KAILASA Library/கதவைத் திற ... காற்று வரட்டும்!/தேனினும் இனியது மனிதவாழ்வு!Sign in
கதவைத் திற ... காற்று வரட்டும்!

தேனினும் இனியது மனிதவாழ்வு!

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ரோகிணி நதி நீருக்காக சாக்கியர்களும் கோலியர்களும் போட்டியிட்டுப் போருக்கே தயாராகிவிட்டனர்.

பரபரப்பின் நடுவே வெகு அமைதியோடு நுழைந்த புத்தர், "ரோகிணி நதி நீர் என்பதால் இந்த நீரை மதிக்கிறீர்களா? அல்லது இந்த நீர் தரும் நன்மைகளுக்காக இந்த நீரை மதிக்கிறீர்களா?" எனக் கேட்டதற்கு,

"வெறும் நீரை யார் மதிப்பார்கள்? அது செய்யும் நன்மைக்காகத்தான் மதிக்கப்படுகிறது. விரும்பப்படுகிறது" என்றார்கள்.

"இருதரப்புக்கிடையே போர் உருவாகக் காரணமான இந்த நீர், இந்தச் சூழலில் நன்மை செய்கிறதா, தீமை செய்கிறதா... இரத்தக் களறியாக்கும் போரைத் தூண்டும் நீருக்காகவா போரிடப் போகிறீர்கள்?" எனக் கேட்டுவிட்டு புத்தர் கலைந்து சென்றார். போரும் கலைந்தது.

  • நெருங்கியவரிடம் இருக்கும் சில தவறான செய்கைகளுக்காக நீங்கள் சண்டையிடுகிறீர்கள் என்றால்... யாரை மதிக்கிறீர்கள்? நெருங்கியவரையா... தவறுகளையா? யோசியுங்கள். தப்பித்துக்கொள்ளுங்கள்!

★ 'உறவுகளுக்கிடையே ஊடல் அவசியம்' - இதைக் கண்டுபிடித்துச் சொன்னவர்கள் உற்சாகமாக வாழத் தெரியாதவர்கள்.

★ ஆழ்மன வெறுப்பின் முன்னோட்டமே ஊடல்.

★ ஒருவர் மீது மற்றவருக்கு ஈர்ப்பு இருக்கும் வரை மனித உறவின் ஊடல் புகைபோல் கசிந்துகொண்டிருக்கும்.

★ ஈர்ப்பு மறைந்த அடுத்த கணமே ஆழ்மன வெறுப்பு வெடிக்கும்.

★ ஆழ்மன வெறுப்பு உருவானதற்குக் காரணம் - ஆழ்மனத்தின் மாயக்கருத்துகளால் ஆன, வாழ்வு பற்றிய கனவிற்கும் நிஜ வாழ்க்கைக்கும் இடையே இருக்கும் பொருத்தமின்மையே!

★ எல்லா ஊடல்களும் எல்லா கிளர்ச்சிகளும் எல்லாத் தற்காலிக சந்தோஷங்களும் நிஜவுலகில் கனவைக் குடிப்பவருக்கு மட்டுமே நிகழ்வது.

★ அகங்காரம் என்பது தாறுமாறான கருத்துக்களின் தொகுப்பு. அகங்காரம் என்பது அதீத கற்பனைகளின் அதிபதி.

★ அகங்காரம் மறைய,
ஊடல்கள் மறையும்.
உற்சாகம் பொங்கும்.
தேனினும் இனிய மனித வாழ்வு கனியும்.

ஜென் பெண் ஞானி சீயானோ, தான் ஞானமடைந்த நிமிடத்தைப் பற்றி எழுதிய வரிகள்...

“என் இடுப்பிலிருந்த மூங்கிலால் ஆன வாளி நீரில் நிலா! எதிர்பாராத நேரத்தில் வாளி உடைந்து போனது. நிலாவும் நீரும் மறைந்து போனது. ஒன்றுமேயில்லை என் கையில். வெள்ளத்தில் மூழ்கிவிட்டேன்!”

  • சீயானோவின் வாழ்க்கையைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொண்டால் இந்த வரிகளை எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.

ஒரே ஒரு காரணத்திற்காக எந்த ஒரு மடாலயத்திலும் சீயானோ ஏற்றுக் கொள்ளப்படவில்லை. காரணம் சீயானோ ஒரு பேரழகி!

ஒரு அழகியை ஆஸ்ரமத்திற்குள் அனுமதிப்பது அவர்களின் அன்றைய சூழல்களுக்கு ஆபத்து என்று கூறி மறுத்துவிட்டார்கள்.

Nithyananda

உறவினர்களால்
உருவாக்கப்படும்
மெழுகுபொம்மை
மனித குணம்.
அதனால் சொல்கிறேன்,
அந்த மெழுகுபொம்மையை
அழகூட்ட முடியும்.
நீங்களே மிக எளிதாய்
செதுக்கி உருவாக்கலாம்!

ஆனால் சீயானோ மிகத் தீவிரமான ஆன்மீகத் தேடலுடையவர்.

தான் துறவியாக வேண்டுமென்பதற்காக
அவர் செய்த காரியத்தை, பலர் கனவில் கூட
நினைத்துப் பார்த்திருக்கமாட்டோம்.

"முகத்தின் அழகுதான் தடையோ?" என
யோசித்தார். அடுப்பங்கரை சென்றார்.
வேகவேகமாக தன் முகத்தைத்
தீக்கட்டையால் தாறுமாறாகத் தேய்த்து
அகோரப்படுத்தி விட்டார்!

சீயானோ ஒரு பெண் என்ற முடிவுக்கு ஒருவர்
வருவதற்கே சில நிமிடங்கள் தேவைப்படும்.
அந்த அளவுக்கு அகோர முகம். இப்போது
எந்த பாதகமும் இல்லையென்று மடத்தில்
சேர்த்துக் கொண்டார்கள்.

தொடர்ந்து முப்பத்து ஐந்து வருடங்களாக
பல மார்க்கங்களைக் கற்றுவிட்டார்.
இனிமேல் செய்வதற்கு ஒன்றுமில்லை
என்னும் அளவுக்கு எல்லாத் தவங்களும்
செய்துவிட்டார். ஆனால், முக்தி
கிடைத்தபாடில்லை.

அப்போது ஒரு நாள், தன் இடுப்பிலிருக்கும் மூங்கில்களால் ஆன வாளியிலிருக்கும் நீரில் தெரிந்த நிலவின் பிம்பத்தை ரசித்தபடியே நடந்து வந்து கொண்டிருந்தார் சீயானோ. அப்போது ஒரு எதிர்பாராத தருணத்தில் அது நிகழ்ந்தது, ஞானமடைந்தார். அதைப் பின்வருமாறு அவர் சொல்கிறார்.

"இருபது வருடங்களாக என்னுடன் இருந்த அந்த மூங்கில்வாளி வலுவிழந்து விட்டிருந்தது. எதிர்பாராத நேரத்தில் வாளி உடைந்து போனது.

அடுத்த நொடியில் நீரும் நிலவும் மறைந்து போனது. என்னுள் ஒரு ஆச்சரியம் நிகழ்ந்தது.

நானும் மறைந்து போனேன்.

மூங்கில்பட்டைகளால் ஆன வாளி
உடைந்த நேரத்தில் என்னுடைய மனக்
கருத்துகளாலும் மாயங்களாலும் ஆன
அகங்காரமே உடைந்துவிட்டது. இரண்டும்
ஒன்றாய் உடைந்து விழ, அந்த நிமிடத்தில்
நான் முழுவிழிப்புணர்வோடு இருந்ததுதான்
காரணம்!

ஆற்றுக்குள் இருக்கும் மீன், நான்
ஆற்றுக்குள்தான் இருக்கிறேன் என்பதை
திடீரென உணர்ந்துகொண்டது போல, நான்
ஆனந்த வெள்ளத்தில் (கடவுள் சக்தியில்)
சூழப்பட்டிருக்கிறேன் என்பதை உணர்ந்து
கொண்டேன்."

'வெள்ளத்தில் மூழ்கிப்போனேன்'
என்று தன் ஞான அனுபவத்தை பெண்
ஞானி சீயானோ எழுதியிருக்கிறார்.

இவ்வளவு வருடங்களாக ஆனந்தத்தை அடையத் தடையாக இருந்தது

  • மனக்கருத்துக்கள் எனும் மூங்கில் பட்டைகளால் ஆன உருவமில்லாத மனமென்னும் வாளிதான். அந்த வாளிக்குள்

தவகூற்று ஒன்று...
தனித்திரு!
விழித்திரு!
பசித்திரு!

இது நவீன மனிதனுக்குக் கடினம் எனவே சொல்கிறேன்.

சேர்ந்திரு!
ஆழ்ந்திரு!
புசித்திரு!

சேர்ந்து பகிர்ந்து வாழ்
ஆழ்ந்து அனுபவி வாழ்
ருசிக்கல்ல பசிக்குப் புசி.

எதைச் செய்தாலும் அதை
முழுமையாய் செய். அதிலேயே நீ
மூழ்கிவிடு. முழுமையடைவாய்!

நெஇனிய வாழ்வுக்கு வழி
ருஉனக்கும் உனக்கும் உள்ள உறவில் நெருக்கம் குறைவாக
க்இருக்கும்வரையில், யாரோடும் நெருக்கமாகிட உன்னால்
கமுடியாது!
ம்-சூஃபி போதனை
• நெருக்கக் குறைவு மறைந்து போகட்டும்.

தனிமைப்படுத்தப்பட்ட நீர் போல், நான் என் மனதுக்குள் சிக்கிக்கொண்டு தனிமைபடுத்தப்பட்டு விட்டேன்.

அது அந்த நிமிடத்தில் உடைந்தது, என்பதைத்தான் அவ்வளவு அழகாக கவிநயப்படுத்தியிருக்கிறார் ஞானி சீயானோ.

எதிர்காலம் பற்றியும் மனிதர்கள் பற்றிய மனக்கருத்துக்களையும், மாயங்களையும் நம் வாழ்க்கைச் சம்பவங்களிலிருந்துதான் சேகரிக்கிறோம்.

விவரம் தெரிந்த நாளிலிருந்து இந்தச் சேகரிப்பு ஆரம்பித்து நம் நிம்மதியை இழக்கச் செய்யும் மனக்கருத்துக்கள் நம்முள் நுழையும் போதுதான் அகங்காரமே உருவாகிறது. நிம்மதி பறிபோகிறது.

எதிர்காலம் 'ஹூ... ஒஹோ...' என்றிருக்கும். வாழ்க்கைத் துணை மகாராணி / மகாராஜா போல் இருக்க வேண்டும். என்பன போன்ற மனக்கருத்துக்கள் சிறு வயதிலேயே எளிதாக மனிதருள் நுழைந்து விடுகிறது.

நிஜத்தில் சாத்தியப்பட வாய்ப்பில்லாத அதீத எதிர்பார்ப்புகள்தான் மனநிம்மதியை உறிஞ்சிவிட்டு அதிருப்தியை நம்முள் கொப்பளித்து விடுகிறது.

தேன் நிலவு நாட்கள்தான் ஒரு இளைஞன் இளைஞயின் வெகுகாலக் கனவுகள் நிஜமாகும் நேரம்.

இதை 'தேன் சூரியன்' எனச் சொல்லாமல், ஏன் 'தேன்நிலவு' என்று சொல்கிறார்கள்?

பதில் காண கவனமாகக் கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.

இங்குதான் தன் வாழ்வில் முதல் முறையாக நிஜத்தை நேரடியாக இவர்கள் சந்திக்கிறார்கள்.

வாழ்வு இப்படியிருக்க வேண்டும், வாழ்க்கைத் துணை இப்படியிருக்க வேண்டும் என்ற கனவுகள் - இவ்வளவுதான் வாழ்க்கை என்ற நிஜத்தை, நேருக்கு நேர் சந்திக்கும் காலம் தேன்நிலவு.

செமனதைச் செம்மையாக்கியவரை நிழல்போல் இன்பம் தொடரும்! - தம்மபதம்
ம்மனக்கருத்துக்களை மாற்றி அமையுங்கள். உங்களையும் மீறி உங்களுக்குள் வந்து செல்லும் மூச்சுக்காற்று போல் இன்பமும் அமையும் வந்து செல்லும்!
மை

வாழ்க்கையைப் பற்றிய கனவுக்கும், நிஜவாழ்க்கைக்கும் சம்பந்தமேயில்லை என்பதைத் தெரிந்துகொள்ள முப்பது நாட்களே அதிகமென்று பெருகிவரும் விவாகரத்துகள் உறுதிபடச் சொல்கின்றன.

"ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்" என்பதெல்லாம் விளையாட்டுப் பழமொழிகள் அல்ல. நம் மூதாதையரின் மனோதத்துவ முதிர்ச்சியின் வெளிப்பாடு.

"பதினாறு நாட்களுக்குமேல் ஒரு
நிலவு தாங்காது. அதேபோல், மனிதா!
உன் கனவுகளும் பதினாறு நாட்களுக்கு
மேல் தாங்காது" என்பதை இலைமறை
காயாய் செந்தமிழில் என்றோ தேன்நிலவு
என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

பதினாறு நாட்களில் வாழ்க்கை
புளித்துப் போகவா கனவு காண்கிறோம்.
கனவின் இயல்பே இயல்பை
மிகைப்படுத்தி நிஜத்தைப் புளிக்கச்
செய்வதுதான்.

கனவுகளைக் கட்டுப்பாடில்லாது
உருவாக்க உதவும் அதே
அகங்காரம்தான், கனவுகளை
நிஜவாழ்வில் அனுபவித்து வாழ
விடாது தடுத்துக்கொண்டிருக்கிறது.

கனவுகள் நிஜமாக ஆரம்பித்தால்
அது அகங்காரத்திற்கு அழிவு! எனவே அது
வாழ்வதற்காக, உங்களைக் கனவு
காணத்தூண்டும். ஆனால், கனவை
நிஜவாழ்வில் அனுபவிக்காமல்
போவதற்கான எல்லா
முன்னேற்பாடுகளையும் உங்கள்
மூலமாகவே அது செய்து முடிக்கும்.
அவ்வளவு தந்திரமானது அது!

portrait

கடவுளை நீங்கள்
சந்திக்கும்போது...
வார்த்தைகள்
அர்த்தமற்றவையாகிவிடும்.
அசைவுகள்
தேவையற்றதாகிவிடும்
யோசனைகள்
உபயோகமற்றதாகிவிடும்.
சாதனைகள்
சாதாரணமானவைகளாகிவிடும்.
சும்மாயிருத்தல் கூட
சுகமானதாகிவிடும்
இவை, ஞானமடையும்போது
நீங்கள் அனுபவிக்க
ஆரம்பிப்பவை!

சீயானோவிற்குள் உடைந்தது இந்த அகங்காரம்தான்!

வருடங்கள் பல ஆனதால் வலுவிழந்த மூங்கில் வாளி போல், தொடர்ந்து தியானமார்க்கத்தில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள, அகங்காரத்தின் மாயக்கால்களான ‘தவறான கருத்துக்கள் வலுவிழந்து விடும்.’

எதிர்பாராத தருணத்தில் சீயானோவின் மூங்கில்வாளி உடைந்தது போல, அகங்காரம் நம்முள்ளும் ஒரு நாள் உடைந்து போகும். தொடர்ந்து தியானம் செய்பவருக்குக் கிடைக்கும் ஆச்சரியமான பரிசு இது!

அதன்பின் கனவில்லாத வாழ்வு பிறக்கும். தேன் நிலவு என்ற முப்பது நாட்கள் கொண்டாட்டத்தைத் தாண்டி வாழ்வு முழுவதும் கொண்டாட்டமாகி விடும். அப்போது வாழ்வின் கொண்டாட்டம் வருடம் முழுவதும் இருக்கும். தேன் சூரியனாக மாறிவிடும் - வாழ்வு முழுவதும்!

வருடத்தின் முன்னூற்று அறுபத்தைந்து நாட்களையும் அனுபவிக்க முடியும்.

வாழ்க்கையோ, வாழ்க்கைத்துணையோ சலிப்பு தட்ட, கனவு கடந்த மனிதருக்கு வாய்ப்பே இல்லை. மனக்கருத்துக்களைத் தாண்டி வாழ ஆரம்பியுங்கள். வாழ்க்கை தேன் போன்று இனிக்க ஆரம்பிக்கட்டும். தேனினும் இனிய மனித வாழ்வு உங்களுக்கும் உரித்தானதாகட்டும்!

அர்த்தமுள்ள சம்பவம்...

ஒரு வாசகரின் கேள்வி "தினம் செய்யும் சிறிது நேர தியானம், கடினமான மனதை எப்படி வலுவிழக்கச் செய்யும்?"

பதில்... "தியானமும் மனமும் - இந்திய மாமியார் மருமகள் போன்றவை. இரண்டுக்கும் ஒத்துப்போகாது. யாராவது ஜெயித்தாக வேண்டும். தியானம் உங்களுக்குப் புதுவரவு! தினம் அனுமதியுங்கள்! உங்களையும் உங்கள் மனதையும் கைக்குள் கொண்டுவரும் வித்தை தெரிந்தது. தியானத்தை அனுமதித்து பாருங்கள்".

  • இனிய வாழ்வு கனிய... 'எளிய தியானத்தை' வலியப் போய், செய்தாலும் நல்லதே!

இயக்கத்தைத் தூண்டும் மனக்கருத்துக்கள்

துண்டிக்கப்பட வேண்டும்!

| தியான

உளிகள் | கிடைக்கும் முன் கடுகேயானாலும் மலையாக்கிக் காண்பித்து, கிடைத்த பின் மலையேயானாலும் கடுகாக்கிக் காண்பிக்கும்.... |

அது மடமனம்.

புகை, மது போன்றவற்றிற்கு அடிமையாயிருப்பவர்கள் அது கிடைக்கும் வரை அது இல்லாவிட்டால் வாழ்வே இல்லை எனும் அளவுக்கு ஏங்குவர். அது மலை போலத் தெரியும்.

அது கிடைத்த மறுநிமிடமே ஏக்கம் சுருங்கிப் போகும்.

இதுவரை மலைபோலத் தெரிந்தது இப்போது கடுகுபோல் மாறிவிடும்.

இது மனதின் மிக அடிப்படையான குணங்களில் ஒன்று.

எல்லா மனிதர்களும் மனதின் இந்தப் பண்பால் தினம் தினம் பாதிக்கப்படுபவர்கள்தான்.

> தூண்டலை
> தீண்டுவது
> யுக்தி.
> தூண்டலை
> தாண்டுவது
> ஆனந்தம்.

ஒரு டீ, ஒரு இனிப்பு, ஒரு சுவை மிகு உணவு, ஒரு குட்டித் தூக்கம், ஒரு புது உடை, ஒரு நண்பரோடு உறவினரோடு உட்கார்ந்து பேசுவது... போன்ற பல வாழ்க்கையம்சங்கள் மனிதனை கட்டிப்போட்டு வைத்திருக்கின்றன.

மேற்குறிப்பிடப்பட்ட எல்லாமே அவை கிடைக்கும்வரை மிகுந்த ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் சந்தோஷத்தைத் தரக்கூடியதாகவும் தெரியும்.

ஆனால் அவை கிடைத்தவுடனேயே அந்த ஆர்வம், சந்தோஷம் எல்லாம் மறைந்து அது மிக மிகச் சாதாரணமான ஒன்றாகிவிடும்.

ஏக்கப்பட்ட அளவிற்கும் கிடைத்த சந்தோஷத்திற்குமுள்ள வித்தியாசம், எப்போதுமே மலைக்கும் கடுகுக்குமுள்ள வித்தியாசமாகவே இருக்கிறது!

காரணம், விரும்புவது கிடைக்கும் வரை மனிதனுள் பரபரப்பை உருவாக்கும் மனக்கருத்தானது, கிடைத்த பின் மறைந்து போவதே.

ஆசையைத் தூண்டி,

அது கிடைத்ததும்

மறைந்து கொள்ளும் தன்மை பெற்ற

இந்த மனக்கருத்து எல்லோரிடமும் இருக்கிறது.

தவறான மனக்கருத்துக்காக மனிதன் ஓடுவதும் ஆடுவதும் பரிதாபம்.

இனி ஆசை உங்களை ஆட்டுவிக்கும் காலங்களில் மிகக் கவனத்தோடு இருங்கள். காரணம், அவை ஒரு தவறான மனக்கருத்தின் தூண்டுதல்கள்.

தூண்டலில்
இருந்து
மீள்,
மீதி வாழ்வு
உன் கையில்

தூண்டுவது துண்டிக்கப்பட வேண்டும்.

தூண்டல்கள் வரும் இடம்வரை செல்லுங்கள். அப்படிச் செல்வதின் உபவிளைவாக தூண்டல்களையே துண்டிக்கும் கலையைக் கற்றுக்கொள்வீர்கள்!

தூண்டல்கள் துண்டிக்கப்பட்ட பின்தான், மனிதன் முதல் முறையாகத் தன் வாழ்வை வாழ ஆரம்பிப்பான்.

தூண்டப்படும் காலங்களையெல்லாம் தியான காலங்களாக்குங்கள். உங்கள் வாழ்வை உங்களின் விருப்பம் போல வாழ ஆரம்பிப்பீர்கள்!