KAILASA Library/கதவைத் திற ... காற்று வரட்டும்!/நாகரிகத் தந்திரம் போக்கும் மந்திரம்Sign in
கதவைத் திற ... காற்று வரட்டும்!

நாகரிகத் தந்திரம் போக்கும் மந்திரம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

லோகோ

"அப்புறமாவது அசைபோட்டு ஜீரணிக்கலாம்" எனும் வாய்ப்பளிக்கப்படாத மிருகம் மனிதர்கள். இருந்தும் அவர்கள்தான் மெல்லாமல் விழுங்குகிறார்கள் நாகரிகமாய்! வயிற்றுக்குள் கிரைண்டரா இருக்கிறது?

| நிஜம் இதுவே...
(நாக)ரிகம்!
நீங்களே
பால் ஊற்றி
வளர்த்தது. |

போட்டதையெல்லாம் மசித்துத் தள்ள!

நுனி விரல்களில் சாப்பிடுவது

உதடு நனையாமல் குடிப்பது

குதிகால் தரையில் படாமல் நடப்பது என்ற எல்லாமே நாகரிகங்கள்.

இயற்கையோடு கலப்பதைக் குறைக்கும் தந்திரங்கள்.

இவ்வளவு ஏன்? மூச்சுகூட மார்பளவிலேயே சிக்கிக் கொள்கிறது. நுரையீரல் முழுவதும் சுவாசக்காற்று வியாபிப்பதில்லை. நுரையீரலின் அடி வரை செல்வதில்லை.

"மனிதர்கள் வாழ்வது அரைகுறையானது" எனச் சுட்டிக்காட்ட உதவும் ஒரு சில தடயங்களே மேலே நீங்கள் படித்தது.

பல தடயங்கள் சுட்டிக்காட்ட முடியாத அளவுக்கு உங்களின் உடல், உயிர், உணர்வோடு கலந்துவிட்டது. எல்லாம் களங்கமாகிப் போனது. களங்கப்படுத்தியது எது?

குழந்தைப் பருவத்திலிருந்தே பல சூழ்நிலைகளில்... "இதுதான் சரி", "இதுதான் தவறு" எனும் வரிகள் உங்களுக்குள் செருகப்பட்டு விட்டன.

அவை நாகரிகம் எனும் பேரில் உங்களுக்குள் நுழைந்து விட்டன.

மனிதன் தான் செய்வது தவறானதாக இருந்தபோதிலும், “நான் சரியாகத்தானே செய்கிறேன்!” என அவரைச் சொல்ல வைப்பது இந்த நாகரிகத் தந்திரங்களே!

இவை கண்டுபிடிக்கப்பட வேண்டும். வெளித் தள்ளப்பட வேண்டும்.

உங்கள் உடலிலும் மனதிலும் பல சச்சரவுகளை உருவாக்கிவிட்ட இந்த நாகரிகத் தந்திரங்களைத் தேடித் துரத்தும் மந்திர வழி... பூரணமாய் தந்திரங்களைச் செய்யுங்கள். அது மறையும்.

அரைகுறையாய் வாழும் எல்லாக் காலங்களையும் கவனத்துக்குள் எடுத்து வாருங்கள்.

மிகச் சரியாய் அலசி ஆராய்ந்தால் மட்டுமே புலப்படக்கூடிய, மிகத் தவறான தந்திரங்களைப் போக்குங்கள். அந்த எல்லா காலங்களிலும் செய்யும் செயல்களை பூரணமாக்குங்கள்.

நாகரிகம் பற்றி யோசிக்கக் கூட வேண்டாம்.

பூரணமாக வாழ ஆரம்பித்தால்... தந்திர காலங்கள்கூட தியான காலங்களாகும்.