உடல்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
உடல் என்ன, குப்பைத் தொட்டியா?
* விழிப்புணர்வோடு ரசித்து ஈடுபடும்போது ருசித்தல் ஒரு தியானம் -
ஆனால், நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது மனிதர்கள் விழிப்புணர்வின்மையிலேயே வாழ்வதால், அதே ருசிக்கு அடிமைகளாகி விடுகிறார்கள்.
உடலுக்கு உற்சாகமளிக்க வேண்டிய உணவே உபத்திரங்களை உருவாக்க ஆரம்பித்து விடுகிறது.
* ருசிக்கு அடிமையானவர் - பசிக்குப் புசிக்காமல், ருசிக்குப் புசிக்க ஆரம்பிக்கிறார். ருசிக்குப் புசிப்பதால்... உடலின் உண்மைத் தேவையை மீறி உடலுக்குள் விதவிதமாய் உணவு கொட்டப்படுகிறது.
உடல், ருசியின் குப்பைத்தொட்டியாக மாறிவிடுகிறது.
* மனிதருக்கும் மிருகத்திற்கும் இடையிலிருக்கும் ஒரு மிகப்பெரிய வித்தியாசத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்...
மனிதர்கள் ருசிக்குச் சாப்பிடுகிறார்கள். மிருகங்கள் பசிக்குச் சாப்பிடுகின்றன!
காளையால் இழுக்க முடியாத அளவுக்கு அதிகச் சுமையை வைத்து, "இழு!" என ஏவும்போது அது தடுமாறினால், அது தவறு செய்வதாகப் பொருள்படுமா?

ஆத்திகருக்கு...
உங்களின் இஷ்டதெய்வத்துக்கு
உணவு படைக்கும்போது...
எவ்வளவு பக்தியுணர்வோடு
படைப்பீர்கள்! அதை
நினைவுகூருங்கள்...
அதே பக்தியுணர்வோடு உங்கள்
உள்ளே குடியிருக்கும் உயிர்
எனும் தெய்வசக்திக்குத்தான்
சாப்பிடுதல் எனும் பூஜை
வழியாக படையல் செய்கிறீர்கள்.
எனவே, சாப்பிடும்போது அதே
பக்தியுணர்வோடு சாப்பிட்டுப்
பாருங்கள். பரவசப்பெருக்கால்
நிறைவீர்கள். உடல்
கோயிலாகும்!
உடலின் தகுதிக்கும் தேவைக்கும்
அதிகமான அளவு உணவை உள்ளே
தள்ளிவிட்டு... "எனக்கு ஜீரணிக்கோளாறு!"
என உடல் மேல் பழிபோட்டால் என்ன
அர்த்தம்? யார் பொறுப்பு...? சொல்லுங்கள்.
"YOU ARE FOOD" என ஜே. கிருஷ்ணமூர்த்தி
சொல்கிறார். YOUR EATING HABIT TELLS
'WHO YOU ARE' எனச் சொல்கிறது தாவோ
தத்துவம்.
"உணவுக்கும் மனித குணத்துக்கும்
நேரடித் தொடர்புண்டு. நாவைக்
கட்டுப்படுத்தியவர், நவ குணத்தையும்
கட்டுப்படுத்தியவன்" எனச் சொல்கிறது
வேதாந்தம்.
* உண்ணும்போது சாந்தமாய்,
நிதானமாய் உண்ண முடிகிறதா... "போதும்"
என்ற உணர்வு வந்ததும் காரை பிரேக்
போட்டு நிறுத்துவது போல உண்ணுவதை
நிறுத்த முடிகிறதா... நாக்கிற்கு மட்டும்
மதிப்பளிக்காமல் "என் உடலுக்கு இந்த
உணவு, இவ்வளவு உணவு பொருந்துமா"
என உடலை மதித்து உணவருந்துகிறீர்களா..
உடல் கோயில், உணவு பிரசாதம், நீங்கள்தான் அர்ச்சகர். உங்களின் இரைப்பை என்னும் கர்ப்பக்கிரகத்திற்குச் செல்லும் பிரசாதங்கள், பிரசாதங்கள்தானா?... ஒரு நாளின் மூன்று வேளையும் பூஜை புனிதமாக நடைபெறுகிறதா?...
கோயிலுக்குள் அராஜகமோ, துஷ்பிரயோகமோ கூடாது. கோயிலின் புனிதம் காக்கப்பட்டால், அங்கு தெய்வசக்தி விழித்துக்கொள்ளும். எல்லாம் சுபமாகும்.
நிட்டி ராஜன் எங்கு சென்றாலும் ஏதாவது ஒரு நகைச்சுவை அவரைச் சுற்றி அரங்கேறிக் கொண்டே இருக்கும்.
நிட்டியும் அவரது மனைவியும் ஒரு திருமணத்திற்குச் சென்றிருந்தார்கள். திருமண மண்டபத்திற்குச் சென்றிருந்தார்கள். திருமண மண்டபத்தின் கடைசி வரிசையில் அமர்ந்திருந்த நிட்டி அடிக்கடி வெளியே எழுந்து சென்றார். திரும்ப வரும்போது ஒரு ஜாங்கிரியோடு வந்து சேர்ந்தார்.
நிட்டியின் மனைவி, “ஏங்க எதுக்கு அடிக்கடி எழுந்து போறீங்க?” என்று கேட்க,
நிட்டி, “ஜாங்கிரி ரொம்ப நல்லாயிருக்கு அதனால்தான்... அடிக்கடி...” என்று இழுத்தார்.
நிட்டியின் மனைவி, “இது ரொம்ப மோசம். ஏற்கெனவே ஆறு ஜாங்கிரி சாப்பட்டீங்க.... எனக்கு ஒன்று பரவாயில்லை. ஒரே நேரத்துல இவ்வளவு சாப்பிட்டா உடம்பு என்னதுக்கு ஆகும்?” என்று பரிதவிப்போடு கேட்டார்.
நிட்டி, “இந்த ஒருமுறை மாத்திரம்...
இந்த ஒரு முறை மாத்திரம்...” என்று கெஞ்சி மேலும் இரண்டு சாப்பிட்டுவிட்டார்.
அடுத்து “இதுதான் கடைசி” என்று சொல்லிவிட்டு ஒன்பதாவது ஜாங்கிரியோடு வந்து சேர்ந்தார்.
நிட்டியின் மனைவி, “ஏங்க உண்மையைச் சொல்லுங்க... ஒசியில் கிடைக்கிறது என்பதற்காக இப்படி ஒன்பது ஜாங்கிரிகளைத் திரும்பத் திரும்ப போய் வாங்க உங்களுக்குக் கூச்சமா இல்லை” என்று கேட்டார்.
| நாத்திகருக்கு... | |
|---|---|
| நா த் தி க ம் | உங்களின் இஷ்டத்திற்குரிய நபருக்கு விருந்து படைக்கும் போது... எவ்வளவு குஷியோடும் அன்போடும் செய்வீர்கள்! அதே உணர்வோடு, நண்பரான உங்களின் உடலுக்கு உணவு தரும் ஒவ்வொரு நொடியிலும் வாழுங்கள். பரவசம் பொங்கும். உடல் வசந்த மாளிகையாகும்! |
நிட்டி, "நான் ஏன் கூச்சப்படணும், நீதான் கூச்சப்படணும்".
"நான் ஒவ்வொரு முறை வாங்கும்போதும் 'என்னுடைய மனைவி ஆசைப்படறா... அதனால் இன்னொன்று...' எனச் சொல்லிச் சொல்லித்தான் வாங்குகிறேன். நான் ஏன் கூச்சப்பட வேண்டும்" என்று சொல்லிவிட்டுக் கிண்டல் சிரிப்பு சிரித்தார்.
இந்தச் சம்பவத்தில் நிட்டி சாமர்த்தியமாகப் பேசினாலும் நிஜத்தில் ஒரே நேரத்தில் ஒன்பது ஜாங்கிரிகளை ஏதோ குப்பைத்தொட்டியில் போடுவது போல இரைப்பையில் போட்டது - உடலை இழிவுபடுத்தியதற்குச் சமம்.
இப்படி உடலை இழிவுபடுத்துவதால் வரும் நோய்களுக்குப் பெயர்தான் நீரிழிவு நோய், இரத்தக்கொதிப்பு என்ற எல்லாமே.
கட்டுப்பாடில்லாத, ருசிக்கு அடிமையான மிதமிஞ்சிய உணவுப்பழக்கமே... உடலின் ஆரோக்கியத்தைக் கெடுத்து, உடலை இழிவுசெய்யும் நோய்!
வாய் மட்டும் இருந்தால்... இன்றைய உணவு உண்ணும் முறைக்கு, இரைப்பை குமுறிக் குமுறி அழும்... கல்லீரல் கண்டபடி கத்தும்... கணையம் அபத்தம் என்று திட்டும்... சிறுநீரகம் 'சீச்சீ' என்று வேதனைப்படும்!
"உணவு அருந்தலாமா? உணவருந்த வாருங்கள்?" என்றுதான் நம் முன்னோர்கள் அழைத்திருக்கிறார்கள்.
காரணம், "உணவே மருந்து", "உண்ணுதல் ஒரு சிறந்த தியானம்" என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள்.
இன்று சிலர் சாப்பிடுவதைப் பார்த்தால் - வாங்க உணவு கொட்டிக்கலாம்! வாங்க ஒரு வெட்டு வெட்டலாம்! என்று அழைப்பதுதான் சரி என்று தோன்றுகிறது.
இதற்கு... அன்னம் (உணவு) பிரம்மம் (தெய்வம்)!
உமிழ் நீர் - உயிர்நீர்!
- என்ற மிகப் பெரிய உண்மைகள் நமக்கு மறந்து போனது அல்லது மறைக்கப்பட்டதுதான் காரணம்.
மேலைநாட்டு நாகரிக மோகத்தால் நமது உணவு அருந்தும் முறை, ருசிக்காக உணவை இரைப்பையில் கொட்டும் ஒரு நிகழ்ச்சியாக மாறிப்போனதுதான் கஷ்டம்.
அரக்கபரக்க, ஆவி பறக்க, விறுவிறு என்று சுவையும் மணமும் தூக்க சாப்பிடுபவர்கள்... நாலு, ஐந்து முறைக்குமேல் பெரும்பாலும் மென்று உண்பதில்லை.
| நோய் | ருசிக்கும் நாவை நயமாக நீங்களே கட்டுப்படுத்திவிடுங்கள். இது எளிது. நல்லது! கட்டுப்படுத்தாவிட்டால், தன்னை இழிவு படுத்தியதைக் காரணங்காட்டி உடலானது நீரிழிவு நோயைப் பரிசாகத் தரும்! | விளைவு - மிக மெல்லிய இரைப்பைக்கு மிகக் கடினமான உணவு சென்று சேர்கிறது.
ஒரு கைப்பிடி சோற்றை எடுத்து கூழாகும் அளவுக்குப் பிசைந்து பாருங்கள். அப்போது புரிய வரும் நாம் அரைகுறையாகச் மென்று விழுங்கும் ஒவ்வொரு குவளை உணவையும் கூழாக்க இரைப்பை எவ்வளவு கஷ்டப்படும் என்று!
உணவு வாயில் இருக்கும் போது, ‘இது கார உணவு’ என எரிச்சலைத் தந்து சுட்டிக்காட்டும் நரம்புகள், வயிற்றுக்குச் செல்லும் போது அப்படிச் சுட்டிக் காட்டுவதில்லை.
ஆனால் நாக்கின் தோலைவிட
இரைப்பையின் தோல் மிக மெல்லியது என்று
நம் எல்லோருக்கும் தெரியும்.
நாக்கின் சுவைக்குக் கொடுக்கும்
முக்கியத்துவத்தை உடலின் சுகத்திற்கும்
ஆரோக்கியத்திற்கும் கொடுப்பதில்லை.
இதுபற்றி...
திருமூலர் மிக அழகாகக் கூறுகிறார்.
“உடம்பார் அழியின் உயிரார் அழிவார்.
திரும்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்...”
உடலைப் பேணிக்காக்காமல்
வாழ்க்கையை வீணடித்தால் - உடல் மட்டும்
அழியாது. அதனோடு சேர்ந்து உயிராற்றலும்
அழியும். குறையும்.
ஆரோக்கியமில்லாத உடலையும்
குறைவான உயிராற்றலையும் வைத்துக்
கொண்டு சந்தோஷம், வாழ்க்கையை
அனுபவித்தல், ஆனந்தமாக வாழ்தல் என்ற
மெய்ஞானம் சம்பந்தப்பட்ட நிலைகளை
அனுபவிக்கச் சாத்தியங்களே இல்லை.
அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுதல்,
ருசிக்காக மட்டும் சாப்பிடுதல், உணவை
அருந்தாமல் விழுங்குவது ஆகிய அனைத்தும்
தவறு.

சரியான நேரத்திற்குச்
சாப்பிடாவிட்டால் நம்
உடல் சோர்வடையும்
என்பது ஐதீகம்!
சாப்பிட்டால் நம்
உடல் சோர்வடையும்,
மந்தமாகும், தூக்கம்
வரும் என்பது நிஜம்.
சாப்பிடும் முன்பைவிட,
சாப்பிட்ட பின்
நம் உடல் ‘அதிகம்
ஸ்தம்பிக்கிறது’ என்றால்
எதற்காகச் சாப்பிடுகிறீர்கள்?
குற்றம்! எங்கு...
உணவிடமா?
உங்களிடமா?
பதில் காணுங்கள்!
சாப்பிடும்போது "சாப்பிடுதல்" என்ற ஒரு செயலை மட்டும் முழுமையாகச் செய்யாமல் - அந்த நேரத்தில் பேசுவது, நிகழ்ச்சிகளைப் பார்ப்பது, படிப்பது என்ற பல செயல்களில் ஈடுபடுவதால்தான், இதுபோன்ற தவறுகள் அதிகம் நடக்கின்றன.
ஒரு அருமையான ஜென் கூற்று.
“சாப்பிடும்போது சாப்பிடு!
பாடும் போது பாடு!
சாப்பிடும் போது பாடாதே!
பாடும் போது சாப்பிடாதே!
சாப்பிடும் போது - சாப்பிடு!”
(இது மிக அருமையான தியானம்)
சாப்பிடும் போது வேறு எந்த வேலையும் செய்யாமல், வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல் முழுமையாக “சாப்பிடுதல்” என்ற செயலை மட்டும் செய்வதால் (தியானிப்பதால்) கிடைக்கும் நன்மைகள்.
1. ஒரே செயலை ஆழமாகச் செய்யும்போது... மனமானது எதிர்காலம் நோக்கிப் பறக்காமல், இறந்த காலத்தைக் குறித்து நோகாமல், நிகழ்காலத்திலேயே இருக்கும். நிகழ்காலத்திலேயே இருப்பது ஒரு அற்புதமான தியான நிலை.
2. அதிக நேரம் உணவு வாயிலிருப்பதால்... உணவை முழுமையாக ஜீரணித்து, அதை சக்தியாக மாற்றத் தேவையான எல்லா வேதிப்பொருட்களும் உமிழ்நீர் சுரப்பி மூலம் சுரக்கப்படும்.
3. முழுமையாகச் சுவைப்பதால் ‘சுவைத்த திருப்தி’ கிடைக்கும்.
ஒரே ஒரு மைசூர்பாவை மெல்லத் தின்று, அதன் நெய் கலந்த இனிப்பு சுவை, உமிழ்நீரிலேயே கரைந்து மறையும் அளவுக்குச் சுவைத்துச் சாப்பிட்டால் ஒரு மைசூர்பாவைத் தாண்டி இரண்டாவது சாப்பிடுவது தானாய் தவிர்க்கப்படும். இதுவே முழுத் திருப்தியை ஏற்படுத்தும்.
மூன்று, நான்கு முறை மென்றவுடன் இனிப்பை விழுங்குவது என்ற பழக்கம் இருந்தால் - பத்து மைசூர்பா சாப்பிட்ட பிறகும் இன்னொன்று சாப்பிட்டால் பரவாயில்லை என்று தோன்றும். திருப்தி இருக்காது.
ஒரு மைசூர்பாவை மெல்ல ரசித்து, சுவை கரையும் வரை அனுபவித்துச் சாப்பட்டால் ஒரே ஒரு மைசூர்பா, பத்து மைசூர்பா சாப்பிட்ட பிறகும் கிடைக்காத திருப்தியைத் தரும்.
4. மெல்ல மெல்ல மென்று வாயிலேயே உணவைக் கூழாக்குவதால் என்ன நடக்கிறது என்பது பற்றிய ஒரு சமீபத்திய ஆராய்ச்சி இப்படிச் சொல்கிறது...
★ குணமாக்கும் வேதிப்பொருட்கள் (Healing chemicals) உமிழ்நீரில் நிறைய சுரக்கப்படுகிறது.
★ இரைப்பையின் கூழாக்கும் வேலை குறைவதால் அதற்காகச் செலவிடப்படும் இரத்த ஓட்டமும் சக்தியும் மிச்சமாவதால் - எப்போதும் வரும் உண்டபின் மயக்கம் வராமல், உற்சாகம் பிறக்கிறது.
★ உணவைக் கூழாக்க பலமுறை மெல்லுவதால் முகத்தில் இருக்கும் பல முக்கியமான தசைகள் இயக்கம் பெறுவதால் முகத்தில் இறுக்கம் குறைந்து மிருதுத்தன்மை பெருக ஆரம்பிக்கிறது.
★ சுவைத்த திருப்தியடைவதால் தேவைக்கு அதிகமான உணவை நாம் எளிதாகத் தவிர்த்துவிடுவோம்.
உணவை அருந்துவது என்பது, “சாப்பிடும் போது சாப்பிடுதல்” என்ற தியானத்தை நடைமுறைப்படுத்தும் போது மாத்திரமே சாத்தியம்.
உணவை இரைப்பையில் கொட்டாமல், உணவை அருந்த ஆரம்பித்தால் உணவே மருந்தாக மாறும்.
உணவை அருந்துவது எப்படி என்று தெரியாமல், விருந்தே சாப்பிட்டாலும் திருப்தி முழுமையாகக் கிடைக்காது. விருந்து செரிக்க பல நேரங்களில் மருந்து தேவைப்படும்.
உணவருந்தக் கற்றுக்கொண்டால் சாதாரண உணவும் விருந்தாகும். அதுவே நல்ல மருந்தாகும்.
அர்த்தமுள்ள சம்பவம்...
வாசகர் ஒருவர் கேட்டிருந்த கேள்வி...
“எது தியானம்?”
பதில்... “உங்களின் உடல் உங்களோடு மிக
ரம்யமாக இருக்கும் நிலையையும்,
அப்படி இருக்கச் செய்யும் முறையையும்
தியானம் எனச் சுட்டிக் காட்டுகிறேன்.
● உடலை மதித்து, மனதை மதித்து
உயிரைத் துதித்து, வாழ்வைத் துதித்து
நீங்கள் செய்யும் செயல் எதுவானாலும்
அது தியானமே! அது தியானமே!”
ஆழமான உறவின் அஸ்திவாரம்...

உங்களின் மிக நெருங்கிய நண்பன் யார்?
பதில் கண்ட பின் தொடருங்கள்.
நிச்சயம் உங்கள் பெயரைத் தவிர மற்ற எல்லோரின் பெயரும் மனதில் ஓடியிருக்குமே!
மனிதர்கள் அவர்களைத் தவிர மற்ற எல்லோரையும் நேசிக்கத் துடிக்கிறார்கள். அதில் மிக ஆர்வமாயிருக்கிறார்கள்
உங்களுக்காகவே வாழும் உங்களின் உடலுக்காக இதுவரை நீங்கள் என்ன உதவி செய்திருக்கிறீர்கள்?
ஆசைப்படும் போதெல்லாம் அதன் ஐம்புலன்களையும் அளவுக்கதிகமாகப் பயன்படுத்துவதைத் தவிர, வேறு எந்த நல்லதையும் மனிதர்கள் தங்கள் உடலுக்குச் செய்வதில்லை.
வீட்டுச் செல்லப் பிராணியைவிட,
மிக விசுவாசத்தோடு வேலை செய்யும்
மிக அருமையான நண்பனான உடல் மதிக்கப்படுவதேயில்லை.
உங்கள் உடலை மதிப்பது ஆனந்தத்தின் துவக்கம்.
உண்மையான அன்பின் நுழைவாயில்.
அது ஆழமான உறவின் அஸ்திவாரம்.
| தனித் | | தீவு | | அல்ல | | நீ! |
உங்களின் துணிமணியைப் பராமரிப்பதில் பாதியளவுக்காவது உங்கள் உடலைப் பராமரியுங்கள்.
உடல்மேல் அக்கறை கொள்ளுங்கள்.
உடலைக் கவனியுங்கள்.
காப்பாற்றுங்கள்.
அன்பு செய்யுங்கள்.
உங்களுக்காக வாழ ஆரம்பியுங்கள்.
உங்களோடு ஆழமான நட்புறவு கொள்ளுங்கள்.
மேலே படித்தவற்றைச் செய்து பாருங்கள்...
சுகம் -
ரம்யம் -
உற்சாகம் -
உடலில் பூப்பதைப் பார்ப்பீர்கள்!
> நீயும்
> நீயும்
> சேராத
> வரை...
> நீங்கள்
> தனித்
> தீவு
> தான்!