KAILASA Library/கதவைத் திற ... காற்று வரட்டும்!/திருப்திSign in
கதவைத் திற ... காற்று வரட்டும்!

திருப்தி

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

* திருப்தி இரண்டு வகை.

ஒன்று - போலித் திருப்தி. இரண்டு - ஆழ்ந்த திருப்தி.

* உணவு, உறக்கம், காமம், கிளர்ச்சி அல்லது விளையாட்டு என்ற இந்த நான்கு விஷயங்களிலேயே ஐந்தறிவு ஜீவிகள் திருப்தி காண முயற்சிக்கும். இதைத் தாண்டி ஒரு படிகூட எடுத்து வைக்க முடியாது.

* காரணம் - முழுமையாக யோசிக்கும் மனித மனம் அவற்றிடம் இல்லை. மனம் இருந்தும் மனிதர்கள் உணவு, உறக்கம், காமம், மேல்நிலை தேடுவதில் சுகம் கண்டு - நான் திருப்தியாகத்தான் இருக்கிறேன் என்று கூறினால் அதுதான் போலித் திருப்தி.

* அன்பு, நிம்மதி, ஆனந்தம் இவற்றை அடைய முயற்சி செய்து - அடைந்த பின் கிடைப்பதுதான் ஆழ்ந்த திருப்தி.

காந்தர்வ நாட்டு அரசன் யயாதி, சாதாரண அரசன் அல்ல; பேரரசன். அவனுக்கு நூறு வயது ஆனது.

அரசன் ஒருவன் தன் வாழ்க்கையில் எவ்வளவு இன்பத்தையும் சந்தோஷத்தையும் அடைய முடியுமோ, அதைவிடப் பன்மடங்கு சந்தோஷத்தை அனுபவித்தவன்தான் இந்த யயாதி.

ஒருநாள் இரவு திடீரென அவன் முன் வந்து நின்றது மரணம். "புறப்படு. உன் நேரம் வந்து விட்டது. உன்னைக் கொண்டு போகத்தான் நான் வந்திருக்கிறேன்" - கடமை தவறாத குரலில் சொன்னது மரணம்.

போலி திருப்தி அதிருப்தியை விட மகா மோசமானது!

யயாதி மிகப்பெரிய வீரன். இருந்தாலும், மரணத்தைக் கண்டு நடுங்கினான். "இவ்வளவு சீக்கிரத்தில் என் உயிரைக் கொண்டுபோக வந்து விட்டாயா?" என்று மரணத்திடம் கெஞ்சலாகக் கேட்டான் யயாதி.

"சீக்கிரமா? உனக்கு நூறு வயதாகிவிட்டது,
உன் முதல் மகனுக்கே எண்பது வயது. இன்னும்
உனக்கு வாழ ஆசையா?" என்று கேட்டது
மரணம்.

"ஏ..... மரணமே! எனக்கு நூறு மனைவிகள்,
எனவே, நூறு மகன்கள், எனக்குப் பதிலாக, என்
மகன்களில் ஒருவர் உயிர் துறந்து, உன்னோடு
வருவதற்குத் தயாராக இருந்தால் என்னை
விட்டுவிடுகிறாயா?" மரணத்திடம் பஞ்சாயத்து
பேசினான் யயாதி.

"தாராளமாக விட்டுவிடுகிறேன். ஆனால், நூறு வயதான நீயே வாழ ஆசைப்படும்போது, உன்னைவிட வயது குறைந்த உனது மகன்கள் எப்படி உயிர் துறக்கச் சம்மதிப்பார்கள்?" - யயாதியிடம் கேட்டது மரணம்.

யயாதி எல்லா மகன்களையும் அழைத்தான் "எனக்காக உங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளப் போகிறவர்கள் யார்?" என்று கேட்டான்.

கேள்விக்குப் பதில், அமைதிதான். ஆனால், பதினாறு வயது நிரம்பிய அவன் கடைசி மகன் மட்டும் எழுந்து, "நான் தயார்!" என்றான்.

அவன் பதிலைக் கேட்டு மரணமே ஒரு கணம் திடுக்கிட்டது. "நீ சிறுவன். ஒன்றும் அறியாதவன். வாழ்க்கையை அனுபவிக்காதவன். வயதான உன் தகப்பனும் அண்ணன்களும் வாழ்க்கையை நன்றாக அனுபவித்தவர்கள். அவர்களே வரத் தயங்குகிறபோது, நீ மட்டும் தயார் என்கிறாயே! நன்றாக யோசித்துப் பார்" என்றது மரணம்.

எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் பேச ஆரம்பித்தான் அந்தச் சிறுவன். "நூறு வயது வாழ்ந்த என் அப்பாவால் வாழ்க்கையில் திருப்தியடைய முடியவில்லை. என் அண்ணன்களும் அப்படியே.

யாருமே திருப்தி அடையாத போது, நான் மட்டும் ஏன் நூறு ஆண்டுகள் வாழ ஆசைப்பட வேண்டும்? இவர்களைப் போன்று போலித் திருப்தியில் வாழ்வதில் எந்தப் பயனும் இல்லை. குறைந்தபட்சம் என் தந்தைக்காக என் உயிரைக் கொடுக்க முடிகிறதே! அந்த ஆழ்ந்த திருப்தி ஒன்று போதும்!" என்று சொன்னான் அந்தச் சிறுவன்.

சிறுவன் சொன்னதைக் கேட்டு மரணத்தால்கூட மறுப்புச்சொல்ல முடியவில்லை.

இந்தக் கதையில் வரும் யயாதி மாதிரிதான் நம்மில் பலரும் இருக்கிறோம். திருப்தி என்பது நம்மிடம் அவ்வளவு எளிதில் உருவாகிவிடுவதில்லை.

இலட்ச ரூபாய் வைத்திருப்பவர், கோடி ரூபாய் உடைய பணக்காரராக வேண்டுமென்று நினைப்பது ஆசை. கோடி ரூபாய் சேர்ந்த பிறகும் திருப்தியடையாமல், அதை இன்னும் பல கோடிகளாக்க வேண்டுமென்று நினைப்பது - போலித் திருப்தியை உருவாக்கும் பேராசை என்னும் நச்சு.

மிக்ஸி வாங்குகிறோம் கிரைண்டர் வாங்குகிறோம் கறுப்பு - வெள்ளை தொலைக்காட்சிப் பெட்டியை விற்று, கலர் டி. வி. வாங்குகிறோம். வாஷிங்மெஷின் வாங்குகிறோம். நீண்டு கொண்டேதான் போகிறது. ஏன் மனநிறைவு என்கிற உணர்வு

திஅன்பு, நிம்மதி, ஆனந்தம் இவற்றை
ருஅடைய முயற்சி செய்து - அடைந்த பின்
ப்கிடைப்பதுதான் ஆழ்ந்த திருப்தி!
தி

நமக்கு ஏற்படுவது இல்லை. காரணம் போலித் திருப்திதான்.

'நான் நிம்மதியாக இருக்கிறேன்' என்ற கற்பனை எண்ணமும் 'நான் திருப்தியாக இல்லை' என்ற உணர்வும் கலந்து வெளிப்படும் போது, அது போலித் திருப்தியாக மாறிவிடுகிறது. உலக விஷயங்களால் திருப்தியே இல்லாமல் 'அடுத்து அடுத்து' என்று செய்துகொண்டே இருப்பது, நம்மிடமிருந்து கொஞ்ச நஞ்ச நிம்மதியைக்கூடக் கெடுத்துவிடும்.

வாழ்வில் திருப்தியே அடையாதவர்கள் பைத்தியமாகக்கூட அலைய நேரிடலாம்.

உண்மையை உணர்வதில் - திருப்தி ! பெருந்தன்மையாக நடந்துகொள்வதில் - திருப்தி ! கருணை காட்டுவதில் - திருப்தி ! மற்றவர்களுக்குக் கற்றுத்தருவதில் - திருப்தி என திருப்தி வாழ்க்கைத்திடலில் கொட்டிக் கிடக்கின்றன.

ஆழ்ந்த திருப்தி உங்களுக்குள் மலரும் வரை 'போதும்' என்ற உணர்வு மலராது. போலித் திருப்தி உங்களைத் தொற்றிக்கொண்டிருக்கும் வரை ‘இதற்கு மேலே என்ன இருக்கும்?' என்ற மந்த எண்ணம் எழுந்துகொண்டே இருக்கும்.

போலித் திருப்தியை ஒழிக்க மிகச் சரியான வழி, வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் திருப்தியைக் காண்பதுதான். ஆழ்ந்த திருப்தியைப் பெறுவதற்குத் தொடர்ந்து உங்கள் புத்திசாலித்தனத்தை உபயோகப்படுத்திக் கொண்டே இருங்கள்....

போலித் திருப்தியிலிருந்து உதறி எழுந்து திருப்தியை நோக்கிப்பயணம் செய்ய ஆரம்பியுங்கள்!