சாதனையா? வேதனையா?
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
தேவனஹல்லி ASP-யில் கிடைத்த ஓய்வு நேரத்தில் சிலர் வாழ்வியல் ஆலோசனைக்காக என்னைச் சந்தித்தார்கள்.
வங்கியில் மேனேஜேராகப் பணிபுரியும் அந்த நபர், "திருமணமாகிப் பத்து வருடமாகிறது. இன்னும் எனக்குக் குழந்தையில்லை. என்னுடைய கவலையெல்லாம் எனக்கொரு குழந்தையில்லையே என்பதுதான்...." என ஆரம்பித்து தன்னுடைய மற்ற மனப் பிரச்சனைகளைப் பகிர்ந்து தெளிந்து விடைபெற்றார்.
சிறிது நேரத்திற்குப் பின் அதே வங்கியில் கிளார்க்காகப் பணிபுரிபவர் வந்தார். "திருமணமாகிப் பத்து வருடம் முடிந்து விட்டது. பத்து வருடத்திற்குள் ஆறு குழந்தைகள் என்னோட கவலையெல்லாம் என்னுடைய குழந்தைகள்தான். ஒண்ணு கூட சொல்பேச்சு கேட்பதில்லை..." என ஆரம்பத்தார்.
★ இருந்தாலும் வேதனை, இல்லாவிட்டாலும் வேதனை. எல்லோரும் எல்லா வாழ்க்கை கட்டத்திலும் சந்திக்கும் பிரச்சனை இது. கொஞ்சம் கவனத்தோடு வாழ்வை அலசிப்பாருங்கள். இது உண்மை என்பது புரிய வரும்.
சாதித்தாலும் சாதிக்காவிட்டாலும் வேதனை தொடர்கிறது. முதலில் தாண்டப்பட வேண்டியது வேதனை. இதையடுத்துதான் சாதனை பற்றியே யோசிக்க வேண்டும்.
- யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம். எப்படி வேண்டுமானாலும் சாதிக்கலாம். எப்போது வேண்டுமானாலும் சாதிக்கலாம். சாதிக்க எதுவுமே தடையில்லை. சாதனை பெரிய விஷயமா என்ன?

பிறந்தோம், வளர்ந்தோம்,
சாதித்தோம்
என்பதைத் தாண்டி...
“ஆஹா! அருமையாய்
அனுபவித்தேன்.
வேதனையில்லாமல்
வாழ்ந்தேன்.
சந்தோஷத்தையல்லவா
சாதித்தேன்!”
எனச் சொல்லும்படி
வாழ்ந்துகாட்டுங்கள்.
- எச்சரிக்கை! சாதிக்கலாம் என்ற கவலையும் சாதித்தபின் நிம்மதியாயிருக்கலாம் எனும் நம்பிக்கையையும் சாதனை துடைத்தெறிந்துவிடும்.
- சாதனை என்பது நாம் நினைக்குமளவுக்குப் பெரிய விஷயமல்ல என்ற உண்மை சாதிக்கும் வரை மனிதருக்குத் தெரியாது. புரியாது.
- ஆனந்தத்தையும் நிம்மதியையும் தராத எல்லா சாதனைக்கும் சாதனையில் உபபொருளாக வேதனையைத் தரும் என்பது ஆராய்ச்சிபூர்வமான உண்மையும்கூட!
- உள்ளுலகில் சாதித்தவர் வெளியுலகில் சாதித்தாலும் சாதிக்காவிட்டாலும் ஆனந்தமாயிருப்பார். நிம்மதியாயிருப்பார். உள்ளுலகில் சாதிக்காதவருக்கு வெளியுலகில் சாதித்தாலும் சாதிக்காவிட்டாலும் ஆனந்தம், நிம்மதி சொந்தமில்லை!
சிரிக்கும் குழந்தை, ஆரோக்கியமான
முதியவர், சந்தோஷமான கணவன் - மனைவி,
பண்பும் பணமும் நிறைந்த மனிதர்,
வாழ்க்கையைக் கொண்டாடும் தியானி,
- இவர்களை சாதனை, வெறி போல் பற்றுவதில்லை. இவர்களைச் சாதனை ஈர்ப்பதில்லை.
பூரணமாகவும் முழுமையாகவும் வாழ்க்கையை வாழும் வாழ்வு சந்தோஷத்திற்கு வித்திடுகிறது.
இப்படிப்பட்டவர்கள் சந்தோஷத்தை அடையும் உணர்வுப்பூர்வமான வழியை அறிந்தோ, அறியாமலோ கண்டுபிடித்துவிட்டதால் அவர்களுக்கு வேதனை இருக்காது. சந்தோஷமே எங்கு பார்த்தாலும் நிறைந்திருப்பது தெரியும்.
சந்தோஷத்தை இன்னும் அனுபவிக்க வேண்டும் என்ற தூண்டுதல் இல்லாததால், வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் ‘முழுமையாக அனுபவிக்கவில்லை' என்ற வேதனை இல்லாததால் - எதையாவது சாதித்தே ஆக வேண்டும் என்ற வெறி இவர்களுக்குக் கிளம்புவதில்லை.
சாதனையென்பது வாழ்க்கையின் ஒரு அங்கம் மாத்திரமே. வாழ்க்கையையே சாதனையின் ஒரு அங்கம் என்று மாற்றும்போதுதான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது. வாழ்க்கையில் வெறுப்பும், எதிர்பார்ப்பும் நம்மையுமறியாமல் அதிகமாகிறது.
இதை விளக்கும் ஒரு அருமையான கதை.
32 மகன்களோடு, 10 கப்பம் கட்டும் சிற்றரசர்களோடு நைலீஸ் மாநகரத்தை ஆட்சி செய்து வந்தார் யா-ரீக்மின்.
இன்னும் நாடுகளைப் பிடிக்க வேண்டும். இன்னும் பொன், பொருள் குவிக்க வேண்டும். இன்னும் சாதிக்க வேண்டும். என்ற மனநிலையோடு தூங்கச் சென்றார். கனவில்... திடீரென்று மரணதூதன் வந்துவிடுகிறார். மரணதூதன், "யா-ரீக்மின், உன்னுடைய ஆயுசு நாள் முடிந்துவிட்டது. உனக்கு மாரடைப்பு கொடுத்து உன்னை எடுத்துச் செல்லப் போகிறேன்..." என்று கூற,
கனவு கனவுதான் என்று தெரியாத நிலையில் யா-ரீக்மின் படுக்கையிலேயே பேச ஆரம்பத்துவிட்டார்.
| ஏ | இது மறுக்க முடியாத உண்மை |
|---|---|
| ழை | சாதித்தவர்கள் உள்ளுலகில் ஏழைகள். |
| க | சாதிக்காதவர்கள் வெளியுலகில் ஏழைகள் |
| ள் | வெளியே பணக்காரன் உள்ளே பிச்சைக்காரன். |
| • உள்ளே நுழையாமல் வெளியே குதித்தவன். | |
| -துவோ கீதம் |
அவரது 32 மகன்களில், 32-ஆவது மகன் ஜோஷ் மிகவும் புத்தசாலி. எதையும் முழுமையாக அனுபவித்து சந்தோஷமாக வாழும் 16 வயது இளைஞர்.
தன் தந்தை தூக்கத்தில் ஏதோ பேசிக் கொண்டிருப்பதை கேட்டவர், என்ன பேசுகிறார் என்று வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார். தந்தையின் பேச்சை மாத்திரம் வைத்து ஜோஷ் புரிந்துகொள்ள ஆரம்பித்தார்.
சாதனையாம்! சாதனை.
எரிபொருள் வாங்காமல்
கார், கப்பல், விமானம் என வாங்கிக் குவிப்பதால்
என்ன பயன்?
வாழ்வின் எரிபொருளான
அனுபவிக்கும் சக்தியைச்
சேகரிக்காமல்... உன் -
ஐம்புலன்களைப் பயன்படுத்தி
திருப்தி பெற ஆயிரமாயிரம் சுக
சௌகரியங்களைச் சேர்ப்பதால்...
என்ன பயன்?
புத்திசாலிகள் முதலில்
எரிபொருளைச் சேகரிக்கவே
செயல்படுவர்.
குறைந்தபட்சம்
சௌகரியங்களைப் பெருக்கிக்
கொண்டேயாவது...
எரிபொருள் சேகரிக்கலாமே!
சிந்தியுங்கள்!
செயல்படுங்கள்!
யா-ரீக்மின், "மரண தூதா! நான்
இன்னும் கொஞ்ச நாள் இந்த உலகத்தில்
இருந்து அனுபவிக்க வேண்டியதெல்லாம்
அனுபவித்து முடித்து விடுகிறேன்.
அப்புறம் என்னைக் கூட்டிச் செல் "
என்றார்.
சில நிமிட மௌனம்...
மீண்டும் யா-ரீக்மின், "என்ன? எனக்குப்
பதிலாக வேறு யாராவது வந்தால் என்னை
விட்டுவிடுவாயா?
அப்படியென்றால், என் மனைவி என்
மீது உயிரையே வைத்திருப்பதாக
அடிக்கடி சொல்வாள் அவளை எனக்குப்
பதிலாகக் கூட்டிச் செல். நிச்சயம்
வருவாள்" என்றார்.
சில நிமிடம் மௌனம்....
மீண்டும் யா-ரீக்மின், "என் மனைவி இப்படி ஒரு நொண்டிச்சாக்கு சொல்வாள் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை மரணதூதா! என் மேல உயிரையே வைத்திருப்பதாகச் சொல்லிவிட்டு, என்னுடைய கடைசிப் பையன்
| நீ | வேதனை தலைய |
|---|---|
| ஜ | நிஜசாதனை |
| சா | துளிர்விடும் |
| த | |
| னை |
ஜோஷ்க்கு கல்யாணமாகி அவன் குழந்தைகளைப் பார்க்கும் வரைக்கும் வாழ ஆசை படறேன் எனச் சொல்லிவிட்டாளே!
சரி. என்னுடைய முதல் மகனை கூப்பட்டுக் கொள். அவன் நிச்சயம் வருவான். போன வருடம் அவனுடைய பிறந்த நாள் விழாவில், எனக்குப் பதவி வேண்டாம். நீங்கள் நல்லாயிருந்தால் அதுவே போதும். நாட்டுக்காக என் உயிரைக்கூடக் கொடுப்பேன் என்று சொன்னான். அவனைக் கூப்பட்டுக் கொள்" என்றார்.
சில நிமிடம் மௌனம்...
மீண்டும் யா-ரீக்மின், "எனக்கென்று
தனிப்பட்ட விருப்பங்கள் இருக்கிறது.
என்னை விட்டுவிடுங்கள் என்று'
முகத்திலடித்தாள் போல் இவன் சொல்வான்
என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை...
'ஏன் மரணதூதா சிரிக்கிறாய்... என்
நிலைமையைப் பார்த்தால் உனக்குச்
சிரிப்பாயிருக்கிறதா... ரொம்ப சிரிக்காதே.
இன்னும் 31 மகன்கள் இருக்கிறார்கள்.
யாராவது ஒருவராவது பாசமிகுதியால்
எனக்காக தியாகம் பண்ணத் தயாராய்
இருப்பார்கள். போய்க் கேள்...' என்றார்
நம்பிக்கையோடு,
பல நிமிடங்கள் மௌனத்திற்கு பின்....
யா-ரீக்மின், "எங்க, என் செல்லக்குட்டி ஜோஷ் எங்கே?"
தந்தையின் முழுஉணர்வையும் அவரின்
உளறல் மூலமாகக் கேட்ட ஜோஷ், கனவில்
அடுத்து தான் வர வேண்டிய நேரம்
வந்துவிட்டதை உணர்ந்து மெல்ல தன்
தந்தையின் தலையை வருமுடியவாரே -
"அப்பா, நான் வந்துவிட்டேன்.
கவலைப்படாதீங்க... என்னை
மரணதூதனுக்குக் கொடுத்து விடுங்கள்"
என்றார்.
யா-ரீக்மின் கண்விழித்துக் கொண்டார்.

விடாமுயற்சியும்
கடினஉழைப்பும்
சாதனையை
நிர்ணயிப்பதில்லை.
சிந்தனைத் தெளிவே
சாதனையை
நிர்ணயிக்கிறது.
அதனால்தான்
உழைப்பவரெல்லாம்
உயர்ந்து விடுவதில்லை.
☞ முதலில்...
சிந்தனைத்தெளிவு பெற
கடினமாய் உழையுங்கள்!
அவர் கண்களில் நீர் திரண்டது.
இவ்வளவு நேரம் தான் கண்டது கனவென்று புரிந்தது. கனவில் தான் உளறியதைக் கண்டு, விவேகமாக பேசும் ஜோஷ்-ஐ பார்த்ததும் அழ ஆரம்பத்துவிட்டார்.
யா-ரீக்மின் கேட்டார், "நீ எப்படி
இவ்வளவு பெரிய தியாகம் செய்ய
முன்வந்தாய்?"
ஜோஷ், "தியாகமுமில்லை. ஒரு மண்ணங்கட்டியும் இல்லை... இவ்வளவு சாதித்த பிறகும் உங்களுக்கும் அம்மாவுக்கும் எல்லா அண்ணன்களுக்கும் வாழ்க்கையைப் பூரணமாக வாழ்ந்த திருப்தியில்லை...
இவ்வளவு சாதித்தும் வேதனையிலேயே
நீங்கள் போக்கிக்கொண்டிருக்கும் இந்த
வாழ்க்கை தேவையா என்றெனக்குத்
தோன்றியது.
அதனால் தான் இந்த முடிவுக்கு வந்தேன்" என்றார்.
யா-ரீக்மினின் மூளையில் சுரீர் என்று அடித்தது....
ஒவ்வொரு மனிதருக்கும் ஏதோ ஓர்
உந்துதல், அல்லது தூண்டுதல்தான்
சாதிக்க வேண்டும் என்ற துடிப்பை
உண்டுபண்ணுகிறது.
ஏற்கெனவே வேதனையில் இருக்கும்
சராசரி மனிதக் கண்ணுக்குப் பசுமையாகத்
தெரிவது சாதனையாளர்களின்
சாதனைகள்தான்.
'தன் வேதனைக்கான மருந்து அந்தச் சாதனைகள்தான்' என மனிதர்கள் எடுக்கும் முடிவே மனிதரைத் தூண்டுகிறது. சாதிக்கக் கிளம்புகிறார்.
'சாதித்தவரின் வேதனைகள் சாதித்த பின்னாவது மறைந்ததா? குறைந்தபட்சம் வேதனைகள் கூடாமலாவது இருந்ததா?' என்ற யோசனைகூட இல்லாமல் அதே

வெற்றி வாய்ப்புகள் நழுவி கொண்டே இருக்கிறது. நழுவ விட்டாலும் தொடர்ந்து அழ வந்து கொண்ட இருக்கிறது. வெளியே பிடிப்பவர் பில் கேட்ஸ் ஆகிறார். உள்ளே பிடிப்பவர் புத்தர் ஆகிறார். நீங்கள்தான் அதை பிடிக்க முயற்சிக்க வேண்டும். முயற்சிப்பீர்களா?
பாதையில் செல்கிறார்கள்.
வேதனை தரும் தூண்டல்களால் சாதிக்க குதித்தவர்களே பெரும்பாலான சாதனையாளர்கள்.
ஆனால், நிஜத்தில்...
சாதனை தனி
வேதனை தனி.
வேதனைக்கு மருந்து சாதனையல்ல.
வேதனைக்கு மருந்து சந்தோஷம்.
சந்தோஷத்திற்கு வழி வாழ்க்கையைப் பூரணமாக அனுபவித்து வாழ்தல். சந்தோஷ வாழ்வு வேதனைகளை மறையச் செய்யும்.
வேதனைக்கு சந்தோஷமென்னும் மருந்திட்டு குணப்படுத்துவது - சாதனை என்னும் தீப்புகையை மூட்டிவிட்டு வேதனையை மறைப்பதைவிட சிறந்தது.
வேதனையை மறைப்பதைவிட, குணப்படுத்துவதே ஆரோக்கியமானது. அதன் பிறகு சாதனைக்குக் காலடி எடுத்து வையுங்கள். சாதியுங்கள். மீண்டும் சொல்கிறேன். சாதனை தனி. வேதனை தனி. 'உங்களின் சாதனை ஆசை வேதனையிலிருந்து உதித்த ஒன்றா?' என ஆராயுங்கள்.
சோதனையிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள்.
வேதனைக்கு முதலில் மருந்திடுங்கள்!
அர்த்தமுள்ள சம்பவம்...
"ஜெயிக்க வழி சொல்ல ஞானி தேவையில்லை" என்று சொன்ன குருவிடம் நிருபர், "அப்புறம் எதற்கு ஞானிகள்?" எனக் கேட்டார்.
ஜெயிக்கும் முன்னும் "ஜெயிக்கும்போதும் ஜெயித்த பின்னும் திருப்தியோடு ஆனந்தத்தோடிருப்பது எப்படி? என வழி சொல்ல ஞானிகள் அவசியம்" என்றார்.
- ஞானகுருமார்கள் உங்களுக்காகவே பிறப்பு எடுத்தவர்கள். தவறவிடாதீர்கள்!
சாதனை துளிர்விடும் முன், ஆனந்தம் துளிர்விடட்டும்!
| தியான | சாதனை தவறல்ல. அதே நேரத்தில் மனிதனுக்கு அது மிக அவசியமான ஒன்றுமில்லை. வேதனையிலிருந்து பூத்த சாதனை மனிதவாழ்வுக்கு எதிரானது. அது மனிதவாழ்வு புதிரானதற்குக் காரணமானது. |
|---|---|
உளிகள் | |
எதிர்காலம் பற்றிய பயம்.
பண நெருக்கடி தரும் உத்வேகம்.
அவமானங்கள் கிளப்பிவிடும் எரிச்சல்.
பொறாமைகள் தரும் ஊக்கம்
போன்ற எதிர்மறை வேதனை உணர்வுகளே பலரின் மனதில் சாதனை எனும் கிளர்ச்சியைத் தூண்டுகின்றன.
இந்த வேதனைகள், குணக்குறைபாடுகள் மட்டுமே. இவை எளிதில் சரிசெய்யக்கூடியவையே.
இந்தக் குணக்குறைகள் சரியான பின் உங்களுக்குள் சந்தோஷமும் உற்சாகமும் நிரந்தரமாக குடிகொள்ளும்.
> மானிடா,
> வந்த
> வேலை
> எந்த
> வேலை
> என மறந்து
> திரிகிறாய்!
> உனக்கு
> இது
> புரிகிறதா?
அப்போது வேதனையைத் தூண்டும் நிகழ்வுகள்
உங்களைச் சுற்றி வளைக்கும் போதுகூட,
நீங்கள் கலங்காமல் நிம்மதியாய் இருப்பீர்கள்.
இந்த உற்சாகம் நிம்மதி நிலவும் மனிதனின் சாதனைக் காலம், சாதாரண சாதனைக் காலமாக இருக்காது. அது கொண்டாட்ட காலமாக இருக்கும்.
சாதனை வாழ்வதற்கு அவசியமான ஒன்றல்ல. அது மனம் வாழ்வதற்கு அவசியமான ஒன்று.
வேதனை தரும் மனம், சாதனை தரும் வெறி ஆரோக்கியமற்றது. அதனால்தான் சொல்கிறேன்... சாதனையாளர்கள் வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல. சாதித்தவர்கள் பலர் துன்பத்திலிருந்து எம்பிக் குதித்தவர்கள்.
எனவே, சாதனை என்பது மிகப்பெரிய வாழ்வியல் அம்சமல்ல என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தப் புரிந்துகொள்ளுதல், வாழ்வென்னும் திடலில் மூச்சிரைக்க ஓடும் உங்கள் ஓட்டத்திலிருந்து இளைப்பாறுதலைத் தரும். பெரும் சுதந்திரத்தைத் தரும்.
சாதனையின் தூண்டுதல் சந்தோஷமாக இருக்கும்படி உங்கள் குணத்தை வடிவமை யுங்கள். சாதனை துளிர்விடும் முன் ஆனந்தம் துளிர்விடட்டும்.
[வாழ்]வதை
விட்டு...
என்ன
செய்கிறாய்?
மானிடா!
சாதனைப் பாதையில் ஓட ஆரம்பத்துவிட்டவர்கள், இந்த ஞானக்கருத்துக்களையெல்லாம் ஆழத் தியானித்து, சந்தோஷத்தைத் துளிர்விடச் செய்ய உழைக்க ஆரம்பியுங்கள். வாழ்க்கைப் பயணம் இனிதாகட்டும். சாதனை சுலபமானதே!