என் அருமை இளைஞர்களே...
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
* சாதனையின் இரகசியம், இந்த மூன்று வார்த்தைகளுக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறது.
- அது நம்பிக்கை, ஒழுக்கம், உற்சாகம்.
* நம்பிக்கை, உற்சாகம் என்ற இரண்டும் சாதிப்பவருக்கு அவசியம் என்பது, எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால், ஒழுக்கமும் அவசியம் என்பது பலருக்குத் தெரியாத ஒன்று.
* தனிமனித ஒழுக்கம் வேறு. சமுதாய ஒழுக்கம் வேறுநான் அவசியம் என்று கூறுவது தனிமனித ஒழுக்கத்தைச் சாதிப்பவரை. அவர் பாதையிலிருந்து சற்றுக்கூடத் தடுமாறாமல் காப்பாற்றும் சக்தி படைத்தது தனிமனித ஒழுக்கம்.
இது இளைஞர்களின் யுகம். இன்றைய சமுதாயத்தைச் சரியான திசையில், சரியான முறையில், நடத்திச் செல்கிற திறமை இளைஞர்களுக்குத்தான் உண்டு.
வயதான பெரியவர்கள் நம்மை வழிநடத்திச் சென்றது ஒரு காலம். அனுபவம் வாய்ந்த நடுத்தர வயதினரும் ஆற்றல் மிகுந்த பெண்களும் நம்மை வழிநடத்திச் சென்றிருக்கிறார்கள்.
அவர்களெல்லாம் இப்போது கொஞ்சம் ஒதுங்கி நின்று, இளைஞர்களுக்கு வழிவிட வேண்டிய நேரம் வந்து விட்டது. காரணம், இந்த யுகம் இளைஞர்களுக்கான யுகம்.
சமீபத்தில் அமெரிக்காவுக்குச் சென்று வந்தேன். அங்குள்ள இளைஞர்கள் தறிகெட்ட வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். குடும்பம் என்கிற அமைப்புச் சிதைந்து போய், எந்தக் கட்டுப்பாடும் இல்லாத நிலையில் அபாயகரமான குழப்பத்தை நோக்கி, அவர்கள் சென்றுகொண்டிருப்பதை என்னால் எளிதாகப் பார்த்துப் புரிந்துகொள்ள முடிந்தது.
ஆனால், இந்த இளைஞர்களிடம் இருக்கிற நம்பிக்கைகளைப் பார்த்து அசந்து போனேன். அவர்களிடம் முயற்சி இருக்கிறது. பிற்காலத்தில் எப்படிப்பட்டவர்களாக வர வேண்டும்? அதற்கு என்னென்ன வேலைகளைச் செய்ய வேண்டும் என்கிற அறிவுத் தெளிவு அவர்களிடம் இருக்கிறது.
எல்லாவற்றையும்விட அவர்களிடம் நம்பிக்கை இருக்கிறது. 'நான் வீணாய்ப் போய்விட மாட்டேன். என்னால், எனக்கும், இந்த நாட்டுக்கும் பயனுள்ள முறையில் நிறையச்செய்ய முடியும்' என்கிற நம்பிக்கை அவர்களிடம் அதிகமாகவே இருக்கிறது.
அமெரிக்க இளைஞர்களை உன்னிப்பாகக் கவனித்தபோது, நம்முடைய இளைஞர்கள்தான் உடனடியாக ஞாபகத்துக்கு வந்தார்கள்.
நம் இளைஞர்கள், ஒழுக்க விஷயங்களில் குடத்திலிட்ட விளக்குப் போலத்தான் இருக்கிறார்கள். அகில உலகத்திலும் உள்ள இளைஞர்களுக்கு, ஒழுக்க வழிகாட்டிகளைத் தேடித் தரவேண்டும் என்றால், நம் இளைஞர்களைத் தாராளமாக அனுப்பி வைக்கலாம்.
ஆனால்....?
ஒழுக்கம் மட்டும் வாழ்க்கையில் முன்னேற்றத்தைத் தந்துவிடாது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாட்டு இளைஞர்களிடம் இருக்கும் நம்பிக்கை, விடாமுயற்சி, அறிவுத்தெளிவு நம்முடைய இளைஞர்களிடம் இல்லையே என்று நினைத்துபோது, எனக்குப் பரிதாப உணர்வு மேலிட்டது.
சுதந்திரப் போராட்ட காலத்தில் இளைஞர்களிடம் இருந்த அறிவுத் தெளிவு, இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் இளைஞர்களிடம் இல்லை.
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இளைஞர்களிடம் ஒரு நல்ல குணம் இருந்தால், மற்றொரு முக்கியமான நல்ல குணம் இருப்பதில்லை.
இராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஒரு விவேகானந்தரை உருவாக்கினார். விவேகானந்தரால் ஆயிரக்கணக்கான விவேகானந்தர்களை உருவாக்க முடிந்தது அந்தக் காலத்தில்.
ஆனால் இப்போது....?
இன்றைய இளைஞர்களின் மூளை மழுங்கடிக்கப்பட்டு இருக்கிறது.
கோணல்மாணலாகிப் போன அவர்களின்
சிந்தனையைச் சரிசெய்தால் மட்டுமே
இளைஞர்களின் எழுச்சியை மீண்டும் காண
முடியும்.
இன்றைய நமது இளைஞர்களிடம் அவநம்பிக்கை கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. இந்த அவநம்பக்கைக்கு எந்த அர்த்தமும் இல்லை. மற்ற நாட்டு இளைஞர்கள் வாழுகிற சூழ்நிலையை நம் நாட்டு இளைஞர்களின் சூழ்நிலையோடு, ஒப்பட்டுப் பார்த்தால், நம்மவர்கள் எவ்வளவோ தேவலை என்றுதான் சொல்ல வேண்டும். அங்கு நிலவுகிறப் போட்டி இங்கு இல்லை அங்கு இருக்கும் கலாசாரச் சீரழிவு இங்கு இல்லை.

எல்லா வகையிலும் சிறந்த சூழ்நிலை கொண்ட நாம் ஏன் அவநம்பிக்கைக்கு உள்ளாக வேண்டும்? என்பதுதான் புரியாத புதிர்!
நம்முடைய இளைஞர்களிடம் இருக்கும் இரண்டாவது பெரிய குறை - நாம் வாழும் சூழ்நிலையை மாற்றிக்காட்ட வேண்டும் என்கிற உற்சாகம் இல்லாததுதான். 'நான் மிகப் பெரிய தொழிலதிபராக வருவேன். நான் மிகப் பெரிய விஞ்ஞானியாக வருவேன்' என்கிற உற்சாகம் அவர்களிடம் இல்லை. அதற்கான சக்தியும் அவர்களிடம் இருப்பதாக அவர்கள் நினைக்கவும் இல்லை.
ஆனால், உண்மையில் அளப்பரிய சக்தி கொண்டது நம் இளைஞர்களின் உள்ளம். இளைஞர்களிடம் இருக்கும் சக்திக்கு உவமை சொல்ல வேண்டும் என்றால், கடலைத்தான் சொல்ல வேண்டும்.
கடல் எவ்வளவு ஆழமானதோ, அந்த அளவுக்குச் சக்தி நிறைந்தது வாலிப உள்ளம். கடல் அலை போல நாம் ஒவ்வொரு காரியத்தைச் செய்கிறபோது, கொஞ்சம் சக்தி நம்மிடமிருந்து வெளியேறுகிறது.
கடல் அலைகள் என்றாவது ஓய்ந்து பார்த்திருக்கிறீர்களா? கடல் என்றைக்காவது காய்ந்து பார்த்திருக்கிறீர்களா? அந்த மாதிரி உங்களிடம் இருக்கும் சக்தியும் என்றைக்கும் அழியாது.
"என்னிடம் நூறு இளைஞர்களைத் தாருங்கள். இந்தியாவையே மாற்றிக் காட்டுகிறேன்" என்றார் விவேகானந்தர். நாம் நாட்டை மாற்றுவது இருக்கட்டும். முதலில் நம்மை நாம் மாற்றிக்கொள்ள முயற்சி செய்வோம்.
குழந்தைப் பருவம் கடந்த காலம். அதை நாம் மாற்ற முடியாது. முதுமைப் பருவம் வருங்காலம். அது எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானிக்க விரும்பினால் - இளமைப் பருவம்தான் நிகழ்காலம்; அதைத் தவறவிடவே வேண்டாம்.
இ
ல
க்
கு
> ஒழுக்கம் இருந்து, நம்பிக்கையும், உற்சாகமும் மிகுந்தால் அந்த > மனிதரின் சாதனை - பக்கக் கண்ணாடி போடப்பட்ட குதிரையின் > ஸ்திரமான ஓட்டம் போல இருக்கும். எடுத்த இலக்கை அடைய முடியும். > வழி தவறமாட்டார்கள்!
நம்முடைய இளைஞர்களில் பலரிடம் ஒழுக்கம் இருக்கிறது. அதிலும் தனிமனித ஒழுக்கம் சிலரிடம் நன்றாக இருக்கிறது. வெளிநாட்டு இளைஞர்களிடம் இருக்கும் நம்பக்கையும் உத்சாகமும் நம் இளைஞர்களிடம் குறைவு.
ஒழுக்கம் இருந்து, நம்பிக்கையும் உத்சாகமும் மிகுந்தால் அந்த மனிதரின் சாதனை - பக்கக் கண்ணாடி போடப்பட்ட குதிரையின் ஸ்திரமான ஓட்டம் போல இருக்கும். எடுத்த இலக்கை அடைய முடியும் வழிதவற மாட்டார்கள்!
வெறும் நம்பிக்கையும் உத்சாகமும் இருந்து ஒழுக்கம் இல்லாதிருந்தால், அது காட்டுக் குதிரை போலத்தான் மனிதனை ஆட்டிப்படைக்கும். இந்த நிலையில் மனிதன் வழிதவற வாய்ப்பு அதிகம்.
வெறும் ஒழுக்கத்தை மட்டும் கடைப்பிடித்து, நம்பிக்கையும் உற்சாகமும் மிகக் குறைவாகக் கொண்டிருந்தால் அது மனிதரை ஒரு கிழட்டுக்குதிரை போல ஆக்கிவிடும். வாழ்க்கையில் மந்தம் மாத்திரமே மிஞ்சும்.
உங்களின் ஓட்டம் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? கிழட்டுக்குதிரையின் ஓட்டமா? காட்டுக்குதிரையின் ஓட்டமா? வெல்லும் குதிரையின் ஓட்டமா? முடிவுசெய்யுங்கள். ஒழுக்கம், நம்பிக்கை, உற்சாகம் மிகுந்த வெளிப்பாட்டால் வெற்றி உறுதி. வாழ்க்கையை ஜெயித்துக் காட்டுங்கள்!