KAILASA Library/கதவைத் திற ... காற்று வரட்டும்!/வெட்டிப்பேச்சுSign in
கதவைத் திற ... காற்று வரட்டும்!

வெட்டிப்பேச்சு

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

★ ஏன் பேசிக்கொண்டிருக்கிறோம்?
என்ன பேச நினைத்திருந்தோம்?
எப்படிப் பேசிக்கொண்டிருக்கிறோம்?

-என்ற கேள்விகளை பேசிக்கொண்டிருப்பவர்களிடம் கேட்டால், பலரால் பதில் கூற முடியாது. இப்படி முடியாமல் இருப்பவர்களால்தான் சாதாரண பேச்சுவெட்டிப் பேச்சாக மாறுகிறது.

★ வெட்டிப்பேச்சின் இயல்பே ஒரு சூழ்நிலையில் அது உறவை வெட்டும் பேச்சாக மாறும் தன்மை பெற்றுவிடும்! இது கவலைகளுக்கான காரணங்களில் ஒன்று.

★ உரையாடலில் வெட்டிப்பேச்சை அனுமதிப்பது “பிரேக்” இல்லாத காரை நகருக்குள் ஓட்ட முயற்சிப்பது போன்றது.

★ வெட்டிப்பேச்சில் என்ன பேசுகிறோம் என்ற சுயதெளிவு இருக்காது. பேச்சு, கட்டுப்பாடற்று மனதில் இஷ்டப்படி வந்து கொண்டே இருக்கும். இது பேசுபவர் கேட்பவர் இருவரையும் பாதிக்கும்.

“அக்கா, அந்த எதிர் வீட்டுக்காரி இருக்காளே...”

“சச்சின் என்னமா விளையாடறான்யா...”

“அந்த எம்.எல்.ஏ.வோட பொண்டாட்டி...”

“அந்த ஹீரோ யாரையோ...”

“நேத்து சீரியல்ல...”

“அந்தச் சாமியார் ஒரு...”

...இப்படிப் பைசா பிரயோஜனம் இல்லாத விஷயம் பேசுவதில் எல்லோருக்கும் ஏதோ ஒரு குஷி! சிலருக்கு இந்த மாதிரி வெட்டிப்பேச்சு பேசுவதில் இஷ்டமில்லை. என்றாலும், ‘என்ன செய்வது? மற்றவர்கள் பேசும்போது நாம் மட்டும் வாயை மூடிக் கொண்டு இருந்தால் என்னைத் தப்பாக நினைக்கமாட்டார்களா?’ என்று சப்பை கட்டுவார்கள்.

அரசியல் - விளையாட்டு - திரைப்படம்...

வெட்டிப்பேச்சு மகாராஜாக்கள் இந்த மூன்று விஷயங்களைத்தான் மீண்டும் மீண்டும் பேசுகிறார்கள். போர் அடிக்கிற போது கொஞ்சம் ஆன்மீகத்தையும் கொஞ்சம் அறிவியலையும் கலந்து பேசிவிடுகிறார்கள்.

வெட்டிப்பேச்சு மகாராணிகளின் சப்ஜெக்ட்டுகள் வேறு. தன்னைச் சுற்றி இருப்பவர்கள் பற்றிப் புறம் பேசுவது, டி.வி., சினிமாக்கள் பற்றி அலசி ஆராய்வது, புடவை, நகைநட்டு சமாசாரங்களைப் பேசித் தீர்ப்பதுதான், அவர்கள் வேலை. இந்த விஷயங்கள் பற்றிப் பேசிப்போரடித்து விட்டால் பக்தியையும் சமையலையும் பற்றிப் பேச ஆரம்பித்து விடுவார்கள்.

இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கையில், இதுபோன்ற வெட்டிப்பேச்சுகள் ஒரு பொழுதுபோக்கு அம்சமாக இருக்கிறவரை சரி. ஆனால் பொழுதையே போக்கும் அம்சமாகும் போதுதான் விபரீதமான விஷயமாக மாறிவிடுகின்றன.

இந்தியாவில் மனிதசக்தி அதிகமாக இருந்தும் குறைவாகவே பயன்படுத்தப் படுகிறது. வெட்டிப்பேச்சில் அழியும் நேரம் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தப்பட்டால், இந்தியா தானாகவே வல்லரசாக மாறிவிடும்.

வெட்டிப் பேச்சில் ஆரம்பித்து வெட்டுகுத்து வரை சென்ற எத்தனையோ வரலாற்றுக் கொடுமைகள் நமக்குத் தெரிந்த விஷயங்கள்தான்!

விவாதம், தர்க்கம், வாக்குவாதம், வாய்ச்சண்டை, மனஸ்தாபம், சண்டை, சச்சரவு, வெறுப்பு, பிரிவு என்று, சாதாரண பேச்சில் ஆரம்பித்து, பிரிவு வரை போவது, ஒரு தரப்பின் தெளிவின்மையையும் மறுதரப்பின் பொறுமையின்மையையும் படம்பிடித்துக் காட்டுகிறது.

வெட்டிப்பேச்சைக் குறைக்க முடியாதா?. முடியாது. உடனே முடியாது. நாம் எப்போதும் பேசிக் கொண்டே இருக்கிறோம். சில நேரம் வெளியில், பெரும்பாலான நேரம் மனதிற்குள்ளேயே பேசுகிறோம். ஆங்கிலத்தில் இதை ‘inner chattering’ என்பார்கள்.

Swami Vivekananda

வெட்டிப் பேச்சு -
வெட்டி எண்ணங்கள்
உங்கள் மனதை
வெட்டிக்
கொண்டிருக்கின்றன
என்பதற்கான
ஆதாரம்.

தனிமையில் நீங்கள் யாருடனும் பேசாத வேளையில், உங்களுக்கு நீங்களே பேச ஆரம்பிக்கிறீர்கள். தூங்கிய பிறகு கனவில் பேச ஆரம்பிக்கிறீர்கள். இப்படி இருபத்து நான்கு மணி நேரமும் நீங்கள் பேசிக் கொண்டே இருப்பதால்தான் உங்களால் நிம்மதியாக இருக்க முடிவதில்லை.

ஒரு நிமிடம், இரண்டு நிமிடம்
ஓடினால், ஒன்றும் தெரியாது. ஐந்து
நிமிடங்கள் ஓடினால், மூச்சு வாங்கும்.
ஓடிக்கொண்டே இருந்தால், உடம்பு
என்னவாகும்? அதேபோல்தான் மனம் பேசிக்
கொண்டே இருந்தாலும் தொல்லைதான்
ஏற்படும்.

ஓட்டமாய் ஓடும் மனக் குதிரையையும்,
ஓயாமல், நடக்கும் மனத்தின்
பட்டிமன்றத்தையும் ஒருவழிக்குக்
கொண்டுவராத வரை, நிம்மதி, ஆனந்தம்,
நோயற்ற வாழ்வு என்ற பேச்சுக்கே
இடமில்லை.

ஜென் ஞானி ஒருவர், ஊரின் ஒதுக்குப்புறமான பகுதியில் வாழ்ந்து வந்தார். "அவர் பெரிய ஞானி என்றும் எல்லோருடைய பிரச்சனைகளுக்கும் தெளிவான ஆறுதலும் விளக்கமும் அளிக்கிறார் " என்றும் ஒரு பேராசிரியருக்குச் செய்தி கிடைத்தது.

பேராசிரியரும் அவரைப் பார்க்கச் சென்றார். நிம்மதி பற்றியும் பேரானந்தத்தைப் பற்றியும் தனக்குச் சொல்லித் தர வேண்டும் என்றார். பேராசிரியர் முன்னிலையில் ஜென் ஞானி செய்த செயல் குழப்பம் தருவதாகவே இருந்தது.

தனக்கு முன்பிருந்த இரண்டு டம்ளரில் நீர் நிரம்ப இருந்தது. இன்னொன்று காலியாக இருந்தது. காலியான டம்ளரை நிரப்பி விட்டு, நீர் நிறைந்த டம்ளரில் மீண்டும் தண்ணீரை ஊற்றினார் ஞானி. அது நிரம்பி வழிந்தது.

“ஞானியே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?" என்று கேட்டார் பேராசிரியர்.

“ஏற்கெனவே நிறைந்திருக்கும் டம்ளரில் எப்படி ஒரு சொட்டுத் தண்ணீர்கூட ஊற்ற முடியாதோ, அதுபோல ஏற்கெனவே ஏகப்பட்ட விஷயங்களைப் போட்டு உங்கள் மனதை நிரப்பி வைத்திருக்கிறீர்கள். அவற்றை நீங்கள் உங்கள் மனத்திலிருந்து காலி செய்யாதவரை, நிம்மதி பற்றியும் பேரானந்தம் பற்றியும் உங்களுக்குச் சொல்லித் தர முடியாது” என்றார் ஞானி.

'அவர் சொன்னார், இவர் சொன்னார்' என்று, பலவிதமான விஷயங்களை நாம் மனதில் போட்டு அடைத்து வைத்திருக்கிறோம். மதங்களின் பெயரால், இயக்கங்களின் பெயரால் நீங்கள் தெரிந்து வைத்திருக்கிற விஷயங்களைத் தவிர்த்து, வேறெதுவும் நீங்கள் பேச முடியாது. இவற்றைப் பொறுத்துதான் உங்கள் 'inner chattering' (மன உளறல்) அமையும்.

எனவே முதல் வேலையாக மனக் குப்பைத்தொட்டியில் தேவையில்லாமல் சேர்ந்து, துர்நாற்றம் அடிக்கும் குப்பைக்கூளங்களை எடுத்து வெளியே எறியுங்கள். முக்கியமான விஷயம், மீண்டும் குப்பைகள் சேராத படிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள்!

அகத்தின் (உணர்வின்) அழகு முகத்தில் தெரியும். மனதின் (எண்ணத்தின்) அழகு பேச்சில் தெரியும்.

தேவையான விஷயங்கள் மட்டுமே உங்கள் மன வங்கியில் சேரும்போது, உங்களிடமிருந்து வெட்டிச் செயலோ, வெட்டிப்பேச்சோ வெளிப்பட வாய்ப்பே இல்லை. உங்கள் வாழ்க்கையும் ஆனந்தம் நிறைந்ததாக இருக்கும்.

மனதைச் சுத்தப்படுத்துங்கள் - பேச்சு அழகாகும். உங்களை வெறுத்தவர்கள் விரும்ப ஆரம்பிப்பார்கள். பேச்சை எவ்வளவு சீக்கிரம் அழகாக்க முடியுமோ. அவ்வளவு சீக்கிரம் அழகாக்குங்கள்!

பாவெட்டிப்பேச்சில் என்ன பேசுகிறோம் என்ற சுயதெளிவு இருக்காது.
திபேச்சு, கட்டுப்பாடற்று மனதில் இஷ்டப்படி வந்து கொண்டே
ப்இருக்கும். இது பேசுபவர். கேட்பவர் இருவரையும் பாதிக்கும்.
பு