மனதின் எலும்புகள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
* பாறைக்குள் ஒளிந்திருக்கும் அழகிய சிலை போல் மனிதருக்குள் ஒளிந்திருக்கும் மாயசிலைதான் மனம்.
* அழகிய சிற்பம் உருவாவது சிற்பியின் கைவண்ணத்தைப் பொறுத்தது. ஆரோக்கிய மனம் உருவாவது தனிமனிதரின் மனமுதிர்ச்சியைப் பொறுத்தது.
* ஒரு கல்லில் இருந்து அழகு சிலையைச் செதுக்க உதவும் உளி போன்றது
- மனதைச் செதுக்க உதவும் உணர்வு! (மனதின் உளி, உணர்வு)
* பாறையைச் சிலையாக்குபவர் சிற்பி. மனதைக் குதூகலமாக்குபவர் தியானி.
* நாம் நம் தேவைக்கேற்றபடி மனதை விழிப்புணர்வால் செதுக்கி வடிவமைக்க முடியும்.
அமேசான் காட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட அபூர்வ சிம்பன்ஸி குரங்கு ஒன்று கலிபோர்னிய பல்கலைக்கழகத்தாரால் தொடர்ந்து மூன்றரை வருடங்களாக தீவிர ஆராய்ச்சிக்குட்படுத்தப்பட்டது.
ஆராய்ச்சியில் இருபத்தைந்தடி கூண்டுக்குள், அதன் வாழ்க்கையும் நடவடிக்கையும் சுருக்கப்பட்டுவிட்டது.
ஆராய்ச்சி முடிந்தபின் அதன் ஜோடிக் குரங்கும் வரவழைக்கப்பட்டது. இருப்பத்தைந்தடி, அறுபதடி கூண்டாக மாற்றப்பட்டது.
மாற்றப்பட்ட பின் தான்
ஆராய்ச்சியாளர்கள் இன்னொரு
ஆச்சரியத்தைக் கண்டுபிடித்தார்கள்.
கூண்டு அறுபதடி பெருகினாலும்,
அந்தக் குரங்கு இத்தனை வருடமாக தான்
வாழ்ந்து பழகிய அந்த இருபத்தைந்தடி
இடத்தை மட்டுமே மீதமுள்ள
வாழ்நாளெல்லாம் பயன்படுத்தியது.
குரங்கின் நடவடிக்கைகள் இருபத்தைந்தடிக்குள் சுருங்கிப் போனது.
இறுகிப் போனது.

உடலின் எலும்புகளைச் சரி செய்வது கடினம்.
ஆனால்,
மனத்தின் எலும்புகளை
எளிதாய் சரிசெய்யலாம்.
காரணம் - அவை
மாய எலும்புகள்.
- மனித மனம், அது முதலில் கிரகிக்கும் கருத்துக்கள் மற்றும் சம்பவங்களைக் கொண்டு தன்னை உருவாக்கிக் கொள்கிறது.
அவற்றிற்குள் உறைந்து இறுகிப்
போகிறது... அது நல்லதானாலும்
கெட்டதானாலும்!
வாழ்க்கையில் ஒரே மாதிரியான
சுகதுக்கங்களை மனிதர்கள் தொடர்ந்து
அனுபவிக்கக் காரணமானது இந்த
மனதின் எலும்புகள்தான்.
மனித உடலுக்கு எலும்புகள் போல், மனதிற்கு எண்ணங்கள்!
எண்ணங்களே இல்லையென்றால் மனமே இல்லை. எண்ணங்களின் தொகுப்பே மனம்.
இதில் வேடிக்கை என்னவென்றால், எலும்புகள் வளைந்தோ, நெளிந்தோ போய்விட்டால், மனிதர்கள் குட்டையாகவோ, கூனாகவோ மாறவேண்டியதுதான்.
எண்ணும் விதம் களங்கப்பட்டதாகவோ, ஆனந்தத்திற்கு மாறானதாகவோ இருந்தால், மனமும் கூனாகவோ, குருடாகவோ மாறிவிடும்.
விதவிதமான எண்ணங்கள் மனிதருக்குள் சமுதாயத்தாலும் உறவினர்களாலும் திணிக்கப்படுகிறது. எண்ணங்கள் சேரச் சேர, மனம் என்னும் குழந்தை வளர ஆரம்பிக்கிறது.
ஒரு சின்ன கதை...
ஐந்து வயதில் காணாமல் போன தன் நொண்டிக் குழந்தையை நினைத்து நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார் நவாப்.
நவாப்பிற்குத் துக்கம் தாளாநிலைக்குச் செல்லும் போதெல்லாம் தளபதியை அழைத்து, "போய் என் பையனைக் கண்டுபிடியுங்கள். என்னுடைய மகன் இல்லாமல் நாட்டுக்குள்ளே வரக்கூடாது. மீறி வந்தால் மரண தண்டனைதான்" எனச் சொல்லி அனுப்பி விடுவார்.
இப்படி பத்து வருடத்திற்குள் பதின்மூன்று தளபதிகளைத் தேடச் சொல்லி அனுப்பிவிட்டார். எனவே தளபதி பதவி என்றாலே அரசவையில் பீதிகொள்ள ஆரம்பித்தார்கள்.
பதினாலாாவதாக ஒரு தளபதி நியமிக்கப்பட்டார். ஒரு நாள்! துக்கம் உச்சத்திற்குச் செல்ல, அந்தத் தளபதியிடமும் எப்போதும்
| எ | மனதின் |
|---|---|
| லு | எலும்புகள் |
| ம் | எண்ணங்கள். |
| பு |
சொல்வதை சொல்லி நாட்டை விட்டு அனுப்பிவிட்டார்.
பதினாலாவது தளபதி புத்திசாலி. வித்தியாசமாக யோசித்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
தன்னுடன் வந்த காவலாளிகளிடம், அவர்கள் கண்ணில் படும் பதினைந்து வயது மதிக்கத்தக்க எல்லா நொண்டிப் பிச்சைக்காரச் சிறுவர்களையும் இழுத்து வரச் சொன்னார்.
காவலாளிகள் 25 பிச்சைக்காரச் சிறுவர்களை அழைத்து வந்தார்கள். தன் அரசனுடைய முகச்சாயலுக்கு ஒத்திருக்கும் ஒருவரை தளபதி தேர்ந்தெடுத்தார்.
அந்த பிச்சைக்காரச் சிறுவனை வணங்கி, “இளவரசே, உங்களுக்காக உங்கள் தந்தை காத்துக்கொண்டிருக்கிறார்” என்றார் தளபதி.
பிச்சைக்காரன், “அய்யா... என்ன சொல்கிறீர்கள்... நானொரு அனாதை, பிச்சைக்காரன்”.
தளபதி, “இளவரசே! அப்படிச் சொல்லாதீர்கள் உங்களுக்கு விவரம் தெரியும் வயதடையும் முன்பே நம் நாட்டிலிருந்து நீங்கள் காணாமல் போய்விட்டீர்கள். தயவு செய்து தாங்கள் திரும்ப நாட்டிற்கு வர வேண்டும்” என்று சொல்ல, நொடியில் தலைகீழாக மாறிப்போன பிச்சைக்காரன், அதிகாரத் தோரணையில் “அப்படியா சொல்கிறாய் நீ? சரி சரி. சீக்கிரம் பல்லக்கை கொண்டுவரச் சொல்...” என்று ஒருமையில் பேச ஆரம்பித்தான்.
பிச்சைக்காரன் இளவரசன் உடையைக்கூட இன்னும் உடுத்திக் கொள்ளவில்லை... அதற்குள் மனதளவில் இளவரசனாகி, “அதைச் செய், இதைச் செய்” என்று கட்டளையிட்டபடியிருந்தான்.
“இந்தப் பிச்சைக்காரன் எப்படி நடந்துகொண்டால் எனக்கென்ன, நான் நாடு திரும்ப வேண்டும்” என்றெண்ணிய தளபதி, இளவரசன் என்றதும் ஆட்டமாய் ஆடும் பிச்சைக்காரனைப் பார்த்து, “இதற்குப் பெயர்தான் அகங்காரமா!” என்றெண்ணி தன்னுள் சிரித்துக்கொண்டார்.
> | ரா | ஒருவன் ராஜாவாயிருப்பதும் கூஜாவாயிருப்பதும் | > | :--- | :--- | > | ஜா | நுழைந்துவிட்ட, நுழையப்போகும் எண்ணங்களைப் | > | | பொறுத்தது. |
எண்ணங்களின் சக்தியை விளக்கும் ஓர் அழகான கதையிது.
பாருங்கள்! எண்ணத்தில் ஏற்பட்ட சிறுமாற்றம். இதுவரை பிச்சைக்காரன் என்றெண்ணிக் கொண்டிருந்தவனின் மனதில் புதிதாக இளவரசனென்ற ஒரு எண்ணம் நுழைந்து விட்டது. அவன் இளவரசனாகவே மாறிவிட்டான்.
கதையின் கதாபாத்திரத்தை ஆழ்ந்து
பார்த்தால் பிச்சைக்காரன், இளவரசன் என்ற
இரண்டுமே "எண்ணத்தைப் பொறுத்தது"
என்பது தெரிய வரும்.
எண்ணங்களை உறிஞ்சி உறிஞ்சி
உயிர் வாழும் மனம் தொடர்ந்து நிறம்
மாறிக்கொண்டேயிருக்கும்.
ஒரு பெண்ணையோ, ஆணையோ தொடர்ந்து நான்கைந்து பேர் "நீ அழகு" என்று சொல்லிவிட்டால் போதும், தான் அழகென்ற எண்ணம் அவருக்குள் கர்வமாக மாறிவிடும்.
அதே பெண்ணையோ இல்லை
ஆணையோ "நீ மோசம்" என்று தொடர்ந்து
நான்கைந்து பேர் சொல்லி விட்டால் போதும்,
தான் மோசமென்ற எண்ணம், வருத்தமாக
மாறிவிடும்.
மனித மனது உறுதியாக
இல்லாததால்தான், மற்றவர்கள் புகுத்தும்
எண்ணங்கள் மனிதரைக் குரங்காட்டம் ஆட
வைக்கிறது. ரிலாக்ஸே இல்லாதவர்களாக
மனிதர்களை மாற்றிவிட்டது.
உறுதித்தன்மையும் தெளிவும் மனதின் முதுகெலும்புகள்.
பிச்சைக்காரனுக்குள், "நீ இளவரசன்" என்ற எண்ணத்தை நுழைக்க ஒரு தளபதி தேவையாயிருந்தது. "நீ இளவரசன்" என்ற உறுதித்தன்மையை தளபதி தந்த பின்தான் "நான் இளவரசன்" என்றெண்ணி அவனால் நிமிர முடிந்தது.

இன்று நம்மிடமிருக்கும்
மனம் ஒழுங்காக
செதுக்கப்படாத பாறை.
முடிவெடுத்துவிட்டால்
விழிப்புணர்வால்
மனதை செதுக்கி
ஆரோக்கியமான மனம்
படைக்கலாம்
ஒரு முறை யோசியுங்கள்...
ஏன், வெளியே இருப்பவர்கள்தான் நம் மனதின் எலும்புகளான எண்ணங்களை நிர்ணயிக்க வேண்டுமா? நாமே நிர்ணயிக்கக்கூடாதா?
பதில் - நிர்ணயிக்க முடியும் என்பதே!
முதலில் உங்களை நீங்களே ரிலாக்ஸாக அனுமதியுங்கள். களங்கப்பட்ட எண்ணங்களைக் கண்டுபிடியுங்கள்.
தவறான எண்ணங்களைத் தூக்கியெறிந்து விட்டு நல்ல எண்ணங்களை முழு விழிப்புணர்வோடு நீங்களே உங்கள் மனதிற்குள் நுழையச் செய்யுங்கள். புது மனதை நீங்களே வடிவமைுங்கள் - புது எண்ணங்களால்! - இது சாத்தியமானதே.
நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு இளவரசர்! நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு இளவரசிதான்!
அர்த்தமுள்ள சம்பவம்...
தத்துவப் பேராசிரியருக்குக் கோபம்! "ஏற்கெனவே ஷூ போட்டிருக்கிறேன். அதுமேலேயே ஷூ போடச் சொன்னால் எப்படி முடியும்?" என வெடித்தவரை பார்த்துச் சிரித்த ஜென்ஞானி,
"இன்னொருவரின் எண்ணங்களை உங்கள் தலையினுள் நீங்கள் சுமந்து திரிவது சாத்தியமாகும்போது, இன்னொரு ஷூ போடுவதை வினோதமாகப் பார்ப்பது ஏன்?" எனக் கேட்டார்.
- சிறு தூசி படுவதை விரும்பாதவர்கள் வண்டி வண்டியாய் குப்பையான எண்ணங்களைக் குவிக்கிறார்கள். வெட்கப்பட வேண்டியதுக்கு வெட்கப்படுவதேயில்லை!
திரும்பிப் பாருங்கள்...
முழுசுதந்திரம் பெறுவீர்கள்!
நான்கு சுவர்களால் ஆன அறையின் ஒரு மூலையில் முட்டிக்கொண்டு நின்றவர் கூச்சலிட்டார்... “யாராவது காப்பாற்றுங்கள். நான் சிறையிடப் பட்டிருக்கிறேன். எப்படி வெளியே வருவது?”
“மூடனே, திரும்பிப் பார்!” என்ற வார்ததைகள் காதில் விழ, திரும்பப் பார்த்தவர் அதிர்ந்தார். காரணம் நான்காவது பக்கம் சுவரே இல்லை!
அந்த மனிதர் மட்டும் திரும்பிப் பார்க்காமல் இருந்திருந்தால்... அவர் அடைபட்டிருப்பதாக நம்பிக்கொண்டிருந்த அறையிலிருந்து வெளியே வந்திருக்க முடியுமா?
அவர் சுதந்திரமடைய
அவர் செய்த ஒரே ஒரு காரியம் -
“திரும்பிப் பார்த்தது” மட்டுமே.
கதவில்லா
கூண்டுக்குள்
சிறைப்பட்ட
சிங்கம் நீ!
நீங்களும் மனதின் எலும்புகளான எண்ணங்கள் எனும் சிறைக்குள் சிக்கிக்கொண்டு தவிப்பவர்தான்.
தியான, ஞானக்கருத்துகள் உருவாக்கப்பட்டது, இந்த ஒரே ஒரு அற்புதம் நிகழத்தான்.
அது நீங்கள் உங்களைத் திரும்பிப் பார்க்கும் சுபநிகழ்வுகளின் தொகுப்பு.
உங்களைத் தவிர மற்ற எல்லாவற்றையும் பார்க்கிறீர்கள். ஆராய்கிறீர்கள். புரிந்து கொள்கிறீர்கள்.
ஆனால், உங்களை மட்டும்
தவற விட்டுக்கொண்டேயிருக்கிறீர்கள்.
விளைவு - உங்கள் எண்ணங்களும் நம்பிக்கைகளுமே உங்களைச் சிறைப்படுத்திவிட்டன.
திரும்பிப் பார்க்காத ஒரே ஒரு காரணத்தால் ஜென்ம ஜென்மமாக உங்களின் வாழ்வு, அனுபவிக்கும் திறன், ஆனந்தம், சுதந்திரம் என்ற எல்லாமே சுருங்கிப் போயிருக்கிறது.
மனிதர்கள் கட்டுப்பாடுகள் மிகுந்த அடிமையாயிருக்கிறார்கள்.
எண்ணங்களை மாற்றுவதற்கு,
நல்ல எண்ணங்களை புகுத்துவது என்பது....
அறையின் சுவர்களைத் துளையிடுவதற்குச் சமம்.
இதற்கு வெகு பிரயத்தனம் தேவை.
ஆஹாவென
ஆடிப்
பாடி
வாழ
வந்த
ராஜா
நீங்கள்!
இதற்கு ஒரே ஒரு எளிய விடிவு - அது ‘திரும்பிப் பார்ப்பதுதான்!’
உங்களின் எண்ணங்களுக்கு அப்பாற்பட்ட ஆச்சரியத் தொகுப்பான உங்களைத் திரும்பப் பாருங்கள்.
கண்ணை மூடிச் சிரத்தையோடு முயற்சி செய்யுங்கள்.
எந்தவொரு நொடியிலும் ‘திரும்பிப் பார்த்தல்’ நிகழ்ந்து விடக்கூடியதே.
ஒரு சிறு திருப்பம் - முழுச் சுதந்திரத்தைத் தந்துவிடும்.
பரிசோதித்துப் பாருங்கள்!