கதவைத் திற...
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
காற்று வரட்டும்!
ஒரு ஜென் ஞானி, மலையை ஒட்டிச் சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் நதிக்கரையோரத்தில் நின்று கொண்டு, நிலவின் அழகையும் நட்சத்திரங்களின் மினுமினுப்பையும் கண்டு ஆனந்தமாக ரசித்துக் கொண்டிருந்தார்.
அந்த நதிக்கரையோரத்தில் துன்பங்களை மட்டுமே கண்டு நொந்துபோன ஒருவர், குடிசையில் அடைந்துகொண்டு, "வாழ்க்கை துக்ககரமானது. வாழ்க்கை துக்ககரமானது!" என்று புலம்பிக்கொண்டிருந்தார்.
இதைக் கேட்ட ஞானி, "இல்லையப்பா. வாழ்க்கை ஆனந்தமயமானது. குடிசையைவிட்டு வெளியே வந்து பார். உனக்குத் தெரியும்" என்றார். துறவியின் பேச்சில் அவருக்கு நம்பிக்கை இல்லை.
"முதலில் கதவைத் திறந்துவை. காற்று உள்ளே வரட்டும். உன்னைத் தேடிவரும் தென்றல் உன்னை வெளியே கொண்டுவரும்" என்று சொன்னார் ஞானி. அதையும் அவர் கேட்கிற மாதிரி இல்லை.
உடனே அந்த ஞானி, "அடடே.... ஆபத்து. ஆபத்து! உன் குடிசையில் தீப்பிடித்துவிட்டது!" என்று கத்தினார். குடிசை எரிகிறது என்றவுடன் பதறியடித்துக் கொண்டு அவர் வெளியே ஓடிவந்தார்.
வந்தவரைப் பிடித்திழுத்து வானத்தைக் காட்டினார் ஜென் ஞானி. மேலே ஒளிரும் நிலவின் அழகையும் நட்சத்திரங்கள் மின்னுவதையும் அருகே சலனமற்று ஓடும் ஆற்றையும் கண்டு பரவசப்பட்டு நின்றார்.
"குடிசையைவிட்டு வெளியே வா... அழகைக் கண்டு ஆராத்திக்கலாம்" என்று அழைத்தபோது அவர் கேட்கவில்லை. அவரோ கடவுள் நம்பிக்கை இல்லாதவர். எனவே, "பரம்பொருளைக் காணலாம். மோட்சம் அடையலாம்" என்று அவரிடம் சொல்லிப் பிரயோஜனமில்லை. பிறகு அவரை எப்படித்தான் வெளியே அழைத்து வருவது?
அதற்கு அந்த ஜென் ஞானி பயன்படுத்திய டெக்னிக்தான், 'ஆபத்து! குடிசை தீப்பற்றி எரிகிறது' என்று கத்தியது. அதையும்கூட ரஸவாதம் என்று நான் அழைக்கிறேன்.
ரஸவாதத்தின் மூலம் பல விந்தைகளைச் செய்யலாம். ஒரு மனிதர், ஞானியாக மாற வேண்டுமானால் அவருக்குள் ஆனந்தத்தின் ரஸவாதம் நடக்க வேண்டும். 'அதற்கான வழிமுறைகள் என்ன? டெக்னிக்குகள் என்ன?' என்பதைச் சொல்லத்தான் இந்தத் தொடர்.
ஆனந்தத்தின் ரஸவாதத்தை அனுபூதி அடைந்தவர் மட்டும்தான் சொல்ல முடியும். பகிர்ந்துகொள்ள முடியும். அனுபவம் என்பது வேறு. அனுபூதி என்பது வேறு. சிறிய வயதில் அடுப்பில் எரியும் தீயைத் தொடுகிறோம். அதைத் தொட்டவுடன், 'அடுப்புத் தீ சுடும்' என்று தெரிந்துகொள்கிறோம். மெழுகுத்திரியில் எரியும் நெருப்பைத் தொடுகிறோம். எரியும் மெழுகுத்திரியைத் தொட்டாலும் சுடும் என்று தெரிந்துகொள்கிறோம்.
ஒவ்வொரு நெருப்பையும் தொட்ட பிறகு, 'அது சுடும்' என்று அறிவது அறிவு. ஒரே ஒருமுறை தீயைத் தொட்டு, 'அது சுடுகிறது' என்று தெரிந்தவுடன், எல்லாத் தீயும் சுடும் என்று தெரிந்துகொள்வது அனுபவம். ஒருவர் தீயைத் தீண்டியதும், அவர் வேதனைப்படுவதிலிருந்தே, 'தீ சுடும்' என்ற உண்மையைக் கிரகித்துக்கொள்வது அனுபூதி.
| அ னு ப வ ம் | ஆனந்தத்தின் ரஸவாதத்தை, அனுபூதி அடைந்தவர் மட்டும்தான் சொல்ல முடியும். பகிர்ந்துகொள்ள முடியும். அனுபவம் என்பது வேறு. அனுபூதி என்பது வேறு. |
சிறிய வயதில் அனுபூதிபெற்ற மகான்கள் பலர்.
ஆதிசங்கரர், தட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரத்தில் ஓர் அருமையான ஸ்ருதி சொல்கிறார்.
"தட்சிணாமூர்த்திக்கோ பேரன் வயது. அவரது சீடர்களுக்கோ தாத்தா வயது. ஆனால், குருவின் அனுபூதியினால் சிஷ்யர்களின் துக்கம் விலகுகிறது. அவர்கள் ஞானமடைகிறார்கள்" என்கிறார்.
தட்சிணாமூர்த்தியில் ஆரம்பித்து, அனுபூதிமான்கள் எல்லோரும் இளையவர்களாகவே இருந்திருக்கிறார்கள். பதினாறு வயதிலேயே ஞானமடைந்தார் ஆதிசங்கரர். இயேசு பெருமான், நபிகள் நாயகம், ரமண மகரிஷி, வள்ளலார், ஜே. கிருஷ்ணமூர்த்தி என்று சிறிய வயதிலேயே ஞானவிளக்காக இருந்தவர்கள் பலர்.
வாழ்க்கையை நாம் எப்படி வாழ்கிறோம்?
அதை எப்படிப் பார்க்கிறோம்? இதை விளக்கும்
ஒரு அருமையான சம்பவம்...
யுத்த காலத்தில் சிறிய விமானமொன்றை மலைவாசி மக்கள் வாழும் ஒரு குக்கிராமத்தில் விட்டுச் சென்று விடுகிறார்கள், சில விமானிகள். அந்தக் கிராமத்தில் உள்ள படிப்பறிவில்லாத மக்கள் அதைப் பார்க்கின்றனர். விமானத்தைப் பற்றிக் கேள்விப்படாத அவர்கள், 'இது ஒரு மாட்டு வண்டியாகத்தான் இருக்க முடியும்' என்று கருதி, மாட்டு வண்டியாக அதைப் பயன்படுத்துகிறார்கள்.

விதைக்குள்
ஆல விருட்சம்.
கதைக்குள்
ஆனந்த விருட்சம்.
கதவைத் திற...
காற்று வரட்டும்!
உள்ளத்தை திற...
உற்சாகம் பொங்கட்டும்!
அந்தக் கிராமத்தில் ஓரளவுக்குப் படித்த இளைஞர் ஒருவர் அதைப் பார்க்கிறார். 'இது மாட்டுவண்டி அல்ல. காரணம், இதற்கு கியர் இருக்கிறது. சக்கரங்கள் இருக்கின்றன. எனவே, இது டிராக்டர்' என்று சொல்ல முயற்சி செய்தார். பின் டிராக்டரைப் போல அதைப் பயன்படுத்த ஆரம்பித்தார்.
சில மாதம் கழித்து விமானப்படையில் பணிபுரியும் வீரர் ஒருவர், அந்தக் கிராமத்திற்குச் சுற்றுலா பயணியாக வந்தார். "இது மாட்டுவண்டியும் அல்ல. டிராக்டரும் அல்ல. போரில் பயன்படுத்தப்படும் விமானம்" என்று சொன்னார். அவர் அதை ஓட்டியும் காட்டினார்.

ஒரு மனிதர், ஞானியாக
மாற வேண்டுமானால்
அவருக்குள்
ஆனந்தத்தின் ரஸவாதம்
நடக்க வேண்டும்.
இந்த உலகத்தில் பெரும்பாலான மனிதர்கள், இந்த வாழ்க்கையை மாட்டு வண்டியாகத்தான் கருதுகிறார்கள். சிலர் டிராக்டர் என்று நினைக்கிறார்கள். மிகச் சிலர் மட்டுமே விமானம் என்பதைச் சரியாகப் புரிந்து கொள்கின்றனர்.
பட்டுப்புழு எச்சிலை உமிழ்ந்து, உமிழ்ந்து, தன்னைச் சுற்றிச் ஒரு தடையை எழுப்பிக்கொள்கிறது. பிறகு அந்தத் தடையை உடைத்துக்கொண்டு வெளியே வரமுடியாமல் தவிக்கிறது. வானத்தில் வண்ணத்துப்பூச்சியாக வட்டமிட்டு ஆனந்தமாகப் பறக்காமல், கடைசி வரை புழுவாகவே நெளிந்து இறந்துவிடுகிறது.
மனிதர்களும் இந்தப் பட்டுப்புழு
மாதிரிதான். அறிந்தோ, அறியாமலோ
தன்னைச் சுற்றிச் சுவர்களை
எழுப்பிக்கொள்கிறார்கள். துக்கத்திலேயே
வாழும் ஒருவர் சுவர்களை எழுப்புகிறபோது
அழகான வீட்டைக் கட்டிக் கொண்டிருக்கிறோம்
என்று நினைக்கிறார். ஆனால் கட்டி முடித்த
பிறகுதான், அது அழகான ஜெயில் என்பது
புரிகிறது. அந்தச் சிறையை உடைத்துக்
கொண்டு எப்படி வெளியே வருவது என்று
அவருக்குத் தெரியவில்லை. உடைக்கும்
தைரியமும் இல்லை.
விதை வெடிக்கப் பயந்தால், விருட்சம் எழாது. புழு கூட்டைக் கிழித்து வெளியே வரப் பயந்தால் வண்ணத்துப்பூச்சியாய் வானில் வெளியே பறக்க முடியாது. நீரில் குதிக்கப் பயந்தால் நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது. கதவைத்
திறக்கப் பயந்தால், காற்றை உள்ளே அனுமதிக்க முடியாது. கதவைத் திறந்து வையுங்கள்; காற்று உள்ளே வரட்டும்.!
மனிதர்கள் மூன்று வர்க்கம் :
* உணவு - உறக்கம்!
* காமம் - களிப்பு!
* பதவி - பணம்!
* பேர் - புகழ்!
* பிறப்பு - இறப்பு!
என்ற அடிப்படை விஷயங்களிலேயே அல்லல் படுபவர்கள் சராசரி மனிதர்கள். இவர்கள், உடலை மாட்டுவண்டி போலப் பயன்படுத்தும் - முதல் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்.
* கலை - கலை!
* காவியம் - கவிதை
* ஓவியம் - சிற்பம்!
* நாட்டியம் - நாதம்!
என்று காலத்தால் அழியாத காவியங்களைப் படைத்து சராசரி மனிதரால் சாதிக்க முடியாததைச் சாதித்தவர் என்ற நிலையை அடைந்தவர்கள் கலைஞர்கள். இவர்கள், உடலை டிராக்டர் போலப் பயன்படுத்தும் இரண்டாவது வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்.
* தெளிவு - கனிவு!
* நிம்மதி - நிதானம்!
* அமைதி - ஆனந்தம்!
ஆகிய அற்புதங்களும் ஆச்சரியங்களும் தங்களுக்குள்தான் கொட்டிக் கிடக்கின்றன என்பதை அனுபவித்து அனுபூதி பெற்றவர்கள் மகான்கள். இவர்கள் உடலை விமானம் போல பயன்படுத்தும் மூன்றாவது வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்.
| மு டி வு | அற்புதங்களும் ஆச்சரியங்களும் தங்களுக்குள்தான் கொட்டிக் கிடக்கின்றன என்பதை அனுபவித்து அனுபூதி பெற்றவர்கள் மகான்கள். |
நீங்கள் என்ன முடிவுக்கு வந்திருக்கிறீர்கள்?
உங்கள் உடலை நீங்கள் விரும்பினால்,
மாட்டுவண்டியாகவும் பயன்படுத்தலாம்.
டிராக்டராகவும் பயன்படுத்தலாம்.
விமானமாகவும் பயன்படுத்தலாம்.
சராசரியோடு சராசரியாக வாழ்வதா? இல்லை, ஆனந்தம் என்னும் வானில் சிறகடித்துப் பறக்கும் சுதந்திரப்பறவையாக மாறுவதா?
- முடிவு நிச்சயமாக உங்கள் கையில்.
- முடிவைப் பொறுத்து விடிவு வடிவெடுக்கும்.
- பறக்க முடிவு எடுத்துவிட்டால், நிச்சயம் ஆனந்தம் சாத்தியம்.
முடிவெடுங்கள்!