கு இன்னும் எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்?" என்று விசாரித்தார்கள். "இன்னும் இரண்டு மைல் நடந்தால் நீங்கள் தேடிச்செல்லும் நகரம் நிச்சயம் வந்துவிடும்" என்றார்கள்.
மேலும் இரண்டு மைல்தூரம் நடந்து சென்ற பிறகும் நகரம் எதுவும் வராததைக்கண்டு பொறுக்க முடியாமல் கோபமானார் பிரதம சீடர் ஆனந்தா. "என்ன மடத்தனமான மக்கள் இவர்கள்! சரியான தூரத்தைச் சொல்லாமலே. இதோ அதோ என்று நம்மை ஏமாற்றுகிறார்களே!" என்று சினத்தில் கத்தினார். மற்ற சீடர்களும், "ஆனந்தா சொல்வது மிகவும் சரி” என்றுதான் நினைத்தார்கள்.
ஆனால் புத்தர் அந்த மாதிரி நினைக்கவில்லை. “நீங்கள் மக்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் அவர்கள் மீது கோபப்படுவது ஏன்? நீங்கள் வழிகேட்ட மக்கள் எல்லாம் உங்கள் மீது கருணையைப் பொழிந்தார்கள். நகரம் எவ்வளவோ தூரத்தில் இருக்கிறது. அதை அடைய வேண்டுமென்றால் நீங்கள் இன்னும் பல மைல் நடக்க வேண்டும் என்பதுதான் உண்மை.
அதை உங்களிடம் சொன்னால் நீங்கள் என்ன ஆவீர்கள்? இவ்வளவு தூரம் நடக்க வேண்டுமா என்று மனம் உடைந்துபொறுமை இழந்து இங்கேயே உட்கார்ந்து விடுவீர்கள். நீங்கள் உற்சாகம் இழந்துவிடக்கூடாது.
உங்கள் இலக்கை நீங்கள் அடைந்துதான் ஆக வேண்டும் என்பதற்காகத்தான், ‘இதோ வந்துவிடும், அதோ வந்துவிடும்’ என்கிறார்கள் என்று புத்தர் சொன்னபோது, மக்களின் செய்கைக்கான காரண விளக்கம் புரிந்ததால் சீடர்கள் முகத்தில் மிகப்பெரிய உண்மையை எளிதாக புரிந்துகொண்ட திருப்தி மலர்ந்தது.
புத்தரின் சீடர்கள் போலத்தான் நம்மில் பலரும் இருக்கின்றனர்.
எதையும் நினைத்த மாத்திரத்தில் நடக்க வேண்டும். வேகமாகச் செய்துவிடவேண்டும். கண்மூடித் திறப்பதற்குள் காட்சி மாறவேண்டும் என்கிற அவசரம், பரபரப்புதான் இன்றைய மனிதரின் சகஜமான மனநிலையாக மாறி விட்டது.
எதையும் அவசரமாகச் செய்கிறவர், எந்த ரசிப்பும் இல்லாமல், இயந்திரம் போலத்தான் நடந்து கொள்கிறார். நல்ல சாப்பாட்டை, வேகமாகச் சாப்பிடுகிறவருக்கு உப்பு குறைவா, புளிப்பு அதிகமா என்றுகூடத் தெரிவதில்லை.
| வ ள ர் ச் சி | மனிதனின் மனவளர்ச்சியின் ஆரம்பப்படிக்கட்டுகளில் ஒன்றுதான் இந்தப் பொறுத்துக்கொள்ளும் தன்மை (Tolerance). |
நல்ல கவிதைத் தொகுதியை வேகமாகப் படிக்கிறவர், அருமையான கவிதை வரிகளை அநியாயமாக இழக்கிறார். பூக்கள் நிறைந்த பூங்காக்களில் வேகவேகமாக நடக்கிறவர் இயற்கையையே இழக்கிறார்.
அவசரக் குடுக்கைகள், பலநேரங்களில் வெற்றியை விடவும் தோல்வியைத்தான் இறுகத் தழுவிக்கொள்கிறார்கள். ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தைத் தொலைக் காட்சியில் கவனமாகப் பாருங்கள்...
போட்டி ஆரம்பித்தவுடன் வேகமாக ஓடுகிறவர் பெரும்பாலும் கடைசி வரை ஓட மாட்டார். மூன்றாவதாக ஓட ஆரம்பித்தவர் ‘பரவாயில்லை. மெதுவாக, ஆனால் சீராக ஓட வேண்டும்' என்று நினைப்பவரே கடைசி நேரத்தில் வேகமாக ஓடிப்பரிசைத் தட்டிச் செல்வார்.
அளவுக்கு அதிகமான ஆசை, எதிர்பார்ப்புதான் இந்த அவசரத்துக்குக் காரணம்.
பரபரப்பு, அவசரம் - இரண்டுமே பொறுமையின்மையின் வெளிப்பாடுகள்.
பொறுமையின்மை என்னும் கருவேலமரத்தின் வேர்தான் பொறுக்க முடியாமை (Intolerance).
உங்களின் பொறுத்துக்கொள்ளும் தன்மையைப் (Tolerance) பொறுத்ததுதான் உலகம் உங்களுக்கு மாறி மாறித் தெரியும்.
பொறுத்துக்கொள்ளுதல் அல்லது தாங்கிக்கொள்ளுதல் (Tolerance) என்பது வாழ்வின் சாதாரண செயலான பேரம் பேசுவதிலிருந்து, வாழ்வின் மிகப்புனிதமான செயல்களான சேவை, பாசம் வரை ஒவ்வொரு நிலைக்கும் தேவைப்படும் அதி அவசியமான ஒரு தகுதி.
நடைமுறையில் இருக்கும் பிரச்சனைகள் மற்றும் அவமானங்களைத் தாங்கிச் ஜீரணிக்கும் பொறுத்துக்கொள்ள முடியாமைதான் (Intolerance) பல விவகாரத்துக்கு மூல காரணம் என்பது மன குண நல ஆராய்ச்சியாளர்களின் முடிவான கருத்து. இந்தப் பொறுத்துக்கொள்ளும் தன்மை என்பது ஒரு தனிப்பட்ட மனிதரின் புரிந்துகொள்ளும் தன்மையைப் பொருத்தது.
நான் பொறுத்துக்கொள்ளும் தன்மை என்று குறிப்பிடுவதை - யார் எது செய்தாலும் அதற்கு எந்தவிதப் பதில் உணர்வும் காட்டாமல் தன் உணர்வுகளை அடக்கிக்கொள்வது - என்று தயவுசெய்து மாற்றிப் புரிந்துகொண்டு விடாதீர்கள்.
பொறுத்துக்கொள்ளும் தன்மை என்பது, உணர்ச்சிகளை அடக்குவதல்ல. அது உணர்ச்சி பக்குவநிலை.
ஒவ்வொரு முறையும் வெளியில் நடக்கும் காரியங்களைப் பார்த்துப் பொறுத்துக்கொள்ள முடியாமல் உணர்ச்சிக் கொந்தளிப்பு நிகழும்போது 'ஏன் இப்படித் தத்தளிக்கிறேன்? ஏன்? ஏன்? ஏன்?' இப்படி உள்முகமாகத் திரும்பிப் பார்க்க ஆரம்பியுங்கள்.
'ஏன்?... ஏன்?... ஏன்?..' என்று கேட்பதோடு நின்று விடாமல் - ஏன் இப்படி நீங்கள் பொறுமையை இழக்கிறீர்கள் என்று புரிந்துகொள்ள ஆரம்பித்தால், வெளியில் நடக்கும் எரிச்சலூட்டும் காரியங்களின் காரண விளக்கம் புரிய ஆரம்பிக்கும். உங்களின் உள்ளுக்குள் நடக்கும் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் குறைய ஆரம்பிக்கும். பொறுத்துக் கொள்ளும் தன்மையின் மகிமை புரிய புரிய பொறுமை (Tolerance) அதிகமாக ஆரம்பிக்கும். புரிந்து கொள்ள ஆரம்பியுங்கள்!