KAILASA Library/கதவைத் திற ... காற்று வரட்டும்!/தவறுக்காக வருந்தாதே! திருந்து!Sign in
கதவைத் திற ... காற்று வரட்டும்!

தவறுக்காக வருந்தாதே! திருந்து!

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

★ தவறு செய்வது தவறு இல்லை. காரணம், தவிர்க்க முடியாதது தவறு. செய்த தவறையே திரும்பத் திரும்பச் செய்வதுதான் தவறு.

★ இரண்டு விதமாக மனிதர்களை நாம் பார்க்கலாம்: 1. எல்லோருமே பாவிகள். 2. எல்லோருமே புனிதர்கள்.

★ பாவம், புனிதம் என்பது இடத்துக்கு இடம், மதத்துக்கு மதம் மாறக்கூடியது. ஏன்? பாவம், புனிதம் பற்றிய வரையைகள், மதங்களுக்குள் இருக்கும் உபபிரிவுகளுக்குள்ளேயே மாறக்கூடியது.

★ பழைய தவறுகளை நினைத்து...
நீங்களும் கஷ்டப்படாதீர்கள்.
மற்றவர்களையும் கஷ்டப்படுத்தாதீர்கள்.

ஊருக்கு வெளியே தபஸ்வி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு கடுமையான ஒழுக்கவாதி. நீதிநெறிப்படி தவறாமல் வாழ முயற்சிப்பவர்.

ஒரு நாள் இரவு அவரின் குடிசைக்கு வெளியாள் ஒருவன் வந்தான். அவன், "ஐயா, இன்று இரவு மட்டும் நான் இங்கு தங்க அனுமதிப்பீர்களா?" எனக் கேட்டான். தபஸ்வி அதற்கு அனுமதி கொடுத்ததோடு, இரவு உணவும் சேர்த்துக் கொடுத்தார். அவர் எழும் முன்பே அவன் எழுந்து சொல்லிக்கொள்ளாமல் நழுவி விட்டான். விடிந்ததும் அங்கு காவலர்கள் வந்தார்கள். ‘நேற்றிரவு இங்கு யாராவது வந்தார்களா’ என்பது பற்றி விலாவாரியாக விசாரித்தார்கள். விசாரணையின் முடிவில் தபஸ்வி, “அவன் யார்? எதற்காக இவ்வளவு விசாரிக்கிறீர்கள்?” எனக் கேட்டதற்கு, “திருடன்” என்றார்.

கூட்டம் / சபை நிகழ்வு

“நான் தவறு செய்தவன்.
நான் பாவி! நான் பாவி!”
என்று புலம்புவதும்
தவறு.
“நீ தவறு செய்தவன்.
நீ பாவி! நீ பாவி!”
என்று குற்றம் சாட்டி
மற்றவர்களைக்
குற்ற உணர்வில்
தவிக்க விடுவதும்
தவறு.

“ஐயோ...” திருடனுக்கு உதவியது
பாவமாயிற்றே...!’’ என அந்த
நீதிநெறியாளர் புலம்பிக்கொண்டிருக்கும்
போது அவரைவிட சப்தமாக
இன்னொருவர் புலம்பும் சப்தம் கேட்கவே,.
தான் புலம்புவதை நிறுத்துவிட்டு “யார்
அது?’’ எனக் கேட்டார்.

“கடவுள்” என பதில் வந்தது.

“கடவுளே, நீங்கள் ஏன் புலம்ப
வேண்டும்?” எனக் கேட்டதற்கு, “ஒரு
நாள் இரவு நீ அவரைப் பாதுகாத்து
உதவியதே தவறு என்றால், முப்பது
வருடங்களாக அவரைக் காக்கும்
நான்தானே பெரும் தவறு செய்தவன்.
நான்தானே பெரும்பாவி!?” எனக்
கேட்டார்.

தவறு பற்றிய தவறான அபிப்பராயம்,
அந்த தபஸ்வி மனதிலிருந்து
அன்றே உடைந்து போனது.
உங்கள் மனதிலிருக்கும் தவறு
பற்றிய தவறான அபிப்பிராயங்களைக்
கண்டுபிடித்து உடைத்தெறியுங்கள்.

அருமையான வாசகத்தோடு துவங்குகிறேன்.

99 முறை செய்த நல்லதையெல்லாம்
விட்டுவிட்டு ஒரே ஒரு முறை செய்த தவறை
கணக்கில் கொண்டு கோபிப்பது - மனிதர்கள்.

99 முறை செய்த தவறுகளையெல்லாம் விட்டுவிட்டு, ஒரே ஒருமுறை செய்த நல்லதுக்காக மனசார நன்றியோடு ஆசீர்வதிப்பது - கடவுள்.

நீங்கள் மனிதரா?

கடவுளா?

சுற்றியிருப்பவர்களிடம் தவறு கண்டுபிடித்துக்கொண்டே இருப்பது, சிலருக்கு வெல்லம் சாப்பிடுவது போல சுவாரஸ்யமான விஷயம்.

மற்றவர்களிடம் தவறு கண்டுபிடித்துக்கொண்டேயிருப்பதுதான்

நாம் தவறாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதற்கான அத்தாட்சிகள்.

சரியாக வாழும் ஒரு மனிதர் மற்றவர்களிடம் நல்லதைத்தான் முதலில் கண்டுகொள்வார். இவர்களுக்குத் தவறுகள் இரண்டாவது பட்சமாகத்தான் தெரியும்.

மற்றவர்களிடம் நல்லதை இனம் கண்டுக்கொள்ள தெரிந்தால், உலகமே நல்லவர்களால் நிறைந்திருப்பது கண்களுக்குத் தெரியும். "ஆஹா! என்ன அருமையான உலகம்!" என்று நினைக்கத்தோன்றும்.

மற்றவர்களிடம் தவறையே இனம் கண்டுகொள்ள இருந்தால், உலகமே கெட்டவர்களால் நிறைந்திருப்பதாகத் தெரியும். "உலகத்தில் நல்லவர்கள் அரிது. உலகமே மோசம்" என்று நினைக்கத் தோன்றும்.

சுற்றியிருப்பவர்களின் தவறுகளை மிகைப்படுத்தி, தவறானவர்களாகவே வாழ்ந்து வந்த ஒரு கூட்டம் இயேசுநாதரை ஒருமுறை சந்திக்க நேர்ந்தது.

மரத்தடியில் தவ அமைதியில் இயேசு அமர்ந்திருந்தார். "என்னைக் காப்பாற்றுங்கள்" என்ற அலறலோடு பெண் ஒருத்தி இயேசுவின் காலடியில் வந்து விழுந்தாள்.

அந்தப் பெண்ணைத் துரத்திக்கொண்டு வந்தவர்கள் இயேசுவைப் பார்த்ததும் செய்வதறியாது திகைத்து நின்று விட்டார்கள்.

அமைதி கலையாமல் கூட்டத்தையும் துரத்திய கும்பலையும் தலைநிமிர்ந்து பார்த்தார். கும்பல், "இவள் ஒரு விலைமாது. இவளைக் கையும் களவுமாய் நாங்கள்

புஅவர்களே கேட்காதவரை,
த்அவர்களின் தவறுகளைக்
திகுத்திக்காட்டாதவர்கள்
சாபுத்திசாலிகள்.
லி☞ நீங்கள்?

பிடித்தோம்.

நமது சட்டப்படி இவளைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும். அதனால்தான் கற்களால் அடித்துக்கொண்டே இவளைத் துரத்திக்கொண்டு வந்தோம்.

இந்த மோசக்காரிக்கு என்ன தண்டனை கொடுப்பது என்று நீங்கள்தான் கூற வேண்டும்” என்று கடமை கண்ணியவான்கள் போல வெகு பரிசுத்தத்தோடு பேசியது அந்தக் கும்பல்.

இயேசு நல்ல தீர்ப்பு கொடுப்பார் என்று
காத்துக்கொண்டிருந்த கும்பலுக்கு பெருத்த
ஏமாற்றம். இயேசுநாதர் மண்ணோடு
விளையாட ஆரம்பித்து விட்டார்.

அவர் மண்ணில் தன்னுடைய
விரல்களால் ஏதோ வரைந்து, எழுதிக்
கொண்டிருந்தார். கும்பலில் இருந்தவர்கள்
பொறுமை இழந்து சலசலக்க ஆரம்பித்து
விட்டார்கள்.

இயேசு தலைநிமிராமலேயே, “உங்களில் எவரொருவர் இதுவரை தவறே செய்யாதிருக்கிறாரோ அவர் முதலில் இந்தப் பெண் மீது கல் எரியட்டும்” என்றார். அவ்வளவுதான்.

எல்லா தவறுகளையும்
செய்யுமளவுக்கு ஒரு மனிதனின்
வாழ்நாள் நீளமானதாக இல்லை.

கொடுரன்கூட எல்லாத்
தவறுகளையும் செய்தவன்
அல்ல.

“நான் இனி ஒரு முறை அதே
தவறை செய்யமாட்டேன்” என
உறுதிபட முடிவெடுத்ததும்
உங்களின் இமாலய தவறுகள்
கூட மன்னிக்கப்பட்டுவிடும்.

☞ முடிவெடுங்கள். தவறுகள் தவறட்டும்!

கும்பலில் இருந்த ஒவ்வொருவரும் சந்தடி தெரியாமல் கல்லைக் கீழே போட்டுவிட்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிட்டார்கள்.

இதையடுத்து இயேசு கூறிய வரிகள்தான் மிக அழகானது. ஆழ்ந்த அர்த்தம் பொதிந்தது.

பீதியில் அழுது கொண்டிருக்கும் அந்தப் பெண்ணிடம், “இனி தவறு செய்யாதே!” என்று ஒரே ஒரு வரிதான் இயேசு கூறினார்.

ம
ட
த்
த
ன
ம்

திருந்த நினைக்காதவரை

திருத்த முயற்சிப்பது

நிச்சயமாய் மடத்தனம். அந்தப் பெண்ணுக்குள் அது பெரிய மனமலர்ச்சியையே உண்டுபண்ணிவிட்டது.

அவளின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. இதுவரை அவள் செய்த தவறு அனைத்தும், 'இனி தவறு செய்யாதே!' என்ற ஒரு வார்த்தையில் கரைந்து போனது.

அவளின் மனச்சுமை முழுவதும் அன்றோடு மறைந்தது. செய்த தவறுகளை மீண்டும் செய்யாமல் சந்தோஷமாக மீதி வாழ்வைக் கழித்தாள் அந்தப் பெண்.

கண்ணியவான்கள் போல துரத்திய
கூட்டம் வேறு ஆட்களிடம், வெவ்வேறு
தவறுகளைக் கண்டுபிடித்து, "உலகம்
மோசம்! உலகம் பாவிகளால் நிறைந்தது!"
என்று நொந்து கொண்டு மீதி வாழ்வைத்
தள்ளியது.

ஒரு உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.

மற்றவர்களிடம் எப்படிக் குற்றம்
கண்டுபிடித்துத் திட்டுகிறீர்களோ,
அதேபோல் தான் ஆழ்மனதில் நீங்கள்
அதே தவறு செய்யும்போது, உங்களை
நீங்களே திட்டிக் கொள்வீர்கள்.

தவறு கண்டுபிடித்துக் கொண்டேயிருப்பது தவறான செயல்.

நம்முடைய பழைய தவறுகளைக்
கிளறிக் கிளறி அதற்காக இன்றும் நோவது
மடச்செயல்.

தவறைப் பற்றிச் சரியாக விளக்கும் ஒரு ஜென் கூற்று.

"தெரிந்துகொள்! புரிந்துகொள்!
நீ தவறு செய்யப் பிறந்தவன்.
தொடர்ந்தல்ல!"

Nithyananda

குற்ற உணர்வுஅற்றுப்
போனவன் கடவுள் விரும்பி
வந்து தங்கும் வசந்த
மாளிகை. ஆனந்தம்,
சுதந்திரம், புத்திசாலித்தனம்...
போன்ற வி.ஐ.பி.க்கள்
தங்கும் ராஜ்பவன்.

கண்டிப்பதும் தண்டப்பதும்
கடவுள் செய்யவேண்டயவது!
நீங்கள் கடவுளா?

ஆம்! மனிதர்கள், தங்கள் வாழ்வில் தவறு செய்வதை தவிர்க்கவே முடியாது.

காரணம் தவறு செய்வது என்பது, 'எது சரி?' என்பதைக் கற்றுக்கொள்ள உதவும் ஒரு வாழ்வியல் வழிமுறை.

ஆனால், ஒருமுறை செய்த தவறைக் கண்டிப்பாக திரும்ப செய்யக்கூடாது.

செய்த தவறையே திரும்பத் திரும்பச் செய்யாதிருக்கத்தான் இறைவன் 'புத்தி' என்ற ஒரு விஷயத்தை மனிதருக்குப் பரிசளித்திருக்கிறார்.

செய்த தவறுகளுக்காக வருந்துவது துவக்கத்தில் சரி.

தவறுக்காக வருந்திக்கொண்டேயிருப்பது தவறு. தவறுக்காக வருந்துவதைவிட, திருந்துவது புத்திசாலித்தனம்.

தவறு என்று நாம் கண்டுகொண்டதை திரும்ப செய்யாதிருக்க வேண்டுமானால், கொஞ்சம் கவனத்தை நம்முள் கொண்டுவந்தால் நிச்சயம் சாத்தியமே.

“தவறுக்காக வருந்தாதே! திருந்து” என்பதுதான் இயேசு அந்த விலை மாதுவிடம் “இனி தவறு செய்யாதே” என்று சொன்னதின் ரகசியம்.

தவறுக்காக வருந்துவதைவிட திருந்துவதுதான் நம் அகத்துக்கு மருந்து. இது வாழ்க்கை சுகத்துக்கு ஓர் எளிய வழி.

அர்த்தமுள்ள சம்பவம்...

நிட்டியின் மனைவி கேட்டார்.
“என்னிடம் பிடித்தது எது?”
“நீ செய்யும் தவறுகள்?”

“என்னிடம் பிடிக்காதது எது?”
நீ திரும்பத் திரும்ப
செய்யும் அதே தவறுகள்”

  • இனி தவறு செய்யும்போது அது திரும்ப செய்யும் தவறா என காணத்தவறாதீர்கள். வளர்வீர்கள். வாழ்வீர்கள்!

மற்றவர்கள் திருந்தும் போது திருந்தட்டும்...

விட்டுவிடுங்கள்!

தியான உளிகள்

'நான் திருந்த வேண்டும்' என்ற எண்ணம் ஒருவருக்கு உதிக்காத வரை, நீங்கள் எவ்வளவு துல்லியமாக அவரின் தவறுகளைக் கண்டுபிடித்துச் சொன்னாலும் அவர் திருத்திக் கொள்ளமாட்டார்.

நான் திருந்த வேண்டும் என்ற எண்ணம் ஒருவருக்கு உதித்தபின், நீங்கள் அவரின் தவறுகளைக் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டிய அவசியமே இருக்காது என்று எண்ணுமளவுக்கு அவரின் தவறுகளை அவரே கண்டுபிடித்து திருத்திக் கொள்ள ஆரம்பிப்பார்.

இது வாழ்க்கையின் சத்தியம்.

எப்படி யோசித்துப் பார்த்தாலும் நீங்கள் மற்றவர்களிடம் கண்டுபிடித்துச் சொல்லும் தவறுகளால், உங்களுக்கோ மற்றவருக்கோ எந்தவொரு காலத்திலும் பலனில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறதா?

'மற்றவரைத் திருத்துகிறேன். உலகைத் திருத்தப் போகிறேன்' என்பதெல்லாம் பைசாவுக்குப் பயன்தராத செயல் என்பது புரிகிறதா?

நீங்கள் மற்றவரிடம் தவறு கண்டுபிடிப்பதால் வரும் பல பலன்கள்...

★ திருந்த விரும்பாதவரை வருந்த விடலாம்...

★ அவரை வருந்த விடுவதின் விளைவாக, உங்களின் மீது வெறுப்பு கொள்ள ஏதுவான சூழல்களை நீங்களே உருவாக்கித் தரலாம்.

★ அப்பாவிகளை நோகடிக்கலாம்.

★ உங்களைப் பார்த்தவுடனேயே, “ஐயய்யோ! இன்று என்ன குற்றம் சொல்லப் போகிறாரோ?” எனப் பீதி கொள்ளச் செய்யலாம்...

| மற்றவரைத் திருத்தத் துடிப்பது. நீ திருந்துவதை தள்ளிப் போடும் ஆழ்மனத் தந்திரம். |

★ முட்களை காரணங்காட்டி, ரோஜாவை இழக்கும் அப்பாவி போல மனிதர்களையும் அவர்களின் நெருக்கத்தையும் தொடர்ந்து இழந்து கொண்டேயிருக்கலாம்.

எனவே சொல்கிறேன்...

வருந்துவதும் வருந்த விடுவதும் மட்டும்தான் பாவம்.

திருந்துவதும் மற்றவர் திருந்தும் போது திருந்தட்டும் என திருந்த விடுவதும் புனிதம் மட்டுமல்ல அது வாழ்வியல் தியானம். இதைச் செய்பவரே புனிதர்.

இனி நீங்கள் வருந்தப் போகும் காலங்களையும் மற்றவர்களை திருத்துவதாய் நினைத்து அவர்களை வருந்தவிடப் போகும் காலங்களையும் குறித்து மிக எச்சரிக்கையோடிருங்கள்.

இந்தக் காலங்களில் வருத்தத்திற்கு பதில் திருத்தம் உங்களுக்குள் நிகழ ஏதுவான எல்லாச் செயல்களையும் செய்யுங்கள்.

வருத்த..
வருத்த...
ஒருவரை
தூண்டுவது,
1. நான்
புனிதன்!
2. நான்
புனிதன் அல்ல!
எனும்,
இரண்டில்
ஒரு
எண்ணமே!

பாவம் புனிதமாகட்டும். வருத்தம் திருத்தமாகட்டும், சோக காலங்கள் தியான காலங்களாகட்டும்.