கதவைத் திற ... காற்று வரட்டும்!
நீங்கள் ஆன்மீகவாதியா? கண்டுபிடியுங்கள்!
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
கீழ்க்கண்ட கோரிக்கைகளில் ஏதாவதொரு கோரிக்கை உங்களது கோரிக்கையானாலும் நீங்கள் ஆன்மீகவாதியே. இந்தப் பத்துக் கோரிக்கைகளை நிஜமாக்க முயற்சிப்பவர்களைத்தான் ஆன்மீகவாதிகள் என்றழைக்கிறோம்.
| ஆரோக்கியம் வேண்டும் | ☐ |
| மனநிம்மதி வேண்டும் | ☐ |
| வீட்டில் அமைதி வேண்டும் | ☐ |
| நானொரு கலைஞனாக வேண்டும் | ☐ |
| ஆசைப்பட்டதை அடைய வேண்டும் | ☐ |
| நாட்டில் மனிதநேயம் வளர வேண்டும் | ☐ |
| வாழ்க்கை ரகசியங்கள் விடுபட வேண்டும் | ☐ |
| நான் ஞானமடைந்தாக வேண்டும் | ☐ |
| பிரபஞ்ச ரகசியங்களெல்லாம் புரிய வேண்டும் | ☐ |
| எப்போதும் ஆனந்தமாகவே உணர வேண்டும் | ☐ |
மேற்கண்ட எல்லாமே ஆனந்தமாளிகையின் பத்து நுழைவாயில்கள். எந்த வாயில் வழியே வந்தாலும் நீங்கள் வரப்போவது ஒரே மாளிகைக்குத்தான்.
மதம், இனம், கலாச்சாரம், கல்வியறிவு என்ற எல்லாமே மேற்கண்ட பத்து நுழைவாயில்களில் ஏதோ ஒரு நுழைவாயிலுக்கு அழைத்து வரும் தூதுவர்கள்தான்.
நுழைவாயில் வந்ததும் நன்றி சொல்லி விடைபெற வேண்டிய நல்ல நண்பர்கள் இந்தத் தூதுவர்கள்.
நன்றி சொல்லுங்கள். தடைகளைத் தாண்டி உண்மை சாதனை படையுங்கள். அதே உணர்வோடு கட்டுரைகளைப் படியுங்கள்!