KAILASA Library/கதவைத் திற ... காற்று வரட்டும்!/உடல் மொழிSign in
கதவைத் திற ... காற்று வரட்டும்!

உடல் மொழி

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

அன்று மிகப்பெரிய பல்கலைக்கழகத்தில் ஐன்ஸ்டீன் E=mc² பற்றி விளக்கவுரையாற்ற வேண்டும். வேறொரு ஊரிலிருந்து வரவேண்டிய ஐன்ஸ்டீன் நேரத்திற்கு வராததால், சமயோசித புத்தியைப் பயன்படுத்துவதாக நினைத்துக்கொண்ட ஐன்ஸ்டீனின் கார் டிரைவர், ஐன்ஸ்டீனின் உடையணிந்து மேடையேறிவிட்டார்!

அது புதிய ஊர். டிரைவரும் பட்டப்படிப்பு முடித்தவர். விளக்கவுரையை நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஐன்ஸ்டீன் E=mc² பற்றி விளக்கும்போதெல்லாம் உடனிருந்து கேட்ட டிரைவர்...

ஐன்ஸ்டீன் பேசுவது போலவே, ஒரு பாய்ண்ட்கூட விடாமல் எல்லாவற்றையும் மனப்பாடமாய் பேசிவிட்டார்!

ஐன்ஸ்டீன் பேசுவதாய் நம்பிய கூட்டம் பேச்சின் கடைசியில் ஆரவாரத்தோடு கைதட்டியது.

அடுத்ததுதான் வம்பாகிவிட்டது. ஐன்ஸ்டீனிடம் E=mc² பற்றி மிகச் சிக்கலான கேள்வி ஒன்றைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் கேட்டுவிட...

படபடப்பானார் டிரைவர். இது புதியது. எதிர்பாராதது. இந்தப் புதிய சூழ்நிலையைச் சந்திக்க எந்த ரெடிமேட் வசனமோ, பதிலோ இல்லாததால் டிரைவர் தடுமாற ஆரம்பிப்பதற்கும், ஐன்ஸ்டீன் அந்த அறைக்குள் நுழைவதற்கும் மிகச் சரியாக இருந்தது.

"இதுபோன்ற சாதாரண கேள்விகளுக்கெல்லாம் நான் பதிலளிப்பதில்லை. இதற்கு என் கார் டிரைவரே மிக அழகாக பதில் சொல்வார்" எனச் சொல்லி ஐன்ஸ்டீனை மேடைக்கு அழைத்து தப்பித்துக் கொண்டார் டிரைவர்!

★ ஐன்ஸ்டீன் வரக் கால தாமதமாகியிருந்தால் டிரைவரின் கதி என்னவாகியிருக்கும்? டிரைவரின் குட்டு, அவரின் தடுமாறும் உடல்மொழி மூலமாக வெளிப்பட்டிருக்கும்!

நம் வாழ்வில் நெருக்கடியையும் எரிச்சலையும் நாம் உணரும் ஒவ்வொரு நிமிடங்களும் இதுபோன்ற தருணங்கள்தாம்.

ரெடிமேடான வசனங்களோ, புத்திசாலித்தனமோ இல்லாத நெருக்கடியான சூழ்நிலைகளில் நம் சுயரூபம் நம்மையும் மீறி நம் உடல்மொழிகள் மூலமாக வெளிப்பட்டுவிடுகிறது.

★ உடலையும் மனதையும் பிளவுபடுத்துவது அகங்காரம்.

★ மனதில் வெளிப்படுத்த நினைப்பவற்றை, உடல்பாவனைகள் மூலமாக முழுமையாக மனிதர்கள் வெளிப்படுத்துவதேயில்லை.

★ மனிதர்களின் எல்லா பாவனைகளுமே அவர்களின் அகங்காரம் கலந்தே வெளிப்படுகிறது.

★ நினைத்ததை நினைத்த மாதிரியே வெளிப்படுத்த முடியாமையே, நம்மை மற்றவர்கள் தவறாகப் புரிந்துகொள்வதற்கு வித்திடுகிறது.

★ உன் மேல என் உசிரையே வச்சிருக்கேன்!

  • அப்புறம் எப்படி நீ இன்னும் உயிரோட இருக்க?

★ என்னை பெத்த ராசா!

  • நான் எப்படிப் பாட்டி உன்னையை பெக்க முடியும்?
உடல் மொழி

உடல் மொழி என்பது
உங்கள் பார்வை
சொல்லும் செய்தி.
+
உங்கள் முகபாவம்
சொல்லும் செய்தி.
+
உங்கள் கை, கால்
அசைவுகள்
சொல்லும் செய்தி.
உங்கள் உட்காரும்
ஸ்டைல், பேசும் ஸ்டைல்
கூறும் செய்திகளின்
தொகுப்பு.

★ என் மனசே என்கிட்ட இல்ல!

  • எங்க! பக்கத்து வீட்டுக்கு விளையாடப் போயிருக்கா?

★ வயித்துல பால வாத்தீங்க!

  • ஏன் இப்படிச் பச்சப் பொய் சொல்றீங்க?

★ வயிறே பத்திகிட்டு எரியுது!

  • இப்படி சம்பந்தா சம்பந்தம் இல்லாமச் பேசினா எனக்குக் கெட்ட கோபம் வந்துரும்.
  • என்று மற்றவர்கள் பதில் பேச ஆரம்பித்துவிட்டால் பலர் கதி அதோகதிதான்.

உணர்வுப்பூர்வமான விஷயங்களையும்,
அனுபவங்களையும் வார்த்தைகளால்
வெளிப்படுத்துவது மிக மிகக் கடினம்.

மேலே உள்ள சில வசனங்கள் கிட்டத்தட்ட
எல்லோருக்குமே தெரியும். இதுபோல
ரெடிமேடான வசனங்கள் மூலம் பல
வேளைகளில் உணர்வுகளைச் சரியாய்
வெளிப்படுத்த முடியாது என்பதே உண்மை.

ஆனால் உணர்வுகளை வார்த்தைகளால்
முழுமையாக வெளிப்படுத்த முடியாது
என்பதே உண்மை.

ஒரு செய்தியை மற்றவருக்குத் தெரியப்படுத்தும் போது (Communication) - நமது மொழி மூலம், (வார்த்தைகள் மூலம்) வெறும் 10% விஷயத்தை மட்டுமே தெரியப்படுத்த முடியும்.

மீதமிருக்கும் செய்திகளை மற்றவருக்குத் தெரியப்படுத்தப்படுவது எப்படி? அது உடல்மொழி (Body Language) மூலம்தான் வெளிப்படுத்தப்படுகிறது என்பதை இன்றைய ஆராய்ச்சியாளர்கள் தெளிவாக ஒப்புக் கொள்கிறார்கள்.

இன்றைய கல்வித் திட்டம் 10% செய்தியை மட்டுமே வெளிப்படுத்தும் மொழிக்குத் தரும் முக்கியத்துவத்தை, 90% செய்தியை வெளிப்படுத்தும் உடல் மொழிக்குக் கொடுக்காதது வருந்தத்தக்க ஒரு விஷயம்தான்.

உடல்மொழிக்கு முக்கியத்துவமளிக்காத அறியாமை நிலை மாற வேண்டும். அன்பு, பண்பு, நட்பு குன்றாத குத்துவிளக்காய் ஒளிதர உடல்மொழி பற்றிய விழிப்புணர்வு பெருக வேண்டும்.

உடல் மொழி என்பது ஒரு தனிப்பட்ட மனிதர் கற்றுக்கொண்டு பழக்கப்படுத்தப்பட வேண்டிய ஒரு கலை அல்ல. அது எல்லோருடைய வாழ்வுக்கும் அடிப்படையானது.

நாம் எதிர்பார்க்கும் ஏதோ ஒன்று நம்முடைய நெருங்கிய நண்பரிடம், உறவினரிடம் குறைவாக இருக்கிறது அல்லது இல்லை என்று பாசப்பரிமாற்றங்களில் உணர்கிறோம். நாம் எதிர்பார்க்கும் அந்த ஏதோ ஒன்று உடல் மொழிதான்.

இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், நம் உறவுகளின் உணர்வுகள் உரசப்படும்போது வரும் வார்த்தைகள் இவை...

"நான் உன்னிடம் அன்பு செலுத்துமளவுக்கு, நீ என்னிடம் அன்பு செலுத்துவதில்லை".

"என்னை நேசிப்பதாய் நீ சொல்லும் அளவுக்கு, என்னிடம் நீ அன்பு செலுத்துவது இல்லை".

"ஏன், எனக்கு மாத்திரம் இப்படி! உண்மையாக பழகக்கூடிய ஒரு உறவு கிடைக்காதா?"

வெஉடல் - மன ஒருங்கிணைப்பு
ளி
ப்அல்லது உடல் - மன இணக்கத்தின்
பாவெளிப்பாடுதான் உடல் மொழி.
டு

"சே... அன்பு, பாசம் என்பதெல்லாம் வெறும்வெளி வேஷம்தான்! வாய் வார்த்தை தான்!"

"நீ என்னவோ எந்தக் குறையும் சொல்லமுடியாத அளவுக்குத்தான் தாங்குகிறாய். அன்பு செய்கிறாய். இருந்தாலும் நம் உறவில் ஏதோ ஒரு மூலையில் முழுமை அடையவில்லை என்ற உணர்வு இருந்துகொண்டே இருக்கிறது..."

முழுமையாகாதது எது?

அது இந்த உடல் மொழி வெளிப்பாட்டின் குறை, நிறைகளே!

ஒரு கம்பெனியில் ரிசப்ஷனிஸ்டாக இருப்பவருக்கு வாடிக்கையாளரைக் கவர வார்த்தைகளும் உடல் மொழியும் எவ்வளவு இனிமையாக இருக்க வேண்டும் என்று விதிமுறையே இருக்கிறது.

ரிசப்ஷனிஸ்டாக இருக்கும் நேரத்தில் அந்த நபரை ஒருவர் பார்த்தால், அந்த நபருக்கு ரிசப்ஷனிஸ்ட் மிக அருமையான ஆளாகத் தெரிவார்.

ஆனால், நிஜத்தில் அந்த ரிசப்ஷனிஸ்ட் அதே அளவு இனிமையானவராக இருப்பதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.

வரவேற்றல் என்ற பணியைச் செவ்வனே செய்வதற்காக சில இனிமையான உடல் மொழிகளான சிரித்து வரவேற்றல்; வணங்குதல்; பணிவோடும் அன்போடும் விசாரித்தல்; முகத்தில் எந்த ஒரு சூழ்நிலையிலும் எதிர்மறை உணர்வுகளைக் காட்டாது இருத்தல் என்று சில, சின்ன உடல் மொழிகளை இயந்திரம் போல கடைப்பிடித்தால் போதும். வாடிக்கையாளர் திருப்தியடைந்து விடுவார்.

ரிசப்ஷனிஸ்ட் வெறும் சம்பளத்திற்காக மட்டுமே நல்ல உடல்மொழிகளை வெளிப்படுத்த வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அன்போடு வரவேற்பது, வெறும் பணி நிமித்தமான நடிப்பாகவும் இயந்திரத்தனமாக திரும்பத் திரும்பச் செய்யும் ஒரு சாதாரணச் செயலாகவும் இருப்பதற்கே வாய்ப்புகள் நிறைய இருக்கிறது.

உபேச நினைப்பதெல்லாம் பேச முடிவதில்லை. பேசி முடித்ததெல்லாம்
டபேச நினைத்தவை அல்ல.
ல்
மொஇந்த விசித்திரத்தைக் கவனித்திருக்கிறீர்களா...
ழிகாரணம் உடல்மொழிபற்றி ஞானம் இல்லாதிருப்பதே!

ஆனால், வாடிக்கையாளர் ஒவ்வொருவரும் தான் மிக நன்றாக கவனிக்கப்பட்டதாகவும், வரவேற்கப்பட்டதாகவும்தான் எப்போதும் நினைக்கின்றனர்.

(ஏனென்றால், முழுஉலகமும் ஒரு பூரணமான உணர்வு வெளிப்பாட்டுக்காக ஏங்குகிறது. எனவேதான் இனிமையான உடல் மொழிகளைச் சந்திக்கும் நாம் சந்தோஷம் அடைகிறோம்).

ஒரு சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும்
வரவேற்பு நிகழ்ச்சிக்கு மனிதர்கள் இவ்வளவு
சந்தோஷம் அடைந்தால், காலம் முழுவதும்
நம்மோடு இருக்கும் நமது உறவுகளுக்கு நம்
அன்பின் பூரணத்துவத்தைக் காண்பித்தால்
எவ்வளவு சந்தோஷப்படுவார்கள்?

சிறிது யோசியுங்கள், ஆனால் பலன் பெரிது!

பணி நிமித்தமாக, படிப்பு நிமித்தமாக, வாய்ப்பு நிமித்தமாக, உதவி நிமித்தமாக நாம் எல்லோரும் பலமுறை பலரிடம் பவ்யமான இனிமையான உடல்மொழிகளை வெளிப்படுத்தித்தான் நம் காரியங்களை சாதித்திருப்போம்.

சாதாரண காரியத்திற்காக, யாரோ ஒருவருக்காக,

நம்மையும் நம் பாவனைகளையும்
இவ்வளவு தூரம் மாற்றி வளைக்க
முடியும்போது - நாம் முழுமையாக நேசிக்கும்
நம்முடைய சில உறவுகளுக்காக நம்மை நாம்
ஏன் மாற்றிக்கொள்ளக்கூடாது.

Nithyananda

நீங்கள் எப்படியிருந்தாலும்
அப்படியே உங்களை
ஏற்றுக்கொள்ளுங்கள்.
இது உடல்மொழிகளைப்
பொலிவாக்கும்
ஒரு டெக்னிக்.

இதுவரை நம் நெருங்கியவர்களிடம் உடல்மொழியில் உண்மையாய் பவ்யத்தை வெளிப்படுத்தாவிட்டாலும், இனியாவது வெளிப்படுத்தலாமே.

நம் உடல்மொழியில் இனிமையைச் சேர்த்து மற்றவரையும் இன்புற வைப்பதென்பது பெரிய கம்ப சூத்திரமில்லை.

உடல் மொழி - மனித உறவிலும் அன்பின் பூரணத்துவத்திலும் திருப்தியிலும் எவ்வளவு பங்கு வகிக்கிறது. என்பதை ஆழமாகப் புரிந்துகொண்டு, உடல் மொழியில் இனிமைகளைச் சேருங்கள். அதுபோதும். சேர்ந்து வாழும் வாழ்க்கை முறையின் ஆனந்த சூத்திரம் புரிந்துவிடும்.

அர்த்தமுள்ள சம்பவம்...

தெனாலியின் மனைவி, "நீங்கள் சிலவற்றை திருத்திக்கொள்ள வேண்டும். பலரிடம் புத்திசாலியாகப் பேசும் நீங்கள், சிலரிடம் அசடு போல் நடந்துகொள்கிறீர்கள்." கண்ணசைவிலேயே ‘யாரிடம்?’ எனக் கேட்டார். "என்னிடமும்", என முகபாவனையாலே சொன்னார். ‘அட அசடே!’ என முகபாவனையாலே சொன்னார். "எங்களிடமும், இனி நீங்கள் புத்திசாலியாக நடந்துகொள்ள வேண்டும்" எனப் பிதற்றிய மனைவியைப் பெருமிதத்தோடு பார்த்தார். தெனாலியின் கண்களில் வந்த அன்பும் முகத்தில் வெளிப்பட்ட பரிவும் அவரின் உடல்மொழிகள் சொன்ன கனிவுகளுக்காகவும் இப்படி ஏதாவது பேசி மகிழ்வதும் நெகிழ்வதும் தெனாலி மனைவியின் வழக்கம்.

  • நீங்கள் உரையாடும்போது உங்களின் வார்த்தைகள் 7% செய்தியையும் உங்களின் குரலும் உணர்வும் 35% செய்தியையும் உங்களின் உடல் மொழிகள்தான் மீதமுள்ள 55% செய்தியையும் சொல்கின்றன என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

இல்லத்தரசனாக, உள்ளத்தரசனாக வேண்டும்...

நாம் நினைத்த காரியம் ஒருவரிடம் முடியும்வரை எவ்வளவு குழைகிறோம். முகத்தில்தான் எவ்வளவு பவ்யம், புன்சிரிப்பு, பிரகாசம்!

காரியம் சாதிக்கும்வரை, என்ன நடந்தாலும் உங்களால் முடிந்தளவு பொறுமையாக இருப்பீர்கள். இதைக் கவனித்திருக்கிறீர்களா?

நெருங்கியவர்களிடம் நீங்கள் நினைத்ததிலிருந்து சிறிதளவு பிசகி எது நடந்தாலும் உடனே சீறுவீர்கள்.

உடனே பொறுமை இழந்திருப்பீர்கள். இதையும் கவனித்திருக்கிறீர்களா?

உறவுகளிடம் சீறுவதும் ஊராரிடம் பதுங்குவதும் தொடர்ந்தால்... உங்கள் உள்ளத்தின் அரசராக நீங்கள் இல்லை என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

வெறும் ரேஷன்கார்டோடு மட்டும் இல்லத்தரசன், இல்லத்தரசி என்ற பட்டங்கள் நின்றுவிடக்கூடாது. அவை நிஜமாக வேண்டும்.

யாரிடமோ, எதற்காகவோ பொறுத்திருக்கும் மனிதர்கள்

உறவுகளிடம் எதற்காகவும் பொறுத்திருக்கத் தயாராயில்லை

மனதினுடைய
மன்னனாக
ஆகாதவன்,
மன்னன்
ஆன
பின்னும்
கூட
அடிமையே!

பொறுத்தவர் பூமியாள்வார். உண்மைதான். காசுக்காக சிரிப்பவரின் கஜானாவில் காசு கொட்டும்தான். நல்ல உடல்மொழி செல்வத்தை ஈர்க்கத்தான் செய்யும். இதெல்லாம் பெரிதல்ல.

அரசனாயிருப்பதும் அரசனாவதும் பெரியதல்ல.

இல்லத்தரசனாக திகழ்வதே பெரிது.

இல்லத்தின் அரசனாக வேண்டுமானால், உங்கள் உள்ளத்தின் அரசனாக வேண்டும் முதலில்.

தன்னை ஆளத்தெரிந்தவரால்தான் இல்லத்தைச் சுமுகத்தன்மையோடு நடத்திச் செல்ல முடியும்.

அப்படி இல்லாவிட்டால் அதட்டி, உருட்டி, அடிதடி அராஜகத்தோடு நடக்கும் ஒரு ராஜாங்கமாகத்தான் குடும்ப நிர்வாகம் பல நேரங்களில் இருக்கும்.

காசுக்காகச் சிரிக்க முடிகிறது.

காரியத்திற்காகப் பொறுமை காக்க முடிகிறது.

எதற்கோ யாராரிடமோ காட்டும் பொறுமையை, கனிவை, பணிவை உற்றாரிடம் காட்ட ஆரம்பியுங்கள்.

> ஆடும்
> மனதை
> ஆள
> அறிவதே
> நிஜ
> அரசாட்சி

உணர்ச்சிகள் கட்டுக்குள் வரும் கலை கிட்டும்.

உங்களின் உள்ளத்தரசராவீர்கள். உள்ளத்தரசியாவீர்கள்.

Portrait of young Nithyananda