கிளர்ந்தெழுபவரா நீங்கள்?
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
புதிய சேன்ட்ரோ கார் ஒன்றை வாங்கியிருந்தார் நிட்டி. அக்கம்பக்கத்தாரை பார்த்து ஏதோவொரு மோகத்தில் கார் வாங்கிவிட்டார். ஆனால், கார் ஓட்டுவதைப் பற்றி நிட்டிக்கு முழுமையாகத் தெரியாது.
ஏற்றத்தில் நின்றிருந்த காரில் அமர்ந்து ஏதேதோ நிட்டி முயற்சி செய்து கொண்டிருந்தபோது, காரின் பிரேக் ரிலீசாகி, இறக்கம் நோக்கி கார் ஓட... எதேச்சையாக கியரிலும் கிளட்சிலும் கால், கை பட, கார் ஸ்டார்ட் ஆகிவிட்டது.
கார் ஓடுவதை குஷியாகப் பார்த்த நிட்டி ஸ்டியரிங்கைப் பிடித்து ஆட்ட, அவர் திருப்பும் திசையில் கார் திரும்பியது.
காலியாக இருந்த ஹைவேயில் அதே குஷியோடு கார் ஓட்டிக்கொண்டு சென்ற நிட்டிக்கு திடீரென ஒரு சந்தேகம் வந்தது. அது... எப்படிக் காரை நிறுத்துவது?
எவ்வளவு யோசித்தும் நிட்டிக்குத் தெரியவில்லை. நிட்டியைப் படபடப்பும் பயமும் பற்றிக்கொண்டது.
அதிகபட்சம் அவருடைய கட்டுப்பாட்டில் இருந்தது ஸ்டியரிங் மட்டுமே! அவருக்கு எதிரே தெரிந்த ஒரு புளியமரம் நோக்கி வண்டியைத் திருப்பினார். பெரிய குலுக்கலோடு வண்டி மோதி நின்றது.
* இக்கதையில் நிட்டி காரை ஓட்டினாரா? இல்லை, கார் நிட்டியை ஓட்டியதா?
கிளர்ந்தெழுவதும் பொங்கியெழுவதும்
முழுக்க முழுக்க உங்களுடைய
கட்டுப்பாட்டில் இருந்தால் நீங்கள்
வாழ்கிறீர்கள் என்று அர்த்தம்.
இல்லாவிட்டால் கொந்தளிக்கும்
உணர்ச்சிகள் அவை வாழ, உங்களைக்
கருவியாகப் பயன்படுத்திக் கொள்கின்றன
என்று அர்த்தம்.

☞ படிக்க இது
வினோதமாயிருக்கிறதென
சொல்லி விட்டுவிடாதீர்கள்.
படித்ததை மனதில் பிடியுங்கள்.
அழ ஆராயுங்கள். பிடி விலகும்.
எந்த மனிதனும் தன் வாழ்வை
வாழ்வதேயில்லை.
அவ்வப்போது பொங்கியெழும்
உணர்ச்சிகள். கிளர்ச்சிகள்,
தளர்ச்சிகள்தாம்
வாழ்கின்றன.
அப்பாவி மனிதனின்
உடல், மனம், சக்தி, புத்தி
ஆகிய எல்லாவற்றையும் அவை
பயன்படுத்திக்கொள்கின்றன.
* கோபிப்பதும்
ஆசைப்படுவதும்
துக்கப்படுவதும்
பெரும்பாலும் நம் கையிலில்லை.
இப்படி நிகழ்வது ஏன்?
* ஒவ்வொரு மனிதரும்
ஒவ்வொரு விதமானவர்கள்.
தனியானவர்கள்.
இது நிகழ்வது எப்படி?
* தொடர்ந்து துன்புறுத்துபவர்கள்...
காரணமில்லாவிட்டாலும்
கவலைப்படுபவர்கள்...
தொட்டதுக்கும்
எரிச்சலடைபவர்கள்...
இப்படித் தொடர்வது எதனால்?
* ஏன்? எப்படி? எதனால்?
இந்த மூன்று கேள்விக்கும்
ஒரே பதில் - அதுதான் மனித
சுபாவம்!
பேயொன்று சுகமாய் உறங்கிக்கொண்டிருக்கிறது... நம் ஒவ்வொருவரின் மனதுக்குள்ளும்.
மனநல மருத்துவர்களின் ஆராய்ச்சி முடிவுப்படி நம் மனதின் பத்து சதவிகிதம் மட்டுமே நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது. நம்மால் பயன்படுத்தப்படுகிறது.
நம் மனதின் தொண்ணூறு சதவிகிதம் நம் கட்டுப்பாட்டில் இல்லை.
நம்முள் உறங்கும் பேய் என்றழைக்கப்படுவதின் கட்டுப்பாட்டில்தான் தொண்ணூறு சதவிகிதம் மனம் இயங்குகிறது.
உறங்கும் பேயின் சுபாவம், மனித சுபாவம்! மனித குணம்!
ஒருவர் மூர்க்கனாகவோ, மூடனாகவோ, கிளர்ச்சியாளனாகவோ இருப்பது இந்தச் சுபாவத்தைப் பொறுத்ததே.
காரணம்,
மனிதரைக் கட்டுப்படுத்துவது மனம்.
மனதைக் கட்டுப்படுத்துவது சுபாவம்.
> கல்லை
> மாணிக்கமாக்குவது
> அதிசயமல்ல.
> ம னி த னை
> மகானாாக்குவதே
> அதிசயம்
ஒரு சின்னக் கதை:
இரவு மாறுவேடத்தில் நகர்வலம் சென்ற இளவரசர் அப்போதுதான் முதல் முறையாக சேவற்போரைப் பார்த்தார்.
சேவற்போரை ரொம்ப ரசித்துப் பார்த்த இளவரசர் தனக்கென்று சொந்தமாக ஒரு போர்ச்சேவல் வேண்டும் என்றார்.
போர்ச்சேவல் பயிற்சியாளரை நியமித்து தனக்கென்று ஒரு சேவல் வாங்கி வளர்க்க ஆரம்பித்தார்.
| சு பா வ ம் | மனிதன் மகானாவது மனித சுபாவத்தில் அறுவை சிகிச்சை நிகழ்ந்தால் மட்டுமே சாத்தியம்! |
ஒரு வாரம் கழித்து பயிற்சியாளரிடம் சேவல் பற்றி இளவரசர் விசாரித்தார். "பக்கத்து வீட்டு சேவலின் கொக்கரிப்பு கேட்டாலே நம் சேவல் கிளர்ந்தெழுகிறது" என்றார்.
"அப்படியா!" என்று மிக ஆச்சரியமாகக் கேட்டார் இளவரசர்.
ஒரு மாதம் கழித்து பயிற்சியாளரிடம் இளவரசர் விசாரித்தார். "அடுத்த தெரு சேவல் கொக்கரித்தால் போதும், இங்கேயிருக்கும் நம் சேவல் கிளர்ந்தெழுகிறது. உடல் சிலிர்த்து சண்டைக்கு உடனே தயாராகி விடுகிறது" என்றார்.
"அப்படியா! அவ்வளவு பொங்கியெழுகிறதா
நம் சேவல்?" என்று ரொம்ப சந்தோஷமாகக்
கேட்டார் இளவரசர்.
இரண்டு மாதம் கழித்து பயிற்சியாளரிடம்
விசாரித்த போது, "நம் சேவலுக்கு இப்போது
கொக்கரிப்பு சத்தமெல்லாம் தேவையில்லை. ஒரு
சேவலை பார்த்த மாத்திரத்திலேயே
கிளர்ந்தெழுகிறது" என்றார்.
"அப்படியா!" என்று விழி விரிய
ஆச்சரியப்பட்ட இளவரசர், "நம் சேவலை
சேவற்போருக்கு அனுப்பலாமா?"
இதுவும் மனிதசுபாவமே!
போற்றப்படும் தங்களின்
குணங்களை வளர்த்துக்கொள்ளவே
மனிதர்கள் முனைகிறார்கள்.
திட்டு வாங்கினாலோ,
தூற்றப்பட்டாலோ
அதற்குப் பழிவாங்கவே
முனைகிறார்கள்.
விளைவு - அச்சோ... அது பாதகம்!
திட்டியவரை எதிர்ப்பதாகவும்
எண்ணிக்கொண்டு
தவறைத் திருத்திக்கொள்ளாத
கள்ளத்தனம் கற்கிறார்கள்.
தம்மையே பாழாக்குகிறார்கள்.
☞ நெருங்கியவரை நல்வழிப்படுத்த
போற்றலாமா?
திட்டலாமா?
இனி நீங்கள் முடிவுசெய்யுங்கள்
பயிற்சியாளர், "இல்லை. இன்னும் கொஞ்சம் பக்குவம் அடைய வேண்டியிருக்கிறது" என்றார்.
சில நாட்கள் கழித்து ஆள் அனுப்பி கேட்டார் இளவரசர், "சேவலை இப்போது சேவற்போருக்கு அனுப்பலாமா?" என்று கேட்டார்.
| சு | • சுதந்திரம் பெற்றாக வேண்டும் |
|---|---|
| த | எனும் எண்ணத்திலிருந்து சுதந்திரம் பெறுவதே |
| ந் | உண்மையான சுதந்திரம். |
| தி | |
| ர | • Freedom from the idea of freedom is that freedom |
| ம் |
"பொறுத்திருங்கள். இன்னும் சேவல் பக்குவம் பெறவில்லை. பக்குவம் பெற்றதும் நானே சொல்லியனுப்புகிறேன்" என்றார் பயிற்சியாளர்.
வேறொரு சேவலைப் பார்த்தாலே நம் சேவல் கிளர்ந்தெழுகிறது.
இதற்குமேல் அந்தச் சேவல் என்ன பக்குவத்தை புதிதாய் அடைய முடியும்? என்று யோசித்தவராயிருந்தார்இளவரசர்.
மூன்று மாதம் கழித்து....
"சேவல் பக்குவமடைந்துவிட்டது.
சேவலை சேவற் போருக்கு அனுப்பலாம்.
இளவரசர் வந்து பார்க்கலாம் என்று
சொல்" எனச் செய்தி அனுப்பினார் சேவல்
பயிற்சியாளர்.
சேவலை நேரில் பார்த்த இளவரசருக்கு ஆச்சரியமாக இருந்தது. காரணம் சேவல் அமைதியாக நெல் கொத்தி விளையாடிக் கொண்டிருந்தது. ஆனால், பக்கத்திலோ இன்னொரு சேவல் கொக்கரித்துக் கொண்டிருந்தது. "பார்த்தாலே கிளர்ந்தெழுவது இப்படி அமைதியாயிருக்கிறதே" என யோசித்தார் இளவரசன்.
"பயிற்சியாளரே! நீர் சொன்னதுக்கு
நேர்மாறாக இருக்கிறது இந்தச் சேவல். ஏன்
பொய் சொன்னீர்?" என்றார் இளவரசர்.
"நம் சேவலை சேவற்போரில் விட்டுப் பாருங்கள். அப்போது புரியும்?" என புதிராகச் சொன்னார் பயிற்சியாளர்.
இளவரசர் சேவற்போருக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார்.

தளர்ச்சியிலிருந்து கிளர்ச்சிக்கும், கிளர்ச்சியிலிருந்து சாந்தத்திற்கும் பயணிப்பதே முதிர்ச்சி! சந்தோஷம்!
படபடவெனச் சிறகடித்து தலையையும் உடலையும் உதறியவாறே அடி மண்ணிலிருந்து புழுதியைக் கிளப்பியது எதிரணிச் சேவல்.
இளவரசரின் சேவலோ மிக நிதானமாக எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு நின்று கொண்டிருந்தது.
“என்னய்யா! உம்மை நம்பி என் சேவல் என்று
சொல்லிவிட்டேன். இப்படி மந்தமா
நிற்கிறதே?” என்றார் இளவரசர்
கோபக்குரலில்.
“இளவரசே பொறும்! போர்க்களத்தின்
உச்சகட்ட பக்குவம் நிதானமாக அணுகுவதுதான்.
எதிரணி சேவல் தன் பயத்தால் தன்னைக்
காப்பாற்றவே கிளர்கிறது.
நம்பிக்கைகுறைவின் வெளிப்பாடுதான் கிளர்ச்சி.
கிளர்ந்தெழுவதைத் தாண்டியதுதான் நிதானம். நம் சேவல்...” என்று பயிற்சியாளர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே...
எதிரணிச் சேவல் சீற்றத்தோடு அருகில் பறந்து வரவும் அதுவரை முழுத்தயார் நிலையில் இருந்த இளவரசரின் சேவல் மிகச்சரியாக எதிரணிச் சேவலின் இறக்கையைத் தன் கால்விரலில் கட்டப்பட்ட கத்தியால் ஒரே பாய்ச்சலில் துண்டித்தெறியவும் சரியாக இருந்தது.
ஒரு கிளர்ச்சியாளர் நிச்சயமாக மூர்க்கன், மூடன் ஆகிய இருவரையும் விட உயர்ந்தவனே.
ஆனால் அது இறுதியல்ல.
பொங்கியெழுவது முதிர்ச்சியாகாது.
மனதுக்குப் பிடிக்காத எந்த ஒரு விஷயத்தைப் பார்த்ததும் அல்லது கேட்டதும்

அடுத்தவர்களின்
கோபத்தைக்கூட
பஸ்பமாக்கிடும்
சக்தி பெற்றது
நம் நிதானம்.
தளர்ச்சி, கிளர்ச்சி தாண்டி
வளர்ச்சி பெற்று நிதானம்
மலர்ச்சி பெறட்டும்.
கோபமோ, எரிச்சலோ வந்தால் நீங்களும் ஓர் கிளர்ச்சியாளரே. (ஏதோ பெரிய பெரிய புரட்சியில் ஈடுபடுபவர்கள் மாத்திரமே கிளர்ச்சியாளர்கள் அல்லர்.)
கிளர்ந்தெழுவது என்பது, மனம் அதன் மந்தத்தன்மையில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளம் மட்டுமே.
ஓய்வேயில்லாமல் யோசிப்பதும் பரபரப்பாக எப்போதும் ஏதாவது செய்து கொண்டிருப்பதும் தனக்குப் பிடிக்காத விஷயங்கள் தன்னைச் சுற்றி நிகழும் போது கிளர்ந்தெழுவதும் பொங்கியெழுவதும் நம் வளர்ச்சியின் நல்ல அடையாளங்களே.
பொங்கியெழுவதும் கிளர்ந்தெழுவதும் தாண்டப்பட வேண்டிய நிலைகள். கொண்டாடப்பட வேண்டிய நிலைகள் அல்ல. பெருமைப்பட வேண்டிய குணாதிசயங்கள் அல்ல.
நவீன மனிதர்களில் பெரும்பாலானவர்கள் கிளர்ந்தெழுபவர்களாகவே இருக்கிறார்கள்.
இந்தச் சம்பவம் ஒரு பேய் மாதிரி மனிதருக்குள் இருந்துகொண்டு மனிதனை உலுக்கிக் கொண்டே இருக்கும். உத்தரவிட்டுக் கொண்டே இருக்கும். மனிதர்களும் தான் உயிரோட்டம் உடையவர்களாய் இருப்பதால் நம்புவார்கள்.
கிளர்ந்தெழுதல், மனிதரை இளைப்பாற அனுமதிக்காது. போதும் என்ற திருப்தி மனிதரை நெருங்க விடாது பார்த்துக்கொள்ளும்.
மந்தத்தன்மைக்கும் கிளர்ந்தெழுவதற்கும் இடைப்பட்ட சுபாவம்தான்,
நிதானம்!
சாந்தம்!
நிம்மதி!
திருப்தி!
ஆனந்தம்!
Genius is nothing but a greater aptitude for patience.
- Benjamin Franklin. கிளர்ச்சி கடந்த முதிர்ச்சி, நிதானம்! நிதானம் கடந்த முதிர்ச்சி, சாந்தம்! -ஹிஸிட் தத்துவம். சாந்தம் தொடு... நிம்மதியும்! பிடிக்கும்? வேறு வழி இல்லாமல்... நீ ஆனந்தமாவாய்!
சா
ந்
த
ம்
இந்த உண்மை மனிதரால் உணரப்படாத வரை கிளர்ந்தெழுதல், வாழ்க்கையைக் காட்டாறு போல அதன் இஷ்டத்துக்கு அலைக்கழிக்கும்.
உண்மை தெரியாத மனிதரோ! "நான் சரியாகத்தானே வாழ்ந்தேன், கஷ்டப்பட்டுத்தானே உழைத்தேன்! ஏன் எனக்கு மட்டும் இவ்வளவு கஷ்டங்கள்?" என்று வாழ்வின் பிற்பகுதியில் நொந்து கொள்வார்கள்.
சாந்த குணத்தை வளர்த்துக்கொண்டால் இந்த எல்லாப் பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.
கிளர்ந்தெழும் சுபாவத்தைத் தணியச் செய்வது சாந்த குணத்தைப் பெறும் ஓர் எளிய வழி.
தியான சக்திக்கு, இந்தப் பேய் சுபாவத்தை எரித்துவிடும் சக்தியுண்டு.
கிளர்ச்சி முதிர்ச்சியல்ல.
கிளர்ச்சி வளர்ச்சியின் ஒரு பகுதி மட்டுமே.
கிளர்ச்சியைக் கடந்து சாந்தமடையுங்கள். வாழ்வு சந்தோஷமாகும்!
அர்த்தமுள்ள சம்பவம்...
ஞாயிறு வகுப்பில் போதகர் சொன்னார், "அன்பு செய்யுங்கள். வாயில்லா பிராணிக்குக்கூட ஊறு செய்யக்கூடாது. நீங்கள் அன்பு செய்த சம்பவங்களைச் சொல்லுங்கள்..."
ஜான் முறை வந்தபோது வேகமான குரலில், "ஒருமுறை ஒருவன் நாயை எட்டி உதைத்தான்... நான் அவனை எட்டி உதைத்தேன்" என தன் அன்பை நினைவுகூர்ந்தானாம்.
- கிளர்ச்சியாளனின் அன்பில்கூட அடாவடித்தனம் எட்டிப்பார்க்கும். இவர் சாந்தமாக வேண்டும்.
எதிராளி சொல்லும் போதனைகள்....

தியான துளிகள்
'வா பில் கிளிண்ட்டா!' என உங்களை அழைத்தால் உங்களுக்குக் கோபம் வராது.
உங்களை 'வா கிறுக்கா!' என்றால் கண்கள் சிவக்கக் கோபம் வெடிக்கும். அமெரிக்க அதிபர்' என உங்களை சொல்லும்போது வராத கோபம் கிறுக்கா எனச் சொல்லும்போது வருகிறது- ஏன்?
அதிபர் என்றால் சிரிப்பவர், கிறுக்கர் என்றதும் கிளர்ந்தெழுந்து கோபப்பட்டு கிறுக்குத்தனமாக எதையாவது செய்து கிறுக்கராகவே நடந்துகொண்டால்... எதிராளி சொன்னதில் கணிசமான அளவுக்கு உண்மை இருக்கிறது என்று அர்த்தம்.
| கோபம் வர வைக்கும் வார்த்தை... உள் அவலம். வெளிவரச் செய்யும் வார்த்தை வேத மந்திரம்! | | :--- |
எரிச்சல், கோபம் வந்த நிமிடங்களையும் வரப்போகும் நிமிடங்களையெல்லாம் கணக்கில்லெடுத்துக் கொள்ளுங்கள்.
அந்த நிமிடங்களில் எதிராளி சொன்ன வார்த்தைகளை மனதிற்குள் எடுத்துவந்து ஆராயுங்கள். காரணம் அந்த வார்த்தைகள் உங்களைப் பற்றிய கணிசமான அளவு உண்மைகளைப் பறைசாற்றுகின்றன.
அவை உங்களை திருத்திக்கொள்ள உதவும் பிரத்யேக சூத்திரங்கள்.
உங்களைப் பற்றி உங்களுக்கே போதிக்கும் இது போன்ற நிமிடங்களைத் தவறவிடாதீர்கள். எரிச்சல், கோபம் வரும் காலங்களை தியான ஆராய்ச்சிக் காலங்களாக மாற்றுங்கள்!
பாதகத்தைச் சாதகமாக்கும் துணிச்சல்
* பாதகத்தைப் பார்த்துத் தயங்கினால், வாழ்வின் பாதையே மங்கலாகி, வாழ்வே இருண்டுவிடும்.
* துணிச்சல் மனித இனத்துக்குக் கிடைத்த மாபெரும் பரிசுகளில் ஒன்று.
* தயக்கம், மயக்கம் என்ற இரண்டுமே துணிச்சலற்ற தன்மையின் வெளிப்பாடுகள்.
* இந்த நிமிடத்தில் உங்களிடம் இருக்கும் நிகழ்காலத்தில்தான், எதிர்காலத்தின் தலைவிதி எழுதப்படுகிறது.
* ஒரு சிறிய ஆலம் விதைக்குள் மறைந்திருக்கும் மிகப் பெரிய ஆலமரத்திற்கு இணையானது, உங்களுக்குள் இருக்கும் துணிச்சல்!
ஒருநாள் ஒரு விவசாயி, கும்மிருட்டான வேளையில் காட்டுப்பாதையைக் கடந்து செல்ல வேண்டிருந்தது. அங்கே இருந்த ஒரு ஞானி, விவசாயி பாதையைக் கடக்க உதவியாக, ஒரு லாந்தர் விளக்கைக் கொடுத்தார்.
"இங்கிருந்து நகரத்தை அடைய வேண்டும் என்றால், எத்தனை மைல்கள் நடக்க வேண்டும்?" என்று கேட்டார் விவசாயி.
"பத்து மைல்கள்" என்று பதில் சொன்னார் ஞானி.
"பத்து மைல்கள் நடக்க வேண்டும் என்கிறீர்கள். இந்த லாந்தர் விளக்கு பத்தடிக்குக்கூட பாதையைக் காட்டாது போலிருக்கிறதே" என்று புலம்பினார் விவசாயி. "புறப்பட்டுப் போ, உனக்கு எல்லாம் புலப்படும்" என்றார் ஞானி.
அந்த விவசாயி புறப்பட ஆரம்பித்த பிறகுதான் பத்தடி பத்தடியாக வெளிச்சம் தந்த லாந்தர் விளக்கு, பத்து மைல்களுக்கும் வெளிச்சம் தந்துகொண்டே இருக்கும் என்கிற உண்மை அவருக்கு உறைத்தது.
ஆயிரம் மைல் ஓட்டம்கூட ஒரு சின்ன அடியில்தான் தொடங்குகிறது என்று ஒரு சீனப் பழமொழி உண்டு.
பாதகங்களைச்
சாதகமாக
துணிச்சலோடு
மாற்றுகிறவர்களே
உலக வரலாற்றில்
உலா வருகிறார்கள்.
நீங்கள் எதிர்கொள்ளப்போவது எவ்வளவு பெரியதாக இருந்தாலும் கலக்கம் வேண்டாம். தீர்வு சிறியது. அரிய பிரச்சனைக்குத் தீர்வு காண்பது ஒவ்வொரு சிறிய சிறிய அணுகுமுறைகளின் தொகுப்பாகத்தான் இருக்கும்.
எனவே பிரச்சனைகளின் பூதாகாரத் தன்மையைப் பார்த்துக் கலங்க வேண்டிய அவசியமில்லை.
ஆனால், நாமோ பிரச்சனைகளை எதிர்கொள்கிறபோது, திக்குமுக்காடிப் போகிறோம். வெற்றி பெறுகிற மனிதர்கள் அப்படியல்ல. பிரச்சனை என்கிற கர்ப்பத்திற்குள் - தீர்வு என்கிற குழந்தையும் இருக்கிறது என்ற விவரம் அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
உலகத்தில் வெற்றி பெற்றவர்களைப் பாருங்கள். துணிச்சல், திட்டமிடல், விடாமுயற்சி, கடின உழைப்பு, இறைச்சித்தம்... இந்தப் படிகளில் ஏறித்தான் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ், அமெரிக்காவை அடைய வேண்டுமென்று போகவில்லை. பல வருடங்கள் முயற்சிக்குப் பிறகு ஓர் அரசர் கொடுத்த கப்பலில் ஏறினார். மேற்கே நிலப்பரப்பு ஒன்று உண்டு என்கிற உள்ளுணர்வு அவரை உந்தித் தள்ளியது.
தமது சகாக்களோடு மேற்கு நோக்கிக் கடலில் பயணம் செய்தார். துணிச்சலான அவரது முயற்சியில் பல அபாயங்களைச் சந்தித்தார். காற்றும் கடும் மழையும் திமிங்கலங்களின் எதிர்ப்பும் இருந்தன. இறுதியாக உணவுக் கையிருப்பும் தீர்ந்தது. ஊரில் மனைவி மக்களோடு மகிழ்ச்சியாக இருந்திருப்போமே! எங்களைக் கொண்டுவந்து நடுக்கடலில் தள்ளிவிட்டீரே' என்று நண்பர்களெல்லாம் அவரைத் திட்டித் தீர்த்தனர். அவரது அடிப்படையே ஒரு நிமிடம் ஆட்டம் கண்டது. என்றாலும், துணிச்சல் மாத்திரமே துணையாக இருந்தால் போதும் என்றிருந்தார் அவர்.
மறுநாள் காலை விடிந்த போது நீர்க்காகங்கள் சில பறந்து வருவதைப் பார்த்தார். சற்றைக்கெல்லாம் தொலைவில் மரங்கள் நிறைந்த ஒரு நிலப்பரப்பு தென்பட்டது. அதை ஒரு தீவு என்றுதான் அவர் முதலில் நினைத்தார். எல்லோருக்கும் மகிழ்ச்சி. இறங்கி அங்கே நடந்தபோதுதான் அங்கே வாழுகிறவர்கள் செவ்விந்தியர்கள் என்று கண்டார். துணிச்சலும், அபாயத்தை எதிர்கொள்ளும் ஆற்றலும் விடாமுயற்சியும் இல்லாதிருந்திருந்தால், கொலம்பஸ் உலக வரலாற்றில் இடம் பெற்றிருக்க முடியாது.
| உ லா | சாதகங்களைப் பாதகங்களாக்குகிறவர்கள் சாதாரண மனிதர்கள். பாதகங்களைச் சாதகங்களாகத் துணிச்சலோடு மாற்றுகிறவர்களே உலக வரலாற்றில் உலா வருகிறவர்கள். |
சாதகங்களைப் பாதகங்களாக்குகிறவர்கள் சாதாரண மனிதர்கள். பாதகங்களைச் சாதகங்களாகத் துணிச்சலோடு மாற்றுகிறவர்களே உலக வரலாற்றில் உலா வருகிறவர்கள்!
துணிச்சல் இன்றி வெற்றி இல்லை - துணிச்சல் இன்றி வாழ்வே இல்லை.
துணிச்சல் என்ற ஒரு உணர்வு இருந்தால் போதும், சாதனைக்கான பாதை உருவாகிக் கொண்டே போகும்.
துணிச்சல் என்ற ஒரே ஒரு சிறிய விளக்கு இருந்தால் போதும், வாழ்வை விளங்க வைக்கும் மனத்தெளிவு பிறக்கும். பாதகத்தைச் சாதகமாக்கும் சக்தி பிறக்கும். துணிந்து நில்லுங்கள்!