KAILASA Library/கதவைத் திற ... காற்று வரட்டும்!/கற்றுக்கொடுக்க முடியாது...Sign in
கதவைத் திற ... காற்று வரட்டும்!

கற்றுக்கொடுக்க முடியாது...

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

கற்றுக்கொள்ள முடியும்!

★வெற்றி-தோல்வி!
சாதனை-சோதனை!
கொண்டாட்டம்-திண்டாட்டம்!

-ஆகியவை ஒருவருடைய புத்திசாலித்தனத்தின் அளவைப் பொறுத்து அவருடைய வாழ்வை ஆட்டிப்படைக்கும் அம்சங்கள்.

★ புத்திசாலித்தனம் அதிகம் பெற்றிருப்பவரிடம் பணம், பதவி, புகழ், இன்பம் ஆகியன கட்டுப்பட்டுக் கிடக்கும்.

புத்திசாலித்தனம் குறைவாகப் பெற்றிருப்பவர் பணம், பதவி, புகழ், இன்பம் ஆகியவற்றிடம் கட்டுப்பட்டுக் கிடப்பார்.

★ வாழ்வின் எந்தெந்த அம்சங்களில் நம்முடைய புத்திசாலித்தனம் பெருகவில்லையோ, அந்தந்த அம்சங்களுக்குத்தான் நாம் அடிமையாக இருப்போம்.

புத்திசாலித்தனம் பெருகப் பெருக அனைத்தையும் நம் விருப்பப்படி கட்டுப்படுத்தும் அதிபதியாகி விடுவோம்

★ மகாராஜா போல்... மகாராணி போல்... வாழ வேண்டுமா? புத்திசாலித்தனம் உங்களினுள் பெருக வழிசெய்யுங்கள்.

சிறுவன் முகுந்தன் கிராமத்திலிருக்கும் அவன் தாத்தாவின் வீட்டிற்கு முதல் முறையாகச் சென்றிருந்தான். அந்தக் கிராமத்தின் ரம்யமான சூழல் சிறுவனைச் சுறுசுறுப்பாக்கியது.

வீட்டின் பின்புறத்திலிருக்கும் தோட்டத்திற்குள் சந்தோஷத்தோடு துள்ளிக் குதித்து ஓடினான். "முகுந்தா, அது தோட்டம். வீதியல்ல..." எனச் சப்தமிட்டார் தாத்தா. "அதெல்லாம் எனக்குத் தெரியும்" எனப் பதில் சொல்லிக்கொண்டே ஓடினான் முகுந்தன்.

தாத்தா, "தோட்டத்தில் பெரிய மண்குன்று ஒன்று இருக்கிறது..." எனச் சொல்லி முடிப்பதற்குள், "அதெல்லாம் எனக்குத் தெரியும்" என சொல்லிக் கொண்டே தோட்டத்தின் மண்குன்று மேல் ஏறி ஓடினான் முகுந்தன்.

"மடையா! சொல்வதைக் கொஞ்சமாவது நின்று கேட்கிறாயா? அந்தக் குன்றைத் தாண்டியதும்..." தாத்தா சொல்லிக் கொண்டிருக்கும்போதே, "அதெல்லாம் எனக்குத் தெரியும்" எனச் சொல்லிக்கொண்டே பலத்த சத்தத்தோடு குன்றைத் தாண்டியிருந்த குட்டையில் குதித்து, சகதியானான்.

தன்னைப் புத்திசாலி என நினைத்துக்கொண்டிருப்பவர்கள் மற்றவர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தரமாட்டார்கள்.

புத்திசாலி தொடர்ந்து வாழ்விலிருந்து கற்றுக்கொண்டேயிருப்பார்.

அவரவர் படைப்புத்திறன்,
விருப்பம் பொறுத்து புத்திசாலித்தனம்
வெவ்வேறு துறைகளில் வெளிப்படும்.

Nithyananda

நீங்கள்
‘அடிமையா?
அதிபதியா?’
என்பதை
நிர்ணயிப்பது
வெளியிலிருக்கும்
பணம், பதவி, புகழ் அல்ல.
உங்களுக்குள்ளிருக்கும்
புத்திசாலித்தனம்தான்
நிர்ணயிக்கிறது.

சிற்பியின் கைகள்!
ஓவியரின் விரல்கள்!
பாடகரின் குரல்!
கவிஞரின் சிந்தனை!
சமைப்பவரின் பக்குவம்!
அறிவாளியின் அறிவு!...

  • என்று புத்திசாலித்தனத்தின் அபூர்வ வெளிப்பாடுகளை அடுக்கிக்கொண்டே போவார்கள்.

மனோதத்துவ நிபுணர்கள் புத்திசாலித்தனத்தை ஏழுவிதமாக (Seven Types of Intelligence) வகைப் படுத்தியுள்ளார்கள்.

சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால்,
வாழ்க்கையை ஒரு திருவிழாப்போல்
கொண்டாடுவது எப்படி என்பதை
நடைமுறையில் சாத்தியமாக்கும் உள்உலக
உணர்வம்சம்தான் புத்திசாலித்தனம்.

எந்தத் துறையில் எவ்வளவு பெரிய புத்திசாலியாக ஒருவர் இருந்தாலும் சரி, வாழ்க்கையைக் கொண்டாடும் புத்திசாலித்தனத்தைப் பெறாவிட்டால் வாழ்க்கையே அர்த்தமற்றதாகிவிடும்.

நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்க்கையைக் கொண்டாடப் பிறப்பெடுத்தவர்கள்தான்.

‘வாழும் போதே வாழ்க்கையை வாழ்வது பற்றி யோசிக்காவிட்டால், சாகும் போது வாழ்க்கையை வாழாதது பற்றி யோசித்து நோக வேண்டியிருக்கும்.

எப்படி வசதி?

வாழும் போதே வாழ புத்திசாலித்தனம் தேவை!’

  • இப்படிக்குத் தியானாலயம்

என்ற விளம்பர போர்டைப் பார்த்த பேராசிரியர் தின்சாய்க்கு ஆர்வம் தாளவில்லை. அந்த வாசகங்கள் அவர் மனதில் மீண்டும் மீண்டும் ஓடியது.

எந்த வேலையிலும் ஈர்ப்பு இல்லாமல் தியானாலயத்தின் விளம்பரத்தை பற்றியே யோசித்த தின்சாய், மறுநாள் காலை எழுந்ததும் முதல் வேலையாக தியானாலயம் எங்கிருக்கிறது என்று விசாரித்து, நேரடியாகச் சென்றுவிட்டார்.

ஏதோ பெரிய ஆலயம், மடம் போன்று அது இருக்கும் என்று நினைத்துச் சென்ற தின்சாய்க்கு ஏமாற்றம்!

காரணம், சாதாரண தகரத்தால் உருவாக்கப்பட்ட ஐந்து குடிசைகள் அங்கே இருந்தன. அவ்வளவுதான்!

அ தி ப திபுத்திசாலித்தனம் அடிமையைக்கூட அதிபதியாக்கிவிடும். புத்திசாலித்தனக்குறைவு அதிபதியைக்கூட அடிமையாக்கிவிடும்!

தியானாலயம் என்ற போர்டுகூட இல்லை.

'இந்த டப்பா குடிசைக்கு அவ்வளவு பெரிய விளம்பர போர்டா!' என்று வியந்து போய் யோசித்துக் கொண்டிருக்க...

தின்சாய் மௌனத்தைக் கலைக்கும் விதமாய் சிறிய பரபரப்பு அங்கே உருவானது.

அறுபது வயது மதிக்கத்தக்க வயதான ஒருவரைச் சுற்றி மக்கள் கூட்டம். அவர் சாதாரண உடையில் இருந்தார். ஆனால், அவரைச் சுற்றி இருந்தவர்களில் பலர் பணக்காரர்கள் என்பது அவர்களின் உடையிலேயே தெரிந்தது.

முதியவர் ஒரு கல்மேடையில் அமர்ந்ததும் அவரைச் சுற்றிக் கீழே அனைவரும் அமர்ந்துக் கொண்டார்கள்.

தின்சாய் மட்டும்... "யார் இவர்?

எது தியானாலயம்?

அவ்வளவு பெரிய போர்டை வைத்தது யார்?" என்ற யோசனைகளோடு நின்று கொண்டிருந்தார்.

தின்சாயின் குழப்பமடைந்த கண்களைத் பார்த்த மாத்திரத்தில் எல்லாவற்றையும் பெரியவர் உணர்ந்துவிட்டார். அவர் ஒரு ஹஸிட் (Hasid) ஞானி.

ஞானி, "என்னப்பா, விளம்பர போர்டு பார்த்து வந்தாயா?" எனக்

மு த லீ டுஏழையாயிருந்து பெரும் பணக்காரனான எல்லோரும் செய்த ஒரே ஒரு முதலீடு, 'புத்திசாலித்தனம்!' ☞ உங்கள் முதலீடு என்ன?

கேட்டதற்கு, தின்சாய், "ஆமாம்... ஆமாம்...!" என்றார்.

ஞானி, "அந்த விளம்பர போர்டு இந்தக் குறும்புக்காரப்பசங்க செய்த வேலை" என்று அங்கிருந்தவர்களைச் சுட்டிக்காட்டி உரிமையோடு சொன்னார்.

தொடர்ந்த ஞானி, "நீ என்ன தேடி இங்கு வந்தாய்?" எனக் கேட்டதற்கு,

தின்சாய், "வாழும் போது வாழ்வது
என்றால் என்ன என்பதைப் பற்றி தெரிந்து
கொள்ள வந்தேன்" என்றார்.

ஞானி சொன்னார்: "வாழ்க்கையை முழுமையாகக் கொண்டாடுவதுதான், வாழும் போதே வாழ்வது... வேறென்ன என்னிடமிருந்து எதிர்பார்க்கிறாய்?" என்று.

தின்சாய், "வாழும்போதே வாழத்
தேவையான புத்திசாலித்தனத்தை எனக்கு
நீங்கள்தான் கற்றுக்கொடுக்க வேண்டும்"
என்றார்.

"ஹா... ஹா... ஹா..." ஞானியோடு
சேர்ந்து அங்கிருந்த அனைவருமே ஒருசேர
சிரிக்க, தின்சாய் மிகவும் சங்கடமாக
உணர்ந்தார்.

ஞானி, "புத்திசாலித்தனத்தைக் கற்றுக்கொடுப்பதில் ஒரு பெரிய தடங்கல் இருக்கிறது. இல்லாவிட்டால் ஆனந்தத்தோடு நானே உனக்கு அதைக் கற்றுத்தருவேன்" என்றார்.

portrait

ஒரு மரம் வெட்ட 8 மணி
நேரம் எனக்குத் தரப்பட்டால்,
அதில் 6 மணி நேரத்தை என்
கோடரியைக் கூர்தீட்டப்
பயன்படுத்துவேன்

  • Abraham Lingan

உங்களுக்கு அளிக்கப்பட்ட
80 வருட வாழ்நாளில்
எவ்வளவு நாட்களை
உங்களைக் கூர்தீட்டப்
பயன்படுத்தினீர்கள்!.

தின்சாய், “என்ன தடங்கல் அது?” என்றார்.

ஞானி, “அது - புத்திசாலித்தனத்தைக் கற்றுக்கொடுக்க முடியாது!” என்றார்.

தின்சாய் ஏமாற்றத்தோடு, “அப்படியென்றால், நான் கற்றுக்கொள்ள இங்கே ஏதுவுமே இல்லையா?” என்று கேட்க...

ஞானி, “யார் சொன்னது அப்படி! நீ இங்கே கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது” என்று தீர்க்கமாகச் சொன்னார்.

தின்சாய், “என்ன அது?” என்று ஆர்வம் மிகக் கேட்டார்.

ஞானி, “அது, புத்திசாலித்தனம்தான்” என்றார்.

portrait of a smiling monk

“We learn by doing”

  • Aristotle
  • செயலில் குதி. யோசிப்பதிலேயே நேர விரயம் செய்பவரால் எதையும் எப்போதும் கற்க முடியாது.

“ஹா... ஹா... ஹா...” மீண்டும்
அனைவரும் சிரிக்க, தின்சாய்க்கு “கிர்ர்”
என்று தலையே சுற்றியது. “இவர் என்ன
சொல்ல வருகிறார் என்பதே
புரியவில்லையே!” என்று யோசித்துக்
கொண்டே இருக்க, ஞானி, “அப்பனே
புத்திசாலித்தனத்தை கற்றுக்கொள்ள
முடியும். ஆனால் அதை கற்றுக்
கொடுக்கமுடியாது!

நீயும் சிலகாலம் இந்தக் குறும்புக்காரக் பசங்களோடு தங்கியிரு. புத்திசாலித்தனத்தை நீயும் கற்றுக் கொள்வாய்” என்று சிரிப்போடு சொல்லி முடித்தார்.

ஞானகுருவால்கூட ஒருவருக்குப்
புத்திசாலித்தனத்தைக் கற்றுக்கொடுக்க
முடியாது.

ஒவ்வொரு தனிமனிதரும் தானே கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு சாதனை தான் புத்திசாலித்தனம்.

அதிகபட்சம், ஒரு மனிதர்
புத்திசாலித்தனத்தைக் கற்றுக்கொள்வதற்கான
சூழ்நிலையையும் உத்வேகத்தையும்
குருவால் உருவாக்க முடியும். அவ்வளவே.

புத்திசாலித்தனம் என் ஆயுதம்!

  • நபிகள் நாயகம். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்!
  • நம் ஊர் பழமொழி. புத்திசாலிக்கு ஆயுதம் அவசியமற்றது.
  • ஜென் கூற்று.

Mesial frontal lobe
எனப்படும் மூளையின் பகுதி
புத்திசாலித்தனத்தோடு நேரடி
சம்பந்தப்பட்டது. இப்பகுதியை
தியானம் மிக உற்சாகமாக இயங்க
வைக்கும் என்பது இன்று
மருத்துவத்தால் நிரூபிக்கப்பட்ட
ஒரு உண்மை. அப்பகுதி
உற்சாகமாகும்போது... ஆயுதம்
அவசியமற்றதாகும். அதோடு,
எந்தச் சூழலிலும் சுகமாய் வாழ,
சுமுகமாய் எதையும் சாதிக்கத்
தேவையான சூட்சுமத்தை கற்றுக்
கொள்வீர்கள்.

இதனால்தான் ஜே. கிருஷ்ணமூர்த்தி ஒரே ஒரு வரியில் சொல்லி முடித்து விட்டார்: “Master is not needed” தேவையில்லை.

ஆம், வாழ்க்கையைக் கொண்டாடும்
புத்திசாலித்தனத்தைக் கற்றுக்கொள்ள
ஒருவருக்குக் குரு தேவையில்லைதான்.

ஆனால், ஒரு நிமிடம் யோசியுங்கள்!

புத்திசாலித்தனத்தை நீங்களே
கற்றுக் கொள்ளும் சூழலையும்
உத்வேகத்தையும் யார் உங்களுக்காக
உருவாக்குவது?

உங்களுக்கு நீங்களேதான் அதை உருவாக்கிக்கொள்ள வேண்டும். ஆனால், இது எல்லோருக்கும் எளிமையாகச் சாத்தியப்படக்கூடிய காரியமல்ல.

புத்திசாலித்தனத்தைக் கற்றுக்கொள்ளும் சாத்தியக்கூறுகளை உருவாக்குவது கடினம் என்று எண்ணுபவர்களுக்காகவே, புத்தரிலிருந்து... ஜே. கிருஷ்ணமூர்த்தி வரை தொடர்ந்து எல்லா ஞானகுருமார்களும் தியான, ஞான சொற்பொழிவுகளையும் தியான சத்சங்கங்களையும் நடத்தி வருகிறார்கள்.

வாழும் ஞானியைச் சந்திப்பது, அவரின் தியான சத்சங்கங்களில் கலந்து கொள்வது... இவை அனைத்தும் புத்திசாலித்தனத்தை நீங்கள் கற்றுக்கொள்ள உதவும் சாத்தியக்கூறுகளை அதிகப்படுத்தும்.

இவற்றால், 'ஒவ்வொரு மனிதரும் வாழ்க்கையைக் கொண்டாட வேண்டும்' என்ற ஞானகுருமார்களின் கருணை நோக்கம் முழுப்பலன் பெறும்.

புத்திசாலித்தனத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!

அர்த்தமுள்ள சம்பவம்...

ரீ-சென் தன் குருவிடம் கேட்டார். “புத்திசாலித்தனத்தை எப்படிக் கற்றுக்கொள்வது. விளக்குங்கள்.” குரு, “சைக்கிள் ஓட்டுவது எப்படி? விளக்கிச்சொல்” எனத் திரும்பக் கேட்டார். ரீ-சென், “அது... அது...” எனத் தடுமாற... குரு கேட்டார், “உனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியும். ஆனால், விளக்க முடியாது. இருந்தும் புதிதாய் கற்றுக்கொள்ள நினைப்பவரிடம் என்ன சொல்வாய்?” ரீ-சென், “கற்றுக்கொள் என்பேன்” என்றார். குரு சிரித்தார். ரீ-சென் மலர்ந்தார். புத்திசாலித்தனத்தை விழிக்கச்செய்ய முடியும். எதுவுமே ஆரம்பத்தில் மலைப்பாகத்தான் தெரியும். குதியுங்கள். முடியும். இப்பிறவியிலேயே வாழ்ந்திடலாம்!

எந்த நல்ல விஷயங்களும் கண்டுபிடித்தவர்களுக்கு மட்டுமே சொந்தமானதல்ல. உலகுக்கே அவை சொந்தம்!

பெண்களின் நெற்றிப்பொட்டில் குங்குமம் வைப்பதின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

இது ரிஷிகளால் வடிவமைக்கப்பட்ட ஒரு பாதுகாப்பம்சம். ஒரு டெக்னிக்.

உங்களை ஒருவர் வசியம் செய்ய வேண்டுமானால், உங்களின் நெற்றியிலிருக்கும் சக்திமையம் வழியாக மட்டுமே அதைச் செய்ய முடியும்.

ஆக்ஞா ஞானத்தின் ஊற்று.

குங்குமமிடுவது
சம்பிரதாயமல்ல,
அது ஒரு டெக்னிக்

அதனால்தான் 'வசியம் செய்தல்' பற்றி நீங்கள் படித்த புத்தகங்களிலெல்லாம் வசியம் செய்பவர், 'கண்களைப் பார்க்கச் சொல்வார்' எனக் குறிப்பிட்டிருப்பதைப் படித்திருப்பீர்கள்.

நெற்றிப்பொட்டில் குங்குமம் வைத்தால், நெற்றியிலிருக்கும் ஆக்ஞா சக்திமையம் பாதுகாக்கப்பட்டுவிடும்.

மேலும், குங்குமம் அதன் வேதியியல் பண்புப்படி ஆக்ஞாவை சக்தியூட்டும். அது புதுப் பொலிவூட்டபடும். இந்த ஆக்ஞா சக்தி மையம் - மனிதரின் புத்திசாலித்தனம் சம்பந்தப்பட்டது.

ஆக்ஞா சக்கரம் எங்கிருப்பதாக வேதங்கள் விவரிக்கின்றனவோ, அந்த இடத்தில்

மனிதமூளையின் Mesial frontal lobe எனப்படும் பகுதி இருக்கிறது. இதை இன்றைய விஞ்ஞானமும் ஒத்துக்கொள்கிறது.

மருத்துவர்கள், மீஸியல் பிராண்டல் கதுப்பானது, மனிதனின் புத்திசாலித்தனத்தோடு (Intelligence) நேரடியாகத் தொடர்புகொண்டது எனச் சொல்கிறார்கள். இங்கு மெஞ்ஞானமும் விஞ்ஞானமும் இணைகிறது.

குங்குமம் ஆக்ஞா சக்தி மையத்தையும் அதைச் சார்ந்த மூளைப்பகுதியையும் உற்சாகப்படுத்துகிறது.

ஆக்ஞா சக்தி மையம் நல்ல இயக்க நிலையிலிருந்தால், ஒருவரை வசியம் செய்ய முடியாது.

சித்து வேலைகள் அதிகமாயிருந்த காலத்தில், பெண்களை, வசியம் செய்பவர்களிடமிருந்து காக்கவும் அவர்களின் புத்திசாலித்தனத்தை அதிகரிக்கவும் ஆக்ஞா சக்திமையம் இருக்குமிடத்தில் பெண்கள் குங்குமத்தைப் பொட்டாக வைப்பது என்பது ஒரு சம்பிரதாயமாக ரிஷிகளால் வகுத்தளிக்கப்பட்டது. இது ஒரு டெக்னிக்.

தினமும் குங்குமம் வைப்பது எல்லா மனிதர்களுக்கும் மிகவும் நல்லது. குங்குமம் இந்து மதத்துக்கு மட்டுமே சொந்தமானதல்ல.

மருந்து எல்லா மதத்திற்கும் பொதுவானது. "ஒரு கிறிஸ்தவர் கண்டுபிடித்த மருந்தை இந்துக்கள் பயன்படுத்துவது பாவம்" என ஒருவர் சொன்னால் அது எவ்வளவு அபத்தமானதாக இருக்கும்.

குங்குமம் புத்திசாலித்தனத்தை உடல்ரீதியாக அதிகரிக்கச் செய்யும் ஒரு மருந்து. விரும்புபவர்கள் தினம் பயன்படுத்திப்பலன் பெறுங்கள்.

குங்குமப்பொடிக்கு மட்டுமே இந்தச் சக்தி உண்டு. செயற்கையாய், மாற்றாய் தயாரிக்கப்படும் குங்கமச் சாந்துகளுக்கும் ஸ்டிக்கர்களுக்கும் இந்தச் சக்தியில்லை.

குங்குமத்தின் முழுப்பலன் விரும்புவோர் குங்குமப்பொடி மட்டுமே பயன்படுத்துங்கள்.

நல்ல விஷயங்கள் எந்த மதத்தினருடையதாக இருந்தாலென்ன?

குறுகிய வட்டத்திற்குள் குறுகிப்போகாமல் பரந்தமனதோடு, எல்லோரும் எல்லாவற்றையும் பயன்படுத்திக் கொள்வதும் ஒரு புத்திசாலித்தனமே.

பரந்தமனதை, பெறுவதே தியானத்தின் முதல் குறிக்கோள்.

தியானத்தில் கிடைக்கும் முதல் பலனும் இதுதான்.

நல்ல கருத்தை...
ஆரோக்கியமான வழிமுறையை...
ஆனந்தம், அமைதி தரும் தியான முறையை...
எந்த மதம் சொன்னாலும் சரி, அது சரியானதே.

எல்லா மதத்திலிருக்கும் எல்லா நல்லவற்றையும் உங்களை வளமாக்க உதவும் கருவிகளாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்!