சௌக்கியமாக இருக்கீங்களா?
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
★ மக்கள் தெய்வமாக, வீடு மாளிகையாக, உலகம் சொர்க்கமாக - நீங்கள் உணர்ந்தால், நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள்.
★ ஆரோக்கியமாக இருப்பவர்கள் ஆனந்தமாக இருப்பார்கள். ஆனந்தமாக இருப்பவர்கள் நிச்சயம் ஆரோக்கியத்தோடு இருந்தே ஆக வேண்டும். வேறு வழியே இல்லை - இது ஆனந்தச் சூத்திரம்.
★ உடல் பிரச்சனை = நோய்.
மனப் பிரச்சனை = வேதனை.
உணர்வுப் பிரச்சனை = ஆரோக்கியக் குறைவு;
★ ஆரோக்கியம் குறைய ஆரம்பித்ததிலிருந்து நோய் உருவாக ஆரம்பக்கிறது. நோய் திடீரென்று தோன்றுவதில்லை. தோன்றவும் முடியாது. ஆரோக்கியம் கொஞ்சம், கொஞ்சமாகக் குறைந்து, பின் வேதனை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து - எதிர்பாராத தருணத்தில் நோயாக வெடிக்கிறது.
ஆரோக்கியமான உடலுக்கு... ஆரோக்கியமான மனம் தேவை. மனம் ஆரோக்கியமாக இருந்தால், உடல் நிச்சயம் ஆரோக்கியமாக இருக்கும்.
இயந்திரத்தனமான வேலை, மாசடைந்த காற்று, நீர், இரசாயனம் கலந்த உணவுகள், இயற்கைச்சூழலில் இருந்து முற்றிலும் மாறிய நகர வாழ்க்கை, ஒரே மாதிரியான அலுப்புத் தட்டும் வேலைகள், என்ன செய்தாலும் திருப்தி அடையாத உறவுகள், என்ன நடந்தாலும் திருப்தி அடையாத மனம், தொடர்ந்து கண்டுபிடிக்கப்படும் புதிய நோய்கள்...
இப்படி மனிதர்கள் தங்களுடைய
இயல்புக்கு முற்றிலும் மாறான வாழ்க்கையே
வாழ்ந்து வருகிறபோது, ஆரோக்கியத்தைப்
பற்றிக் கவனம் செலுத்துவது சற்றுக்
கடினமான விஷயம்தான்.
பலருக்குத் தாங்கள் ஆரோக்கியமாக
இல்லையென்ற விஷயமே தெரிவதில்லை.
பி.பி., டயாபடீஸ் போன்ற பெரிய பெரிய
வியாதிகள் தங்களுக்கு இல்லையென்றால்
ஆரோக்கியமானவர்கள் என்று நினைத்துக்
கொள்கிறார்கள். ஒரு உண்மையைத் தெரிந்து
கொள்ளுங்கள். நோய் என்பது பல
நாட்களாக இருக்கும் ஆரோக்கியக்கேட்டின்
வெளிப்பாடு.
உங்கள் உடலில் இருக்கும் சக்தியின்
அளவு குறையும் போதே ஆரோக்கியம் குறைய
ஆரம்பிக்கிறது. இந்த நிலை, தொடர்ந்து பல
நாட்களாக நீடிக்கும்போதுதான் நோய்
உண்டாக ஆரம்பிக்கிறது.
உங்கள் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கின்றனவா? பின் வரும் கேள்விகளைப் படியுங்கள். அந்தக் கேள்விகளுக்கு ‘ஆம்’ என்ற பதில் வந்தால் உங்கள் ஆரோக்கியம் ஓகே. ‘இல்லை’ என்று பதில் வந்தால் ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.

ஆரோக்கியம்
என்பது
யாராலும்
எதனாலும்
அசைக்கப்பட
முடியாத ஒரு
ரம்யமான
இனிமையான சுக
உணர்வு!
★ காலையில் எழுந்தவுடன் புதுப்பொலிவை உணருகிறீர்களா?
★ படுத்தவுடன் உறக்கம் வருகிறதா?
★ ஆறு மணி நேரம் தூங்கியதும் தூங்கிய திருப்தியைத் தருகிறதா?
★ சிரிக்கும்போது முழுமையாகச் சிரிக்க முடிகிறதா?
★ இயல்பான செரிமானம் இருக்கிறதா?
★ தனிமை உங்களுக்கு ஆனந்தத்தைத் தருகிறதா?
★ நடப்பது, வீட்டு வேலை செய்வது உங்களுக்கு எனர்ஜடிக் ஆக (உற்சாகமாக) இருக்கிறதா?
- உங்கள் உற்சாகம், சந்தோஷம் குறைய ஆரம்பிக்கும் போதே உங்கள் ஆரோக்கியத்தை இழக்க ஆரம்பிக்கிறீர்கள்.
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிப்படை என்னென்ன?
ஆரோக்கியமான உணவு :
சமஸ்கிருதத்தில் மூன்று வகையாகப் பிரிப்பார்கள். சாத்வீக உணவுகள் என்பவை எண்ணெய், காரம், மசாலா ஆகியவை மிகக் குறைவாகக் கொண்ட எல்லா உணவுகள்.
ராஜஸீக உணவுகள் என்பவை அதிக காரம், அதிக எண்ணெய், அதிக மசாலா கொண்டு சமைக்கப்படும் எல்லா உணவுகள்.
தமஸீக உணவுகள் என்பவை, அதிகம் வறுக்கப்பட்ட, கொழுப்பு அதிகம் கொண்ட உணவுகள், கெட்டுப்போன உணவுகள், சத்து இல்லாமல் வெறும் சுவைக்காக மட்டும் எடுத்துக் கொள்ளப்படும் உணவு வகைகள்.
சாத்வீக உணவுகள், உடலையும் மனதையும் ரம்மியமாக வைத்திருக்கும் தன்மை கொண்டவை.
| தே | ஆரோக்கியமான உடலுக்கு... ஆரோக்கியமான மனம் தேவை. மனம் ஆரோக்கியமாக இருந்தால், உடல் நிச்சயம் ஆரோக்கியமாக இருக்கும்! |
|---|---|
| வை |
ரஜஸீக உணவுகள், பதற்றத்தையும் கோபத்தையும் அதிகப்படுத்தும் தன்மை கொண்டவை.
தமஸீக உணவுகள், மந்தத் தன்மையையும் தூக்கத்தையும் அதிகப்படுத்தும் தன்மை கொண்டவை.
இனிமையான உணர்வையும் இலகுவான உடலையும் பெற விரும்பினால், சாத்வீக உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். பலனைச் சில நாட்களிலேயே உணர்வீர்கள்.
ஆரோக்கியமான சுற்றுச்சூழல் :
தூய்மையான காற்றும், மாசுபடுத்தாத நீரும் கொண்ட ஒரு அமைதியான சூழல்தான், மனிதர்கள் வாழ்வதற்கு மிகவும் ஏற்றது.
அதனால்தான் பண்டைய நாகரிகங்கள் எல்லாம் ஆற்றங்கரையில் உருவாகியது. இன்றைய கட்டுக்கடங்காத மக்கள்தொகைப் பெருக்கத்தால் ஆரோக்கியமான சுற்றுச் சூழல் முற்றிலும் சாத்தியமற்றதாக மாறிவிட்டது.
இருந்தாலும் ஆங்காங்கே ஆரோக்கியமான சுற்றுச்சூழல் கொண்ட பூங்காக்கள், கோயில்கள் இருக்கின்றன. தினம் ஒரு அரை மணி நேரமாவது இதுபோன்ற ஆரோக்கியமான சூழலிலிருந்து, அமைதியாக உட்கார்ந்து தியானம் செய்வது நகர் வாழ் மக்களின் உடலுக்கும் மனதுக்கும் மிக ஆரோக்கியத்தை அளிக்கும்.
ஆரோக்கியமான உறவுகள் :
ஆரோக்கியமான மனமும் உடலும் அமைந்தவரால் சோம்பி உட்கார முடியாது. சோகமான முகத்தைக் கனவிலும் அவரால் கொண்டுவர முடியாது. எப்போதும் உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் மட்டுமே இருக்கத் தோன்றும்!
மனதளவில் புண்பட்டு இருப்பவர்களே அடுத்தவர்களின் மனதைப் புண்படுத்துவார்கள். சிலர் யாரையாவது பார்த்தால், "அய்யய்யோ, என்னங்க
| உ | ஆரோக்கியமான மனமும் உடலும் அமைந்தவரால் சோம்பி உட்கார |
|---|---|
| ற் | முடியாது. சோகமான முகத்தைக் கனவிலும் அவரால் கொண்டுவர |
| சா | முடியாது. எப்போதும் உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் மட்டுமே |
| க | இருக்கத் தோன்றும்! |
| ம் |
இப்படி இளைச்சுப் போயிட்டீங்க?" என்று கொஞ்சமும் யோசிக்காமல் கேட்பார்கள்.
நல்ல ஆரோக்கியத்துடனும் மனவலிமையுடனும் இருப்பவர்கள்கூட, இந்தக் கேள்வியைக் கேட்டுத் தூரப் போய்விடுவார்கள். உடம்புக்கு ஏதாவது வந்துவிட்டதோ என்று சந்தேகப்பட ஆரம்பித்துவிடுவார்கள்.
ஆரோக்கியமாக இருப்பவர்கள் அவர்களை அறியாமலே எல்லோரிடமும் ஆரோக்கியமான உறவு கொண்டிருப்பார்கள். இவர்கள் யாரைப் பார்த்தாலும், "என்னங்க, சௌக்கியமா இருக்கீங்களா?" என்று கேட்பார்கள். "சுகமா?" என்று வினவுவார்கள். "ஏதேதேது, சந்தோஷமாக இருக்கீங்க போல! உடம்பு ஒரு ரவுண்டு பெருத்திடுச்சே!" என்று கள்ளமில்லாமல் கேட்பார்கள்.
இந்தக் கேள்வியை எதிர்கொள்கிற
மனிதருக்கு ஏதாவது உடம்பில் பிரச்சனை
இருந்தாலும் அது உடனே சரியாகிவிடும்.
உங்களுடைய அணுகுமுறை
ஆரோக்கியமாக இருந்தால் போதும்
ஆரோக்கியமான உறவுகள் தாமாகக்
கிடைக்கும். ஆரோக்கியமாக முயற்சி
செய்யுங்கள்! ஆரோக்கியமாக இருங்கள்!

தூய்மையான காற்றும்,
மாசுபடாத நீரும் கொண்ட ஒரு
அமைதியான சூழல்தான்,
மனிதர்கள் வாழ்வதற்கு
மிகவும் ஏற்றது!