இளஞ்சிங்கமே!
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஆண்ட்ரூ கார்னகி மிகப் பெரிய சாதனையாளர். உலகத்தின் பெரிய செல்வந்தர்கள் பட்டியலில் இடம் பெற்றவர். இதற்குமேல் சாதிக்க வேண்டும் என்ற அவசியமே இல்லாத அளவுக்கு இமாலய சாதனை படைத்தவர்.
ஒரு முறை பேட்டியளிக்கையில், அவர் சந்தித்த சிந்தனையைத் தூண்டும் கேள்வி,
"ஓய்வேயில்லாமல் சம்பாதித்துக்கொண்டிருப்பதிலிருந்து நீங்கள் எப்போது வேண்டுமானாலும் ஓய்வடைந்திருக்கலாம். இளைப்பாறியிருக்கலாம். உங்களைச் சுற்றி எல்லாம் இருந்தும் ஏன் இன்னும் சாதிக்க ஓடிக்கொண்டேயிருக்கிறீர்கள்?" என கேட்கப்பட்டதற்கு, கார்னகி சொன்னார்; "சரியாகக் கேட்டீர்கள் நீங்கள் சொன்னது போல் ஓய்வெடுத்திருக்கலாம்தான். ஆனால், என்னால் அது முடியவில்லை.
ஓடுவதை நிறுத்தி ஓய்வெடுப்பது எப்படி என்பதை நான் மறந்துவிட்டேன். இதன் விளைவு - ஓடிக்கொண்டேயிருக்கிறேன்".
★ ஒவ்வொருவரின் வாழ்க்கைச் சக்கரம், ஒவ்வொரு விதமானது. அச்சக்கரத்தை ஒரு முறை மேட்டிலிருந்து சுற்றிவிட்டால், அச்சக்கரம் அதன் கட்டுப்பாட்டை இழந்துவிடும்.
வேகவேகமாக ஓடும் சக்கரம் தானாய் நிற்க நினைத்தால்கூட நிற்க முடியாது. ஓய்வெடுக்க முடியாது, யாராவது தடுத்து நிறுத்த வேண்டும்.
தியானமும் ஞானகருத்துக்களும் வாழ்வைத் துவங்கப்போகிறவர்களின் வாழ்க்கைச் சக்கரத்தை ஒரு கட்டுக்கோப்பான, பாதுகாப்பான பாதைக்குள் திருப்பி விடும்.

தோல்விகளைத்
தோள் கொடுக்கும்
தோழர்களாக,
தடைகற்களைப்
படிக்கற்களாக
மாற்றுபவர்,
வெற்றி பெற
அடிப்படை
தகுதி பெறுகிறார்!
* வளரும் நாடுகள் சாதிக்கத்
துடிக்கின்றன. வளர்ந்த நாடுகள்
சாதித்தும் துடிக்கின்றன.
* சாதனையின் உச்சியில் இருக்கும்
அமெரிக்காவில் மூன்றில் ஒருவர்
ஏதாவது ஒரு மனநோயால்
பாதிக்கப்பட்டு
வேதனைப்படுகிறார்கள்.
வெறும் சாதனை மாத்திரமே
சந்தோஷத்தையும்
திருப்தியையும் தருமென்றால்
அமெரிக்காவில்
மன நோயாளியே
இருக்கக்கூடாது.
ஏனென்றால், அடிப்படை வசதிகள்
அனைத்தும் தாண்டி பல
சாதனைகள் புரிந்த மக்கள்
நிறைந்த நாடு அது.
* எதையாவது சாதிக்க ஆரம்பித்து,
சாதித்தபின், அந்தச்
சாதனைக்கும்
உங்களின் ஆழ்மனதின் விருப்பத்திற்கும்
சம்பந்தமே இல்லை என்றால்
சாதனையே வேதனையாகி விடும்.
* சாதிக்கத் துடிப்பது, சாதித்தும் துடிப்பது' எது பரிதாபத்திற்குரியது? யோசியுங்கள். யோசனை தரும் ஆர்வத்தோடு கட்டுரையைத் தொடருங்கள்...
உலக வாழ்க்கையில் குடும்பஸ்தராக வாழ முடிவு எடுப்பவர்களுக்கு, ராமகிருஷ்ணர் அழகான வாசகமொன்றைச் சொல்லியிருக்கிறார்.
"குடும்ப வாழ்க்கையில் நுழையும் நீ, ஆன்மீகத்தைக் கொஞ்சம் கையில் எடுத்துச் செல். நிச்சயமாக சிக்கித் தவிக்கமாட்டாய்!".
சாதாரண பலாப்பழம் அறுக்கும்போது வெறும் கையால் அதைச் செய்தால் பழத்தின் பிசுபிசுப்பு கையில் ஒட்டிக்கொள்ளும். பிசுபிசுப்பில் விரல்கள் சிக்கித் தவிக்கும்.
ஒரே ஒருமுறை எண்ணெயில் கை நனைத்துவிட்டு செய்தால், விரல்கள் பிசுபிசுப்பில் சிக்காது. பலாப்பழம் அறுப்பதும் எளிதாக நடக்கும். விரல்களும் சிக்கித் தவிக்காது. சங்கடமேயிருக்காது.
ஆன்மீகமும் இது போன்றதுதான். கொஞ்சம் ஆன்மீகத்தோடு வாழ்க்கையை எதிர்கொண்டால், வாழ்க்கையை இன்னும் ஆழமாக அனுபவிக்க முடியும். அதே நேரத்தில், வாழ்க்கைச் சுழலில் சிக்காமல் எளிதில் தப்பிவிடலாம்".
இந்தச் செய்தியை இளைஞர்கள் ஒன்றுக்கு இரண்டு முறையாவது படித்து மனதில் நிறுத்திக்கொண்டு கட்டுரையைத் தொடருங்கள்.
18-ல் காதல்
20-ல் எதிர்காலக் கனவு
25-ல் திருமணம்
30-ல் குடும்பச்சுமை
40-ல் வயிற்றுக் கோளாறும் மனச்சோர்வும்
45-ல் B.P/டயபடிஸ்
50-ல் மூட்டிவலி...
என்பதெல்லாம் இன்று கிட்டத்தட்ட எல்லோருடைய வாழ்க்கைக்கும் பொருத்தும் என்ற நிலை வந்துவிட்டது.
| த | தோல்விகளைக் கண்டு |
|---|---|
| கு | அஞ்சுபவன் வெற்றி பெறத் |
| தி | தகுதியற்றவன்! |
திருமணத்திற்கு பின் ஒரு நாள் தானும் எல்லாப் பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதைப் பற்றி ஆழமாக யோசிக்கும் இளைஞர்கள் அரிதாகி விட்டார்கள்.
தானும் சிக்கித் தவிக்க 100% வாய்ப்புகள் இருக்கிறது என்பதை முழுமையாக உணராத இளைஞர்கள்தான் எதிர்காலத்தில் சிக்கித் தவிக்கும் குடும்பஸ்தர்களாக மாற வாய்ப்புகள் அதிகம்.
ஒரு மருத்துவ ஆராய்ச்சி குழுவின் சர்வே
ரிப்போர்ட்டின்படி, "இளைஞர்கள் 10% க்கு
மேல் தங்கள் சக்தியை;
பயன்படுத்துவதேயில்லை. இளைஞர்கள்
கொஞ்சம் அதிகமாகச் சக்தியை;
பயன்படுத்தினாலே போதும். உலகத்தின்
தலையெழுத்தையே மாற்றிவிடலாம்" எனச்
சொல்கிறது.
உலகத்தின் தலையெழுத்து மாறுவது
ஒருபுறம் இருக்கட்டும். சக்தியை அதிகம்
பயன்படுத்தினால் குறைந்தது நம்
தலையெழுத்தையாவது மாற்றலாமே!
> தலைநகரை மாற்றி மாற்றியே தன்
> கஜானாவைக் காலியாக்கிய
> ‘துக்ளக்குக்கு’ இணையானது
> தத்தளிக்கும் மனிதமனம்.
>
> திடீர் திடீரென ஏதோ ஒரு ஆசை
> உந்த, ஏதோ ஒரு இலக்கை,
> மாற்றி மாற்றி மனத்தில்
> உருவாக்கினால் உங்களின் சக்தி,
> புத்தி கஜானா காலி!
>
> இலக்கை நிர்ணயிப்பதும்,
> அதற்குத் தேவையான, சக்தி-
> புத்தியைச் சேகரிப்பதும்
> வளர்பவர்களுக்கு மிக
> அத்தியாவசியம்!
சாமுராய் வீரர்கள் (ஜப்பானிய மல்யுத்த வீரர்கள்) போட்டிக் களத்தில் விழிப்புணர்வை கொஞ்சம் இழந்தாலும் வெட்டுப்பட வேண்டியிருக்கும். இது பற்றிய ஒரு அருமையான சாமுராய் கூற்று.
"இளஞ்சிங்கமே !
களம் பார்த்து ஆடு.
இல்லாவிட்டால்
நிலம் ரத்தமாகும்!"
| சா | தெளிவில்லாமலும் | த | சாதிக்கலாம். | னை | சாதனைகள் சாத்தியமே. ஆனால், அது திருப்தி தராது, சாதனை | | முக்கியமா? திருப்தி முக்கியமா? யோசியுங்கள்!
நிச்சயமாக இன்றைய வாழ்க்கை, தடுமாறும் மனம்கொண்ட ஒவ்வொரு இளைஞருக்கும் ஒரு போட்டிக் களம்தான். கொஞ்சம் தடுமாறினாலும் கொஞ்சம் சோம்பிப்படுத்தாலும் மிகப் பெரிய விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்.
சோம்பி உட்காராமல், கொஞ்சம் விழித்துக்கொண்டு வாழ்க்கையில் குதிப்பவர்கள், புதிதாக உருவாக்கியிருக்கும் வேறு ஒரு சூழலில் சிக்கிவிடுகிறார்கள்.
அந்தச் சூழலுக்குப் பெயர் - சாதனை !
அசந்து தூங்கிக்கொண்டிருந்த ஒரு எலி திடீரென விழித்ததும் கூட்டமாக ஓடும் எலிக் கூட்டத்தின் ஓட்டத்தில் எம்பிக் குதித்ததாம். அடுத்த நிமிடம் தன்னைத் தாண்டி பல எலிகள் ஓடுவதைப் பார்த்து அதுவும் வேக வேகமாக ஓட ஆரம்பித்ததாம்.
அந்த எலியைத் தடுத்து, "எங்கே
இவ்வளவு வேகமாக ஓடுகிறாய்?" என்று
கேட்டதற்கு, "விடு என்னை. நான் ஜெயிக்க
வேண்டும். இல்லாவிட்டால் அவமானம்"
என்றதாம்.
இதேதான் நம் வாழ்விலும் நடக்கிறது.
25 வயது வரை வாழ்வை விளையாட்டாகக்
கழித்த இளைஞர் திடீரென்று கண்முன் வந்து
நிற்கும் எதிர்காலத்தைப் பார்த்து எம்பிக்
குதித்து விடுகிறார்.
குதித்த பிறகுதான் தெரிகிறது
எல்லோருமே ஏதாவது ஒன்றைச் சாதிக்க
வேண்டும் என்று ஓடிக் கொண்டிருக்கிறார்கள்
என்று.
'ஏன்? எதற்கு?' என்ற அடிப்படை
பகுப்பாய்வு செய்யாமல் தானும் சாதித்தே
ஆக வேண்டும் என்று வாழ்க்கை ஓட்டத்தை
ஆரம்பிக்கிறார்.
ஓட்டம் கொஞ்ச நாளிலேயே வெறியாக மாறிவிடுகிறது.

மேலே எழுந்த அலை
கீழே இருக்கும் கடலை
ஏளனமாய் பார்த்தால்...
அதன் கதி
அடுத்த கணம்
என்னவாகும்?
சாதியுங்கள்.
பனை மர உயரம்
எழும்பினாலும்
நீங்கள் கடவூரில் இருந்து
எழும்பிய அலை
என்பதை மறவாதீர்.
ஆணவம் வர விடாதீர்...
சிறு அளவில்கூட!
இங்குதான் பிரச்சனை ஆரம்பிக்கிறது. வாழ்க்கை திசை மாறிப்போகிறது.
சாதனை தவறு என்று சொல்லவில்லை.
சாதனை தேவை. ஒவ்வொரு இளைஞரும் தன் வாழ்வில் நிச்சயம் சாதிக்க வேண்டும். சோம்பேறியாக வாழ்க்கையை வீணடித்துவிடக்கூடாது.
ஆனால், சாதனை என்ற விஷயத்தில்....
‘எதைச் சாதிக்க வேண்டும்? ஏன் சாதிக்க வேண்டும்?’
என்ற தெளிவு பிறக்கும் முன்பே, ‘எப்படி சாதிப்பது?’ என்ற ரீதியில் செயல்படும் போதுதான் பிரச்சனை ஆரம்பிக்கிறது.
‘ஏன்? எதற்கு?’ என்ற தெளிவில்லாமல் சாதிக்கத் துடிக்கும் போதுதான் எப்படியாவது, எதையாவது, சாதித்தே ஆக வேண்டும் என்ற மனவெறி கிளம்புகிறது.
> எல்லா காலங்களுக்கும் எல்லாத்
> தட்பவெப்பங்களுக்கும்
> தாக்குப்பிடித்து நின்ற கன்றே
> மரமாகிறது.
>
> விதவிதமான பிரச்சனைகள்தாம்
> சந்தனக் கன்றான உன்னை
> விலையுயர்ந்த மரமாக்கும்!
>
> ☞ எல்லோரும் சந்தனக்
> கன்றுகளே! ஆனால் எத்தனை
> கன்றுகள் மரமாகும்?
கண் எதிரே இருக்கும் பணம், பேர், பதவி, அறிவு என்ற ஏதாவது ஒன்றை மனம் பற்றிக் கொள்கிறது. மொத்த வாழ்வும் திசை திரும்பி விடுகிறது.
எதையாவது சாதிப்பதால் சாதித்த திருப்தி கிடைத்துவிடாது என்பதை சாதனைகள் பல படைத்த ஐன்ஸ்டீனும் ஒப்புக்கொள்கிறார்.
பணம், பேர், பதவி, அறிவு அனைத்திலும் சாதித்து விட்ட ஐன்ஸ்டீன் இறக்கும் தறுவாயில் அவரின் சகநண்பர் ஒருவர் அவரிடம், "ஒருவேளை, உங்களுக்கு இன்னொரு முறை உலகில் வாழ வாய்ப்புக் கொடுத்தால், என்ன செய்ய விரும்புவீர்கள்?" என்று கேட்டார்.
எல்லோரும் ஏதோ தன்னுடைய அடுத்த அறிவியல் சாதனைக்கான ஆசைகளைச் சொல்வார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஐன்ஸ்டீனோ, "வீடுகளுக்குத் தண்ணீர் குழாய்களை இணைக்கும் ஒரு நல்ல பிளம்பராக மாறுவேன்" என்றார்.
மொத்தக் கூட்டமும் அதிர்ச்சி அடைந்தது, சக நண்பர், "என்ன ஐன்ஸ்டீன்? என்ன சொல்கிறீங்க?" என்றார் பதட்டத்தோடு. ஐன்ஸ்டீன் வெகு நிதானமாக, "ஆமாம்! நான் ஒரு பிளம்பராக வாழத்தான் முடிவெடுத்திருந்தேன். எப்படியோ என் வாழ்வு திசையால் ஆராய்ச்சியாளனாகிவிட்டேன். பணம், பேர், பதவி, அறிவு அனைத்திலும் சாதித்தும் என் வாழ்க்கையை வாழ்ந்த திருப்தி எனக்கில்லை. எனக்கொரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால் ஒரு நல்ல பிளம்பராக வாழ்ந்து திருப்தியடைவேன்” என்றார்.
தெளிவில்லாமல் சாதனை ஓட்டத்தில் குதித்தாலும் சாதிக்கலாம். சாதனை சாத்தியமே. ஆனால் சாதித்த திருப்தி இருக்காது.
'சாதனை முக்கியமா? திருப்தி முக்கியமா? ஏன் சாதிக்க வேண்டும்? எதைச் சாதிக்க வேண்டும்?' என்ற தெளிவு இருந்தால், "இதைச் சாதிக்க வேண்டும்” என்ற முடிவு பிறக்கும்.
சாதித்தபின் சாதனையும் திருப்தி தரும். காரணம் அது உங்கள் சாதனை. உங்களின் விருப்பப்படி நிறைவேறி இருக்கிறது.
'ஏன் சாதிக்க வேண்டும்? எதைச் சாதிக்க வேண்டும்?' என்ற தெளிவு பிறக்க வேண்டுமானால், உலகம், வாழ்க்கை மற்றும் உங்களையும் சேர்த்துப் புரிந்து கொள்ளும் பக்குவம் வேண்டும். இந்தப் புரிந்துகொள்ளுதலை ரத்தினச் சுருக்கமாக வழங்கும் ஒரு மார்க்கம்தான் ஆன்மீகம்.
சாதிக்கும் சக்தியையும் சிந்திக்கும் சக்தியையும் அதிகரிக்கத் தியானம் எளிதில் உதவும்.
வாழ்க்கையில் குதிக்கும் முன்பு ஆன்மீகத்தைக் கொஞ்சம் மனதில் எடுத்துக்கொள்ளுங்கள். சாதனையின் வாசல் திறக்கும்.
அர்த்தமுள்ள சம்பவம்...
பத்திரிகையொன்றில் வந்த வித்தியாசமான சம்பவக் குறிப்பு... அவருடைய குடும்பம் பற்றி சொல்லச் சொல்லி மனநல மருத்துவர் கேட்கிறார். அவர் "என் மகன் ஒரு செயின் ஸ்மோக்கர். என் மகள் ஒரு டிரஃக் அடிக்ட், மனைவி ஒரு பெரிய குடிகாரி” என்றார். மருத்துவர், "உங்க குடும்பத்தில் பாஸிட்டிவ் ஆன ஆள் ஒருவர்கூட இல்லையா?” எனக் கேட்டார். அவர், "என்ன அப்படிக் கேட்டுட்டீங்க. நான் ஒரு எச்.ஐ.வி. பாஸிட்டிவான ஆள் டாக்டர்” என்றாராம் உறுதியான குரலில்.
- அந்த மனநோயாளிக்கு, அவர் பேசுவது நியாயமான பேச்சாகவே தெரிந்தது. காரணம் மனத்தெளிவில்லை. நம் நியாயமான பேச்சுகளிலும் செயல்களிலும் நம் மனத் தெளிவின்மை வெளிப்பட்டுக்கொண்டேயிருக்கும். யார் கண்டுபிடிப்பது?
வாழ்வென்பது போராடும் போர்க்களம் அல்ல...
நீ உன்னை அறிந்த மறுநிமிடத்திலிருந்து!
வளர்ச்சிக்கு வானமே எல்லை என்பர்... ஏனென்றால் வானமே இல்லை. வளர்ச்சிக்கு முடிவே இல்லை. அது உண்மையே.
நீ உன்னை அறிந்தால்... உலகத்தில் போராடலாம் என்பது இறுதியான உண்மையல்ல.
இது சரியான கண்ணோட்டம் ஆகாது. உண்மையில் ஒருவர் தன்னை அறிந்த பின் போராட வேண்டிய அவசியமே இருக்காது. அளவிட முடியாத சுதந்திரம் அப்போது கிடைத்திருக்கும்.
‘வானம் தொட்டுவிடும் தூரம்தான் வா!’
‘பொங்கியெழு’
‘நீ ஒரு போர்வீரன்’
‘வாழ்க்கை ஒரு போராட்டக்களம்’
வாழ்வென்பது
கொண்டாட்ட
பூந்தோட்டம்!
என்பன போன்ற ஊக்கக் கருத்துக்களை இளைஞர்கள் மனதில் பிடித்துக் கொண்டு வாழ்வதைக் காண்கிறேன். ஆனால், இதைத் தாண்டியும் மனிதரால் வாழ முடியும்.
இவையெல்லாம் வாழத் துடிப்பவருக்கான ஊக்க மருந்துகள்தான், இல்லை என்று மறுக்க முடியாது.
ஊக்க மருந்துகள் மிக அதிக அளவில் மனிதர்களால் எதிர்பார்க்கபட்டால், அவை மிக மிக அதிக அளவில் உருவாக்கப்படும். அதில் தவறில்லை.
ஆனால், உண்மையான ஓட்டப்பந்தய வீரர் ஊக்கமருந்துகளை எடுத்துக் கொள்ளமாட்டார். தன்னுடைய சக்தியையும் புத்தியையும் எவ்வளவு எடுத்துப் பயன்படுத்த முடியுமோ அதைச் செய்வதிலேயேதான் குறியாயிருப்பார்.
உண்மையான சாதனையாளர்கள் தங்கள் மனதுக்கு ஊக்கமருந்துகள் எடுத்துக்கொள்வதில்லை!
மற்றவர்களுடைய வார்த்தைகளுக்கு மதிப்பளிப்பதைவிட, தன் புத்திக்கும் தன் சக்திக்குமே மதிப்பளிக்கிறார்கள்.
அவர்கள் அவர்களை அறிந்துகொள்வதின் மூலமாக, மற்றவர்களை அறிந்து கொள்கிறார்கள். இதனால் உலகம் ஒரு போராட்டகளமாகக் இவர்களுக்குத் தெரிவதில்லை.
ZEN BUSINESS MANAGEMENT TECHNIQUES என்று சில தொழில் சார்ந்த அறிவுரைகள் மேலைநாட்டில் வழக்கலிருக்கிறது.
ஜென் தத்துவத்தின் சில அடிப்படையான ஞானக்கருத்துக்களைக் கொண்டு சாதிக்கும் வழிமுறைகளை அந்தக் குழுவினர் உலகெங்கும் சென்று கற்றுத் தருகின்றனர்
அவர்கள் சொல்லும் புரட்சிகரமான வாசகம் ஒன்று. “கஷ்டப்படுபவர் சாதிக்கமாட்டார். சாதித்தவர் கஷ்டப்பட்டிருக்கமாட்டார்”
அதிகமாக உழைப்பது வேறு. கஷ்டப்படுவது வேறு. கொஞ்சம் உழைத்துவிட்டால்... சோம்பேறியால்கூட, ‘நான் நிறைய கஷ்டப்பட்டவன்’ எனச் சொல்ல முடியும்.
வெளி
ஊக்கம்
வெகுநாள்
தாக்குப்பிடிக்காது!
மேலும், சாதனை பாதையில் உச்சத்தைத் தொட, சக்தியை வீணாய் ஒரு துளிகூட விரயம் செய்யாமல் சாதிப்பதற்கு எப்படியெல்லாம் புத்தியைப் பயன்படுத்துவது என ஜென்னின் தியான ஞான வழிமுறைகளைக் கொண்டு கற்றுத் தருகிறார்கள்.
“மனதை வென்றவர், உலகை வென்றவர்.
மனதை அரசாள்பவர், உலகையே அரசாள்பவர்” எனும் சீனப் பழமொழியின் சூட்சமம், “கஷ்டமில்லாமல் சாதிப்பது” பற்றியதே!
மனம் தன் இயல்புபடி உங்களை அலைக்கழிக்கும்...
தடுமாறும்... தடுமாறும் மனதோடு சாதனைப் பாதையில் குதிக்கும்போதுதான் நீங்கள் போராட வேண்டியிருக்கும். உலகம் போராடும் போர்க்களமாகத் தெரியும்.
ரிமோட்கண்ட்ரோலில் இயங்க வைக்கும் ரோபோட் பொம்மை போல, நம்மால் நம் மனதை இயக்க முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்களை முழுமையாக அறிந்துகொள்வதே.
தடுமாறும் மனம் சரிசெய்யப்பட்டால், இருக்கும் நிலையில் உங்களின் சக்தியையும் புத்தியையும் உலகில் போராடுவதற்காகப் பயன்படுத்தும்போதுதான் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.
மனம் சரிசெய்யப்பட்டதும் நம் சக்தியைப் போராடுவதற்குப் பயன்படுத்த ஆரம்பித்து விட்டால் உண்மையான சாதனை உதயமாகிவிட்டது என்று அர்த்தம்.
தன்னை அறிந்தவர், தன் மனதையும் உலகத்தைக் கையாளும் சூட்சுமத்தையும் கற்றுக்கொண்டதால்... தான் நினைத்ததையெல்லாம் லேசாய் நடத்திவிடும் சக்தி, புத்தி பெற்றவராகிவிடுவார்.
அப்புறம் உலகம் அவருக்குப் போர்க்களமல்ல. எவ்வளவு வேண்டுமானாலும் அவரால் சாதிக்க முடியும்.
கஷ்டப்படுத்தும் மனம் இல்லாததால் கஷ்டமில்லாமல் சாதிக்கலாம். உலகையே வெல்லலாம். தன்னை வென்றுவிட்டால் வாழ்வென்பது கொண்டாட்ட தோட்டமாகிவிடும்.
சக்தி, புத்தி பெருகச் செய்யுங்கள். உங்களுக்கும் மேலே குறிப்பட்ட ராஜசுக நிலை சாத்தியமே.
வாழ்வு காலத்தை சுவைக்கும் முன் தியான காலத்தை சுவையுங்கள். சாதனை காலம் தியான காலமாகட்டும்!
| சாதிக்க | | :---: | | நீ | | எழ... | | உன் | | சக்தி, | | உன் | | புத்தி | | எழ | | வேண்டும் |