கனவு! கற்பனை! நிஜம்!
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
★ வாழ்க்கையைப் பற்றிய நமது கற்பனைக்கும் நிஜவாழ்க்கைக்கும் இடைப்பட்ட பொருத்தமின்மையே - வாழ்க்கையை வருத்தமாக்குகிறது.
★ கற்பனை என்ற மனத்திரைப்படத்தை வாழ்க்கையில் நிஜமாக்க முயற்சி செய்யாமல், வெறும் மனத்திரைப்படத்தையே விதவிதமாகப் பார்த்துச் சிறு சிறு கிளர்ச்சி அடைபவர்கள்தான் உயிர்ச் சக்தியை வீணடிக்கும் மகாபாவிகள்.
★ கற்பனை என்பது 'எதிர்காலத்தில் ஒருவர் எப்படி வாழ வேண்டும்? எப்படிப்பட்ட மனைவி, வாழ்க்கை, குடும்பம் அமைய வேண்டும்? என்னென்ன சொத்து, சுகம், சவுகரியம் வேண்டும்?' என்று எதிர்காலத் தேவைக்குத் தகுந்தபடித் தன்னை மாற்றிக்கொள்ள, இறைவனால் மனிதருக்குப் பரிசாகத் தரப்பட்ட மனதின் ஒரு செயல்பாடு.
★ நிஜமாக்க முயல்பவருக்குக் கற்பனை ஓர் உந்து சக்தி. கற்பனையை நிஜமாக்காமல், கற்பனைமேல் கற்பனை செய்து, வாழ்வை வீணடிப்பவருக்குக் கற்பனை ஒரு மந்த சக்தி.
என்னைப் பற்றிப் பலரும் விசாரித்திருக்கிறார்கள். நான் யார்? எங்கே பிறந்தேன்? என்ன வயது? இந்த இளைய வயதில் ஏன் இந்தத் தோற்றம்.... என்றெல்லாம் பலவிதமான கேள்விகளை வாசகர்கள் கேட்டிருக்கிறார்கள்.
நான் திருவண்ணாமலையில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தேன். மிகச் சிறிய வயதிலேயே ஆன்மீகத் தேடல் இருந்தது. இரமணரும் மற்ற பல ஞானிகளும் வசித்த திருவண்ணாமலையின் மீதமர்ந்து சிறு வயதிலேயே தவம் செய்ய ஆரம்பித்தேன். ஏட்டுக் கல்வி எனக்கு அறிவைத்தான் தந்தது. எனவே, உண்மையான ஞானத்தைத் தேடி அலைய ஆரம்பித்தேன்.
உடுத்திக்கொள்வதற்கு ஒரே ஒரு உடுப்பு, அவ்வளவுதான். இனி காசை என் கையால் தொடுவதில்லை என நடக்க ஆரம்பித்தேன். நடந்தே இந்தியா முழுக்கச் சுற்றினேன். பல ஞானிகளைச் சந்தித்தேன். இமயமலையில் பல மாதங்கள் இருந்தேன். பத்தாண்டுக் கால கடும் தவத்திற்குப் பிறகு என்னை நானே உணர்ந்து ஞானம் பெற்றேன்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, தமிழகத்தில் சிறிய ஆசிரமம் அமைத்துத் தங்கிருந்த சமயம், மாலை வேளையில் என்னைச் சந்திக்கப் பலரும் வருவார்கள்.
அப்போது நான் தோட்டத்திற்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருப்பேன். "சாமி ஆசிரமத்தில் இருக்கிறாரா?" என்று என்னிடம் கேட்பார்கள், என்னைத் தேடி வருகிறவர்கள். "இருக்கிறார். உள்ளே போய் அமருங்கள்" என்பேன் நான். பிறகு நான் அவர்கள் முன்பு போய் உட்காருவேன்.
"நாங்கள் பெரிய சாமியைப் பார்க்க வந்திருக்கிறோம்" என்று என்னிடம் சொல்வார்கள்.
என் இளைய வயது - என்னை ஒரு ஞானியாகப் பார்க்க அவர்களுக்குத் தடையாக இருந்தது. தாடி, மீசை, கமண்டலம், ஜெபமாலையும் கையுமாகத்தான்
| ம தி ப் பு | கற்பனையை எறிந்து விட்டு, நிஜத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். மனிதர்களை மனிதர்களாக மதிக்க ஆரம்பிப்பீர்கள். நிம்மதி மலரும்! |
ஞானிகளைக் கற்பனை செய்து வைத்திருக்கிறார்கள் மக்கள். உருவம் கொஞ்சம் வித்தியாசப்பட்டாலும் அவர்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.
இருப்பவைகளை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி ஏற்றுக் கொள்ளுகிற பக்குவம் இல்லாவிட்டால், கவலையும் கலக்கமும்தான் மிஞ்சும்.

எதிர்காலத்தை
வடிவமைக்க
உதவும் கற்பனை
ஓர் அற்புதம்!
நிகழ்காலத்தை
வீணடிக்கத்
துணைபோகும்
கற்பனை அற்பம்!
கற்பனை அற்புதமா?
அற்பமா?
கற்பனையை
நிஜமாக்குவதைப்
பொறுத்து
நிர்ணயிக்கப்படும்!
ஆனால் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம். ஒருவரை ஒருவர் செதுக்கிக் கொள்வதே இங்கே வாழ்க்கை என்றாகிவிட்டது. தந்தை, மகனின் விருப்பத்தை அறியாமல், தான் கற்பனை செய்து வைத்திருப்பது போலவே மகன் வர வேண்டும் என்று அவரைச் செதுக்குகிறார். "நான் ஒரு காவல்துறை அதிகாரி. என் மகனும் காவல்துறை அதிகாரியாக வரவேண்டும்" என்று நினைக்கிறார் அப்பா. மகனோ, தந்தையின் விருப்பத்துக்கு எதிராக நடந்து கொள்கிறார்.
இதனால் தந்தைக்கும் மகனுக்கும்
இடையே மோதல். "என் மகன் நான்
சொல்வதைக் கேட்பதில்லை" என்று எல்லா
இடங்களிலும் புலம்பத் தொடங்குகிறார்.
அடிப்படையான கோளாறு தந்தையிடம். அதை
உணராமல் புலம்பி என்ன பிரயோஜனம்?
சதுப்பு நிலத்தில் பருத்தி வராது. கரிசல் காட்டில் சணல் விளையாது. பிள்ளைகள் அவர்கள் விரும்பாத துறையில் சாதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக மிகக் குறைவு. இதைத் தாய், தந்தையர் உணர்ந்து கொள்வதில்லை. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு நிமிடமும் மாறிக்கொண்டிருக்கிற உலகத்தில், தந்தையார் பார்த்த பழைய உலகம் வேறு; மகன் பார்க்கும் புதிய உலகம் வேறு.
காலம் மாறுகிற போது, கருத்தும் மாறிப் போகிறது. மஞ்சு விரட்டுகிற வீர விளையாட்டு, இப்போதும் தமிழ் மக்களுக்கு மத்தியில் உண்டு. அந்த நாளில், கூரிய கொம்புள்ள காளையை, மடக்கிப் படிக்கிற வீரனுக்குதான் கன்னிப் பெண் மாலை இடுவாள்.

கற்பனைகளை
நிஜமாக்குவதற்காக
இருந்தால், கற்பனை
செய்யுங்கள். நிச்சயமாகக்
கற்பனை சரி!
ஆகவே, தமிழ் ஆசிரியர் ஒருவர் தன் மகளைப்
பார்த்து, “பொங்கலுக்கு நடந்த வீர
விளையாட்டில், காளையை அடக்கிய வீரன்
ஒருவன் இருக்கிறான். அவனுக்குக் கழுத்தை
நீட்டுகிறாயா கண்ணே...?” என்று கேட்டார்.
அவளோ “இவன் காளையையே இந்தப் பாடு
படுத்தி இருக்கிறானே! என்னை எந்தப் பாடு
படுத்தமாட்டான்...?” என்று கேட்டாள். ஒரு
காலத்தின் மதிப்பீடுகள் மற்றொரு காலத்தில்
மாறிப்போகின்றன.
தன் வாழ்க்கைத்துணை எப்படி இருக்க
வேண்டும் என்கிற ஆசைகளோடு, நீண்ட
நாட்களாக பெண் தேடிக்கொண்டிருந்தார்
ஒருவர் “உனக்கு எப்படிப்பட்ட பெண்
வேண்டும்?” என்று கேட்டார் தரகர்.
“நான் எதிர்பார்க்கிற பெண்ணின் கண், அந்த நடிகையின் கண்மாதிரி இருக்க வேண்டும். மூக்கு இந்த நடிகையின் மூக்கு மாதிரி இருக்க வேண்டும்.” என்று அடுக்கிக்கொண்டே போனார்.
அவர் சொன்னது மாதிரி அலைந்துதிரிந்து ஒரு பெண்ணையும் தேடிக் கொடுத்தார் தரகர். அந்தப் பெண்ணைப் பார்த்துச் சம்மதம் கேட்டபோது “முடியாது” என்று சொல்லிவிட்டார் அந்த பெண். “எனக்குக் கணவனாக வருகிறவனின் மூக்கு இந்த நடிகரின் மூக்கு மாதிரி இருக்க வேண்டும். மீசை அந்த நடிகரின் மீசை மாதிரி இருக்க வேண்டும்” என்று அவளும் பட்டியல் போட்டபோது, நொந்து போய்விட்டார்.
பலரும் தாங்கள் கற்பனை செய்து வைத்திருக்கிறபடி ஆட்களைத் தேடுகிறார்கள்.
கற்பனையில் இருக்கும் தனக்கு வரப்போகும் மனைவியின் அழகுக்கும் அன்பிற்கும் நிஜத்தில் வந்திருக்கும் மனைவியின் அழகுக்கும் அன்பிற்கும் பெரும்பாலும் சம்பந்தமே இருப்பது இல்லை.
அதேபோல் தனது கற்பனையில் இருக்கும் எதிர்காலக் கணவனின் பண்பிற்கும், பாசத்திற்கும் நிஜத்தில் வந்திருக்கும் கணவனின் பண்பிற்கும் பாசத்திற்கும் பெரும்பாலும் சம்பந்தமே இருப்பது இல்லை.
காரணம், இயல்புக்கு மீறிய அதீத கற்பனைதான்.
கற்பனைச்சக்தி - நீங்கள் உங்களின் காரியங்களைத் திட்டமிட்டுச் சரியாக முடிப்பதற்காகக் கடவுளால் வழங்கப்பட்ட ஓர் அற்புதம்.
பகல் கனவு கண்டு, கடவுள் கொடுத்த கற்பனா சக்தியை துஷ்பிரயோகம் செய்தால்... அதே கற்பனை ஓர் அற்பம்.
கற்பனை தவறல்ல. கற்பனையை எப்படி நீங்கள் பயன்படுத்தப் போகிறீர்கள் என்பதைப் பொறுத்து அது சரியா, இல்லை தவறா என்று முடிவு செய்யப்படும்.
கற்பனைகளை நிஜமாக்குவதற்காக இருந்தால், கற்பனை செய்யுங்கள். நிச்சயமாகக் கற்பனை சரி!
கற்பனைகளை நிஜவாழ்க்கையில் சாத்தியமாக்க முடியாத மனிதர்களின் மனது
- கற்பனைக் காவியங்கள் நோக்கித் திரும்புவதும் தற்காலிக திருப்தி அடைவதும் திரும்பக் கற்பனையிலேயே காலத்தைக் கழிப்பதும் சகஜமாகிவிட்ட ஒரு கொடுமை! இந்தக் கற்பனை நிச்சயமாகத் தவறு.
க ற் ப னை | கற்பனை தவறல்ல. கற்பனையை எப்படி நீங்கள் பயன்படுத்தப் போகிறீர்கள் என்பதைப் பொறுத்து அது சரியா, இல்லை தவறா என்று முடிவு செய்யப்படும்.
தன்னைப்போன்ற எல்லாவிதமான உடல், மன, தடுமாற்றங்கள் நிறைந்த ஒரு பெண்தான் தனக்கு வரப்போகும் மனைவியாக இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்ற நிஜம், அந்தக் கற்பனை என்ற கரிப்புகையால் மறைக்கப்படுகிறது.
கற்பனையில் மகாராணியை எதிர்பார்ப்பவர்கள், இயல்பாகவே தங்களை மகாராஜாக்களாக கற்பனை செய்து கொள்வதும் அவர்களின் மனதின் அடி ஆழத்தில் கர்வம் உருவாவதும் இயல்பு. இந்தக் கர்வம்தான் மலர் போன்ற பெண்மையை மதிக்கத் தவறி, மிதிக்கத் தூண்டுகிறது
இதேபோன்று கற்பனையில் அருமையான ஹீரோவை எதிர்பார்ப்பவர்கள், இயல்பாகவே தங்களை அருமையான ஹீரோயினாக கற்பனை செய்து கொள்வதும், அவர்களின் மனதின் அடி ஆழத்தில் கர்வம் உருவாவதும் இயல்பு.
இந்தக் கர்வம்தான், சில நேரங்களில் குடும்பத்தைக் குதூகலமாக வைத்திருக்கும் தாய்மைக்குணத்தை முழுமையாக வெளிப்படாமல் தடுத்து விடுகிறது.
கற்பனையை எறிந்துவிட்டு, நிஜத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். மனிதர்களை மனிதர்களாக மதிக்க ஆரம்பிப்பீர்கள். நிம்மதி மலரும்!