KAILASA Library/கதவைத் திற ... காற்று வரட்டும்!/படிப்பு ஒரு சுமைSign in
கதவைத் திற ... காற்று வரட்டும்!

படிப்பு ஒரு சுமை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

படிப்பு ஒரு கலை.

★ வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படாத வரை படிப்பில் துடிப்பும் ஆர்வமும் ஏற்படாது.

★ படிப்பைச் சுற்றிச் சமுதாயம் உருவாக்கும் கட்டாயப்படுத்தல்களும், கஷ்டங்களும்தான் படிப்பின் மீது வெறுப்பை உண்டு பண்ணுகின்றன.

★ மனதில் வெறுப்போடு ஓர் ஓவியக்கலையையோ, சிற்பக் கலையையோ கற்றுக்கொள்வது கடினம்.

★ வெறுப்போடு கற்றுக்கொள்ள முயன்றால், கலைகூட கவலையைத்தான் உண்டுபண்ணும்.

அது சுமையாகத்தான் தெரியும். இது படிப்பு சுமையாகத் தெரிவதின் சூட்சுமம்.

வாழ்க்கையை ஆனந்தமாக அனுபவிப்பதற்குப் படிப்பு நமக்கு ஒரு முட்டுக்கட்டையாக இருக்கிறதா?

ஒன்று, பல்வேறு பிரச்சனையின் காரணமாக, ஒழுங்காகப் படிக்காமலேயே, வாழ்க்கையைப் புரிந்துகொள்ளாமலேயே போய்விடுகிறார்கள் பலர். இதனால் வாழ்க்கை என்றால் என்னவென்று அவர்களுக்குப் புரிவதே இல்லை. இவர்கள் பிற்காலத்தில் இன்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸில் மாட்டித் தவிக்க நேரிடும்.

இன்னொரு நிலையில் நிறையப் படித்து, இரண்டு மூன்று பி.ஹெச்.டி.

portrait of Sadhguru

நன்றாகப் படிக்க முடியாமல் போனதற்கு நீ பொறுப்பல்ல. ஆனால் நன்றாகப் படிக்கப் போவதற்கு நீதான் பொறுப்பு!

வாங்கிவிடுகிறார்கள் சிலர். நிறையப்
படித்துவிட்டதால், அவர்களைப் பற்றி
அவர்களுக்கே கொஞ்சம் மிதப்பான
எண்ணம் வந்துவிடுகிறது. சுப்பீரியாரிட்டி
காம்ப்ளக்ஸில் மாட்டித் தவிக்க ஆரம்பித்து
விடுகிறார்கள். முடிவில் இருவருமே
வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல்
திணறுவார்கள்.

உண்மையில், சந்தோஷத்துக்கும்
ஆனந்தத்திற்கும் படிப்பு நிச்சயம்
முட்டுக்கட்டை இல்லை. உண்மையான
படிப்பு என்பது நீங்கள் உங்களைப்
புரிந்துகொள்வதற்காக உதவும் ஒரு
வழிமுறை உலக வாழ்க்கையைப் பொறுத்த
அளவு, படிப்பு என்பது, கல்வி என்பது உலக
வாழ்க்கையை நீங்கள் புரிந்து கொண்டு நல்ல
வாழ்க்கை வாழ்வதற்காக.

உங்களை நீங்களே புரிந்துகொள்வது,
உலகத்தை நீங்கள் புரிந்துகொள்வது,
இரண்டுமே நல்ல வாழ்க்கைக்காகத்தான்.
இரண்டில் உங்களை நீங்களே
புரிந்துகொள்வது சாத்தியம், உலகத்தைப்
புரிந்துகொள்வது மிகக்கடினம்.

உங்களை நீங்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்தால் உங்களுக்குள்ளே நடக்கும் படித்தல் என்ற நிகழ்வும் வெகு இயல்பான, வெகு சுலபமான ஒரு விஷயமாகிவிடும். உங்களை நீங்கள் புரிந்துகொள்ள ஆரம்பிக்காத வரை படித்தல் ஒரு சுமையாகத்தான் தெரியும்.

எப்படிப் படிப்பது என்பதைப் பற்றி நமக்குப் பல தவறான அபிப்பிராயங்கள் இருக்கின்றன. இன்னும் ஒருபடி மேலே சென்று சொல்ல வேண்டுமெனில், எப்படியெல்லாம் குழந்தைகளைப் படிக்க வைக்கக்கூடாதோ, அப்படியெல்லாம் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறோம். கல்வி கற்றுத் தருகிறோம் என்கிற பெயரில், பிஞ்சுக் குழந்தைகளைச் சில ஆசிரியர்கள் படுத்துகிற பாடு கொடுமையானது.

குழந்தைகளுக்குக் எதை, எப்படிக் கற்றுத் தர வேண்டும் என்பதை அந்த ஆசிரியர்களுக்குக் கற்றுத் தர வேண்டியது இப்போது அவசியத்திலும் அவசியம்.

குழந்தைகள் அபரிமிதமான கற்பனை வளம் கொண்டவர்கள். நாம் நினைத்துப் பார்க்காத கோணங்களில் எல்லாம் சிந்தித்துச் செயல்படும் வல்லமை கொண்டவர்கள். அவர்களின் கிரியாசக்தியை நாம் தெரிந்து கொள்வதில்லை. நாம் குழந்தைகளை எழுத்துக்கள் எழுதப்படாத சிலேட்டுகள் என்று நினைக்கிறோம்.

அதில் அந்தக் குழந்தையே ஏதாவது எழுதி விடுவதற்குள், நாம் எழுதிவிட வேண்டும் என்று துடிக்கிறோம்.

விளைவு, விளையாட வேண்டிய வயதில், குழந்தைகள் விரல் வீங்க எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அணிலையும், ஆந்தையையும் நேரில் பார்த்து ஆச்சரியப்பட வேண்டிய நேரத்தில், புத்தகங்களில் மட்டுமே பார்க்கிறார்கள். புதுப்புது வார்த்தைகளை விளையாட்டாக கற்றுக் கொள்ள வேண்டிய வயதில்... 'இதைப்படி, அதைப்படி' என்று குழந்தைகள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

படிப்பதற்காக, இப்படிக் கட்டாயப்படுத்தும்போது, படிப்பின் மீதே மனதில் வெறுப்பு உண்டாகிறது. இதனால் படிப்பின் மீதான கவனம் சிதறி, படிப்பற்கு நேர் எதிரான டி.வி. விளையாட்டு, அரட்டை, கெட்டப் பழக்கவழக்கங்கள் என்று தேடி ஓட ஆரம்பித்து விடுகிறார்கள்.

ஓரளவுக்கு வயதான பிறகும் இப்படிப்பட்ட வற்புறுத்தல் தொடர்வதால், சில இளைஞர்கள் போதைப் பழக்கங்களுக்குக்கூட அடிமையாகி விடுகிறார்கள்.

படிப்பைத் தாண்டிய விஷயங்களில் அதிக ஈடுபாடு ஏற்படக் காரணம்,

சாஉங்களை நீங்களே புரிந்துகொள்வது, உலகத்தை நீங்கள் புரிந்துகொள்வது, இரண்டுமே நல்ல வாழ்க்கைக்காகத்தான். இரண்டில் உலகத்தைப் புரிந்துகொள்வது மிகக்கடினம். உங்களை நீங்களே புரிந்துகொள்வது சாத்தியம்!
த்
தி
ய
ம்

டி.வி.யிலிருந்து போதைப் பழக்கம் வரை அதிக சந்தோஷம் தருகின்றன. அதுதான் காரணம் என்பது தவறான கண்ணோட்டம். படிப்பின் மீது தெரிந்தோ, தெரியாமலோ உருவாக்கப்பட்ட அதிக வெறுப்பும், கஷ்டமும்தான், மற்ற விஷயங்களில் ஈர்ப்பையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்துகின்றன. இது புரிந்தால் பாதிப்பிரச்சனை தீர்ந்துவிடும்.

சமீபத்தில் தன் இருபத்திரண்டு வயது மகனோடு என்னைத் தேடி வந்தார் ஒருவர். மகன், பெங்களூரில் மருத்துவக் கல்லூரியில் படிக்கிறானாம். மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்தானோ இல்லையோ... நன்றாக கஞ்சா இழுக்கக் கற்றுக்கொண்டான். போதை மாத்திரைகள், ஊசிகள் என்று அவன் காலம் போதையில் வேகமாகக் கழிந்திருக்கிறது.

இப்படியே போனால் மகனைப் பறிகொடுத்து விட வேண்டியதுதான் என்று பயந்து என்னிடம் அழைத்து வந்திருந்தார் அந்தப் பெரியவர்.

பையனோடு சில நிமிடங்கள் பேசிய பிறகுதான் தெரிந்தது, மருத்துவம் படிக்க அவனுக்கு எந்த விருப்பமும் இல்லை என்பது. பெற்றோரின் கட்டாயத்தின் பேரில் வேண்டாவெறுப்பாக மருத்துவம் படிக்க ஆரம்பித்தவன். இலகுவாகப் போதை ,வலையில் சிக்கிக் கொண்டிருக்கிறான்.

அவன் நிலையை அவனிடமே பக்குவமாக எடுத்துச் சொன்ன போது, தன் தவறை எளிதில் புரிந்து கொண்டான். அவனை மிகச் சுலபமாக அந்தப் பழக்கத்திலிருந்து மீட்டு வர முடிந்தது. சாதாரண வெறுப்பு அந்த அளவுக்கு தன்னை ஆட்டிப்படைத்து விட்டது என்று உணர்ந்து கொண்டான். படிப்பின் மீதிருந்த வெறுப்பு மறைந்து விருப்பம் பிறந்தது.

நன்றாக படிக்காதவர்கள், நன்றாக படிக்க இயலாதவர்கள் என்பது தவறு.

படிக்கிற காலத்தில் நன்றாகப் படிக்கத் தவறியவர்கள் என்பதுதான் சரி.

உண்மையில் எல்லோரும் நன்றாகப் படிக்கும் திறமை கொண்டவர்கள் தான்.

பநன்றாக படிக்காதவர்கள், நன்றாக படிக்க இயலாதவர்கள்
டிஎன்பது தவறு. படிக்கிற காலத்தில் நன்றாகப் படிக்கத்
ப்தவறியவர்கள் என்பதுதான் சரி.
பு

படிப்பு என்பது இன்றைய வாழ்க்கைக்கு, இன்றைய உலகத்திற்கு அவசியமான சுமை. கல்வியைச் சுமை என்று நான் சொல்வதைக் கேட்டு, உங்களில் பலருக்கும் ஆச்சரியம் ஏற்படலாம். இந்தச் சுமை சுகமாக மாறத் தவறிய சுமை என்று புரிந்து கொள்ளுங்கள்.

ஒரு மனிதனின் முதல் இருபத்தொரு வயதை மூன்று பருவங்களாக பிரிக்கலாம்.

portrait

இளைஞர்களே! படிக்கிற
காலத்தில் நன்றாகப்
படியுங்கள்! உங்களால்
முடியுமா என்கிற சந்தேகமே
உங்களுக்கு வேண்டாம்.
'உங்களால் எல்லாம் முடியும்'
என்பதே மறுக்க முடியாத
உண்மை.

1. ஒன்று முதல் ஏழு வயது வரை இருக்கும்
பருவம் முதல் பருவம். இந்தப் பருவம்
குழந்தைப் பருவம். 'அம்மாவோடு இருக்க
வேண்டும். கேட்பது கிடைக்க வேண்டும்
எல்லோரும் தன்னை ஏற்றுக்கொள்ள
வேண்டும்.' என்று ஆசைப்படும் மனம்
குழந்தைகளுக்கு.

அம்மாவிடமிருந்தும் தன்
விளையாட்டிலிருந்தும் தன்னைப் பிரிக்கும்
யாரையும் குழந்தை வெறுக்கவே செய்யும்.
பள்ளிக்கூடம், படிப்பு, ஆசிரியர் எல்லாம்
சேர்ந்து தன்னைக் கட்டுப்படுத்துவதாக,
கஷ்டப்படுத்துவதாகக் குழந்தைகள்
நினைப்பதால் தான் பள்ளிக்குச் செல்லும்
முன்பு சில நாட்களாவது குழந்தைகள்
அழுகின்றன.

பள்ளிக்கூடம் விட்டவுடன்
ஜெயிலிலிருந்து தப்பித்து வரும் கைதி போல
ஓடோடி வெளியே வருவதற்கும் காரணம்
அதுதான்.

2. எட்டு முதல் பதினான்கு வயது உள்ள
குழந்தைகளுக்கு நிறைய விளையாட
வேண்டும் என்று ஆசை. ஆனால் அப்படி
விளையாடுவதற்கான எல்லாவிதமான
வாய்ப்பையும் ஸ்பெஷல் கிளாஸ், டியூஷன்
போன்றவை அபகரித்துக் கொண்டு
விடுகின்றன.

எனவே பல நியாயமான ஆசைகள் நிறைவேறாமல் நிராசைகளாகவே மனதில் தங்கிவிடுகின்றன.

3. பதினான்கு வயது முதல் இருபத்தொரு வயது வரை உள்ள பருவம், மூன்றாம் பருவம். ஒரு குழந்தை இளைஞனாகும் நேரம் இது. வாழ்க்கையில் முதன்முறையாக ஹார்மோன்களோடு போரிட வேண்டிய நேரம். பொறுப்பை ஏற்றுக்கொண்டு சாதனையாளன் ஆகும் நேரம்.

பிறந்தது முதல் பதினான்கு வயது வரையிலான பகுதி வாழ்வில் சுதந்திரப் பறவையாக ஆனந்தமாகத் திரியும் காலம் - இந்தச் சுதந்திரம் குழந்தைகளுக்குச் ‘மறுக்கப்படுவதால்’ அல்லது ‘மறுக்கப்படுவதாக நினைத்துக்கொள்வதால்’ - இழந்து விட்டதாக நினைக்கும் சந்தோஷத்தையும் பிள்ளைகள் 14-21 வயதிற்குள் பூர்த்தி செய்துகொள்ள மன ரீதியாக தாயாராகிறார்கள். காரணம் 14-21 வயதிற்குள் கிடைக்கும் சுதந்திரமும், வாலிபத் துடிப்பும்தான்.

தங்களின் கவனம் சிதறுவதற்கான அடிப்படைக் காரணங்களைப் புரிந்து கொண்டால் போதும் படிப்பு தாண்டிய விஷயங்களில் இருக்கும் ஈர்க்கும் மாயை, போலி என்று புரிந்துவிடும்.

இதைப் புரிந்துகொண்டால் படிப்பின் மீது இருக்கும் வெறுப்பும், மற்ற விஷயங்கள் மேல் இருக்கும் ஈர்ப்பும் குறைய ஆரம்பிக்கும். படிப்பின் மீது ஆர்வம் இயல்பாகவே அதிகரிக்க ஆரம்பிக்கும். படிப்பில் துடிப்பும் துள்ளலும் ஏற்படும். படிப்பு, சுமையாகத் தெரியாது.

இளைஞர்களே! படிக்கிற காலத்தில் நன்றாகப் படியுங்கள்! உங்களால் முடியுமா என்கிற சந்தேகமே உங்களுக்கு வேண்டாம். ‘உங்களால் எல்லாம் முடியும்’ என்பதே மறுக்க முடியாத உண்மை.

நீங்கள் சாதிக்கத் தகுதியானவர் என்ற நம்பிக்கையையும் எப்போதும் மனதில் ஞாபகப்படுத்திக்கொண்டே இருங்கள்.

தூங்கியதும், துக்கப்பட்டது போதும். எழுந்திருங்கள். சாதனை என்கிற ஓட்டத்திற்கு முடிவே இல்லை!