KAILASA Library/கதவைத் திற ... காற்று வரட்டும்!/வரவேறுங்கள்...Sign in
கதவைத் திற ... காற்று வரட்டும்!

வரவேறுங்கள்...

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஒரு இளம்பெண்ணைக் காதலித்த பணக்கார குல்ஜீத், ஒரு பிறவிக் குருடன். தன் காதலியின் குணம், பேச்சு, நடவடிக்கை பற்றி தன்னுடைய நண்பனிடம் சந்தோஷத்தோடு விளக்கினான்.

அடுத்த நாள் தன் நண்பனை காதலிக்கு அறிமுகம் செய்து வைத்தான். சந்திப்பிற்குப் பின் நண்பன் சொன்ன செய்தியால் உடைந்துபோனான்.

"குல்ஜீத்!" நீ சொல்வது போல் அவள் அழகியல்ல. என்னைப் பொறுத்தளவிற்கு அவள் உனக்கு எந்த வகையிலும் பொருத்தமானவளல்ல" என நண்பன் சொன்ன நிமிடம், இதுவரை மகாராணி போல் அவன் மனதில் வாழ்ந்த காதலி சுருங்கிப்போனாள். அவன் காதலும் சுருங்கிப்போனது.

* வரவேற்றல் என்ற நற்குணமில்லாதவர்களுக்கே அதிர்ச்சிகளை வாழ்க்கை பரிசளிக்கிறது.

எல்லாவற்றையும் வரவேற்கத் தெரிந்தவர்களுக்கு அதிர்ஷ்டங்களைத் தவிர வேறு எதையும் வாழ்க்கையால் பரிசளிக்க முடியாது.

★ “வருவது வரட்டும் வந்தது இருக்கட்டும்”

  • இப்படிப்பட்ட மேம்போக்கு குணம் படைத்த மனிதரால் வாழ முடியும். ஆனால் குதூகலமாக வாழ்வைக் கொண்டாட முடியாது. காரணம் குதூகலத்தின் பிறப்பிடமான ‘வரவேற்றல்’ என்னும் குணம் இல்லாதிருப்பதே!

★ “வருவதெல்லாம் வரம். வந்ததெல்லாம் அதிர்ஷ்டம்”

  • இப்படிப்பட்ட குணத்தை அடைந்த மனிதரால் மட்டும்தான் வாழ்வைக் குதூகலமாகக் கொண்டாட முடியும்.

★ “குழந்தையின் துள்ளல், தைரியசாலியின் தெம்பு, புத்தசாலியின் தெளிவு”

  • இம்மூன்றின் மொத்தக் கலவையாய் வெளிப்படும் குணமே “வரவேற்றல்” (Welcome) என்னும் அற்புதக் குணம்.

சுருங்கச் சொன்னால்...
“இன்பத்தை நம் மகிழ்ச்சிக்காகவும்,
துன்பத்தை நம் வளர்ச்சிக்காகவும்

  • இயற்கை இயற்கையாகவே பரிசளிக்கிறது !” என்ற சூட்சுமம் புரிந்து, வாழ்வைச் சுகிப்பதே “வரவேற்றல்” என்னும் நற்குணம்.

இறைவன், மனிதக் குழந்தை
விளையாட கற்களைத்
தந்தான். இது அதிர்ஷ்டக்கல்
எனச் சிலவற்றை
முத்திரையிட்டு,
மீதியனைத்தையும்
ஒதுக்கிவிட்டு...
“எனக்கு கொடுத்து வைத்தது
இவ்வளவுதான்”
“நான் அதிர்ஷ்டமில்லாதவன்”
எனப் புலம்பினான் மனிதன்.
சொல்லுங்கள்...
புலம்பலுக்குக் காரணம்
இறைவனா? மனிதனா?

இறைசக்தி உங்களுக்குாக ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் ஒவ்வொன்றையும் ஆனந்தமாக வரவேறுங்கள். ஆனந்தமாக என்றால் முழு ஆனந்தமான உணர்வோடு ஏற்றுக் கொள்ளுங்கள்!

இது அதிர்ஷ்டம், இது துரதிர்ஷ்டம் என்பதெல்லாம் உங்களின் மனக்கண்ணோட்டத்தைப் பொருந்ததே!

உங்களுக்குச் சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் ஒவ்வொரு கணமும் இறைசக்தியின் ஆசீர்வாதங்கள்.

உங்களைக் கஷ்டப்படுத்தும் ஒவ்வொரு
கணமும் உங்கள் வாழ்க்கையின் அடுத்த
கட்ட சந்தோஷத்திற்காக உங்களைத்
தயார்ப்படுத்தும் பயிற்சிக்களங்கள்.

Nithyananda

நல்லதை மட்டுமே வரவேற்கத் தூண்டுவது வளர்ச்சிக்குன்றிய மனம்!

கெட்டது வந்தாலும், அது வருவதும் இயல்புதானே

எனச் சொல்லி
வரவேற்பதே வளர்ந்த,
மலர்ந்த, மனதின் குணம்.

வரவேற்பதில் வளம்
சேருங்கள். வாழ்வே
வளமாகும்

ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நீங்கள்
வரவேற்கும் விதத்தைப் பொறுத்துதான்
உங்களின் ஆனந்தம் அமையும்.

ஒரு சிறிய கதை...

மூன்று நடுத்தர வயது நண்பர்கள் ஒரு
டாக்ஸியில் விமானநிலையம் நோக்கிப்
பயணம் செய்தார்கள். எதிர்பாராத
திருப்பத்தில் டாக்ஸியை ஓவர்டேக் செய்து
சட்டென பைக்கில் தாண்டிச் சென்ற
இளைஞரால் டாக்ஸி டிரைவர் கொஞ்சம்
தடுமாறி விட்டார்.

எதிரே வந்த வண்டிகளும் கொஞ்சம்
தடுமாறியது. ஆனால், யார் மீதும் மோதாமல்
வளைந்து நெளிந்து அழகாய் தப்பவிட்டார்
அந்த இளைஞர்.

முதல் நண்பர், "எருமை மாடு. என்ன அவரசம். ஏன் இப்படிபோறான்! இத்தனை பேர் வைத்தெரிச்சலைக் கொட்டிக்கிட்டு இதெல்லாம் எங்க உருப்படப் போகிறது?" என்று டென்ஷன் தாளாமல் திட்டித் தீர்த்தார்.

இரண்டாவது நண்பர், "இந்தக் காலத்துப் பசங்க எல்லாமே இப்படித்தான் இருக்காங்க" என்றார்.

மூன்றாவது நண்பர், "அட, என்ன அருமையா வண்டி ஓட்றான்பா அவன்! ஏதோ தவிர்க்க முடியாத அவசரத்திற்காக வண்டியில் இவ்வளவு வேகமாகச் சென்றாலும் - இப்படி எதிர்பாராத வளைவில், எதிரில் வரும் வண்டியில் சிறிது கூட மோதாமல், என்ன ஸ்டெய்லா வண்டி ஓட்டறான்பா அவன்." என்று புன்னகையோடு கூறினார்.

ஒரே நிகழ்ச்சி - ஒருவரை எரிச்சலின் உச்சிக்கும், இன்னொருவரை ஆச்சரியத்தின் உச்சிக்கும் கொண்டுச் சென்றிருக்கிறது. கோபமும், புன்னகையும் - நீங்கள் ஒரு நிகழ்ச்சியை அணுகும் விதத்தையும் வரவேற்கும் விதத்தையும் பொருத்தது.

விமான நிலையம் சென்று மூன்று பேரும் விமானம் ஏறினார்கள். பாதி வழியில் அந்த விமானம் கடத்தப்பட்டது. மூன்று நாட்கள் கழித்து கடத்தப்பட்ட விமானம் மீட்கப்பட்டது.

முதல் நண்பர், "நான் வீட்டை விட்டுக் கிளம்பியதில் இருந்து எல்லாமே கெட்ட சகுணம்தான்.

பூனை குறுக்கே சென்றது! ஒரு அறிவு கெட்டவன் இடதுபுறம் ஓவர்டேக் செய்தது!

பல்லி தோள்பட்டையில் விழுந்தது! இப்படி நடந்த எல்லாவற்றையும் பார்க்கும் போதே எனக்குத் தெரியும் இப்படி ஏதாவது நடக்கும் என்று!" புலம்பிக் கொண்டே விமானநிலையம் விட்டு வெளியேறினார்.

இரண்டாவது நண்பர், "எல்லாம் கடவுள் அருள், நான் வேண்டிக்கொண்டதை கேட்டுத்தான் கடவுள் காப்பாற்றியிருக்கிறார்" என்றார்.

சமுயன்றால் விரும்பினால் எரிச்சலடையலாம், சந்தோஷமடையலாம், ஒரே காரியத்திற்காக! என்றால் எரிச்சல், சலிப்பு, சந்தோஷம் வருவது யாரால்? எதனால்?
ந்
தோ
ஷ
ம்

மூன்றாவது நண்பர் எதுவும் கூறாமல் திருப்தியும் புன்னகையும் கலந்த முகத்தோடு நடந்து வந்தார்.

அவரைப் பார்த்த மற்ற இருவரும் சற்றே திகைத்தார்கள். “எப்படிப்பா, இப்பக் கூட இவ்வளவு சந்தோஷமா இருக்கிறாய்?” என்று வியப்போடு கேட்டார்கள்.

“இல்லையப்பா... மூன்று நாட்கள் கடத்தி வைத்திருந்தும் அவர்கள் நம்மைக் கொல்லாமல் உயிரோடு விட்டுவிட்டார்களே. இதை நினைக்கும் ஒவ்வொரு கணமும் இறக்காமலே மறுபிறவி எடுத்ததுபோல ஆனந்தமாக இருக்கிறது” என்று புன்னகையோடு சொன்னார்.

'வரவேற்றல்' என்னும் குதூகல குணம் பிறக்காதவரை, வருத்தம் என்பது அடிக்கடி வந்து போகும். வேண்டாவிருந்தாளியாக வந்து போகும்.ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நீங்கள் வரவேற்கும் விதத்தைப் பொறுத்துதான் உங்களின் ஆனந்தம் அமையும். வெளியூரில் வேலை நிமித்தம் வீடு எடுத்துத் தங்கியிருந்த அந்த மூன்று நபர்களும் வீடு திரும்பியபோது அதிர்ச்சி காத்திருந்தது. அவர்கள் வாடகைக்கு எடுத்திருந்த வீடு திடீரென்று விழுந்துவிட்டிருந்தது.

முதல் நபர், “எனக்குத் தெரியும். கிளம்பியதிலிருந்து எதுவுமே சரியில்லை. நீங்கள் நிறைய கஷ்டங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று நாளிதழில் ஜோதிடம் படித்தபோதே எனக்குத் தெரியும். இப்படித்தான் ஏதாவது நடக்கும் என்று!” என மனமுடைந்து உளறித் தீர்த்தார்.

இரண்டாவது நண்பர், “எல்லாம் கடவுள் செயல். கடவுள் நம்மை சோதிக்கறான்பா, நாம் இன்னும் நல்லவர்களாக மாற இறைவன் செய்யும் கண்ணாமூச்சு விளையாட்டுதான் இதெல்லாம்” என்று வறட்டு வேதாந்தம் பேசினார்.

அப்போதும் மூன்றாவது நண்பர் தெளிவாக, புன்னகையோடு இருந்தார். மற்ற இருவருக்கும் இந்தபுன்னகை கொஞ்சம் கோபத்தைத் கிளப்பிவிட்டது.

“ஏன் இப்படி எல்லா இடத்திலேயும் சிரித்துக்கொண்டே இருக்கிறாய்?” என்று வெறுப்போடு கேட்டார்கள்.

"இல்லையப்பா. நாம் சென்ற விமானம் மட்டும் கடத்தப்படவில்லை என்றால் நாம் மூன்று நாட்களுக்கு முன்னரே வீடு திரும்பி இருப்போம், வீடு இடிந்து விழும் போது நாமும் மாட்டிக்கொண்டு செத்துப்போயிருப்போம்.

இப்போது விமானத்தைக் கடத்தியவருக்கு நன்றி சொல்வதா? இல்லை, இறைவனுக்கு நன்றி சொல்வதா என்று யோசித்தேன். சிரிப்பு தானாகவே வந்துவிட்டது" என்று புன்னகையோடு சொன்னார்.

ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நீங்கள் வரவேற்கும் விதத்தைப் பொறுத்துத்தான் உங்களின் ஆனந்தம் அமையும்.

நீங்கள் சதா துக்கப்படுகிறீர்கள், எரிச்சல்படுகிறீர்கள் என்றால் நீங்கள் வரவேற்கும் விதம்தான் தவறு. எல்லாமே இறைவன் அளிக்கும் பரிசு என்ற உண்மையைப் புரிந்து கொண்டால் போதும் ஆனந்தம் தானாக ஏற்படும்!

அர்த்தமுள்ள சம்பவம்...

மிகுந்த வருத்தத்தோடு ஒருவர், "எல்லாவற்றையும் வரவேற்க, ஏற்றுக்கொள்ள என்னால் முடியவில்லை. என் மனம் கல்லா? என்ன செய்யலாம்?" என என்னிடம் வழி கேட்டார். "கவலையை விடுங்கள். என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, என்பதை முதலில் ஏற்றுக்கொள்ளுங்கள்" என்றேன். அடுத்த நாள் காலை, "நன்றி" என்றவர், "இயலாமையை ஏற்றுக்கொண்டபின் மிகப்பெரிய பாரத்தை இறக்கினாற்போல் லேசாயிருக்கிறேன்" எனச் சந்தோஷமாய் சொன்னார். உங்கள் வாழ்க்கையை அது உள்ளபடியே வரவேறுங்கள். ஏற்றுக்கொள்ளுங்கள். நிம்மதி வரும். செய்து பாருங்கள்.