பயத்தைத் தைரியத்தோடு எதிர்கொள்ளுங்கள்!
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஆஸ்ரமத்திற்கு வந்திருந்த பெண்மணி வெகு கலக்கத்தோடு பேசினார்: "என் பையனைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் அடிவயிற்றில் கிலி பற்றிக் கொள்கிறது".
"கவலைப்படாதீங்கம்மா... தைரியமா என்ன பிரச்சனை என்று சொல்லுங்கள்" என்றேன்.
"அவன் என் சொல்பேச்சு கேட்பதேயில்லை. அடிக்கடி பக்கத்து வீட்டுப் பெண்களிடம் வம்பு செய்கிறான். பக்கத்துத் தெருவில் இருக்கும் பையன்களோடு போன வாரம் சண்டை. சின்னப் பிரச்சனைக்குக்கூட சீறுகிறான். அடிதடி வரை சென்றுவிடுகிறான்.
வீட்டில் தங்கமாட்டேன்கிறான்... தெருமுனையில் இருப்பதையே விரும்புகிறான். இப்படியே போனால் அவன் நான் பார்த்து வைக்க போகும் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளமாட்டான். ஏதாவது ஒரு பெண்ணை எதிர்காலத்தில் இழுத்துகிட்டு என்னைவிட்டு ஓடிப்போய் விடுவானோ என பயமாக இருக்கின்றது. இதை நினைக்கும் போதெல்லாம் வயிறே கலங்குகிறது" என்றார்.
மகனைவிட, மகனின் திருமணம் மூலம் தனக்குக் கிடைக்கும் சமுதாய அந்தஸ்திற்கு அதிக முக்கியத்துவம் தந்து பேசிய அந்தப் பெண்மணியிடம், "பயப்படாதீங்கம்மா... உங்க பையனை ஒரு நாள் ஆஸ்ரமத்திற்கு அழைத்து வாருங்கள். உங்க பையனோடு தனியா உட்கார்ந்து பேசுகிறேன். உங்கள் பையனின் மனம் சரியானால், எல்லாம் சரியாகிவிடும்" எனச் சொன்னவுடன்,
"இன்னொரு நாள் எதற்கு! என் பையனை கையோடு அழைத்து வந்திருக்கிறேன். இப்போதே அவனோடு நீங்கள் பேசலாம்" எனச் சொல்லி, தன் இடுப்பில் இருந்த நான்கு வயது சிறுவனை இறக்கி விட்டார் அப்பெண்மணி. அங்கு நடப்பது எதுவும் புரியாமல் திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்தான் சிறுவன்.

- * * * *
நீ
பயப்படும் வரை
மட்டுமே
பயம் உன்னை
பயப்படுத்தும்
- சூட்சுமம் I பயத்தை தைரியமாய் சந்தி! பயமே பயந்தோடும் அதிசயம் நிகழும்
- சூட்சுமம் II
- * * * *
★ ஒவ்வொரு மனிதரும் ஏதாவதொரு
வகையில் இதுபோன்ற ஒரு பயத்திற்குள்
சிக்கி ஆதீத பயத்தில்தான் வாழ்கிறார்கள்.
இது மிகைப்படுத்தல் அல்ல. அந்தப்
பெண்ணுக்கு அதுதான் பயம்.
★ உயிர்சக்தியை நொடிக்குள் உடல்
முழுவதும் பரவச்செய்யும் வல்லமை
கொண்டது பயம்.
★ மனிதன் தீங்கிலிருந்து தன்னை
தற்காத்துக் கொள்வதற்காக
இறைவனால் மனிதனுக்குத் தரப்பட்ட
ஒரு பரிசு - பயம்.
★ மனிதகுலம் இந்த அளவுக்குக்
கட்டுக்கோப்பாக இருப்பதற்கு மிக
முக்கியமான காரணங்களில் பயமும்
ஒன்று.
★ எப்படி உப்பு உணவில் கூடினாலும், குறைந்தாலும் உணவு சுவைக்காதோ அப்படித்தான் பயம் கூடினாலும் குறைந்தாலும் வாழ்வு நரகம்தான்.
* பய உணர்வைச் சரியாகப் பயன்படுத்த மனிதருக்கு அனுபவஞானம் தேவை. அனுபவஞானம் இல்லாவிட்டால் பயம் நம்மையே அழித்துவிடும்.
என்சைக்ளோபீடியாவில் Phobia (பீதி) இருக்கும் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் மலைத்துப் போவீர்கள். எத்தனை வகையான பீதிகள்...
Acrophobia (உயரத்திலிருந்து பார்த்தால் பீதி) முதல் Zoophobia (விலங்குகளைப் பார்த்தால் பீதி) வரை மனிதர்களை விதவிதமாக வாட்டும் இந்தப் பீதி பற்றி சுவாரஸ்யமான ஒரு ஆராய்ச்சி.
பய உணர்வு அதிகமாகி சுயக்கட்டுப்பாட்டை இழந்து செயல்பட ஆரம்பித்தால் அதற்குப் பெயர்தான் பீதி.
பய உணர்வு சரியாகப் பயன்படுத்தப்படாமல், மந்தமாக ஒருவர் செயல்பட்டால் அதற்கு பெயர்தான் அசட்டுத்தைரியம்.
"பீதி, அசட்டுத்தைரியம் என்பதெல்லாம் ஏதோ சில மனிதரிடம் இருக்கக் கூடியது. எனக்கல்ல!" - என்று நீங்கள் நினைத்தால் இந்தக் கட்டுரை நிச்சயம் உங்களுக்குதான்...
"மரண அனுபவத்தை வாழும் போதே தாண்டிய ஞானிகளைத் தவிர்த்து, மற்ற எல்லா மனிதர்களையும் ஏதோ ஒருவகை பீதி அல்லது அசட்டுத்தைரியம் பிடித்திருக்கும்" - இது வேத உண்மை.
"கிட்டத்தட்ட எல்லா மனிதர்களும் ஏதோ ஒருவகை பீதியால் (Phobia) பீடிக்கப்பட்டிருக்கிறார்கள்" இது மனோ ஆராய்ச்சியாளர்களின் முடிவானக் கருத்து.
இந்த உண்மைகளோடு பொருந்தும் ஒரு வேடிக்கையான கதை.
சுந்தரபுரி மக்களின் குறை தீர்த்து ஊருக்கு வெளியே வாழ்ந்து கொண்டிருந்தார் ஒரு ஞானி.
| பயத்தை எதிர்கொள்ளத் | |
|---|---|
| பீ | தைரியமில்லாதவரே |
| தி | பீதிக்குள்ளாகிறார். |
ஒரு நாள், "இங்கே எதுக்காக வந்தாய்?" என்று சுந்தரபுரி நோக்கி வந்து கொண்டிருந்த எமதர்மனைப் பார்த்து ஞானி கேட்டார்.
எமன், "சாமி! கலிகாலக் கணக்குப்படி இந்த ஊரிலிருந்து ஐந்நூறு பேரை நான் எமலோகத்துக்கு உடனே கூட்டிக்கொண்டு போக வேண்டும்" என்றார்.
ஞானி, "கலிகாலக் கணக்கு சரியா வர மாதிரி நான் பார்த்துக் கொள்கிறேன். நான் இருக்கும் வரை இவர்களை நீ ஒன்றும் செய்யக் கூடாது. நீ திரும்பப் போகலாம்" என்றார்.
மக்களை உடனடியாக அழைத்துச் செல்ல வேண்டிய என்ன "சாமி, ஒரு முன்னூறு பேரை மட்டுமாவது அழைத்துச் செல்ல அனுமதியுங்கள்" என்றார்.
"இல்லை... முடியாது".
"சாமி... இப்படி தடை உத்தரவு போட்டால் நான் என்ன செய்வேன். முன்னூறு பேர் வேண்டாம். ஒரு நூறு பேரையாவது நான் அழைத்துச் செல்ல அனுமதியுங்கள்".
"நூறு பேர் ரொம்ப அதிகம், வாழ்க்கையை நன்றாக வாழ்ந்துவிட்டு உலகை விட்டுப் போகத் தயாராக ஐம்பது பேர் இருக்கிறார்கள். அவர்களை மாத்திரம் நீ அழைத்துக்கொண்டு போகலாம்" என்று ஞானி சொல்ல...
எமன் அங்கிருந்து வெகு துள்ளலோடு, முன்னூறு பேரையும் அழைத்துச் செல்ல அனுமதி பெற்றது போல சந்தோஷமாக ஊருக்குள் சென்றார்.
ஒரு வாரம் தொடர்ந்து காலரா நோயால் ஐம்பது பேரைத் தாக்கிய எமன், ஞானியின் அனுமதி மீறாமல் தன் வேலையை முடித்துக்கொண்டு எமலோகம் நோக்கிப் புறப்பட்டார்.
ஆனால், எமன் அந்த ஊரிலிருந்து வெளியேறும் போது முன்னூறு ஆவி உடல்களோடு வெளியேறிக் கொண்டிருந்தார்.
ஞானி, "எமா! நான் ஐம்பது பேருக்குத் தானே அனுமதி கொடுத்தேன். நீ எப்படி முன்னூறு பேர் உயிரைப் பறிக்கலாம்...?" என்று கேட்க, எமதர்மன் சிரித்துக் கொண்டே, "நீங்கள் கொடுத்த அனுமதியை மீறவே இல்லை சாமி. ஊருக்குள் காலரா
| வே | ஆனந்தமாக வாழ, |
|---|---|
| ண் | முடிவெடுக்க, தைரியம் வேண்டும். |
| டு | ஆனந்தமாக வாழ, செயல்பட |
| ம். | புத்திசாலித்தனம் வேண்டும். |
நோயை வரவிட்டேன். ஐம்பது பேர் பேதியால் செத்தாங்க. மிச்ச இருநூற்றைம்பது பேர் அதைப் பார்த்து பீதியாலேயே செத்துப் போயிட்டாங்க. என் கணக்குச் சரியாயிடுச்சு" என்றார்.
பீதி என்ற வார்த்தையை விட, பயம் என்றால் எல்லோராலும் புரிந்து கொள்வது சுலபம். ராட்சத வளைய ராட்டினத்தில் சுற்றும் போது பய உணர்வை எல்லோருமே உணர்ந்திருப்பீர்களே! பயத்தை எங்கே உணர்ந்தீர்கள்?
சரியாக அடிவயிற்றின் வலப்புறத்தில்
ஜிவ்வென்று ஒரு உணர்வை
உணர்ந்திருப்பீர்கள்.
பயத்திற்கும் அடிவயிற்றிற்கும் அப்படி என்ன சம்பந்தம்?
பயத்தில் அடிவயிறு மாத்திரம் கலங்குகிறதே. ஏன்?
எந்த இடத்தில் நாம் பயத்தை
உணர்கிறோமோ அந்த இடத்தில்தான்
ஸ்வாதிஷ்டானச் சக்கரம் இருக்கிறது என்று
ரிஷிகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
உணர்ந்து கூறியிருக்கிறார்கள்.
ஸ்வாதிஷ்டானம் என்பது நம்
உடலிலிருக்கும் ஏழு சக்திமையங்களில்
ஒன்று.
இந்த ஸ்வாதிஷ்டானச் சக்கரத்தில்தான் பயமும் இருக்கிறது. உயிர் சக்தியின் மூலமும் இருக்கிறது.
எதிர்பாராத ஒன்றால் பயம் நம்மைப்
பற்றும் ஒவ்வொரு நிமிடமும்
ஸ்வாதிஷ்டானச் சக்கரம் உலுக்கப்படுகிறது.
ஸ்வாதிஷ்டானச் சக்கரம் உலுக்கப்படும்போது வெளிப்படும் ஒரு துளி உயிர் சக்தி கொடுக்கும் உணர்வுதான், ராட்சத ராட்டினத்தில் சுற்றும் போது 'ஜிவ்' என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

பயம் போக்கும் தியானம்... பயம் எங்கிருந்து உருவாகிறதோ அங்கேயேதான் தைரிய சக்தியும் ஒளிந்திருக்கிறது. பயம் பழக்கமாகி விட்டதால் அவசரகாலங்களில் உணர்வின் பற்களால் பயத்தையே தொடர்ந்து கவ்வுகிறீர்கள். அந்தக் காலங்களில் சிட்டிகையளவு நிதானத்தைக் கொண்டுவந்தாலே போதும் பயத்திற்குப் பதில் தைரிய சக்தியை வசப்படுத்துவீர்கள்!
எதிர்பாராத சூழ்நிலை மற்றும் அவசர காலத்தை உடனடியாகச் சமாளிப்பதற்கு நம் உடலில் ஏற்கெனவே ஓடிக்கொண்டிருக்கும் சக்தி போதாது.
இதுபோன்ற நேரங்களில் பயம்
ஸ்வாதிஷ்டானத்தை உலுக்கி, அந்தச்
சூழ்நிலையைச் சந்திக்கத் தேவையான
சக்தியைத் தருகிறது.
சிறுவயதிலிருந்தே பலவற்றிற்கும்
பயந்து பயந்து வளர்வதால் பயம் வாழ்வின்
ஒரு தொடர் அம்சமாகிவிட்டது.
ஒவ்வொரு முறை பயப்படும் சிறிய
பயத்திற்குக்கூட உயிர்சக்தி உடனடியாக
வெளிப்படும். எப்போதாவது
வரவேண்டிய பயம் எப்போதும்
இருக்கும்போதுதான் பிரச்சனையே
ஆரம்பிக்கிறது. பயம் வாழ்வின் தொடர்
நிகழ்ச்சியாக மாறும் போது, மனிதரை
நடுக்கம் தொற்றிக் கொள்கிறது.
தொடர்ந்து நடுக்கம், படபடப்பு என்ற
ஒரு மனம் - உடல் சம்பந்தப்பட்ட
நோயாகவே அது மாறிவிடுகிறது.
இந்நிலைதான் பீதி.
அவமானம் நேரும் போது...
பிரச்சனைகள் வரும் போது...
தவறு செய்யும் போது...
என்று படபடப்பு நமக்குள் ஏற்படும் ஒவ்வொரு நிமிடமும் நாம் பீதியில்தான்
மனிதனென்றால் எதிலும் வாழ கற்றுக்கொள்வான்.
ஐஸ்வரியத்தையும்
தரித்திரத்தையும் எனக்குக்
கொடாதிருப்பீராக.
- பைபிள்.
ஐஸ்வரியத்தின் உச்சியில்
சுகபோகத்தின் உச்சியில்
சந்தோஷமாய் வாழ்
- Zorba
ஐஸ்வரியமும் தரித்திரமும் ஞானிக்கு
ஒன்றே. இரண்டும் ஆனந்தத்தை
அவரிடமிருந்து பறிக்காது!
- வேத ரகசியம்.
சாதாரண மனிதனை ஐஸ்வரியமும்
தரித்திரமும் கொல்லும்.
கஷ்டப்படுத்தும்.
வாழ்வின் இவ்விரு முனைகளில் வாழ
ஞானம் அடிப்படை.
அதனால்தான் சொல்வேன்,
“ஞானம் நீ பெறு, அப்புறம் எதை
வேண்டுமானாலும் நீ பெறலாம். அது
உன்னைப் பாதிக்காது”.
வாழ்கிறோம்.
நமக்குள்ளே படபடப்பை உணர்வது, பேச்சு தடுமாறுவது, விரல்கள் நடுங்குவது இதில் ஏதாவது ஒன்று இருந்தாலும் சரி - அந்த நேரங்களில் நாம் நம் கட்டுப்பாட்டை இழக்கிறோம் என்று அர்த்தம். அதன் விளைவாக ஏற்படும் உயிர் சக்தி விரயம்தான் நடுக்கத்தையும் பட படப்பையும் உண்டுபண்ணுகிறது.
இதுதான் பீதி.
இந்தப் பீதியிலிருந்து எப்படி வெளிவருவது?
எளிது. பயத்தைக்கண்டு பயந்துவிடாமல் பயமே பயப்படுமளவுக்கு பயத்தைப் விழிப்புணர்வோடு அணுக ஆரம்பியுங்கள். பயத்தில் பயந்து படபடத்துப் பீதியடைவதற்கும் பயத்தை விழிப்புணர்வோடு பார்த்து பீதியின் வெளிப்பாடான படபடப்பையே தாண்டுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.
சுருக்கமாகச் சொன்னால்...
பயத்தைத்
தைரியத்தோடு எதிர் கொள்ளுங்கள்.
பிரச்சனை தீர்ந்தது!
அர்த்தமுள்ள சம்பவம்...
"பயத்தைத் தைரியமாய் எதிர்கொள்வதெப்படி? விளக்குங்கள்!" என பக்தர் ஒருவர் கேட்டார்.
"இரவில் தனியே வரும்போது நாயொன்று துரத்தினால், எவ்வளவு வேகமாய் ஓடுவீர்கள். அந்தச் சூழ்நிலை பயம்! ஆனாலும் தைரியத்தோடு எதிர்கொள்ளவில்லையா? எங்கிருந்தோ உங்களுக்குள் சக்தி பொங்கியது நிஜம்தான்!
ஏன் நாயும் பேயும் மட்டும்தான் நம்முள்ளிருக்கும் சக்தியைப் பொங்கச் செய்ய வேண்டுமா? அதை நாமே செய்யலாமே. பயத்தைத் தைரியத்தோடு அணுகுங்கள். பயம் மறையும்!" என்றேன்.
தயக்கத்தைத் திருகி வெளியே எறியத் தயங்காதீர்கள்!
தியான உளிகள் | சந்திரனை விஜயம் செய்த மனிதனென்னும் சாகசக்காரன், அதுபோதாதென்று செவ்வாய் தாண்டி அண்டத்துள் செல்லத் தயாராகிறான். ஆனால், அருகிலுள்ள வாழ்வை இழந்து கொண்டேயிருக்கிறான். இன்னும் நெருங்கவே இல்லை. |
நினைத்ததை நினைத்தபடி பேச முடியவில்லை.
காரணம் - நீதிநெறிகள் குரல்வளையை நெருக்குகின்றன.
விரும்பயபோது சிரிக்கமுடியவில்லை. அழமுடியவில்லை. நியாயமான உணர்வுகளைக்கூட அடக்குகிறான். காரணம் கேட்டால் “நாகரிகம்!” என்கிறான்.
தைரியமாய் சிரிக்கமுடியாத அளவுக்கு மனிதர்கள் பயந்து போயிருக்கிறார்கள். என்னவிதமான வாழ்க்கை இது?
பயப்படுகிறார். தயங்குகிறார் வாழ்வின் பல அம்சங்களுக்கு!"
ஆழ்மனதில் நிகழும் இவற்றால், மேல்மனதிலிருந்து எண்ணங்களை எடுக்கும் மனிதர்கள் சொல்கிறார்கள்...
“எனக்கு இந்த இந்த விஷயங்கள் பிடிக்காது. மேடையில் பேச பிடிக்காது. கிறுகrecord கிறுககர் போல வாய் பிளக்க சிரிப்பது படிக்காது. எப்போதும் இறங்கிப் போவது எனக்குப் பிடிக்காது.”
தயக்கம்
கண்டு
தயங்கக்
கூடாது
- இப்படி சுமூக வாழ்வுக்கு எதிராகப் பேசி வாழ்க்கையை இழந்து கொண்டேயிருக்கின்றார்கள்.
இதுபோன்ற எல்லா வாக்கியங்களும் உள்பயத்தால், வெளியே வந்து விழும் வார்த்தைகள்தான்.
486
சுருங்கச் சொன்னால்.... தயக்கம் உங்களுக்குள் எட்டிப்பார்க்கும் வாழ்க்கை சம்பவம் எதுவாக இருந்தாலும் அந்த சம்பவத்திற்கு ஆழ்மனதில் நீங்கள் பயந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
உங்களின் எல்லா தயக்கங்களையும் பட்டியலிடுங்கள்.
சிறிய தயக்கத்தைக்கூட விட்டுவிட வேண்டாம்.
பட்டியலிட்ட தயக்கங்களை இனி சந்திக்கப்போகும் காலங்களைச் சும்மாவிடாதீர்கள்.
பயம் நாசூக்காய் தலைக்காட்டும் அந்த நிமிடங்களில்...
தயக்கம் இருந்தாலும் இருந்துவிட்டுப் போட்டுடும் எனச் சொல்லி தயக்கம் துறந்து சந்தியுங்கள்.
தடைபடாமல் செயல்படுங்கள்.
தயக்கத்தின் தலையைப் பிடித்து தயக்கமில்லாமல் திருகி இழுத்தெறியுங்கள். தயக்கத்தின் பூத உடலான பயம் வெளியே வந்து விழும்.
தயக்க காலங்களை தியான காலமாக்குங்கள்!
தயக்கம்
விட்டு
எகிறி
குதி...
ஆனந்தம்
ஆடும்.
நிம்மதி
நிலவும்.
அமைதி
பூத்த
ஞான
சமவெளியில்
விழுவாய்!
தில்இருந்தால்...
சோதித்துப்
பார்
மனதில்!