ஏன் ஆன்மீகம்?...
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
★ ஆனந்தம் நோக்கிப் பயணம் செய்யும் மூன்று தரப்பட்ட மனிதர்கள்:
“என்னுடைய வீட்டில் இருப்பவர்களைத் திருப்திப்படுத்தினால் போதும். இவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் போதும். அதுதான் என் வாழ்க்கையின் நோக்கம்” - முதல் வகையினர்.
“வீட்டில் இருப்பவர்கள் எல்லோரையும் திருப்திப்படுத்துவது சாத்தியமில்லாதது. முதலில் நான் மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும். நான் திருப்தி அடைய வேண்டும்” - இரண்டாவது வகையினர்.
“வெளிஉலகில் அடையும் மகிழ்ச்சியும் திருப்தியும் நிரந்தரமாக இருப்பதில்லையே. இந்த நிரந்தரத் தன்மையைத்தான் நாம் முதலிலிருந்தே தேடுகிறோமோ? ஒருவேளை அதுதான் ஆனந்தமா? அதுதான் நிம்மதியா?”
- மூன்றாவது வகையினர்.
★ வாழ்க்கையின் எல்லை வரை எட்டிப்பார்க்காத வரை, வாழ்க்கையின் நோக்கத்திற்கான விடை தெரியாது. நோக்கம் புரியாது. ஆனால், ஏக்கம் இருப்பது மட்டும் புரியும்.
★ மனிதப்பிறப்பின் நோக்கமே நிலையான, நித்யமான ஆனந்தத்தைப் பெறுவதுதான். ஆனந்தம் பெறும் வரை ஏக்கம் இருக்கும்.
- இப்படி, வாழ்க்கையின் பல புரியப்பட வேண்டிய புதிர்களை விடுவிப்பதுதான் ஆன்மீகம்.
“கொஞ்சம் ரிலாக்ஸாக உட்காரலாம் என்றால் எங்கங்க முடியுது?... பணப் பிரச்சனைகள்! உடல்வியாதிகள் ! மனக்கஷ்டங்கள் ! - இவற்றோடு கொஞ்சம் அயர்ந்தாலும் பின்தங்கி விடுவோமோ என்ற நிலையில் இருக்கும் வியாபாரப் போட்டி! இவ்வளவு நெருக்கடிகளுக்கு நடுவில் ஆன்மீகம் எங்களுக்குத் தேவைதானா?”

ஆன்மீகம் = ஆனந்தம்
ஆனந்தமயமான
வாழ்க்கைக்குப்
பெயர்தான்
ஆன்மீக வாழ்க்கை
நான் செல்கிற எல்லா இடங்களிலும் நிச்சயம் இதுபோன்ற கேள்வி கேட்பார்கள்.
இதற்கு ஒரே பதில், - “நமக்கு நிச்சயம் ஆன்மீகம் தேவை”.
உங்கள் கேள்விக்கு மிக அருமையான
பதிலும் விளக்கமும் தரக்கூடிய
கதையொன்றைச் சொல்கிறோம்.
கேளுங்கள்.
மனுஷ்யாத்ரி காசி நோக்கிப் பயணம்
மேற்கொண்டார். ‘காசிக்குப் போய்ச் சேர
எவ்வளவு நாட்கள் ஆகும்?’ என்று
ஏற்கெனவே விசாரித்துவிட்டுத்தான் தன்
ஊரைவிட்டுக் கிளம்பினார்.
குறிப்பிட்ட காலம் தாண்டியும் காசி வராததால், தான் வழி தவறியிருப்போம் என்ற சந்தேகத்தில் எதிரில் வந்த சாதுவிடம், “சாமி, காசிக்கு இன்னும் எவ்வளவு தூரம் இருக்கிறது?” என்று மனுஷ் கேட்டார்.
சாது, “பதில் சொல்வதற்குமுன் நான்
கேட்கும் இரண்டு கேள்விகளுக்குப் பதில்
சொல்லுங்கள்” என்றார். மனுஷ்,
“பதிலுக்காக இரண்டு கேள்விகளுக்குப்
பதில் சொல்ல வேண்டுமா? வேடிக்கையாக இருக்கிறது" என்று நமட்டுச்சிரிப்பு சிரித்து, "சரி. கேளுங்கள் உங்கள் கேள்விகளை" என்றார்.
"எதற்காக நீங்கள் காசிக்குப் புறப்பட்டீர்கள் என்று தெளிவாகத் தெரியுமா?" என்று முதல் கேள்வியைக் கேட்டார் சாது.
கொஞ்சம்கூட எதிர்பார்க்காத கேள்வி ஆகையால் சற்றுத் திகைத்த மனுஷ்,
"ஏதோ ! காசி ஒரு புண்ணிய ஸ்தலம். அங்கே சென்றால் புண்ணியம் கிடைக்கும் என்றார்கள்..." என்று தெளிவற்ற பதிலைக் கூறினார்.
"புறப்படும் முன் காசியைப் பற்றித் தெளிவாக விசாரித்துவிட்டுத்தான் கிளம்பினீர்களா?" என்று இரண்டாம் கேள்வியைக் கேட்டார் சாது.
இந்தக் கேள்வி சுத்தமாக எந்தச் சம்பந்தமும் இல்லாதது போல மனுஷ்க்குத் தோன்றியது. "கொஞ்சம் விசாரித்துவிட்டுத்தான் கிளம்பினேன். போகப் போக விசாரித்துக்கொள்ளலாம் என்று நினைத்துச் சும்மா இருந்துவிட்டேன்" என்றார் மனுஷ்.
"ஏன் - காசிக்குப் போக வேண்டும் என்ற தெளிவும் காசியைப் பற்றிய தெளிவான விவரங்களையும் நீங்கள் முன்பே தெரிந்துகொண்டிருந்தால், காசிக்கு எவ்வளவு தூரம் போகவேண்டும் என்ற கேள்வியையே என்னிடம் கேட்டிருக்க மாட்டீர்கள்." - அமைதியாகச் சொன்னார் அந்தச் சாது.
மனுஷ்க்கு ஒன்றுமே புரியவில்லை. ஏதோ வில்லங்கமான ஆளிடம் வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்டது போலத் தோன்றியது. தமக்குத் தேவையில்லாத பல விஷயங்களைச் சாது பேசுவது போலத் தோன்றியது. கடைசியில் குழப்பத்தோடு, "நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் இன்னும் பதில் சொல்லவே இல்லை" என்றார் மனுஷ்.
ஆ
ன
ந்
த
ம்
ஆனந்தமயமாக
வாழமுடியாமல் போனதற்கு
மனிதர்கள் கண்டுபிடித்த
புதுப்பெயர்தான்
சாதாரண வாழ்க்கை!
சாது, "காசியைத் தாண்டி நாற்பது மைல் நீங்கள் வந்துவிட்டீர்கள். உங்களிடம் தெளிவான விவரம் இல்லாததாலும் வழியில் சிலரது தவறான வழி நடத்துதலினாலும் நீங்கள் வழிதவறிவிட்டீர்கள்" என்றார்.
மனுஷ் அப்போதுதான் தன் தவறை உணர்ந்தார்.
இந்தக் கதை நம் வாழ்க்கைக்கு மிகச் சரியாகப் பொருந்தும். "ஏன் இந்த உலகத்தில் பிறந்தோம்? எதற்காகத் தொடர்ந்து இவ்வளவு கஷ்டப்படுகிறோம்?" என்ற அடிப்படைத் தெளிவு நம்மிடம் இல்லாததே, நம்முடைய பல பிரச்சனைகளுக்குக் காரணம்.
எல்லோரும் ஏதோ ஒன்றைத் தேடி வாழ்க்கையைத் துவங்குகிறோம் அது நல்ல படிப்பு, நல்ல வேலை, புகழ், செல்வம், பதவி இவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசை இருப்பதற்கு, அவர்களின் மன அமைப்பே காரணம்.
ஆசை பலவாக இருந்தாலும் தேடுதலின் நோக்கம் ஒன்றுதான். நிம்மதி, ஆனந்தம் - இவற்றைப் பெறத்தான் ஒவ்வொருவரும் அவரவருக்குப் பிடித்த வகையில் முயல்கிறார்கள்.
உங்களுடைய முயற்சியில் எந்தவிதத் தவறும் இல்லை. முயற்சி செய்யும் விதத்தில்தான் பல கோளாறுகள் உள்ளன.
கதையில் வரும் மனுஷ்யாத்ரி போலத்தான், பலரும் மேம்போக்காக சில விஷயங்களைத் தெரிந்துகொண்டு வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் முயற்சிகள் தொடர்ந்து தோல்வியைச் சந்திக்கின்றன.
'நீங்கள் யார்? உங்களுக்கு உள்ளே அடங்கிக் கிடக்கும் அதிசயங்கள் எவ்வளவு? வாழ்க்கையை ஆனந்தமாக வாழ்வது எப்படி? ஏன் நாம் நினைத்தபடி வாழ்க்கையும் உறவுகளும் அமையவில்லை? எப்படி அமைத்துக்கொள்வது?'
இந்தக் கேள்விகளுக்கான பதில்களைக் கண்டுகொள்வதற்காகத்தான், நமக்கு ஆன்மீகம் தேவைப்படுகிறது. நமக்குள் ஒளிந்துகொண்டிருக்கும் மனம், உடல், ஆன்மா சம்பந்தப்பட்ட விஷயங்களைத் தெரிந்துகொள்ள உதவி செய்யும் மார்க்கம் தான் ஆன்மீகம்.
| ஆ | வாழ்க்கையில் சாதனைகள் |
|---|---|
| ன் | பல சாதித்த பிறகு கிடைக்காத |
| மீ | திருப்தியையும் சந்தோஷத்தையும் |
| க | எளிதாக வழங்கும் மார்க்கம்தான் |
| ம் | ஆன்மீகம். |
எவ்வளவு சொத்து, புகழ் இருந்தாலும் சரி, அவற்றை எப்படி அனுபவிப்பது என்பது பலருக்கும் தெரியாது. உங்களின் அனுபவிக்கும் தன்மை அதிகமானால், சின்னஞ்சிறு விஷயங்களில்கூட சந்தோஷம் அடைவீர்கள்.
வாழ்க்கையில் சாதனைகள் பல சாதித்த பிறகு கிடைக்காத திருப்தியையும் சந்தோஷத்தையும் எளிதாக வழங்கும் மார்க்கம்தான் ஆன்மீகம்.
ஒரு நாளைக்கு ஓர் அரைமணி நேரமாவது ஆனந்த வாழ்வு பற்றிய ஆன்மீகத்திற்கு ஒதுக்காவிட்டால், உங்கள் வாழ்க்கையின் அற்புதமான ஒரு பகுதியை இழந்து கொண்டே இருக்கிறீர்கள்.
எனவே, 'ஏன் ஆன்மீகம்? எதற்காக ஆன்மீகம்?' என்ற கேள்விக்கே இடம் இல்லை.
இயந்திரத்தனமாக ஓடிக்கொண்டிருக்கும் உலகத்தில் ஒவ்வொரு தனி மனிதருக்கும் ஆன்மீகம் என்பது அவசியமாகிவிட்ட ஒன்று. தவிர்க்க முடியாத ஒன்று!