உன் காலம் தீரும் முன்,
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஓடோடி வந்துவிடு!
அடுத்த வேளை உணவு நீங்கள் சாப்பிடப்போவது ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில்.
அறுசுவை உணவு!
உலகிலேயே மிக மிகச் சுவையான உணவுகளை உங்களுக்குச் சாப்பிடப் பரிமாறுகிறார்கள். ஏக திருப்தி உங்களுக்கு. ஆனால் கடைசி வாய் உணவில் ஒரு முழு பச்சை மிளகாயைக் கடித்துவிட்டீர்கள்!
ஒரு மிளகாய் தரும் எரிச்சல், உங்கள் வாய் வழியாக மூளைக்கு, "என்ன சுவை! ஆஹா... என்ன சுவை!" எனச் சென்று கொண்டிருந்த சுக உணர்வை, திருப்தி என்ற கனவை, ஒரே நொடியில் துடைத்தெறிந்திருக்குமல்லவா?
> வாழும்
> கலை
> மட்டுமல்ல,
> சாகும்
> கலைகூட
> கற்பது
> அவசியம்.
ராஜ விருந்து சாப்பிடும் முன் இருந்த மனோ நிலையைவிட மோசமான நிலைக்கு இப்போது தள்ளப்பட்டிருப்பீர்கள். புரிகிறதா?
உலகின் எல்லா சந்தோஷ சாத்தியக்கூறுகளையும் ஒரு மனிதர் பார்த்துவிட்டார்.
அந்த வாழ்க்கை, அவருக்கு ராஜவிருந்து!
வாழ்க்கை எனும் விருந்து முடியும் சமயத்தில், அவரை வேதனை தொற்றிக் கொண்டால்...
உடலைவிட்டு உயிர் பிரியும் நொடிகளில் வேதனையும் அதிருப்தியும் தொற்றிக் கொண்டால், வாழ்ந்து என்ன பயன்?
சாகும் நிமிடங்கள் சுக நிமிடங்களாய் இருக்க வேண்டும்.
விருந்து முடியும்போது சுவையாய் முடிய வேண்டும். மரணம் ஒரு கலை.
இன்னும் சரியாகச் சொன்னால்,
வாழ்வதே வாழ்வதே எனும் அந்தச் சுப நிகழ்வைச் சந்திக்கத்தானே.
அதற்குத் தயாராக வேண்டாமா!
இந்தச் சாகும் கலை பற்றிய ஆழமான ரகசியங்களை NSP தியான முகாமில் விளக்குவேன். இங்கு சொல்ல பக்கங்கள் பற்றாது.
சுருக்கமாகச் சொன்னால்... சுகமாய் சாக மனிதனை தயாராக்க முடியும். அதற்குச் சில பிரத்யேக தியானங்களைச் செய்தால் போதும். உடலும் மனமும் அதற்கும் தயாராகிவிடும்.
உங்கள் ஜீவன் ஓய்வதற்கு முன்பே தியானபாதை நோக்கி ஓடி வந்து விடுங்கள்.
வாழும்போதும் சாகும்போதும ஆனந்தமாயிருக்கும் கலையை எளிதில் கற்றுக்கொள்வீர்கள்.
நீ
ஓயும்
முன்
ஓடி
வா!
ஓயும்
முன்
உய்வு
கொள்.
காரணம்
சாவும்
ஒரு
சுப நிகழ்வே!