KAILASA Library/கதவைத் திற ... காற்று வரட்டும்!/சாதனையின்Sign in
கதவைத் திற ... காற்று வரட்டும்!

சாதனையின்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

வேதனை

ஒருமுறை பக்தர் ஒருவர், "சாமி, இந்தக் கல்லறைகளிலெல்லாம் பிறப்பு, இறப்பு என்பதை மட்டும் எழுதி வைக்கிறார்களே, ஏன்?" என்று என்னிடம் கேட்டபோது...

"பிறப்பிற்கும் இறப்பிற்கும் நடுவில் குறிப்பிடும் அளவுக்கு மனிதர்கள் எதையும் சாதிப்பதில்லை. அதனால்தான் பிறப்பு இறப்பு தேதியை மட்டும் எழுதி வைக்கிறார்கள்" என்றேன்.

* சாதனை எதற்கு?
வாழ்வின் சோதனைகளிலிருந்து மீளவா?
இல்லை, பேர் படைக்கவா?
இல்லை, வாழ்வைக் கழிக்கவா!

* தன்னை வருத்திச் சாதகம் செய்வதால்
கிடைக்கும் சமுதாய அந்தஸ்திற்கு
சமுதாயம் கொடுக்கும் பட்டம்தான் சாதனை

* தன்னை வருத்தி சாதகம் செய்யும் போது
சிந்திய வியர்வைத் துளிகளுக்கும்
மனதில் உதித்த எதிர்பார்ப்புகளுக்கும்,
தக்க பதில் - உணர்வுரீதியாக கிடைக்காதபோது

கிளம்பும் எதிர்மறை உணர்வுதான் வேதனை.

★ வேதனைகளைத் தாண்ட
சோதனைகளைத் தாண்டி
சாதனைகளைத் தோண்டியவருக்கு
வேதனைகளே பரிசானால் - அதுதான்
சாதனையின் வேதனை.

ஒரு தியான சொற்பொழிவில் சொன்னது... “உங்கள் உடல் ஒரு யுத்தகளம். அதில் தினம் உலகப்போர் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.

தினம் பல கோடி நுண்ணுயிர்களும் செல்களும் கொல்லப்படுகிறது. அவை பிறக்கவும் செய்கின்றன.

‘இவ்வளவு பெரிய போர் நிகழும் போர்க்களமா நீ!’ என ஆச்சரியப்பட வைக்கும் வாழும் மனிதா, வாழ்க்கை எனும் சிறுதிடல் தரும் வேதனைகளைக் கண்டு அஞ்சலாமா?

வேதனையைத் தணிக்கும் சாதனைக்குள் இறங்குங்கள். அது பலன் தரும் சாதனை.”

"Mr. நிட்டி உங்களுக்கு போன்... Mr. மூர்க் முகுந்த் லைனில் இருக்கிறார்."

"ஹலோ முகுந்த்... என்ன விசேஷம்?"

சாரி. இன்று உங்களோட பர்த்டே பார்ட்டிக்கு என்னால் வரமுடியாது. ரொம்ப தவிர்க்க முடியாத வேலை வந்துடுச்சு".

“...............”

“கோபித்துக் கொள்ளாதீர்கள்”.

“................”

“நிட்டி, ப்ளீஸ் கஷ்டப்படாதீங்க, இன்னொரு முறை நிச்சயம் வரேன்...கவலைப்படாதீங்க.”

“முகுந்த், நீங்கள் கவலைப்படாதீங்க. என்னோட ப்ரின்ஸிபல் வேற...

Nithyananda seated in an ornate chair

சாதனைக்கு முன் கனவில் காலந்தள்ளுவது...

சாதனைக்குப் பின்
வேதனையில்
காலந்தள்ளுவது...

இந்த இரண்டுக்கும்

என்ன பெரிய

வித்தியாசமிருக்கிறது?

நீங்க பர்த்த்டே பார்ட்டிக்கு வந்தால் நிச்சயமாக நான் சந்தோஷப்படுவேன்.

நீங்கள் வராவிட்டால் தொல்லை மிச்சம்.
செலவு மிச்சம் என்று ரொம்ப
சந்தோஷப்படுவேன்.

வந்தால் வரவு.

வராவிட்டால் செலவில்லை.

அதனால் என்னை நினைத்து நீங்கள்
கவலைப்பட வேண்டாம். நான் போனை
வைக்கிறேன்”.

Mr. மூர்க்-கைப் போன்று தொடர்ந்து
வேதனைப் படுகிறவர்களும் உண்டு.
Mr.நிட்டியைப் போன்று எதையும்
விளையாட்டாக பார்த்துச் சந்தோஷப்
படுபவர்களும் உண்டு.

இதே போன்றுதான் சாதனைப் பாதையில் இருப்பவர்கள் சாதனையைப் பார்க்கிறார்கள்.

முதல் வகையினருக்கு: சாதனை
வேதனையில் ஆரம்பித்து வேதனையில்
முடிகிறது. இவர்கள் அப்பாவிகள்.

இரண்டாம் வகையினருக்கு: சாதனை
விளையாட்டில் ஆரம்பத்து விளையாட்டில்
முடிகிறது. இவர்கள் அனுபவிப்பவர்கள்.

இரண்டையும் தாண்டியும் சிலர் உண்டு: ‘சாதனையா? அப்படியென்றால்? எதற்கு இந்த வீண் வேலையெல்லாம்?’ என்றெண்ணும் இவர்கள் அதிமுட்டாள்கள். அனுபவிப்பவர்கள், அதிமுட்டாள்களைத் தவிர்த்து அதிகம் கஷ்டப்படுபவர்கள் இந்த அப்பாவிகள்தான்.

நிகழ்கால வேதனை காரணமாக எதிர்காலத்திலாவது வேதனையில்லாமல் சந்தோஷமாக வாழலாமே என்றெண்ணிதான் அறிவு, பணம், புகழ், அதிகாரம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு சில துறைகளிலாவது சாதித்து முன்னுக்கு வர முயற்சிக்கிறோம்.

சாதனை எங்கே அழைத்துச் செல்கிறது?

★ ஐன்ஸ்டீன் அடைந்ததும் சாதனைதான். அலெக்ஸாண்டர் அடைந்ததும் சாதனைதான். புத்தர் அடைந்ததும் சாதனையே. மூன்று பேரும் அவர்களால் முடிந்த சாதனையை, அவரவர் தேர்ந்தெடுத்த துறையில் செய்தார்கள்.

★ ஐன்ஸ்டீன் சாதித்தது அறிவுத்துறையில்.
அலெக்ஸாண்டர் சாதித்தது அதிகாரத்தில்.
புத்தர் சாதித்தது வாழ்க்கையில்!

★ ஐன்ஸ்டீன், அலெக்ஸாண்டர், புத்தர் மூவருமே புகழின் உச்சியைத் தொட்டவர்கள். சமுதாயத்தால் புகழப்பட்டார்கள்.

★ இவர்கள் மூன்று பேருமே எதையோ தேடி அலைந்தார்கள். மூன்று பேருக்குமே ஏதோதோ கிடைத்தது.

★ மூன்றுபேருக்குமே தேடியதுதான் கிடைத்ததா?

★ திருப்தி கிடைத்ததா?

ஒரு மனிதர் உண்மையில் என்ன சாதித்தார் என்பதை அவருடைய கடைசி கால கட்டத்தில்தான் அதாவது இனிமேல் சாதிக்க ஒன்றுமில்லை அல்லது சாதிக்க நேரமோ,

சாசோம்பேறித்தனத்தை
தஉதறி எறிய உதவும்
னைஎளிய வழிமுறை
சாதனை! அவ்வளவே.

சக்தியோ இல்லை என்ற காலகட்டம் வரும்போதுதான் அவரால் தெளிவாகப் பார்க்க முடியும்.

மூன்று பேரும் தங்களின் சாதனைப் பாதை பற்றியும் சாதனைக்குப்பின் அதை அவர்கள் எப்படிப் பார்த்தார்கள் என்பதை அவர்களுடைய கடைசி வார்த்தைகள் மூலமாகத் தெரிந்துகொள்ளலாம்.

மூன்று பேரின் கடைசி நிமிட நிகழ்வுகள்...

★ ஐன்ஸ்டீன் கடைசி காலத்தில் அவருடைய நண்பர். ஒருவர், “மீண்டும் இந்த உலகத்தில் வாழ ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால் என்ன செய்ய விரும்புவீர்கள்?'' அறிவியலில் அடுத்து என்ன சாதனையைச் சொல்லப்போகிறார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்க... ஐன்ஸ்டீன், “பிளம்பர் ஆவேன்'' என்றார்.

“என்ன சொல்கிறீர்கள்?... பிளம்பரா?'' ஆம். நான் பிளம்பராகத்தான் விரும்பினேன். எதிர்பாராதவிதமாக நான் விஞ்ஞானியாகிவிட்டேன். நான் முடிந்த அளவு உழைத்தேன்.

அறிவு, புகழின் உச்சியை தொட்டுவிட்டேன். ஆனால் என் வாழ்க்கையை வாழ்ந்த முழுமையான திருப்தி என்னிடம் இல்லை.

எனவே, நான் இன்னொரு முறை இந்த உலகில் வாழ வாய்ப்புக் கிடைத்தால்... நான் வாழ நினைத்த பிளம்பர் வாழ்க்கையைத்தான் வாழ்வேன்'' என்று சொல்லி முடித்தார்.

★ அலெக்ஸாண்டர் இறக்கும் தறுவாயில் தன்னுடைய தளபதியை அழைத்து...

“நான் இறந்த பிறகு என்னுடைய சவத்தை எடுத்துச் செல்லும் சவப்பெட்டியில் இரண்டு துவாரங்களை உருவாக்கி என்னுடைய இரண்டு கைகளையும் வெளியே தெரியுமாறு வെയுங்கள்'' என்றார்.

| த வ ம் | 'வேண்டிய வேண்டியார்க்கு எய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும்' - திருவள்ளுவர் தியானமென்னும் தவம், நீ விரும்பியதையெல்லாம் விரும்பியபடியே அடைய உதவும் சக்தியையும் புத்தியையும் தரும் ஆற்றல் பெற்ற கல்பதரு! |

தளபதிக்கு அலெக்ஸாண்டர் சொல்வது ஏனென்று புரியவில்லை.

தளபதி, குழப்பிக் கொண்டிருக்க, அலெக்ஸாண்டர் தொடர்ந்தார்.

“என்னுடைய இரு வெறுங்கைகளைப் பார்த்தாவது உலக மக்கள் தெரிந்து கொள்ளட்டும்...

உலகத்தில் பெரும் பகுதியைப் பிடித்த
அலெக்ஸாண்டர் இந்த உலகத்திற்கு
வரும்போதும் கையில் எதையும் கொண்டு
வரவில்லை. உலகத்தை விட்டுப்போகும்போதும்
கையில் எதையும் எடுத்துக் கொண்டு
போகவில்லை என்று...

எவ்வளவுதான் நான் சாதித்தாலும்
எனக்கு மிஞ்சியது வெறுங்கைதான்.
அதனோடுதான் நான் உலகைவிட்டுச்
செல்கிறேன் என்பதை மனிதகுலம் புரிந்து
கொண்டு திருந்தட்டும்” எனச் சொன்னார்.

★ புத்தர் தான் உடலைவிட்டு பிரியப்
போகிறேன் என்பதை முன்கூட்டியே
அறிவித்து விட்டார்.

எந்தவிதப் பதட்டமோ, துக்கமோ,
ஏக்கமோ இல்லாமல், வெகு சாதாரணமாக
அவர் உடலைவிட்டுப் பிரியத் தயாராகிக்
கொண்டிருக்கிறார்.

முகத்தில் சலனமற்ற புன்னகை.

நிம்மதியான பாவனை.

திருப்தியோடு, எந்தவிதக் கவலையோ,
ஆசையோ இல்லாமல் உடலை விட்டுப் பிரியப்
போகிறார்.

புத்தர் உடலை விட்டுப் பிரிய ஆரம்பித்துவிட்டார்.

portrait of a spiritual figure

சாதித்தபின்
கொண்டாடலாம்
என்பது
தவறான எண்ணம்.
கொண்டாடுகிறேன்,
அதனால்
சாதிக்க விரும்புகிறேன்
என்பது
சரியான எண்ணம்.

அந்த நிமிடத்தில் ஒரு பக்தர் "புத்தர், புத்தா!" என்று கூவியப்படி வருகிறார்.

பக்தர், "புத்தர் இவ்வளவு நாள் நீங்கள் இருந்து எங்களுடைய எல்லாப் பிரச்சனைகளுக்கும் பதிலளித்தீர்கள்.

இப்போது நீங்கள் எங்களைவிட்டுப் பிரியப் போகிறீர்கள்.

Swami Vivekananda

அனுபவத்திலிருந்து உறுதியாய் சொல்கிறேன்...

உயிர் விடும்போது,
மனிதரால் எடுத்து செல்ல
முடிந்த ஒரே ஒரு வஸ்து
மனிதத் தன்மை.

அதாவது பக்குவம்!

அதை அதிகரியுங்கள்.

அடுத்த உடல் எடுக்கும் போது

அது வந்து உதவும்...

அழகாய் ஆனந்தமாய் வாழ!

இனிமேல் எங்களை வழிநடத்தப் போவது யார்?

யார் எங்களுடைய பிரச்சனைகளுக்கெல்லாம்
தீர்வு கொடுக்கப்போகிறார்கள்..." என்று
பரிதவிப்போடு கேட்டார்.

புத்தர் மீண்டும் விழிப்புணர்வு நிலைக்கு வந்து, வெகு நிதானமாக ஒரு தியானமுறையை கற்றுத் தருகிறார்.

அதுதான் மூச்சு ஓட்டத்தைக் கவனிக்கும்
புகழ்பெற்ற விப்பாஸனா தியானம். "இது
உனக்கு பேருதவியாக இருக்கும்" என்று
சொல்லிவிட்டு மெல்ல மெல்ல தன் உடலை
விட்டுப் புத்தர் பிரிந்து சென்றார்.

அறிவு - விஞ்ஞானம், சாஸ்திரம்;
அதிகாரம் - பணம், பேர்;
ஆத்மதிருப்தி - ஆனந்தம், நிம்மதி

என்ற இந்த மூன்று துறைகளில் ஏதாவது ஒன்றின் கீழ் நாம் சாதிக்க விரும்பும் துறையை வகைப்படுத்தி விடலாம்.

அறிவு, அதிகாரம், திருப்தி மூன்றுக்கும் மூன்று முத்தான வரலாற்று உதாரணங்கள்தான் ஐன்ஸ்டீன், அலெக்ஸாண்டர், புத்தர்.

அறிவு, அதிகாரம் இரண்டின் சிகரத்தை தொட்டும் ஆனந்தம் அடையாவிட்டால் புகழ் இருந்தும் பிரயோஜனம் இல்லை.

எந்த நிம்மதியும் சந்தோஷமும் நம்முள் பிறந்து, நமது வேதனைகள் மறைந்து, வாழ்வில் திருப்தி மலர வேண்டும் என்று எண்ணி சாதனைப் பாதையில் காலடி எடுத்து வைத்தோமோ!... அது மலரவில்லை என்றால் மனித மனம் என்ன ஆகும்?

அதனால்தான் பலர் கடைசிக் காலங்களில், துக்கத்தின் எல்லையை அடைந்து விடுகிறார்கள். காரணம் இவர்களுக்குச் சாதனையானது வேதனையில் ஆரம்பித்து வேதனையிலேயே முடிந்ததுதான்.

சாதனைக்குப் பிறகு சொர்க்கச் சுகம்' அடையலாம் என்ற கனவு பொய்த்து நரக வேதனையை அடைய நேரிடும் போதுதான் வாழ்வே மாயமாகத் தெரிகிறது. எல்லாவற்றின் மேலும் வெறுப்பு வருகிறது.

அறிவு,

அதிகாரம்,

திருப்தி - இந்த மூன்று துறைகளில் எதுவேண்டும் என்று தேர்வுசெய்யுங்கள். சாதிக்க ஆரம்பியுங்கள்.

நீங்கள் எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் பரவாயில்லை - ஆனந்தத்தை அடைய முடியும். திருப்தி பெற முடியும்.

அறிவின் சிகரத்தை அடைய

அதிகாரத்தின் உச்சியைத் தொட

  • அதற்கே உரிய உழைப்பான தியானத்தையும் புரிந்துகொள்ளுதலையும் செய்தே ஆகவேண்டும்.

தியானமும் ஞானமும் கைகூடினால், நீங்கள் எங்கு இருந்தாலும், எந்த சாதனைச் செய்தாலும் சந்தோஷமாக இருப்பீர்கள்.

| பு | சாகும்போதுகூடச் சிரிக்கிறார் ஞானி. | :---: | வாழும் போதுகூட நோகிறார் மனிதர். | க | - தாவோ. | | சாதனை தோல்வியின் துவக்கமாகும். | ழ் | புகழ் அவமானத்தின் துவக்கமாகும். | | - சுவாங்தஸு

சந்தோஷமும் புரிந்துகொள்ளும் தன்மையும் இருந்தால் Mr. நிட்டி போன்று சாதித்தால் சந்தோஷம்... சாதிக்கவில்லையா தொல்லை மிச்சம். ரொம்ப ரொம்ப சந்தோஷம் என்று வாழ்க்கையை முழுமையாகப் புரிந்து வாழ்க்கை விளையாட்டை அனுபவித்து வாழ முடியும். இவர்கள்தான் இரண்டாவது வகை. அனுபவிப்பவர்கள்.

அதிமுட்டாளாக இல்லாமல், அதிபுத்திசாலியாக மாற நினைத்து அனுபவமில்லாத சாதனையில் இறங்கி அப்பாவிகளாகத் தவிப்பதைவிட...

தியானத்தையும், ஞானத்தையும் கையில் எடுத்துக்கொண்டு அனுபவிப்பவர்களாக மாறினால் வாழ்வே ஆனந்தமயமாக மாற ஆரம்பித்துவிடும்.

ஆத்ம சாதனையான ஆனந்தம்தான் சாதனைகளிலேயே சிறந்த சாதனை. முடிவான சாதனை!

அர்த்தமுள்ள சம்பவம்...

ப்ரசன்ஜீத் புத்தருடைய தந்தையின் நண்பர். அவர் புத்தரைச் சந்தித்த போது... புத்தரிடம் “நாடோடிப் பிச்சைக்காரன்போல் வாழும் வாழ்வை விட்டு அரண்மனைக்குச் செல்” என்று வற்புறுத்தினார்.

புத்தர், “உண்மையைச் சொல்லுங்கள். அந்த அரச வாழ்க்கை ஒரேயொரு நாளாவது உங்களுக்கு ஆனந்தத்தைத் தந்ததா?” எனக் கேட்டவுடனே... ப்ரசன்ஜீத் தலைகுனிந்தார். சில நிமிடங்களுக்குப் பேசவேயில்லை.

• ‘துன்பப்படுகிறோம்’ எனத் தெரிந்தும் துன்பப்படுவது, அதைப் பூசிமெழுகுவது... என்ற இரண்டும்தான் மீண்டும் மீண்டும் உங்களைத் துன்பத்தில் ஆழ்த்துகின்றன. துன்பத்தை துடைத்தெறிந்து இன்ப சாதனை செய்யுங்கள்!