KAILASA Library/கதவைத் திற ... காற்று வரட்டும்!/சரி... தவறு.....Sign in
கதவைத் திற ... காற்று வரட்டும்!

சரி... தவறு.....

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

  • தரங்குறைந்த மனம்தான் - உணர்ச்சிவேகத்தில் உசுப்பப்படும். ஊர் பேச்சுகேட்டு ஆடும். தவறைக்கூட சரியென சொல்லும். சரியானதைக்கூட தவறென வாதிடும்.

★ எனவே, மனிதர்களைத் தரம் பிரித்துப் பார்ப்பது. தரங்குறைந்த மனதின் செயல்.

★ மனிதத் தரம் உயரும் வரை. தரம்பிரித்தல் ஒரு தொடர்கதை.

★ தரமான மனிதரால்.
தரம்பிரித்துப் பார்க்க முடியாது.
அதற்கு அவசியமும் இருக்காது.

★ சரியை சரியாய் புகழ்வதும் தவறைக்கூட சரியாய் புரிய வைப்பதும் நடுநிலையாய் வாழத் தெரிந்தவருக்கே சொந்தம்!

சீனாதன ஞானியிடம், குடும்பஸ்தர் ஒருவர் கேட்டார்;

"சாமி, நான் அன்பு செய்வது சரியான விதத்தில்தான் செய்கிறேன். என் அன்பு தவறல்ல என்பதை எப்படி நான் கண்டுபிடிப்பது? உபாயம் சொல்லுங்கள்."

ஞானி, "உன் எதிரியை நேசிக்குமளவுக்குப் பக்குவம் பெறும்போது உன் அன்பானது தவறல்ல எனும் பக்குவநிலையை அடைகிறது.

எப்போது உன் எதிரிகளின் மகிழ்ச்சிக்காக ஒரு நண்பனைப் போல் செயல்பட ஆரம்பிக்கிறாயோ அன்று உன் அன்பானது சரியானதாகிறது".

★ எதிரியையே நண்பராக்கும் வல்லமை சரியான அன்பிற்கு உண்டு. நண்பரையே எதிரியாக்கும் வல்லமை தவறான அன்பிற்கு உண்டு. உண்மையான அன்பு "சரி, தவறுக்கு" அப்பாற்பட்டது.

அன்பு என்ற பெயரில் மனிதர் நிகழ்த்தும் பாச நாடகம், 'சரி தவறுக்கு உட்பட்டது.'

விவேகானந்தர் மீன் சாப்பிட்டார் என்பதற்காக ஒருவர் புலால் சாப்பிட்டால் - அவர் சரி என்ற பெயரில் தவறு செய்கிறார்.

காந்தியடிகள் புலால் சாப்பிடவில்லை என்பதற்காக ஒருவர் புலால் சாப்படுவதை நிறுத்தினால் - அவரும் சரி என்ற பெயரில் தவறு செய்கிறார்.

ஏனென்றால் அது அனுபவத் தெளிவால் எடுக்கப்பட்ட முடிவு அல்ல. உணர்ச்சி வேகத்தில் எடுக்கப்பட்ட முடிவு.

நமக்கு அனுபவப்பூர்வமாக உணர்ந்து தெளிந்த விஷயங்கள் தவிர, மற்றவர்கள் செய்தார்கள் அல்லது சொன்னார்கள் என்பதற்காக நாம் வாழ்வில் செயல்படுத்த ஆரம்பித்தால், நாமும் சரி என்ற பெயரிலே நிச்சயமாக தவறுதான் செய்கிறோம்.

1. நான் செய்தால் சரி,
நீ செய்தால் தவறு
- இது அகங்காரத்தின் உச்சம்
- முதல் வகை.

2. நண்பன் செய்தால் சரி.
எதிரி செய்தால் தவறு.
- இரண்டாம் வகை.

3. நண்பன் தவறு செய்தாலும்
தவறு தவறுதான்.
எதிரி நல்லது செய்தாலும் அது நல்லதே,
சரியே!
- மூன்றாவது வகை

Nithyananda

உங்களின் சொல் செயல்களைப் பாராட்டும் பாசக்காரர்களைவிட,

உங்களின் தவறுகளை
நேருக்குநேர் சுட்டிக்காட்டிய
மோசக்காரர்களுக்கு முதலில்
நன்றி சொல்லுங்கள்.

-சாக்ரடீஸ்

• உங்களை உருவாக்குவதில்
நண்பர்களைவிட எதிரிகளே
முக்கிய பங்கு வகிக்கிறார்கள்!

முதல் வகை மனிதர்கள் மிகவும் பரிதாபத்துக்குரியவர்கள். "நான் சரியானவன்" என்று பிடிவாதமாக நம்புவதால், தங்களுக்குத் தோன்றுவதெல்லாமே சரியானவை, உண்மையானவை என நம்புவர். முழுக்க முழுக்க தவறானவற்றைக்கூட சரியென நம்புவர்.

பாவம்! பல்வேறு எதிர்மறை
எண்ணங்களால், பீடிக்கப்பட்டு தாறுமாறாகச்
செயல்படும் ஒரு மனதைத்தான் இவர்கள்
பெற்றிருப்பார்கள்.

எவ்வளவு பெரிய மகான்கள் வந்து எத்தனை
முறை எடுத்துக்கூறினாலும் இவர்களுக்குத்
தங்களின் அவலநிலை புரியாது.

மாறுமாறான மனதில் இருந்து வரும் - ‘தரமற்ற எண்ணங்கள்' தவறாகத்தான் இருக்கும் என்ற உண்மை ‘நான் சரியானவன்’ என்னும் எண்ணம் இருக்கும் வரை அந்த நபருக்குத் தெரியாது. உலகமே தவறு செய்வது போலத் தோன்றும்.

பலர் பல சமயங்களில், ‘நான் சரியானவன்’ எனும் எண்ணக்குழியில் விழுந்துவிடுகிறார்கள். விளைவு - நம்மைச் சுற்றி இருக்கும் முத்தான சில உள்ளங்களைக் குத்திக்கிழித்து, அந்தச் சில நிமிடங்களை நரகமாக்கி விடுகிறோம். நரகம் சொர்க்கமாக ‘நான் சரி'- யில் ‘நான்’ உடைந்து, ‘சரி’ மட்டும் புரிய வேண்டும்.

இரண்டாவது வகை மனிதர்கள் ‘சூழ்நிலைக் கைதிகள்'. இவர்களுக்கு நண்பன் செய்த தவறு, தவறாகத் தெரியாது. மேலும், எதிரி (மனதிற்குப் பிடிக்காதவர்கள்) செய்த மிகச் சரியான விஷயங்கள்கூட, சரியாகத் தெரியாது.

நம்மைச் சுற்றி இருக்கும் மக்களிடம், அதாவது நமக்குப் பிடித்தவர்கள், பிடிக்காதவர்களிடருந்துதான் நாம் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்துகொள்கிறோம்.

மனிதர்களைப் பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்று பிரிக்கும் போது - பிடித்தவர்களின் தவறுகளைக் கூட “சரி” என ஏற்றுக்கொள்ள ஆரம்பிப்போம்.

விளைவு, தவறுகள் நம் மனதில் படிய ஆரம்பிக்கும். மனம் தவறாவதால் நாம் தவறானவராக மாற ஆரம்பிப்போம்.

நமக்கு பிடிக்காதவர்களின் சரியான நடவடிக்கைகளைக்கூடத் தவறு என்று கண்ணாடி போட்டுப் பார்த்தால், “சரி” என்பதே தரம் மாறி தவறாகத் தெரியும். ‘எது சரி?’ என்ற கேள்விக்கு மனம் குழப்பமான பதிலையே தரும்.

மனதில் சரி, சரியானபடி பதியாததால் நாம் சரியானவராகும் வாய்ப்பு குறைய ஆரம்பிக்கும்.

மூன்றாவது வகை மனிதர்கள் ‘நடுநிலைவாதிகள்’. தைரியசாலிகள் வாழ்க்கையையும் மனிதர்களையும் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தி, வாழ்வில் வளமடையக்கூடியவர்கள்.

தை

எதிரியின் சரிகளையும்

ரீ

நண்பனின் தவறுகளையும்

ய

சுட்டிக்காட்ட பக்குவமும்

ம்

தைரியமும் நிறைய வேண்டும்!

மனிதர்களைச் சரியாக தரம் பார்த்து, தரம் பிரித்து, தன் தரம் தாழாமல் நடுநிலையோடு வாழத் தெரிந்துகொண்டவரின் மனதை யாராலும், எப்போதும் அசைக்க முடியாது.

நண்பனின் தவறைச் சுட்டிக்காட்ட தைரியம் வேண்டும். எதிரியின் 'சரி' யை ஏற்றுக் கொள்ள பக்குவமடைந்த மனோபாவம் வேண்டும்.

இது இரண்டுமே நடுநிலையில் நன்றாய் வாழ்பவரின் வெளிப்பாடு. நடுநிலைவாதியாக இருப்பதே புத்தர் கூறும் மார்க்கம்.

சரிக்கும் தவறுக்கும்
பிடித்தவற்றிற்கும்
பிடிக்காதவற்றிற்கும்
துன்பத்திற்கும் இன்பத்திற்கும்
அதிர்ஷ்டத்திற்கும் துரதிர்ஷ்டத்திற்கும்

‘நான் சரி’ - ல்
நான் உடைந்து
சரி மட்டும்
புரிய வேண்டும்.

  • இடையில், நடுவில் நிற்க பழகிக்கொண்டால் போதும் நிம்மதி தேடி வர ஆரம்பிக்கும். இதுதான் புத்தர்கூறும் நடுநிலை மார்க்கம். (Middle Path).

புலால் உண்பது என்பது விவேகானந்தருக்குச் சரி. ஆனால், காந்தியடிகளுக்குத் தவறு. புலால் உண்ணக்கூடாது என்பது காந்தியடிகளுக்குச் சரி. ஆனால், விவேகானந்தருக்குத் தவறு.

விவேகானந்தரின் சக்திக்கும் அவரின் தவவலிமைக்கும் முன் உணவு ஒரு பொருட்டே அல்ல.

அவருக்குள் ஓடி விளையாடிய சக்திக்கு உணவு, உறக்கம், வார்த்தைகள் என்ற எல்லாவற்றையும் தாண்டி அவரைக் காக்கும் திறன் உண்டு.

'அவர் செய்தாரே'

'இவர் செய்தாரே' என்று சாதாரண மனிதர் ஏதேதோ காரிங்களைச் செய்ய ஆரம்பித்தால் அவரவருக்குள் இருக்கும் சக்தியளவைப் பொறுத்து மந்தத்தன்மையும், சோர்வும் மட்டுமே மிஞ்சும்.

ஆராயாமல் வெறுமனே மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக, எந்த ஒரு சூழ்நிலையிலும் உணர்ச்சிவேகத்தால் உங்கள் மனம் ஏற்றுக் கொள்ளாததை உங்களுக்குள் அனுமதித்துவிடாதீர்கள்!

★ நமக்குப் பிடித்தவர்களால், நம் மனதைப் பிடித்துக் கொண்ட தவறுகள் அதிகம்.

★ அதேபோல் நமக்குப் பிடிக்காதவர்களால் நம் மனதில் பிடிபடாமல் நழுவிச் சென்ற சரியான விஷயங்களும் அதிகம்.

★ நமக்குப் பிடித்தவர்கள் என்பது, அவர்கள் நமக்கு அறவே பிடிக்காத செயலைச் செய்யும் வரை மட்டுமே!

★ நமக்குப் பிடிக்காதவர்கள் என்பதும் அவர்கள் நம் மனதுக்கு மிகப் பிடித்த ஒரு செயலைச் செய்யும் வரை மட்டுமே!

பிடித்தவர்கள்

பிடிக்காதவர்கள்

என்ற இரண்டுமே நிலையில்லாதவை.

நம் கருத்துக் கண்ணாடிகளால் மனிதர்களை முத்திரையிட்டு, பிரித்துப் பார்த்து - உண்மையை, சரியை விட்டுவிட்டு, "சரி" என்ற பெயரில் தவறு செய்வதை நிறுத்த ஆரம்பித்தால் போதும்... புத்தரின் நடுநிலைமார்க்கத்தை நெருங்க ஆரம்பித்து விட்டீர்கள்... நிம்மதிக் காற்று வீச ஆரம்பித்து விட்டது!

அர்த்தமுள்ள சம்பவம்...

சீரியல் பார்த்த மனைவியிடம் முகுந்தன் கேட்டார்: "சீரியலை விட விறுவிறுப்பானது வாழ்க்கை! வாழப்பிறந்தாயா? அழப்பிறந்தாயா? இப்படி மூழ்கிப்போக அதில் என்னதான் இருக்கோ!"

அடுத்த நாள் முகுந்தன் செய்தித்தாள் படிக்கையில், "செய்திகளைவிட கலவரமானது வாழ்க்கை! நான் மனைவியா? செய்தித்தாள் மனைவியா? அதில் மூழ்கிப்போக அப்படி என்னதான் இருக்கோ!" என்றார் மனைவி.

• பிடித்தவரிடம் வரும் சச்சரவுகளுக்குக் காரணமும் 'இது சரி', 'இது தவறு' எனும் நம் வரையறைகள்தான்!