விழித்துக் கொள்ளுங்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
* விழித்துக் கொண்டு சந்தோஷமாக வாழும் வாழ்க்கையை விட, விழி பிதுங்கப் பிதுங்க வாழும் சதா சச்சரவு நிறைந்த வாழ்க்கையில்தான் பலருக்கும் அதிக ஈர்ப்பு இருக்கிறது - இது ஒரு பெரிய விந்தை.
* கண்களைத் திற என்றால் எல்லோருக்கும் கண் இமைகளை மாத்திரமே திறக்கத் தெரியும். கண் இமைகளைத் திறப்பது, கண்களைத் திறப்பது அல்ல என்றால், மனித மனது புரிந்துகொள்ளக் கடினப்படும். அதேபோலதான் விழித்துக் கொள்வதும்.
* விழித்துக்கொள்வது, தன்னையே அழித்துக்கொள்ளும்தன்மை படைத்த அகங்காரத்தை ஒழிப்பதற்கான எளிய வழி.
நான் சொல்லப்போகும் கதை உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கக்கூடும். நம்மிடம் கதைகள் நிறையவே இருக்கின்றன. நாமும் நிறையவே கதை கேட்டு வளர்ந்திருக்கிறோம். ஆனால், கதையில் உள்ள கருத்துகளைக் காற்றில் விட்டதுதான் நம்முடைய துரதிர்ஷ்டம்.
ஒவ்வொரு முறையும் நான் உங்களுக்குக் கதை சொல்வது, குஷிப்படுத்தி பொழுதுபோக்குவதற்கு அல்ல. கதையில் உள்ள கருத்துக்களை நீங்கள் உணரச் செய்வதற்குத்தான்.
மிகப்பெரிய ஏரிக்குப்பக்கத்தில் ஒரு கிராமம் இருந்தது. தொடர்ந்து பெய்த மழையால் ஏரி நிரம்பி வழிந்தது.

ஒருநாள் அதிகாலை சூரியன் உதயமாவதற்கு முன்பே, படகோட்டி ஒருவர் ஏரிக்கரைக்கு வந்து விட்டார். கிராமத்திலிருந்து பக்கத்து ஊருக்குச் செல்ல வருகிறவர்களைப் படகில் அழைத்துக் கொண்டு செல்வதுதான் அவர் வேலை.
சூரியன் உதயமாகாத இருட்டில்
ஏரிக்கரையில் நடந்து வந்தபோது, அவர்
காலடியில் மூட்டை ஒன்று தட்டுப்பட்டது.
என்ன மூட்டை என்று அந்த
இருட்டிலேயே தொட்டுத் தடவிப்பார்த்தார்.
கூழாங்கற்கள் போல ஏதோ ஒன்று மூட்டை
நிறைய இருந்தது. மூட்டையைத் தூக்கி
ஏரிக்கரையில் - தன் படகு நிற்கும்
இடத்திற்குப் பக்கத்தில் போட்டார். இந்த
மூட்டை மீது கால்களை வைத்தபடி ஏதேதோ
யோசித்துக் கொண்டிருந்தார்.
கிழக்கில் சூரியன் உதயமாவதற்கு இன்னும் நிறைய நேரமிருந்தது. மூட்டையில் உள்ள ஒரு கல்லை எடுத்துத் தண்ணீரில் போட்டார். தொப்பென்ற சத்தம் அவர் காதில் புதிய ரீங்காரத்தை எழுப்பியது.
செய்வதற்கு வேறு எந்த வேலையும் இல்லாததால் ஒவ்வொரு கல்லாக எடுத்துத் தண்ணீரில் எறிந்துகொண்டே இருந்தார்.
கிழக்கில் மெதுவாகச் சூரியன் எழுந்து வந்தது. எங்கும் வெளிச்சம் பரவ ஆரம்பித்தது. மூட்டையில் இருக்கிற ஒரே கல்லைத் தவிர, மற்ற கற்கள் எல்லாவற்றையும் அவர் ஏரியில் வீசிவிட்டார்.
நன்கு பரவிய வெளிச்சத்தில் கையில் இருக்கிற ஒரே ஒரு கல்லைக் கவனித்துப் பார்த்தபோது ஆச்சரியத்தில் திடுக்கிட்டுப்போனார் அந்தப் படகோட்டி. விழித்துக் கொண்டார்.
அவர் கையில் இருந்தது சாதாரணக் கூழாங்கல் அல்ல. விலை மிகுந்த இரத்தினக்கல்!
"அய்யோ! அய்யோ! இத்தனை விலை மிகுந்த இரத்தினக் கற்களை ஏரியில் வீசி வீணடித்துவிட்டேனே!" என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தார் படகோட்டி.
இந்தப் படகோட்டி மாதிரிதான் நாமும். நம்முடைய வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்.
கிராமத்தில் பிறந்த இளைஞர் ஒருவர், "நான் கிராமத்தில் பிறப்பதற்கு என்ன பாவம் செய்தேனோ?" என்று புலம்பிக்கொண்டிருந்தார்.
அந்த இளைஞர் விழித்துக்கொண்டிருந்தால், கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்குக் கல்வி கற்றுத் தந்திருக்கலாம். கிராமத்தில் புதிய சாலை வசதிகளை
| பிரசாதம் | இந்த வாழ்க்கை என்பது நமக்குக் கிடைத்த மிகப் பெரிய வரப்பிரசாதம். அதை வீணாக்குவது மகா பாவம். |
ஏற்படுத்தியிருக்கலாம். புதிய தொழில்களைக் கொண்டுவந்து பொருளாதார முன்னேற்றத்தைக் கிராமத்தில் ஏற்படுத்தி இருக்கலாம்.
இத்தனை வாய்ப்புகளிருந்தும் அவர், வாழ்க்கையை அநியாயமாக வீணடித்தார். நகரத்தில் இருந்தால் எளிதில் முன்னேற்றம் கண்டுவிடலாம் என்பது அந்தக் கிராமத்து இளைஞரின் எண்ணம்.
ஆனால், முன்னேறுவதற்கு எவ்வளவு தடைகள் இருக்கின்றன என்பது நகரத்திலுள்ள இளைஞர்களுக்குத்தான் தெரியும்.
திரும்பத் திரும்பச் சொல்கிறேன்...
இந்த வாழ்க்கை என்பது நமக்குக் கிடைத்த மிகப் பெரிய வரப்பிரசாதம். அதை வீணாக்குவது மகாபாவம்.
நமக்கு இரண்டு கால்கள் நன்றாக இருக்கின்றன. அவற்றை முறையாகப் பயன்படுத்தாமல் வீணடிக்கிறோம்.
நமக்கு இரண்டு கைகள் நன்றாக இருக்கின்றன. அவற்றை முறையாகப் பயன்படுத்தாமல் வீணடிக்கிறோம்.
நம் இரண்டு கண்கள் - ஏன், மிகத் திறமையாகச் செயல்படும் மூளையைக்கூடச் சரியாகப் பயன்படுத்தாமல் வீணடித்துக் கொண்டிருக்கிறோம்.
படகೋಟியாவது ஒருவகையில் அதிர்ஷ்டக்காரர். கடைசிக் கல்லை ஏரியில் எறிவதற்குமுன் அதைப் பார்த்துவிட்டார். ஒரு கல்லாவது மிஞ்சியதே. ‘நல்லவேளை விழித்துக் கொண்டேன்’ என்கிற திருப்தி அவருக்கு இருக்கவே செய்கிறது.
ஆனால், அந்தப் படகோட்டி அளவுக்குக்கூட நம்மில் பலர் அதிர்ஷ்டம் செய்தவர்கள் அல்ல. வாழ்க்கையை ஒட்டு மொத்தமாக வீணாக்கிய பிறகுதான் அதன் அருமையை உணர ஆரம்பிக்கிறோம்.
''படகோட்டி, கடைசியாகக் கையில் வைத்திருந்த ஒரே ஒரு இரத்தினக்கல் போதும். அதை வைத்து மூன்று தலைமுறை உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்குச் சொத்து சேர்த்து விடலாம். வீணான இரத்தினங்களைப் பற்றிக் கவலைப்படத் தேவை இல்லை.
மீதமுள்ள வாழ்க்கையைப் பயனுள்ளதாக வாழ்வது எப்படி?'' என்ற கேள்வியைக் கேட்கும் நீங்கள், எந்த வயதினராக இருந்தாலும் சரி, வீணான வாழ்க்கைப் பகுதியைப் பற்றிக் கவலைப்படுவதை நிறுத்துங்கள்.
எஞ்சியிருக்கும் வாழ்க்கை ஒரு சில இரத்தினங்களுக்குச் சமம். எஞ்சிய வாழ்நாட்களை அருமையாக வாழக் கற்றுக்கொள்ளுங்கள். அது போதும். உங்களுடைய எல்லா மனத்துக்கங்களும் மறைந்துவிடும் - இதற்குப் பெயர்தான் விழித்துக் கொள்வது.
இன்பம் பொங்க ஆரம்பிக்கும். இந்தப் பிறவியையும் அடுத்தடுத்த பிறவிகளையும் இன்பமாக அனுபவிப்பதற்கான அடிப்படைத் தகுதியைப் பெற்றுவிடுவீர்கள்!