காதல்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
★ ஒரு பூவைப் பார்த்து ஏற்படுவதும் ஈர்ப்புதான்!
ஒரு கலையைப் பார்த்து ரசிப்பதும் ஈர்ப்புதான்!
ஒரு மனித உடலைப் பார்த்து ஏற்படுவதும் ஈர்ப்புதான்!
ஒருவர் குணத்தை பார்த்தஉடன் ஏற்படுவதும் ஈர்ப்புதான்!
ஈர்ப்பு+ இச்சை = காமம்
ஈர்ப்பு+ பாசம் = காதல்
ஈர்ப்பு+ மதிப்பு = நட்பு
★ மனதில் ஏற்படும் ஈர்ப்போடு, இச்சை உணர்வு கலக்கும்போது, அது காம உணர்வாக மாறுகிறது.
★ மனதில் ஏற்படும் ஈர்ப்போடு, பாச உணர்வு கலக்கும்போது, அது காதல் உணர்வாக மாறுகிறது.
★ மனதில் ஏற்படும் ஈர்ப்போடு, மதிப்பும் மரியாதையும் கலக்கும்போது, அது நட்பு உணர்வாக மாறுகிறது.
காதல் என்பது அற்புதமான உணர்வு. உங்களில் பலருக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ‘ஒரு துறவி காதலைப் பற்றிப் பேசலாமா?’ என்கிற கேள்வி உங்கள் மனதில் தோன்றலாம்.
ஸ்ரீ ராமானுஜரின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்றைச் சொல்கிறேன். கேளுங்கள். அது உங்களுக்குள் புதிய தெளிவை உருவாக்கும்.

நட்பு
மலரும் போது
உறவு
பூரணநிலையை
அடைகிறது.
அன்பு
மலரும் போது
மனிதரே
பூரண நிலையை
அடைகின்றார்!
ராமானுஜர் ஒரு புரசித்துறவி, தாழ்த்தப்பட்ட மக்கள் மனிதர்களாகவே கருதப்படாத அந்தக்காலத்தில், எல்லா மனிதரும் கடவுளின் அம்சம்தான் என்று திருக்கோஷ்டியூர் கோயில் கோபுரத்தின் மீது ஏறி, ஊர் முழுக்கக் கேட்கிறபடி உரக்க மந்திரம் சொன்னவர்.
ராமானுஜர் மிகப் பெரிய வேதாந்தி. பல
தத்துவங்களைக் கரைத்துக் குடித்தவர்.
ஆனால், தத்துவங்களைச் சளைக்காமல்
பேசுபவர்களிடம், காதல் போன்ற
மென்மையான உணர்வைச் சொட்டும் இதயம்
இருப்பதில்லை.
மனத்திற்குப் பதிலாக மூளைக்கே அதிக
முக்கியத்துவம் கொடுக்கும் மனிதர்கள்தான்.
தத்துவவாதிகள்.
ராமானுஜர் அந்த மாதிரியான தத்துவவாதி
அல்ல. காதலுக்கும் அன்பு செலுத்துவதற்கும்
அவர் கொடுத்த முக்கியத்துவம் அலாதியானது.
ஒருமுறை ராமானுஜரைத் தேடி நடுத்தர வயது மனிதர் ஒருவர் வந்தார். "சுவாமிகளே! எனக்குக் கடவுளை அடைய வேண்டும். அதற்கு என்ன வழி என்று எனக்குக் கற்றுத் தாருங்கள்" - சாஷ்டங்கமாகக் காலில் விழுந்து வணங்கியபடி அந்த மனிதர் கேட்டார்.
ராமானுஜர் அவரிடம், "கடவுளை அடையும் வழி சொல்வதற்குமுன், உன்னிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். நீ யாரையாவது காதலித்திருக்கிறாயா? யார் மீதாவது அளவு கடந்த அன்பு செலுத்தியிருக்கிறாயா?" என்று கேட்டார்.
"என்னது, காதலித்திருக்கிறாயா என்றா கேட்கிறீர்கள்! நான் ஒரு கட்டை பிரம்மச்சாரி! நோய்வாய்ப்பட்ட மனிதர்களைக் கண்டு ஓடுகிற மாதிரி, பெண்களைக் கண்டாலே நான் தூர ஓடிவிடுவேன். என்னைப் பார்த்தா இப்படி ஒரு கேள்வியைக் கேட்டீர்கள்!" கொஞ்சம் கோபமாகவே கேட்டார் அந்த மனிதர்.
"பரவாயில்லை. கடந்த காலத்தில் என்றாவது ஒரு நாள், உன் உள்மனதில் ஏதோ ஒரு மூலையில் காதல் என்கிற உணர்வு கசிந்திருக்கிறதா?" என்று கேட்டார் ராமானுஜர்.
"திரும்பத் திரும்ப அதையே கேட்கிறீர்களே! பிரார்த்தனை செய்வது எப்படி என்று உங்களிடம் கற்றுக்கொள்ளத்தான் வந்திருக்கிறேன். காதலிப்பது எப்படி என்பதைக் கற்றுக் கொள்வதற்காக அல்ல" - மீண்டும் கோபமாகச் சொன்னார் அந்த மனிதர்.
"நீ சொல்வதைப் பார்த்தால், காதலிப்பதையும் அன்பு செலுத்துவதையும் என்னவென்று உணராத மனிதராக நீ இருக்கிறாய். காதலிக்கத் தெரியாத மனிதருக்குக் கடவுளை அடையும் பிரார்த்தனையை நான் எப்படிச் சொல்லித்தர முடியும்? அன்பு செலுத்தத் தெரியாத மனிதனால், பிரார்த்தனையைப் புரிந்துகொள்ளவே முடியாது.
அன்பும், காதலும் பிரார்த்தனையின் இன்னொரு அற்புதமான வடிவங்கள். காதலினால், பிரார்த்தனை சுலபத்தில் கைகூடும். அதன்மூலம் கடவுளையும் எளிதில் அடைந்துவிட முடியும். ஆனால், உனக்கு அந்த அடிப்படையே இல்லையே! முதலில் மனிதர்கள் மீது அன்பு செலுத்தக் கற்றுக்கொள். பிறகு கடவுளை அடைவது பற்றி யோசிக்கலாம்" என்று சொல்லி, அந்த மனிதரை அனுப்பிவிட்டார் ராமானுஜர்.
காதல், அன்பு ஆகியவற்றின் மகத்துவத்தை இவ்வளவு எளிமையாக ராமானுஜரே எடுத்துச் சொன்ன பின்பு, யார்தான் அதற்கு எதிராகக் குரல் எழுப்ப முடியும்?
நமக்குள் இருக்கும் ஈகோவை அடக்கியாள மிகச் சிறந்த வழி காதல்தான். உணர்வுபூர்வமாக ஒன்றிவிட்ட இரண்டு காதலரிடையே 'நீ முக்கியமா? நான் முக்கியமா?' என்கிற கேள்வியே பிறப்பதில்லை. இருட்டான அறையொன்றில், இரண்டு மெழுகுவத்திகளை ஏற்றிக்கொண்டு உள்ளே செல்கிறோம்..
| காமம், காதல்; நட்பு | |
|---|---|
| அ | என்ற |
| ன் | மூன்றையும் தாண்டியது |
| பு | அன்பு! |
இரண்டு மெழுகுவத்திகளிடமிருந்து புறப்படும் வெளிச்சம் அறையை ஒளிமயமாக்குகிறது. இந்த வெளிச்சத்தில், இவ்வளவு ஒளி இந்த மெழுகுவத்தியிலிருந்து வருகிறது. இவ்வளவு ஒளி அந்த மெழுகுவத்தியிலிருந்து வருகிறது என்று தனித்தனியாகப் பிரித்து, அளந்து பார்க்க முடியுமா என்ன?
காதல் என்பதும் பிரித்துப் பார்க்க முடியாத ஒன்றுதான். என்றாலும் தங்கள் தனித்துவத்தைக் (Individuality) காத்து நிற்பது. ஒரு நதி ஓட வேண்டும் என்றால் இரண்டு பக்கங்களிலும் கரை நிச்சயம் வேண்டும். ஒரே ஒரு பக்கம் மட்டும் கரை இருந்தால் நதி ஓடுமா? இந்த இரண்டு கரைகள்தாம் இரண்டு காதலர்கள். கரைகளுக்கு நடுவே ஓடும் நதிதான் காதலர்களுக்கு இடையே தோன்றும் அன்பு.
கரைகள், நம் கண்களுக்குத் தனித்தனியாகப் பிரிந்து நிற்பவைகளாகக் காட்சி அளித்தாலும் அதில் ஓடும் தண்ணீருக்கு அடியில், இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்துதான் கிடக்கின்றன. காதலர்களும் அப்படித்தான்.
உண்மையான காதலர்கள் தங்கள் தனித்துவத்தைப் போராடிக் காக்க மாட்டார்கள். விட்டுக்கொடுப்பதன் மூலமே தங்கள் தனித்துவத்தைக் காத்து நிற்பார்கள்.
காதல் என்கிற அற்புதமான உணர்வை, காமம் என்கிற உணர்ச்சியோடு சேர்த்துக் குழப்பிக் கொள்ளாதீர்கள். காமம் என்பது, காதலின் ஓர் அம்சம் மட்டுமே. காமம் என்பது உடல் சார்ந்த உணர்வு மட்டுமே.
காதல் உணர்வில் தம்மை மறந்து மற்றவர்களைப் போற்றுகிறோம். காமத்தில் மற்றவர்களை மறந்து, நம்மை மட்டுமே முக்கியமாகக் கருதுகிறோம்.
காதல் என்பது மற்றவர்களைச் சுரண்டுவதல்ல. காமம் என்பது ஒருவர்க்கு ஒருவர் என்ற பெயரில் ஒருவரை ஒருவர் ஏமாற்றிக்கொள்வதுதான். இதனால்தான் காமத்தினால் மட்டுமே கவரப்பட்ட இரண்டு உயிர்களிடையே எந்தவிதமான அன்னியோன்யமும் இருப்பதில்லை. எனவேதான் அவர்கள் எளிதில் பிரிந்துவிடுகிறார்கள்.
இளம் வயதில் வருவதெல்லாம் உடல் கவர்ச்சிதான். அது காதல் என்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட காம இச்சைதான்.
| கா | உண்மையான காதலர்கள் தங்கள் தனித்துவத்தைப் போராடிக் |
|---|---|
| த | காக்க மாட்டார்கள். விட்டுக்கொடுப்பதன் மூலமே தங்கள் |
| ல் | தனித்துவத்தைக் காத்து நிற்பார்கள். |
இந்தக் குழப்பமான உணர்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது தேவையற்ற பிரச்சனைகளுக்குத்தான் இட்டுச் செல்லும். எனவே, காதல் விஷயத்தில் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்.
காரணம் - ஹார்மோன்களின் திடீர் திடீர் மாற்றம் நிறைந்த வாலிப வயதால், 'எதைக் காமம்? எதைக் காதல்?' என்று பிரித்தறிவது கடினம். காதல் வயப்பட்டது தானாக இருக்கும் பட்சத்தில், ஈகோ காரணமாக அது புனிதமான காதல்தான் என்று அடித்து கூறும் வாலிப வயது அப்படித்தான் கூறும்.
| மிக மிக விழிப்புணர்வும், | |

| புத்திசாலித்தனமும் பெற்றிருந்தால் | ||
| மாத்திரமே காமம் வேறு, காதல் வேறு | ||
| என்பதைச் சரியாகப் பிரித்துப் பார்க்க | ||
| முடியும். | ||
| சிறந்த காதலன் - | நல்ல நண்பன் | மிக மிக விழிப்புணர்வும், |
| சிறந்த காதலி - | நல்ல தோழி | புத்திசாலித்தனமும் |
| சிறந்த பெற்றோர் - | நல்ல நண்பர்கள் | பெற்றிருந்தால் |
| சிறந்த சகோதரன் - | நல்ல நண்பன் | மாத்திரமே காமம் வேறு, |
| சிறந்த சகோதரி - | நல்ல தோழி | காதல் வேறு என்பதைச் |
| சரியாகப் பிரித்துப் | ||
| பார்க்க முடியும்! |
- இப்படி நம்முடைய உறவுகளை சிறந்தவர்கள் என்று குறிப்பிடும்போது, அவர்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள் என்று குறிப்பிடத் தவறுவதில்லை. எல்லா உறவுகளிலும் நட்பு மலரும்போதுதான் அது ஒரு முழுமைத் தன்மை பெறுகிறது.
காதலிலிருந்து அன்பை நோக்கிப் பயணம் செய்ய ஆரம்பியுங்கள்!
மனிதன் மலர வேண்டும்!
★ இன்னும் மலராத மொட்டு மனிதர்களின் தனித்துவம் (Individuality)
★ மலர்ந்தும்... வாசமில்லா மலராயிருப்பவை! மனிதர்களின் ஆளுமை எனப்படும் குணாதிசயங்கள்... (Personality)
★ மனிதர்கள்
கடவுளாக மலர்வது மட்டுமே
இந்த உலகின்
பெரிய அதிசயம், ஆச்சரியம், சாதனை.
★ மலர்ந்த மலரின் ( மனிதரின் )...
நறுமணம் - மனிதநேயம்
நிறம் - அன்பு
அழகு - ஆனந்தம்
புத்தர் பக்குவமான சீடர்களிடம் அடிக்கடி சொல்வார்: "இதுதான் சத்தியம், உண்மை, அடிப்படை, அது ... நீ என்ற தனியொன்று இல்லை, நீயே இல்லை என்றால், நீ இறக்கவோ பிறக்கவோ முடியாது.
இதையெல்லாம் தாண்டி நீயே இல்லை எனும் போது நீ எப்படித் துன்பப்பட முடியும்... முடியாது. நீ எப்படி பற்றுதலில் சிக்க முடியும்... முடியவே முடியாது.
"இதையெல்லாம் புரிந்துகொள்ள நீ தயாரா?" எனக் கேட்டுவிட்டு, புத்தர் சொல்வார்:
"இதை ஏற்றுக்கொள்ள, புரிந்துகொள்ள,
தயாராக இல்லையென்றால்
இப்போதைக்கு நீ தியானத்தை முயற்சிக்காதே.
"நீ உண்மையானவனா - இல்லையா என்ற உண்மையைக் கண்டுபிடி.
முதலில், நீ இதை ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன் ? என்பதின் மேல் தியானம் செய். விடை காண்!
அடுத்தடுத்தவை தானாய் நிகழும்!"
நுனிநாக்கில் ஆங்கிலம்...
கனகச்சிதமான உடைகள்...
கையில் கொஞ்சம் பணம்...
நவநாகரிகக் கலாசாரம்....
சௌகரியமான வாழ்க்கை...
- இவற்றைக் கொண்டு மனிதர்கள் முன்னேறிவிட்டார்கள் என்று சொல்லலாமா? எதிர்பார்த்ததை அடைந்துவிட்டார்கள் என்று அறிவிக்கலாமா?
கேள்விக்குப் பதிலாய் ஒரு கதை,
விலங்குகள் ஆராய்ச்சியாளர் ஒருவர் நரமாமிசம் உண்ணும் ஒரு கும்பலிடம் சிக்கிக் கொண்டார். பிடிப்பட்ட வெள்ளையரை உயிரோடு வறுத்துத் தின்பதற்காக காட்டுக்குள்ளே கூச்சலோடு அந்தக் கும்பல் இழுத்துச் சென்றது.
புது விருந்துக்கு ஆள் கிடைத்த குஷியில் கும்பல் வெள்ளையரை தங்கள் தலைவரிடம் இழுத்துச் சென்றது. தலைவருக்கு அருகிலேயே தலைமுடி சரியாக வெட்டி, நாகரிக மனிதன் போன்று உடையணிந்த ஒரு காட்டுவாசி உட்கார்ந்திருக்க... வெள்ளையருக்கு புது நம்பிக்கை பிறந்தது.
ஒரு வேளை அவருக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தால் தப்பத்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் படித்தவர் போல் அந்த மனிதர் ஆங்கிலத்தில் வெள்ளையரிடம் பேசினார்.
வெள்ளையரிடம், "உன் கடைசி ஆசை என்ன? சொல். முடிந்தால் நிறைவேற்றி வைக்கிறேன். இங்கே இருக்கிறவர்களுக்கு பார்மாலிட்டீஸ் எல்லாம் தெரியாது" என்றார்.
வெள்ளையர் "ஆக்ஸ்போர்டு
பல்கலைக்கழகத்தில் படித்திருக்கிறாய்.
நாகரிக உலகில் வாழ்ந்திருக்கிறாய்.
இதெல்லாம் உன்னிடம் எந்த ஒரு
மாற்றத்தையும் செய்யவே இல்லையா?" என்று
வெகுண்டு கேட்டார்.
அதற்கு அவர் உடலை உலுக்கிக்கொண்டு,
"என்னை அப்படிக் கேட்டு விட்டீர்கள். நான்
எவ்வளவு மாறிவிட்டேன் தெரியுமா?
இவர்கள் போன்று அநாகரிகமாக நான் நடந்துக்
கொள்வதில்லை.
இப்பக் கூட உன்னை வறுத்தப் பின்பு, நான்
உன்னை ஸ்பூன், கத்தி, போர்க்கோடுதான்
சாப்பிடுவேன்! விரல்களைப் பயன்படுத்தவே
மாட்டேன். நான் நிறைய மாறிவிட்டேன்"
என்றாராம்.
நாகரிகம் என்ற பெயரால் வெளிவேஷம்
வேண்டுமானால் மாறலாம். மனிதர்கள்
மாறுவதற்கும் நாகரிகப் பூச்சுக்கும்
சம்பந்தமில்லை. இதை உணர்த்தத்தான் இந்தக்
கதை.
மனிதர்கள் மாற வேண்டும் என்பதைவிட, மனிதன் மலர வேண்டும் என்பதுதான் சாலச் சிறந்தது. உடை, நடை, பாவனையில் சிறு மாற்றம் செய்வது எளிது. இந்த மாற்றத்தால் அதிகபட்சம் நமது வெளிவேஷம் மாறும்.
வெளிவேஷம் மாறுவது சாதாரண மனமாற்றத்தைத்தான் ஏற்படுத்தும்.

குண மாற்றத்தை ஏற்படுத்தாது. மனமாற்றத்தால் சில சூழ்நிலைகளை எளிதாகச் சந்திக்க வழி கற்றுக்கொள்ளலாம். இதில் வேடிக்கை என்னவென்றால் வாழ்க்கை எப்போதுமே புதுப்புது சூழ்நிலைகளைத்தான் பரிசாகத் தரும்.
அதனால் தான் பலர் நாகரிகம், சௌகரியம், சொத்து இவற்றின் உச்சிக்குப் போன பின்கூட, நிம்மதியின் வாசல் கதவைக்கூடத் திறக்க முடியாமல் தவிக்கிறார்கள்.
குணம் பூரணமாக மாறினால் மனிதரே
மலர்ந்து விடுவார். மலர்ந்தவருக்கு எந்தச்
சூழ்நிலையையும் எளிதாக அணுகும் பக்குவம்
கிடைத்துவிடும்.
மேலைநாட்டுச் சிந்தனையாளர்கள்
எப்போதுமே மனம், எண்ணம் போன்ற மூளை
ரீதியான அணுகுமுறைகளைத்தான்
வலியுறுத்தினார்கள். இதன் பாதிப்பு உலகம்
முழுவதும் எதிரொலிக்கிறது.
குணம், உணர்வு போன்ற இதயரீதியான
உணர்வுகள் சம்பந்தப்பட்ட அணுகுமுறை தான்
இன்றைய மனிதருக்கு அவசியம்.
மூளை ரீதியான அணுகுமுறையால் Personality-யில் வேண்டுமானால் சில மாற்றங்கள் கொண்டுவர முடியும். இது போன்ற மாற்றங்களால்
அந்தஸ்தல்ல... நடந்துகொள்ளும் விதமே
மற்றவரை மதிக்க வைக்கும். வார்த்தைகளல்ல...
அதன் தொனியே...
சொல்லைச் செயலாக்கும்
வல்லமை பெற்றது.
வேஷம் மாற
கோஷம் கரைய நீங்கள்
மலர்வீர்கள்!
வியாபாரம் நன்றாகச் செய்வது எப்படி?
மேடைப்பேச்சில் மக்களைக் கவர்வது எப்படி?
புதிய மனிதர்களைக் கவர்வது எப்படி? என்பது போன்ற கேள்விகளுக்குப் பதில் தேடலாம். அவ்வளவே.
ஆனால், இவற்றால் நியாயமான தாகங்கள் தீர்க்கப்படுமா? என்றால் - இல்லை என்றே குணநல ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
இதயரீதியான அணுகுமுறைதான் இதற்கும் தீர்வு. மனிதர்களின் தனித்துவம் (Individuality) மலருவதே அந்தத் தீர்வு. மனிதர்களின் நியாயமான தாகங்களான நிம்மதி,
ஆ
ன
ந்
த
ம்
அன்பை வாரி இறைத்துவிடு. உருவாகும் வெற்றிடத்தை ஆனந்த உணர்வு நிரப்பிவிடும்.
நில்! கவனி! உணர்! இதயம் கண் திறந்துவிடும்!
திருப்தி, ஆரோக்கியம் முழுமையாக கிடைக்க வேண்டுமென்றால் தனித்துவம் மலரக் வேண்டும்.
தனித்துவம் மலர வேதகாலத்து ரிஷிகள் கூறும் தீர்வு:
எதற்கெடுத்தாலும் மனரீதியாக மட்டும் ஆராய்ந்து, மூளைரீதியாக மட்டுமே விவரிப்பது என்று மதிப்பிடுவதிலேயே நேரத்தை வீணாக்கி விடாதே! உனக்கு உள்ளேயும் வெளியேயும் நிகழும் ஒவ்வொன்றையும் மதிப்பிடுவதைத் தாண்டி, அவற்றை மதிக்க ஆரம்பி. உணர்வுரீதியாக அணுகுவது எப்படி என்பது புரிந்து விடும்.
ஒரு ரோஜா மலரை...
இளம் மாலைத் தென்றலை...
பௌர்ணமி முழுநிலவை...
சாதாரண மனிதர் ரசிப்பதற்கும் கவிஞன் ரசிப்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. உணர்வுரீதியான அணுகுமுறை அதிகமாக அதிகமாக, உங்களைச் சுற்றிச் சந்தோஷங்களும் அதிகரிப்பதை உணர்வீர்கள்.
இயற்கையையும் அழகையும் சுகத்தையும் மற்ற அனைத்தையும் மனிதர்கள் முழுமையாக அனுபவிக்க வேண்டும். இதற்கு அனுபவிக்கும் சக்தியான உணர்வு அதிகமாக வேண்டும்.
மனிதரின் தனித்துவம் மலர்ந்தால்தான் எந்த ஒன்றையும் முழுதாக அனுபவிக்கும் திறனைப் பெற முடியும். இன்று முதல் உணர்வுரீதியாக வாழ ஆரம்பியுங்கள். தனித்துவம் உங்களினுள் சுலபமாய் மலரும்!
அர்த்தமுள்ள சம்பவம்...
புலவர் ஒருவரும் சாக்கிய முனியும் பேசிக்கொண்டது... “நீங்கள்..." “இல்லை!” “நீங்கள் ஞானியா?" “இல்லை!” “நீங்கள் அவதாரமா?" “இல்லை!” “பின்னே நீங்கள் யார்? கடவுளா?" “ மனிதனாய் வாழும் மனிதன்!"
- மனிதர்கள் மனிதர்களாய் வாழ மறந்ததே, உலக வேதனையின் மூலவேர். பிடுங்கப்பட வேண்டியது இது!
மனித உடலில் இருப்பவர்கள் எல்லாம் மனிதர்கள் அல்ல!
இலட்சக்கணக்கில் மனிதருக்கு ஜீன்கள் இருக்கிறது என பல ஆண்டுகளுக்கு முன் ஆராய ஆரம்பித்த ஜெனிடிக்ஸ் (Genetics) ஆராய்ச்சித்துறை கூறுகிறது.
எலிக்கும் மனிதருக்கும் ஜீன்களின் எண்ணிக்கையில் வித்தியாசமே இல்லை என்ற அதிர்ச்சித் தகவலை அந்தத் துறை இப்போது வெளியிட்டிருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா?
அப்படியென்றால் எலிக்கும் மனிதருக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு அமிபாவுக்குள்ளும் ஒரு எலிக்குள்ளும் இருந்து அவற்றை இயக்கும் அதே சக்திதான் உங்களுக்குள்ளும் இருந்து, உங்களையும் இயக்குகிறது. இந்தச் சக்திதான் மண்ணுக்குள்ளும், கல்லுக்குள்ளுமிருக்கிறது.
சூது...
வாது...
மந்தம்...
கவலை...
வெட்கம்...
ரோசம்...
மனித குணங்கள்
அல்ல
எல்லாம் ஒரே சக்தி என்றால் இத்தனை விதவிதமான வெளிப்பாடுகளில் உயிரினங்கள் உருவாவது எப்படி?
மண்ணுக்குள்ளிருக்கும் சக்தியோடு புத்தி சேரவில்லை. அதே சக்தியோடு கொஞ்சம் புத்தி சேர்ந்து வெளிப்படும் ஒரு செல் உயிர், 'அமிபா'. அது ஓரறிவு உயிர்.
இன்னும் புத்தியின் அளவு அதிகமாக அதிகமாக ஓரறிவு, ஈரறிவு... ஆறறிவு மனிதர் வரை விதவிதமான வெளிப்பாடுகள் உருவாகின்றன.
இது ஒரு ஞானவிளக்கம்
மனிதரின் ஆறாவது அறிவு முழுமை பெறாவிட்டால், அவர் இன்னும் மனிதராக முயற்சி செய்து கொண்டிருக்கும் மிருகம் என்று அர்த்தம்.
ஏற்றுக்கொள்ளக் கடினமாக இருந்தாலும் இது உண்மையே!
ஜியாகிராஃபி சேனலில் மிருகங்களின் குணங்களைப் படம்பிடித்துக் காண்பிப்பதைப் பார்த்திருப்பீர்கள்.
நரியின் தந்திரம், எருமையின் மந்தத்தனம், நாகத்தின் விஷம் கக்கும் பேச்சு என்பன போன்ற வேறு எல்லா மிருக குணங்களும் மனிதரிடமிருந்து வெளிப்படும். எல்லா நிமிடங்களிலும் மனிதர் மனிதரல்ல. மிருகம்.
புத்தியின் அளவு அதிகரிக்கும்போது குணம் முதிர்ச்சியடைய ஆரம்பிக்கும். மனிதத் தன்மைகளான அன்பு, அமைதி, ஆனந்தம் உங்களிடம் இருந்து பறிக்கப்படும் நிமிடங்களையெல்லாம் கவனியுங்கள்.
அந்த நிமிடங்களில்... எந்த மிருகம் எட்டிப் பார்க்கிறது எனப் பார்த்து அதைத் துரத்த வழிசெய்யுங்கள். புத்தி பூரணமாகட்டும்.
| மனித | | உடல் | | எடுத்தவர் | | எல்லாம்... | | மனிதனாகிட | | நிறைய | | மாற | | வேண்டும்... |
இனி உங்களின் கட்டுப்பாட்டை இழக்கும் காலங்களையெல்லாம், உங்களை உருவாக்கும் தியான காலங்களாக்குங்கள்.
மிருகமாகும் நேரங்களையெல்லாம் கடவுளாகும் நேரமாக மாற்றுங்கள்!
