கெட்ட குணங்களுக்காக வெறுக்கக்கூடாது!
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ரோஜாவின் அழகுக்கு ஆசைப்படுகிறீர்களா? அதன் முட்களையும் ஏற்றுக்கொள்ளத் தயாராகுங்கள்.
அரவணைப்புக்கு ஆசைப்படுகிறீர்களா... சிறு அடிக்கும் பெரும் அதட்டலுக்கும் கூடத் தயாராக இருக்க வேண்டும். தயாராக இருக்கிறீர்களா...? சிந்தியுங்கள்.
நிஜ
அன்பு
ஒரு
பக்தி
மிகு
பூஜை!
காதலர்களுக்குக் காதல் காலம் எப்போதுமே இனிக்கக் காரணம், அந்தக் காலங்களில் ரோஜாவின் முட்கள் இதயத்தைக் குத்துவதில்லை.
சிவப்பு ரோஜா வெள்ளை ரோஜாவைப் பார்த்து மயங்கியும், வெள்ளை ரோஜா சிவப்பு ரோஜாவை பார்த்து மயங்கியும், இருப்பது மனசுக்கு இதமாகத்தான் இருக்கும்.
எந்த உறவும் முதலில் இனிக்க இதுதான் காரணம்.
முள் குத்தும்போதுதான் மயக்கம் தெளிகிறது.
நம்மவரின் சில கெட்ட குணங்கள் தெரியும் போதுதான் இதயம் குத்திக் கிழிக்கப்படுகிறது.
பூஜைக்கு
உரிய
நபரை...
நிஜமாய்
பூஜி!
அப்புறம்
வெறுக்க
முடியுமா
உன்னால்!
மனதிலிருந்து துக்கம் சொட்டுச் சொட்டாய் கசிகிறது.
ரோஜாவை நேசித்த நீங்கள் அதன் முட்களை மட்டும் வெறுத்தால் எப்படி?
முள்ளில்லாத ரோஜா உலகில் இல்லை. நீங்களும் முட்கள் உள்ள ஒரு ரோஜாதானே!
ரோஜாவை முட்களோடு நேசியுங்கள்.
அதுதான் ரோஜாவுக்கு நீங்கள் தரும் மரியாதை..
