KAILASA Library/கதவைத் திற ... காற்று வரட்டும்!/உச்சத்தில் வாழுங்கள்Sign in
கதவைத் திற ... காற்று வரட்டும்!

உச்சத்தில் வாழுங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

* ரசகுல்லா என்ன ஒரு அருமையான சுவை.

  • ஒன்றைச் சுவைத்தால் எவ்வளவு சந்தோஷம்! இரண்டு...மூன்று...! நான்கு??... ஏழு, எட்டு சுவைக்க எவ்வளவு மயக்கம்? தலைச்சுற்றல்? எவ்வளவு கஷ்டம்?

* அனுபவி! அனுபவித்தே ஆக வேண்டும்! என்ற வெறி அனுபவிக்கும் வரை இருக்கிறது. நினைத்தது. நினைத்த அளவுக்கு நடக்கவில்லை என்றால் உடலே சிறிது நடுங்குகிறது, வியர்க்கிறது.

இவ்வளவு கொள்ளை ஆசை, அனுபவித்தபின் எங்கே போனது? அடுத்த நிமிடம் வெறும் சலிப்பாகிவிட்டதே! அதுவரை ஈர்த்தது. இப்போது ஈர்க்கவில்லையே ஏன்?

* மனிதர்கள் மீண்டும் மீண்டும் கஷ்டத்திற்குள்ளாவதும் துன்பமடைவதும் எதனால்? இவற்றிலிருந்தெல்லாம் விடுபடுவது சாத்தியமா?

பதில் - நிச்சயம் சாத்தியமே!

ஒரு காதலிக்கு வந்த சுவாரஸ்யமான ஈமெயில் ஒன்று...

‘என் அன்பே! உயிரே! மூச்சே!
வரும் வெள்ளி, உனைக் காண வருவேன்.
அப்போது,
கடற்கரை மணலை

portrait of a smiling man

கிருஷ்ணரை ஆன்மீக
சத்குருவாக கருதுபவர்களும்
ஆன்மீக வள்ளலான
கிருஷ்ணரிடமிருந்து
ஞானத்தையும்
ஆனந்தத்தையும் பெற்றுக்
கொள்ளத் துடிக்கும்
பக்தர்களும் சத்தியத்தைத்
திறந்த மனதோடு ஏற்கும்
தன்மை எனும் மகத்தான
பெண்மைக்குணம்
பெற்றவர்களும், ‘கோபியர்’
என்றழைக்கப்படுவார்கள்!

நாராய் திரித்து - அதில்
நட்சத்திரங்களையெல்லாம்
கொய்து
செய்த மாலையோடு,
நீலவானத்தை உரித்து
உனக்கு அதைச் சேலையாக
மடித்து,
உன் நெற்றிக்கு பொட்டிட்டு
அழகுப்பார்க்க
சூரியனையோ,
சந்திரனையோ
நிச்சயம் பறித்து வருவேன்.

இப்படிக்கு உனக்காக உயிர்வாழ்பவன்‘

பின் குறிப்பு: வெள்ளிக்கிழமை மழை
பெய்யும் போல் வானிலை இருந்தால்
நான் வரமாட்டேன். நன்றி.

* உணர்ச்சி பொங்க வசனம் பேசுவது எளிது. வாழ்வது?

* "அதைச் செய்வேன்", "இதைச்
செய்வேன்" என சொல்வது எளிது.
செய்வது?

* முடியாததைக் கதைக்காதீர்கள்.
முடிந்ததைச் செய்யுங்கள்.
அதையும் உச்சத்தில்
செய்யுங்கள். வாழ
ஆரம்பிப்பீர்கள்.

ஆனந்தத்தின் உச்சியிலேயே இருப்பதென்பது நிச்சயம் சாத்தியம் என்று வாழ்ந்துகாட்டிய பெண் ஞானிதான் மீரா.

கிருஷ்ணர் வழியாக இறைவனை அனுபவப்பூர்வமாக உணர்ந்தவர் மீரா.

மீரா - கவித்தன்மையின் உச்சம். பக்தியின் உச்சம். பக்திப் பரவச நடனத்தின் உச்சம்.

உலகத்தில் உள்ள அனைவரும் இறைசக்திக்காகக் காத்திருக்கும் கோபியர்கள் (பெண்கள்) என்றும் இறைசக்தியின் பூரண வெளிப்பாடான கிருஷ்ணரை ஆண் என்றும் பாவித்து, அந்தப் பாவனையின் உச்சத்திலேயே வாழ்ந்தவர் மீரா.

அந்த உச்சத்திலேயே வாழ்ந்து தன்னுள் இருக்கும் ஆனந்த சக்தியை, இறைச் சக்தியை உணர்ந்தவர்.

கிருஷ்ணர் சத்குரு. ஆன்மீகத் தேடுதலோடு இருப்பவர்கள் அனைவரும் கோபியர்கள். இதுதான் கிருஷ்ண கோபியர் தத்துவம்.

மீரா செல்லும் இடமெல்லாம் பக்திப் பரவசம் தொற்றிக் கொள்ளும். மீராவின் பாடலும் பக்திப் பரவசமும் நடனமும் சேர்ந்து அந்த இடத்தையே மாற்றி விடும்.

சும்மா பார்த்துக்கொண்டிருப்பவர்கள்கூட மீராவின் ஆனந்த நடனத்தினால் ஈர்க்கப்பட்டுவிடுவார்கள். ஈர்க்கப்பட்டவர்கள் அனைவரும் அவர்களையும் அறியாமல் பக்திப் பரவசத்தில் மூழ்கிவிடுவார்கள்.

இந்தச் செய்தி காட்டுத் தீ போல இந்தியா முழுவதும் பரவிக் கொண்டிருந்த நேரம்.

'மீரா மதுரா நகருக்கு வருகை' - இந்தச் செய்தியைக் கேட்டதுமே அந்த நகரின் கிருஷ்ணர் கோவில் தலைமை பூசாரிக்கு அடிவயிறு கலங்கியது.

உஅது எதுவாயினும்... முடியுமா? முடித்து விடு.
ச்முடியாதா? விட்டுவிடு. முடி! இல்லை விடு! நடுவில்
சநிற்காதே! உச்சிக்குச் செல்!
ம்

காரணம்,

அந்தக் கோயிலுக்குள் ஆண்கள் மட்டுமே நுழைய அனுமதி. இது அவர்கள் காலங்காலமாகக் கடைப்பbounding காலங்காலமாகக் கடைப்படித்து வரும் விதி.

"மீராவோ புதுமைப்பெண். புரட்சிப்பெண். கிருஷ்ணபக்தை! எடுத்த காரியத்தில் எல்லாம் வெற்றியையே சந்திக்கும் பெண்.

எனவே மீரா மதுரா வந்தால் கிருஷ்ணர் கோயிலுக்குள் நுழைந்தே தீருவார். இவ்வளவு நாள் கடைப்படித்த விதி என்னாவது! அதை எப்படியாவது தடுத்தாக வேண்டும்" என்பதே பூசாரியின் பயத்திற்குக் காரணம்.

மீராவைத் தடுக்க கோயில் வாசலிலேயே இரண்டு ஆண்களைக் காவலுக்கு வைத்தார் பூசாரி.

மதுராவிற்குள் மீரா வந்து விட்டார். நகரில் நுழைந்ததும் முதல் வேலையாக கிருஷ்ணர் கோயிலில் நோக்கி பக்திப் பாடல் நடனத்தோடு புறப்பட்டார்.

விஷயம் பூசாரி காதுக்கு எட்டியது. பயம் அதிகரித்தது.

பாடல், பஜனை, பக்தி, நடனம், இசைக்கருவிகள் என்று பக்திப் பரவசம் மிகுந்த கூட்டத்தோடு கோயில் வாயிலை மீரா அடைந்தார்.

சில நிமிடங்களில் மீராவைச் சுற்றியிருந்த உற்சாகமும் ஆனந்த நடனமும் காவலுக்கு நின்ற இருவரையும் தொற்றிக்கொண்டது. பஜனை ராகத்திலும் நடனத்திலும் தங்களையும் மீறி ஈர்க்கப்பட்டு, கூட்டத்தில் ஒருவரா விட்டார்கள் அந்தக் காவலர்கள். மீராவைத் தடுக்க நின்றவர்கள், தடுப்பை நீக்கி வழிகாட்டியாக மாறிவிட்டார்கள். "வாங்கோ, வாங்கோ!" என்று உள்ளே அழைத்துச்சென்றார்கள்.

பூசாரிக்கு வியர்த்துக் கொட்டியது.

பூசாரி அர்ச்சனை செய்யும் இடம் வரைக்கும் கூட்டம் வந்து விட்டது. சில நிமிடங்களில் மொத்தக் கூட்டமும் பக்திப் பஜன்களை ஆனந்தமாகப் பாடி முடித்து அமைதியாகியது.

சஉச்சத்தில் வாழ்தல் சலிப்பைக்
லிகூட சலிப்படையச்
ப்செய்திடும்.
பு

பூசாரி, "இந்தக் கோயிலுக்குள் ஆண்கள் மாத்திரம்தான் வரலாம். பெண்கள் வரக்கூடாது என்பது விதி. இது உங்களுக்குத் தெரியாதா?" என்று மீராவிடம் கோபம் கலந்த குரலில் கேட்டார்.

இதற்கு மீரா அளித்த பதில்தான், மீரா சாதாரணப் பெண் அல்ல என்று திரும்பத் திரும்ப நமக்கு உணர்த்தும் ஆதாரம்.

மீரா, "என்னது! ஆண்களா?

இதுவரை இந்த மொத்த உலகில்
கிருஷ்ணர் ஒருவர்தான் ஆண். மற்றவர்கள்
அனைவரும் கோபியர்கள் (பெண்கள்)
என்றல்லவா நான் எண்ணிக்
கொண்டிருந்தேன்.

கிருஷ்ணருக்கு அடுத்து இந்த உலகில் நான் சந்திக்கும் முதல் ஆண் நீங்கள்தான்.

அப்போது நீங்கள் ஒரு கோபயர் அல்ல.

இன்றிலிருந்து நாம் எல்லோரும் ஒரு
முடிவுக்கு வருவோம். இந்த உலகில்
இரண்டு ஆண்கள் இருக்கிறார்கள்.

ஒன்று கிருஷ்ணர்.

இரண்டாவது இந்த பூசாரி!" என்று கணீர் குரலில் பேசி முடித்தார்.

பூசாரி நடுங்க ஆரம்பித்துவிட்டார். "கிருஷ்ண தத்துவத்திற்குப் புறம்பாகவா நாம் இவ்வளவு காலம் செயல்பட்டோம். இது எவ்வளவு பெரிய தவறு?" என்று மனதின் ஆழத்திலிருந்து வேதனைப்பட்டார் பூசாரி.

பூசாரி, "நான் ஆண் இல்லை... நான்
ஆண் இல்லை... நான் ஒரு கோபியர்தான்.
நான் கிருஷ்ண பக்தர்தான்.

Nithyananda Swami portrait

வாழ்கின்றாய், வாழாத நெஞ்சமே! -திருவாசகம் வாழாமலே வாழ்கிறான் மனிதன். வாழ்ந்து முடித்தும் கூட, ‘வாழ்ந்தேன்!’ எனும் திருப்தி எட்டிக்கூடப் பார்ப்பதில்லை. காரணம், சுவைத்தும் உச்ச சுவையாய் சுவைபடாமல் தாண்டிய நிமிடங்களே!

என்னை எல்லோரும் மன்னித்து விடுங்கள்" என்று அழாத குறையாக மன்னிப்புக் கேட்டார்.

மீரா, "அப்போது இந்தக் கோயிலின் விதி இன்றிலிருந்து மாறட்டும். இனி இந்தக் கோயிலுக்குள் ஆண்களுக்கு அனுமதி இல்லை. பெண்களுக்கு (கோபியர்கள்) மாத்திரம் தான் அனுமதி.

'நான் ஒரு கோபியர்' என்ற உணர்வோடு வருபவர் மட்டுமே கோயிலுக்குள் நுழையலாம். நான் ஆண் என்ற உணர்வோடு வருபவர்களுக்கு இனி அனுமதி இல்லை" என்று சொல்லி காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்ட விதியையே மாற்றிவிட்டார். கிருஷ்ணர், கோபியர் தத்துவத்தின் உச்சத்தில் வாழ்ந்தவர் மீரா.

மீரா எல்லோருக்கும் ஒரு அற்புதமான முன் உதாரணம்.

சராசரி பெண்கள் நடுவில், ஆனந்த நடனமாடும்
மலராக மீராவை மாற்றியது "உச்சத்தில்
வாழ்வது"-தான்.

தோழி
மனைவியாவது
எளிது.
மனைவி
தோழியாவது
கடினம்.
இரண்டாவது,
வாழ்வை அதன்
உச்சத்தில்
வாழ்பவருக்கே
சாத்தியம்!

நீங்கள் செய்யும் காரியம் எதுவாக இருந்தாலும் நீங்கள் பின்பற்றும் மார்க்கம் எதுவாக இருந்தாலும் சரி - அங்கேயே, அதிலேயே வாழுங்கள்!

தொட்ட குறை, தொடாத குறை வேண்டாம்.

மிச்சம் மீதி எதையும் வைக்க வேண்டாம்.

சலிப்பிலிருந்தும் கஷ்டத்திலிருந்தும் வெளி வர மிக எளிய வாழ்வின் வழிமுறை - வாழ்க்கையை அதன் உச்சத்தில் வாழ்வதுதான். அது எதுவாக இருந்தாலும் சரி, உச்சத்தை அடைந்துவிடுவதுதான்.

சாப்பிடும் ஒரு ரசகுல்லாவின் சுவையை அதன் உச்சத்தில் அனுபவிக்க முயற்சி செய்யுங்கள். இரண்டு மூன்று கடியில் ஐந்து ரசகுல்லாவை ஒரேயடியாக சாப்பிடுவதும் ஒரே ஒரு ரசகுல்லாவின் முழுச் சுவையும் வாயிலேயே கரைந்து போகும் அளவுக்குப்பல நிமிடங்கள் சுவைத்துச் சாப்பிடுவதும் ஒன்றே.

சுவையின் உச்சத்தை ஒரே ஒரு முறை ருசித்துவிட்டால் ஒரு ரசகுல்லா போதும். பத்து தேவையில்லை. திருப்தி கிடைத்துவிடும்.

சுவையின் உச்சத்தை ருசிக்காவிட்டால், பத்து சாப்பிட்டாலும் திருப்தி கிடைக்காது. சலிப்பும் கஷ்டமுமே மிஞ்சும்!

மேலே உள்ள சில வரிகளை வெறுமனே படிப்பதால் புரிந்து கொள்ள முடியாது. இனிப்பு வாயிலே கரைந்து போகுமளவுக்கு விழிப்புணர்வோடு சுவைத்துப் பாருங்கள். "உச்சத்தில் வாழ்வது" என்றால் என்ன என்பது புரிந்துவிடும்.

நீங்கள் அனுபவித்தே ஆக வேண்டும் என்று துடிக்கும் வாழ்வின் ஒவ்வொரு விஷயத்தையும் நிதானித்து, அதன் உச்சத்தில் அனுபவியுங்கள், "இன்னும் கொஞ்சம்" என்று தொக்கி நிற்கும் உணர்வு இருக்காது. சலிப்பு நெருங்கவே நெருங்காது.

கடைசியாக ஒரு சத்யம்

அனுபவத்தின் உச்சத்தை அடையாததால் மிச்சமாகும் அனுபவிக்கப்படாத பகுதிகள்தான். “மீண்டும், மீண்டும்” என்ற வெறியைத் தூண்டித் தூண்டி பின்னாளில் சலிப்பைத் தருகிறது.

சலிப்பின் மூலகாரணம் தெரிந்து விட்டது. இன்னும் என்ன தயக்கம். எதிலும் மிச்சம் வைக்காதீர்கள். உச்சத்தில் வாழத் தொடங்குங்கள்!

அர்த்தமுள்ள சம்பவம்...

கிருஷ்ண தேவராயரின் அரண்மனை வெளியே, "மனம் காத்தாடி போலாடுகிறது... அதற்கு நான் என்ன செய்வேன்" எனத் தப்பிக்கும் பாவனையில் சொன்னவரிடம் தெனாலி,

"மனம் காத்தாடி போல் ஆடுமளவுக்கு ஏன் விட்டாய்? பதில் சொல் எனக் கடவுள் கேட்டால், என்ன பதில் சொல்வாய், சொல்!" எனக் கேட்டார்

"........." பதில் சொல்ல முடியாமல் அவன் திணறினான்.

● உச்சத்தில் வாழ்பவனின் மனம் உச்சத்தில் இருக்கும். அரைகுறையாக வாழ்பவனின் மனதிற்கு, வேறு வேலையில்லாததால் அதற்குச் சிறகுகள் முளைக்கும். பறக்கும். காத்தாடி போல் ஆடும்!

ஆனந்த ரசத்தை உங்களுக்குள் பிழிந்துவிடும்

உச்சகட்ட அனுபவம் - ஒரு தியானம்

ஒரு பலூனில் உச்சகட்ட காற்றை ஊதும்வரை அது பெரிய உருவமாய் இருக்கும்.

தியான

லோகோ

உளிகள் உச்சகட்ட காற்றழுத்தத்தைத் தொட்ட மறு வினாடியே அது வெடித்து விடும். அவ்வளவு பெரிய உருவம் ஒழிந்துபோகும்!

அகங்காரம்தான் எல்லா வேதனைகளுக்கும் வேர். இதை உணர்ந்து, இதிலிருந்து வெளிவர விரும்புவோர் மட்டும் இனி தொடரலாம்...

அரைகுறையாய் நீங்கள் அனுபவிக்கும்வரை அகங்காரம் பெரிய உருவத்தோடு இருந்து கொண்டேயிருக்கும்.

ஒரே ஒரு முறை உச்சகட்ட அனுபவத்தை ஏதாவதொரு வழியில் அனுபவித்துவிட்டால் போதும். மறுவினாடியே அகங்காரம் வெடித்துவிடும். உச்சத்தை அகங்காரம் தாங்காது.

தான் ஒழிந்துபோவோம் என்பதை அறிந்த காரணத்தால், மனமானது மனிதரை எந்த ஒரு செயலிலும் உச்சகட்ட அனுபவம் வரை செல்ல விடுவதேயில்லை.

மனிதரும் உச்சகட்டத்தில் அனுபவிப்பதை மறந்துவிட்டார்.

மறந்ததை நினைவுபடுத்த ஒரு எளிய தியானமுறை...

உங்களின் எதிர்மறை உணர்வுகளை இந்தத் தியானத்திற்குத் தேர்வுசெய்து கொள்ளுங்கள்.

எதிர்மறை
உணர்வையும்
நேர்மறை
தியானமாக்கலாம்!

கோபம்,
ஆத்திரம்,
படபடப்பு,
கிளர்ச்சி போன்ற எதிர்மறை உணர்வுகள்,

உங்களுக்குள் பொங்கும் அந்த உணர்ச்சிமயமான நிமிடங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் அப்படியே படுத்துவிடுங்கள்.

படுத்தபின் கோபமென்றால் கோபமாகவே மாறுங்கள். உணர்வளவில் கோபம் அதன் உச்சம் வரை செல்லட்டும்.

ஆனால், உடல் படுத்துக்கிடக்கட்டும். எதிர்மறை உணர்ச்சிகள் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு, உள்ளே அரைபடட்டும்.

ஒரு மிக்ஸியில் போடப்பட்ட சமையல் பகுதி பொருட்கள் சரியாக அரைபட வேண்டுமானால், மிக்ஸி எல்லா பக்கங்களிலும் அடைப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், உள்ளுக்குள் உள்ள பொருட்கள் பொங்கி அடித்து இடித்து உடைத்து கரைபட வேண்டும். அப்போதுதான் நாம் எதிர்பார்க்கும் பக்குவத்தில் விளைவுகள் நிகழும்.

உடலுக்குள் உருவாகும் உணர்வுகளும் உணர்ச்சிகளும் இதேபோல் பொங்கி அடிபட்டு, இடிபட்டு, உடைபட அனுமதித்தால், உள்ளுக்குள் ரசவாதம் மிக எளிதில் நிகழ்ந்து விடும்.

ஆனந்த ரசம் மனிதருக்குள் தயாராகிவிடும்!

சுகித்து சுகித்த
திருப்தி தாராது.
உச்சம்
தொடும்வரை!

மிக்ஸியின் மேல்பகுதி மூடப்படாமல் மிக்ஸி இயக்கப்பட்டால் என்ன ஆகும்? உள்ளே உள்ள பொருட்கள் நாலா புறமும் தெறிக்கும். எல்லாம் வீணாகிப்போகும்.

மனிதர்களின் விழிப்புணர்வு முழுமையானதாக இல்லை. அதில் ஏதோ ஒரு பகுதி முழுமை பெறாததாகவே, திறந்து கொண்டேயிருக்கிறது.

விளைவு - உணர்ச்சிக் கொந்தளிப்பு நிகழ்கிறது. அவர்களிடமிருந்து நாலா புறமும் எதிர்மறை உணர்வுகள் கொந்தளித்து தெறிக்கிறது.

இந்தத் தியான முறையில், அதுவும் எதிர்மறை உணர்வுகள் வரும் போது அமைதியாக படுப்பது... உங்களின் விழிப்புணர்வை முழுமை பெறச் செய்யும்! உணர்ச்சிக் கொந்தளிப்புகள் உங்களின் விழிப்புணர்வென்னும் மிக்ஸி ஜாருக்குள் முழுமையாக அரைக்கப்படும்.

அரைக்கப்படும் வரை காத்திருந்தால் போதும்.

அதுவும் ஒரே ஒருமுறை அந்தந்த உணர்ச்சிகள் உச்சகட்டம் வரை செல்ல அனுமதித்துக் காத்திருந்தால் அது நிகழ்ந்து விடும்.

ஆனந்த ரசம் உங்களுக்குள் பிழியப்படும். நீங்கள் புதுமனிதனாக மாறிவிடுவீர்கள்.

ஜே.கிருஷ்ணமூர்த்தி “ஒரு உச்சகட்ட உணர்வனுபவம், அந்த மனிதரைப் புதுப் பிறவியெடுக்க வைக்கும்” எனச் சொல்கிறார்.

உங்களுக்குள் உருவாகும் ஆனந்த ரசமானது உங்களின் அகங்காரத்தின் கொள்ளளவை விட பல ஆயிரம் மடங்கு பெரியது.

அந்த உச்சகட்ட அனுபவத்தினால் உருவாகும் ஆனந்தத்தைத் தாங்கமுடியாத அகங்காரம், நொடியில் வெடித்துச் சிதறும்.

நீங்கள் புது மனிதராவீர்கள். புது ஆனந்த உணர்வில் லயித்துப் போவீர்கள்.

‘ஆஹா... வாழலாம். வாழ்வு வாழத் தகுந்தது’ எனக் கூச்சலிடும் அளவுக்கு குதூகலமாவீர்கள்.

இனி எதிர்மறை உணர்வு வரும் காலங்களையெல்லாம் தியான காலமாக்குங்கள். நாளையேகூட அந்த அதிசயம் நிகழலாம். நீங்கள் உச்சகட்டத்தைத் தொடுவீர்கள்.

| அனுபவ உச்சியைத் | | தொடு. | | ஆனந்த | | தரிசனம் | | பரிசு! |

Portrait of Nithyananda