KAILASA Library/கதவைத் திற ... காற்று வரட்டும்!/முட்டாள்தனம்Sign in
கதவைத் திற ... காற்று வரட்டும்!

முட்டாள்தனம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

* எந்த ஒரு பைத்தியமும் தன்னைப் பைத்தியம் என்று சொல்லிக்கொள்ளாது, ஏற்றுக்கொள்ளாது. இதில் பாதிப்புமில்லை, பலனுமில்லை.

* எந்த ஒரு முட்டாளும் தன்னை முட்டாள் என்று சொல்லிக் கொள்ள மாட்டார். எண்ணிக் கொள்ளவும் மாட்டார். இதில் பாதிப்புண்டு, ஆனால் பலனில்லை.

* அதேபோல், எந்த ஒரு புத்திசாலியும் தன்னைப் புத்திசாலி என்று சொல்லிக் கொள்ளவோ, எண்ணிக் கொள்ளவோ மாட்டார். இதில் பாதிப்பில்லை, நிச்சயம் பலனுண்டு.

* நீங்கள் பாதிப்படைந்தவரா, பலன் அடைந்தவரா? நீங்கள்தான் தேர்வு செய்து முடிவுசொல்ல வேண்டும்.

* தன் தகுதியையும் தன் தெளிவையும் - கணக்கில் கொள்ளாமல் ‘நான் ஒரு புத்தசாலி’ என்று அழுத்தமாக (தெரிந்தோ, தெரியாமலோ) நினைக்கும் நினைவு என்ற விதையில் இருந்துதான் ‘முட்டாள்தனம்’ என்னும் முட்புதர் நமக்குத் தெரியாமலே வளர்கிறது.

பரபரப்பூட்டும் புதியதொரு ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை முதுகலை மாணவர் பல்கலைக்கழகத்தில் வாசித்தார். அரங்கமே அதை ஆர்வமாகக் கேட்டது. உரை முடிந்ததும் கைத்தட்ட, அரங்கமே அதிர்ந்தது.

ஆனால், முன்வரிசையில் இருந்த
முனைவர் முகத்தில் மட்டும் ஈ
ஆடவில்லை.

முனைவர் முகத்தைக் குழப்பமாய்
பார்த்த மாணவர் அங்கே சென்று,
"கட்டுரையை நன்றாக
உருவாக்கியிருக்கிறேனா?" என
கேட்டதற்கு, "இது பொய் கட்டுரை.
இந்தக் கட்டுரையில் இருக்கும்
ஒவ்வொரு வார்த்தையும் ஏற்கெனவே
ஒரு நூலில் வெளிவந்து விட்டது. என்னை
ஏமாற்ற முடியாது" என்றார் முனைவர்.

மாணவர் அதிர்ச்சியில்
ஆடிப்போனார். காரணம் அந்தக் கட்டுரை
முழுக்க முழுக்க அவரே உருவாக்கியது.
"நாளை அந்தப் புத்தகத்தோடு
வருகிறேன்" என முனைவர் சொன்னதின்
விளைவு, மாணவரின் அன்றிரவு தூக்கம்
கலைந்து போனது.

அடுத்த நாள் காலை முனைவர்,
"இதைத் திறந்து பார்" எனச் சொல்லி
அந்த நூலைத்தந்தார்.

திறந்த மாணவன் அதிர்ந்தார். அது ஆக்ஸ்போர்டு டிக்சனரி.

★ மேலே சொன்னது
மிகைப்படுத்தப்பட்ட கதையல்ல.
உள்உலக நிஜம்.

★ புத்திசாலித்தனம் எனச் சொல்லி தலைதூக்கும் முட்டாள்தனத்திற்கான உதாரணம்.

ஹிரோஷிமாவில் 1,80,000
மனிதர்களைக் கொல்ல... 0.02
நொடி மட்டுமே அந்தச் சிறு
அணுகுண்டுக்குத் தேவைப்பட்டது!
இந்த அணுகுண்டை உருவாக்கிய
மனோசக்தி இதைவிட
வேகமானது. மிகக்
சூட்சுமமானது.
ஒரு விபரீதம்...
பயன்படுத்தப்படாவிட்டால்
அணுகுண்டு சும்மாயிருக்கும்.
ஆனால்,
மனோசக்தி பயன்படாவிட்டால்
அது எதிர்மறை சக்தியாகிவிடும்.
மந்த மனம் தரும்
உபாதைகள்... உடல் எனும்
உலகில், துக்கம் எனும்
அணுகுண்டுகளைத் தொடர்ந்து
பொழிந்தபடியே இருக்கும்.
மனம் கூட! இல்லை
மனதைப் பயன்படுத்து.
மந்தமாய் அது கிடக்க
என்றும்அனுமதியாதே!

  • மாணவனின் படைப்பாற்றலைக்கூட மட்டந்தட்டிப் பார்த்த முனைவர் போலவே... எல்லோரையும் எல்லாவற்றையும் மட்டந்தட்டும் குறைகாணும் முட்டாள்தனம் கண்டுபிடிக்கப்பட வேண்டும். கரைக்கப்பட வேண்டும்.
Swami Vivekananda

“என்ன இந்தத் தலைப்பே ரொம்ப நெகடிவ் ஆக இருக்கிறதே?” என்று நீங்கள் எண்ணுகிறீர்களா...? என்ன செய்ய... சில நேரங்களில் உண்மையைப் போட்டு உடைக்க வேண்டிதான் இருக்கிறது. நம்மில் பலரின் மனதில் வெகுநாளாக இருக்கும் ஒரு கட்டியைத் தொடப்போகிறேன். சிலருக்கு வலிக்கலாம்...

வேறு வழியில்லை. அந்தக் கட்டிக்கு
இப்போதாவது மருத்துவம் செய்வோம்.
இல்லையென்றால் நாளுக்கு நாள் அது
புரையோடிக் கொண்டேயிருக்கும்.

இந்தக் கட்டுரை எனக்காகத்தான்
எழுதப்பட்டிருக்குமோ?” என்ற எண்ணம்
வருபவர்கள் தொடர்ந்து படியுங்கள்.

‘இந்தக் கட்டுரை எனக்கு
எழுதப்பட்டதல்ல...’ என்று தோன்றினால், ஒரு
விஷயத்தைத் தெளிவாகத் தெரிந்து
கொள்ளுங்கள். இந்தக் கட்டுரை நிச்சயம்
உங்களுக்குத்தான்.

★ வாழ்க்கையில் ஆக்கப்பூர்வமாக
எதையும் செய்யாமல் சோம்பேறியாக
இருப்பது நிச்சயம் முட்டாள்தனம்.

★ அதற்காக ஓய்வே இல்லாமல்
உழைத்துக்கொண்டே, சம்பாதித்துக்
கொண்டே இருப்பது புத்தசாலித்தனமல்ல.

வாழ்க்கை என்பது வாழ்வதற்கே ! சம்பாதித்துச் சம்பாதித்து மடிவதற்கல்ல.

இந்த வாசகத்திற்கேற்ற ஒரு மருத்துவரின் கதை.

Dr. மூர்க் முகுந்த் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மிகப் பிரபலமான அறுவை சிகிச்சை நிபுணர். மருத்துவக் கல்லூரியின் H.O.D. மாநகரத்தின் நடுவில் நாகரிகமாகக் கட்டப்பட்ட மருத்துவமனை ஒன்று இவருக்குச் சொந்தமானது.

மூர்க் முகுந்தின் P.A., "எங்க டாக்டர் மெடிக்கல் அஸோஸியேஷனில் மிக முக்கிய பொறுப்பு வகிப்பவர். வாரத்தில் இரண்டு நாள் மற்ற ஊர்களில் கான்ஃபிரன்ஸ், மருத்துவமுகாம், விஸிட்டீங் என்று சுற்றிக்கொண்டே இருப்பார்.

இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வெளிநாடு சென்று வருபவர். இது இல்லாமல் அவர் செய்யும் பிஸினஸ்... அவருடைய எஸ்டேட்.." என்று Dr. மூர்க் முகுந்தின் பெருமையை அடுக்கிக்கொண்டே போனார்.

இதைக் கேட்ட அடுத்த கணம் எனக்கு விவேகானந்தரின் நினைவுதான் வந்தது. அமெரிக்காவில் விவேகானந்தரை ஒரு முறை அமெரிக்காவின் அதிநவீன வளர்ச்சியைக் காண்பிப்பதற்காக அமெரிக்காவின் பல முக்கியமான இடங்களுக்கும் கேளிக்கை இடங்களுக்கும் அழைத்துச் சென்றார்கள்.

விவேகானந்தர் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, ‘என்ன மாதிரி பாராட்டப் போகிறார்' என்று அமெரிக்கர்கள் காத்துக்கொண்டிருந்தார்கள்.

விவேகானந்தர், "இவ்வளவு கேளிக்கை அம்சங்கள் மற்றும் பொழும்போக்கு அமைப்புகளை நீங்கள் உருவாக்கியிருப்பதையும் அதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருவதையும் பார்க்கும் போது ஒரு விஷயம் தெளிவாகப் புரிகிறது.

நீங்கள் எந்த அளவுக்கு மனக்கஷ்டத்திலும் துக்கத்திலும் இருக்கிறீர்கள்" என்று அமெரிக்கர்களின் அவலநிலையைப் புட்டு வைத்தார்.

அமெரிக்கர்களுக்கு ஒரே திகைப்பு...

விவேகானந்தர் தொடர்ந்து, "மக்கள் மனக் கஷ்டத்தாலும், துக்கத்தாலும் பீடிக்கப்படாமல் ஆனந்தமாக இருந்தால், இங்கே ஏன் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள்?

கு
றை

மற்றவரின் குறைகளைச்
சரியாய் சொல்பவர், தவறாய்கூடக்
தங்களின் குறைகளைக்
கண்டுபிடிப்பதில்லை.
- உண்மை I

அவர்களுடைய வீடே சொர்க்கமாக இருக்காதா???" என்று கேட்டார்.

இதே கதைகள் Dr. மூர்க் முகுந்தனின் விஷயத்திலும்.

அமெரிக்கர்களின் பொழுதுபோக்கு அம்சங்கள் அவர்களின் ஆனந்தமில்லாத வாழ்வை மறக்கடிப்பதற்காக உருவாக்கப்பட்ட வர்ணப் பூச்சு.

மூர்க்முகுந்தின் பரபரப்பான வாழ்க்கை அவரது சஞ்சலத்தையும் ஆழமற்ற வாழ்க்கையையும் மறைத்து, அவரை ஒரு சாதனையாளராக மட்டும் உலகுக்குக் காண்பிக்கும் வர்ணப்பூச்சு மட்டுமே.

மருத்துவரின் P.A விடம் "அடுத்த பிறவியில் நீங்கள் உங்களுடைய டாக்டர் போல வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா?" என்று கேட்டேன்.

"ஓஹோ... அப்படியா... அவ்வளவு பெரிய மருத்துவரா உங்க Dr. மூர்க் முகுந்த்!" என்ற பாணியில் பதில் வருவமென்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த P.A. இந்தக் கேள்விக்குக் கொஞ்சம் தடுமாறினார்.

கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு, "ம்ஹம்... என்னால் முடியாது, எனக்கு வேண்டாம் அப்படி ஒரு வாழ்க்கை" என்றார்.

"என்ன இப்படிச் சொல்கிறீர்கள். அவர் எவ்வளவு பெரிய மருத்துவர்எவ்வளவு சொத்து படைத்தவர்! அவர் நினைத்தால் நினைத்ததை வாங்க முடியும், சாதிக்க முடியும்! இவ்வளவு அருமையான வாழ்க்கையை வேண்டாம் என்கிறீர்களே... ஏன்?" என்று கேட்டேன்.

"இல்லை சாமி, உங்களுக்குத தெரியாது...

அவரை பற்றி நீங்கள் சொன்னதெல்லாம் உண்மைதான். அது அவரது வெளி வாழ்க்கை மட்டுமே. நிஜ வாழ்க்கையில் எல்லாமே தலைகீழ்" என்றார் பி.ஏ.

"என்ன சொல்கிறீர்கள்...?"

"ஆமாம் ...

பு
ரி
யா
த
த
ன
ம்

தான் முட்டாள் என்ற உண்மை தெரியாததால் புத்திசாலிகள் போல் வாழ்கிறார்கள் பல முட்டாள்கள்.

- உண்மை II

அவர் ரொம்பக் கண்டிப்பானவர். காலையில் சரியாக ஏழு மணிக்கு மருத்துவமனைக்கு நோயாளிகளைப் பார்க்க வந்துவிடுவார். எல்லோரையும் பார்த்து விட்டு திரும்ப வீட்டுக்கு ஒன்பது மணிக்குத்தான் செல்வார்.

அரை மணி நேரம் வீட்டில் தங்கமாட்டார். உடனே செல்போனை கையில் எடுத்துக் கொண்டு வியாபாரம், எஸ்டேட் என்று செல்போனோடு நேரத்தைச் செலவிட ஆரம்பத்து விடுவார்.

Nithyananda

நாம் பெருமையாய்ப் பார்க்கும்
பல விஷயங்களை, நமக்குத்
தருவதாய் இறைவன்
சொன்னால், அவர் பேச்சு
முடியும் முன்பே அதை
வேண்டாமென்போம்.
அது பார்க்க ரசிக்க மட்டுமே
வாழ அல்ல என்போம்.

வாழ்க்கை ரகசியம்

பின்பு பத்து மணிக்கு
புறநோயாளிகளைச் பார்க்க ஆரம்பித்தால்,
மதியம் இரண்டு மணி அல்லது மூன்று மணி
ஆகிவிடும். (இதில் வாரம் இரண்டு நாள்
மருத்துவக் கல்லூரிக்கு வேறு சென்றாக
வேண்டும்).

மதியம் மூன்று மணிக்கு வீட்டுக்குப் போய் அவசர அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு, உடனே படுத்துக்கொள்வார். அவருக்கு உயர் ரத்த அழுத்த நீரிழிவு நோய் B.P. (டையபடீஸ்) இருப்பதால் படுத்த உடன் எழுத்திருக்க முடியாது.

இருந்தும் என்ன செய்வது, கடமை அழைப்பதால் நாலரை மணிக்குக் கஷ்டப்பட்டு எழுந்து ஐந்து மணிக்கு மீண்டும் மருத்துவமனைக்கு வந்தால்... அறுவை சிகிச்சை எல்லாம் முடித்துவிட்டு வீடு திரும்ப, பத்து பதினோரு மணி ஆகிவிடும். சில நாள் பன்னிரெண்டுமணி கூட ஆகிவிடும்.

வீடு சென்றதும் சாப்பிட்டுவிட்டு
உடனே தூங்கச் செல்வதற்குத்தான் அவருக்கு
நேரம் சரியாக இருக்கும்.

திரும்ப காலை ஆறு மணி...

என்ன வாழ்க்கை இது.... ! கடந்த
முப்பது வருடமாக இதே மாதிரிதான்
அவருடைய வாழ்க்கை போகிறது.

மனைவியோடு உட்கார்ந்து அன்பாகப் பேச ஒரு மணிநேரம்கூட முழுமையாகக் கிடைப்பதில்லை.

அவருடைய பிள்ளை தந்தையோடு பேச விரும்பினால் மருத்துவமனைக்கு வந்து நோயாளிகளுக்கிடையே பேசிவிட்டுப் போக வேண்டும்.

இரண்டு, மூன்று வருடத்திற்கு ஒரு முறை நான்கைந்து நாட்கள் அவர்கள் செல்லும் வெளியூர் பயணம்தான், அவர் தன் குடும்பத்தோடு வாழ்ந்த விரல் விட்டு என்னும் நாட்கள்.

குடும்ப வாழ்க்கையில் அவருக்கோ,
அவர் மனைவிக்கோ, வெளிநாட்டில் படிக்கும்
அவரது பிள்ளைகளுக்கோ திருப்தியே
இல்லை.

திருப்தியில்லாமல் வெறும்
பணத்தையும் புகழையும் சம்பாதித்து
அடுக்கிக்கொண்டே போவதால் யாருக்கு
என்ன பயன்?

நான் என் குடும்பத்தாரோடு
சந்தோஷமான, சுமுகமான வாழ்க்கை
வாழவே விரும்பறேன்.

அவர்போல் தொழிலோடும்
பணத்தோடும் குடும்பம் நடத்த
விரும்பவில்லை.

அடுத்த பிறவியில் டாக்டர் போல
எனக்கு ஒரு வாழ்க்கை கிடைக்குமென்றால்,
நான் இப்போது வாழும் வாழ்க்கையைவிட,
பல மடங்கு நிம்மதியான, கஷ்டம் குறைந்த
இப்போது வாழும் வாழ்க்கையே மேல்”
என்று அவரது டாக்டர் மேல் தான்
கொண்டிருந்த பரிதாப உணர்வைக்
கொட்டித் தீர்த்துவிட்டார்.

“அவர் வாழும் வாழ்க்கை புத்திசாலித் தனமில்லாதது, வசந்தமில்லாதது என்பதை உங்களால் முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறதா?” என்று கேட்டேன்.

“ம்ம்... முழுமையாகப் புரிந்து கொள்ள முடிகிறது” என்றார்.

portrait of Sadhguru with text

நதி உன் வாய் தேடி வந்து
பாயாது.
தாகம் தீர்க்க நீதான் குனிந்து
குடிக்க வேண்டும். வாழ்க்கை
உன்னுடைய எல்லாத்
தாகங்களையும் தீர்க்க நிச்சயம்
போதுமானதாக உள்ளது.
அது, நீ குனியும் அளவைப்
பொறுத்து தாகம் தீர்க்கும்.
எட்டும் தூரத்திலுள்ள
எல்லையில்லா ஆனந்தத்தை
எட்டிப்பிடி, அது...
எட்டுத்திசைகளில் இருந்தும்
எல்லாச் சௌகரியங்களையும்
ஏகமாய் வர வைக்கும்.

"நீங்கள் ஒரு பார்வையாளராக இருப்பதால் Dr. மூர்க் முகுந்தின் கஷ்டங்கள் உங்களுக்கு நன்றாகத் தெரிகிறது.உங்களுக்குத் தெரியும் அளவுக்கு டாக்டருக்கு அவரைப் பற்றித் தெரியுமா?" என்று கேட்டேன்.

"நிச்சயமாகத் தெரியாது" என்று அழுத்தமாகக் கூறினார்.

"டாக்டருக்கே அவரைப் பற்றித் தெரியாத போது...

உங்களுக்கு மட்டும் உங்களைப் பற்றி முழுமையாக எப்படித் தெரியும்?" என்று கேட்டேன்.

இந்த கேள்வியில் மனுஷன் கொஞ்சம் ஆடிவிட்டார்.

"நன்றாக உங்களை நீங்களே ஆராயுங்கள்" என்றேன்.

சில நிமிடங்கள் கழித்து, வேர்த்து வடியும் முகத்தோடு, "ஆமாம், என்னைப் பற்றி எனக்கு முழுமையாகத் தெரியவில்லைதான்' என்றார் பரிதாபமாக.

மேலும், "இவ்வளவு நாட்களாக என்னைவிட அதிகமாகக் கஷ்டப்படுபவர்களைப் பார்த்து - நான் நல்லா இருப்பதாகவும், புFoundation ஒரு வாழ்க்கை வாழ்வதாகவும் நம்பிக் கொண்டிருந்திருக்கிறேன்" என்ற உண்மையை ஒப்புக் கொண்டு தன்னைத் திருத்திக் கொள்ள ஆரம்பித்தார்.

இந்த பி.ஏ. போல - பல அன்பர்களுக்கு அடுத்தவர்களுடைய முட்டாள்தனங்கள் பல சமயம் நன்றாகத் தெரிகிறது. ஆனால், தங்களைப் பற்றிய உண்மைகள் மட்டும் தங்களுக்குத் தெரியவில்லை.

ஞானம் அடையாத வரை ஏதாவது ஒரு முட்டாள்தனம் மனிதரை ஒட்டிக்கொண்டே இருக்கும்.

ஹஸிட் ஞானி ஜு-மல்கி, "நாம் ஒவ்வொருவரிடமும் கற்ற கல்வி ரீதியாக கலாசார ரீதியாக, சமுதாய ரீதியாக, மத ரீதியாக புத்திசாலித்தனங்கள் ஒட்டிக் கொண்டிருந்தாலும்,

நம்மிடம் பக்குவப்படாத பகுதிகள் நிறைய இருக்கத்தான் செய்கின்றன" என்றார்.

புரி யும்இருளைச் சபிப்பதைவிடச் ஒரு சிறு விளக்கேற்றுவது சிறந்தது. - கன்பூசியஸ் • இருள் - முட்டாள்தனம் ஒளி - புத்திசாலித்தனம்

வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்த திருப்தி நம்மிடமில்லை என்றாலே நன்றாக புரிந்துகொள்ளலாம் -இறைவன் நமக்குக் கொடுத்த புத்திசாலித்தனம் என்னும் சக்தியை நாம் பயன்படுத்தவில்லை என்று.

ஒவ்வொருவருக்கும் மற்றவர்களின் குறைகள் பளிச்சென்று தெரிகிறது.

ஆனால் அவரவரின் குறைகள் மங்கலாகக்கூடத் தெரிவதில்லை.

திருப்தியை வீணடிக்கச் செய்யும் முட்டாள்தனங்கள் எங்கு ஒளிந்திருக்கின்றன என ஆராயுங்கள்.

கலந்தாலோசியுங்கள்.

ஒருவேளை உங்களைப் போலவே உங்கள் உறவுகளும் மற்றவர்களின் குறைகளைச் சரியாய் சுட்டிக்காட்டும் பு MANAGERசாலிகளாக இருக்கலாம்.

வாழ்வின் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் முழுமையாக அனுபவிக்க, இயல்பாக வாழ, இறைவன் கொடுத்த புத்தி என்னும் சக்தியை முழுமையாகப் பயன்படுத்த ஆரம்பியுங்கள்.

புத்திசாலித்தனம் பொங்க ஆரம்பித்துவிடும்.

வாழ்ந்த திருப்தி கிடைக்குமளவுக்கு அனுபவித்து வாழ ஆரம்பிப்பீர்கள்.

அர்த்தமுள்ள சம்பவம்...

பெற்றோர் பிள்ளையிடம்...

“உன்னை விட சிறியவன் டாம். ஆனால்,
உன்னை விட அதிக மதிப்பெண்களையே
டாம் தொடர்ந்து வாங்குவது எப்படி?”

எனக் கேட்டதற்கு,

சிறுவன், “டாமின் பெற்றோர் புத்திசாலிகள்” என்றான்.

நாம் நம்புமளவுக்கு நாம் புத்திசாலிகளா? விடை காணுங்கள்!

சந்தேகப்படுங்கள்... தவறுகள் உங்களுக்கும் தெரியட்டும்!

தியான உளிகள்

அடுத்தவர்கள் உண்மை பேசுவதாக நாம் நம்புவதே இல்லை. காரணம், நாம் உண்மை பேசுவதே இல்லை. நம்மைப் போலவே எல்லோரும் இருப்பதாக நம்புவதால், அவர்கள் பெரும்பாலும் பொய்களை உண்மை போல் பேசுவதாக நம்புகிறோம்.

நீங்கள் எல்லோரையும் சந்தேகிக்கிறீர்கள். எப்போதும் சந்தேகக் கண்ணோடு பார்க்கிறீர்கள். ஆனால் உங்களை ஒருபோதும் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதில்லை.

அப்படி ஒருமுறை செய்திருந்தால்கூட அடுத்தவரின் குறையைக் கண்டுபிடிப்பதை விட, இன்னும் துல்லியமாய் உங்களைப் பற்றிக் கண்டுபிடித்திருப்பீர்கள்.

நாம் என்னதான் விளக்கமாக எடுத்துச் சொன்னாலும் அடுத்தவர்கள் அவர்களின் குறைகளை திருத்திக் கொள்ளவோ, கேட்டுக்கொள்ளவோ தயாராக இல்லை.

தாங்கள் புத்திசாலிகள் என்றும், தாங்கள் மிகவும் சரியான நபர் என்றும்தான் அந்த நபர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

திருந்த கிடைக்கும் வாய்ப்பைத் தவற விட்டுக் கொண்டே இருக்கிறார்கள். பரிதாபம்!

இதேபோல்தானே நீங்களும் தொடர்ந்து திருந்த கிடைக்கும் வாய்ப்பைத் தவறவிட்டுக் கொண்டேயிருப்பீர்கள்?

> உள்
> மனதுக்கு
> மணி
> கட்டுவது
> யார்?

ஏதோ சில நேரங்களில்

நம்மைப் பற்றி ஆராயும்போது,

சில குறைகளைக் கண்டுபிடித்ததும்

அவை திருத்தம் நோக்கிச் செல்லாமல், வருத்தம் நோக்கியே இழுத்துச் செல்கின்றன. இது தேவையற்றது.

எனவே சந்தேகப்படுங்கள்.

உங்களின் குணச்சந்துக்கள் வெளிச்சத்துக்கு வரட்டும்.

அடுத்தவருக்கு மட்டுமே தெரிந்திருந்த உங்களின் குறைகள், இனி உங்களுக்குத் தெரிய ஆரம்பிக்கட்டும்.

அடுத்தவர்களின்மேல் குறைந்தது ஒரு நூலிழை அளவாவது சந்தேகம் எப்போதும் மனிதருக்குள்ளிருந்து வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும்.

சந்தேக அம்பை உங்களை நோக்கித் திருப்புங்கள்.

சந்தேகம் பிறக்கும் போதெல்லாம் அந்தச் சந்தேகக் காலங்கள் தியான காலங்களாகட்டும்!

உன்னை
சந்தேகி...
சுகதேசி
ஆகி வாழும்
குண
வழி
தெரியும்!