போலி நம்பிக்கை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
* போலி நம்பிக்கை உங்கள் மனதிற்குள் நுழைந்து விட்ட எச்.ஐ.வி கிருமி (HIV - Happiness Insufficiency Virus) போலி நம்பக்கை நிம்மதியைக் கெடுத்து, சந்தோஷத்தைக் குறைக்கும்.
* தான் முட்டாள் என்ற உண்மையைக் கடைசி வரை முட்டாளுக்குத் தெரியவிடாமல் மறைத்துவிடும் - மனதின் மாயத்திரைதான் போலி நம்பிக்கை.
நம்பிக்கை... மனிதர்கள் உயிர் வாழ மிகவும் அவசியமான ஒன்று. அந்த நம்பிக்கை எப்படிப்பட்டது என்பதைப் பொறுத்துதான் வாழ்க்கை அமையும். அவநம்பிக்கை, மூடநம்பிக்கை, குருட்டு நம்பிக்கை, போலி நம்பிக்கை, பயத்தால் வரும் நம்பிக்கை, ஆசையால் வரும் நம்பிக்கை என்று பல நம்பிக்கைகள் உள்ளன.
இதில் ஏதோ ஒரு சில நம்பிக்கையை அச்சாணியாகக் கொண்டுதான் ஒவ்வொருவரின் சக்கரத்தைச் சுழற்ற முயல்கிறார்கள்.
சர்க்கஸ் கூடாரங்களில் அவ்வளவு பெரிய யானை எப்படிச் சிறிய சங்கிலிக்குக் கட்டுப்பட்டு நிற்கிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? யானை நினைத்தால், ஒரேயொரு காலில் கட்டப்பட்டிருக்கும் சங்கிலியை நூல் தெறிப்பது போல அறுத்துக்கொண்டு ஓடிவிடலாம்.
ஆனால், அப்படி ஒருபோதும் நடப்பதில்லை. காரணம், மனதில் ஆழப் பதிந்துபோன செய்தி (Deep seated message) தான்.
யானை, குட்டியாக இருக்கும் போதே, சங்கிலியால் ஒரு காலைப் பிடித்துக் கட்டிவிடுவார்கள். இயல்புக்கு ஏற்ப குட்டி ஓடியாட முயன்று பார்க்கும். அது குட்டியாக இருப்பதால், அதற்குப் பலம் போதாது. குட்டியால் அந்தச் சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓட முடியாது. சங்கிலியை அறுக்க முடியாதென்பது அந்த இளம் வயதுக்குச் சரி.
யானைக்குத் தன்னால் இந்தச் சங்கிலியை நிச்சயமாக அறுத்துக் கொண்டு ஓட முடியாது என்ற செய்தி மூளையில் ஆழப்பதிந்துவிடும். தன்னால் இப்போது இந்தச் சங்கிலியை அறுக்க முடியும் என்ற உண்மை, யானைக்குத் தெரியாமலேயே போய் விடும்.
வளர்ந்த பிறகும் கூடத் தன்னால் அறுக்க முடியும் என்ற எண்ணம் யானைக்கு வருவதே இல்லை.
உண்மையைத் தெரிந்து கொண்டாலும் தெரிந்து கொள்ளாவிட்டாலும் புரிந்து கொண்டாலும் புரிந்துகொள்ளாவிட்டாலும் உண்மை, உண்மையே!
இந்த யானையைப் போல்தான் நம்மில் பலரும் இளம் வயதில் இயலாமை, சூழ்நிலை காரணமாக சிறுசிறு தோல்விகளை, ஏன் பெரிய தோல்வியைக்கூட சந்தித்திருக்கலாம். அந்தத் தோல்விகள் முடிவுகள் அல்ல.
அந்த அசம்பாவிதமான தோல்விகள் உங்களையும் அறியாமல் உங்கள் மனதில் ஆழப் பதிந்துவிடும். முதல் முறையாகப் பங்கு கொண்ட மேடைப்பேச்சில் ஒருவர் சரியாகப் பேசவில்லை என்றவுடன், தனக்குப் பேச்சுத் திறமையே இல்லை என்று நம்ப ஆரம்பித்துவிடுவார்.
அந்த நம்பிக்கை பிற்காலத்தில் மேடைப்பேச்சுப் பேசவே முடியாது என்ற இயலாமையாக மாறிவிடும். ஆனால், ஒவ்வொருவருக்குள்ளும் நன்றாக மேடையில் பேசுவதற்கான எல்லாவிதத் திறமையும் இருக்கிறது. இது உண்மை. இந்த உண்மை தெரியாமலேயே போய்விடும். தற்செயலாகத் தெரிந்தால்கூட இப்படிப்பட்டவர்களால் நம்ப முடியாது.
நம்பிக்கைகள் பலவிதம்.
ஆனால், இந்த நூற்றாண்டில் அதிகமாயிருக்கும் பிரச்சனை போலி நம்பிக்கை (Pseudo Belief - self cheating in nature) இது தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும்.
என்னால் இவ்வளவுதான் படிக்க முடியும். இதற்குமேல் முடியாது. என்னால்

போலி நம்பிக்கை நிஜத்தை போலியாக்கி போலியை நிஜமாக்கி போலியை நிஜம் போல் நம்ப வைத்து நிம்மதியைக் காலி செய்யும் தன்மை கொண்டது!
இவ்வளவுதான் உழைக்க முடியும். இதற்கு மேல்
முடியாது. என்னால் இவ்வளவுதான்
சந்தோஷமாக இருக்க முடியும். இதற்கு மேல்
முடியாது... என்று தங்கள் குணம், திறமை,
வாழ்க்கை முறை, மற்றவருடன் பழகும் முறை
என்று எல்லாவற்றிலும் ஒரு வேலி, ஒரு கோடு
போட ஆரம்பித்துவிட்டார்கள்.
யானை, குட்டியாக இருக்கும் போது சங்கிலியை அறுக்க முடியாது என்று மூளையில் பதிந்தது போல, ஒவ்வொருவரும் அவர்களுடைய மோசமான முதல் அனுபவத்தால் (ஒவ்வொரு விஷயத்திலும்) "தங்களால் முடியாது" என்று துர்ச்செய்தியை மனதின் ஆழத்தில் பதிய வைத்து விடுகிறார்கள்.
வயது அதிகமான பின்பு சாதிப்பதற்கான
சக்தியும் சாத்தியக்கூறுகளும் இருந்தாலும்
அவர்களுடைய போலி நம்பிக்கை அவர்களைத்
தடுத்து விடுகிறது.
இன்றைய உலகில் கஷ்டப்படுபவர்கள்
எல்லோருமே இந்தப் போலி நம்பிக்கையால்
பாதிக்கப்பட்டவர்கள்தான். வாழ்க்கையில்
சாதித்தவர்களெல்லாம் தங்களுடைய
உண்மையான சக்தியையும் சாதிப்பதற்கான
சாத்தியக்கூறுகளையும் உணர்ந்து உண்மையாக
நம்பிச் செயல்பட்டு, வென்றவர்களே!
'நம்புங்கள் உங்களுக்குள் எல்லாத் திறமையும் அதற்கான சக்தியும் இருக்கின்றது.
ஒரு முறை நித்திராஜன் ரயில் பயணம் மேற்கொண்டிருந்தார். பாதி வழியில் டிக்கெட் பரிசோதனை நடை பெற்றது. நித்திராஜன் டிக்கெட்டைத் தேடினார். கிடைக்க வில்லை. பெட்டியைத் திறந்தார், எல்லாத் துணிகளையும் கலைத்துப் பார்த்துவிட்டார். டிக்கெட் கிடைக்கவில்லை.
அடுத்துப் பையைக் கவிழ்த்துப் பார்த்தார். டிக்கெட் கிடைக்கவில்லை. நித்தி தட்டுத் தடுமாறி டிக்கெட் தேடுவதைப் பார்த்த பயணி ஒருவர், “சார், உங்களோட பேண்ட் பாக்கெட்டைப் பார்த்தீர்களா?” என்று கேட்டார். நித்தி, “இல்லை இல்லை... கடைசியாகத்தான் பார்ப்பேன், என்னோட நம்பிக்கை பேண்ட் பாக்கெட்டில்தான் இருக்கிறது”.
பயணியோ, “என்ன குழப்புகிறீர்கள்?” என்று கேட்டார்.
அதற்கு நித்தி, “இப்போ இவ்வளவு இடத்தில் தேடிப் பார்த்த பிறகும் என்னோட டிக்கெட் கிடைக்கல. எப்படி இருந்தாலும் டிக்கெட் பேண்ட் பாக்கெட்டில்தான் இருக்கும் என்று நம்பிக்கொண்டிருக்கிறேன். அதனால்தான் பதட்டப்படாமல் தேடிக் கொண்டிருக்கிறேன்” என்று தெளிவாகப் பதிலளித்தார்.
நித்தியைப் போலப் பலரும் ஏதோ ஒரு குருட்டுநம்பிக்கையைப் பிடித்துக் கொண்டு, தாங்கள் தெளிவாக இருப்பதாக நினைத்து, வாழ்க்கையையும் நேரத்தையும் வீணடிக்கிறார்கள்.
மனிதமனம் தோல்விகளையும் அவமானங்களையும் பதிய வைத்துக் கொள்ளும் அளவுக்கு, வெற்றியையும் பாராட்டுக்களையும் பதிய வைத்துக்கொள்வதில்லை.
வா
ய்
ப்
பு
வயது அதிகமான பின்பு சாதிப்பதற்கான சக்தியும் சாத்தியக் கூறுகளும் இருந்தாலும், அவர்களுடைய போலி நம்பிக்கை அவர்களைத் தடுத்து விடுகிறது.
தோல்வியையும் இயலாமையையும் நினைத்து நினைத்து, வாழ்க்கையை வீணாக்காதீர்கள். வெற்றியையும் சாதிப்பதற்கான சாத்தியக்கூற்றையும் நினைத்து வாழுங்கள்!
கடந்த காலத்தில் தற்செயலாக நம்பிவிட்ட சில அசம்பாவிதங்கள் மூலம் உங்களையோ, உங்களின் திறமையையோ மதிப்பிட முடியாது.
சில அசம்பாவிதமான நிகழ்ச்சிகளைக் கொண்டு பல திறமைகள் பொதிந்த உங்களை, தோற்றவன், இயலாதவன், கெட்டவன் என்று நம்பவைப்பது போலி நம்பிக்கை என்னும் மாயக்குணம்தான்.
"என்னால் முடியாது !"
"என்னால் அவ்வளவுதான் முடியும் !"
"என்னோட Capacityஇவ்வளவுதான் !"
"அதெல்லாம் என் தகுதிக்கு அதிகம் !"
என்ற ஒரு சில கருத்துக்களைக் கொண்டுதான் போலிநம்பிக்கை வாழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த மாயக்கருத்துக்களைத் தூக்கி எறியுங்கள். வாழ்க்கைக் கடலில் குதியுங்கள். திறமைகளைக் கண்டுபிடியுங்கள். போலிநம்பிக்கை இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். போலி மறைய நம்பிக்கை பிறக்கும்! வெற்றி நிச்சயம்!
