வாழ்க்கையை அனுபவி!
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
* இந்த வாழ்க்கையை அனுபவி என்று இறைவன் நமக்குப் பரிசாகக் கொடுத்த ஆனந்த சக்தியைப் பயன்படுத்தாமல் இருப்பது - சுயபாதகச் செயல்.
* பணம், பதவி, பேருக்காக நீங்கள் செலவழிப்பது எதை? - உடல், உயிர், மனத்தை!
* எந்த நிமிடம் வேண்டுமானாலும் கைமாறத் தயாராக இருக்கும் பணம் பதவி புகழுக்காக, இந்த நிமிடம் உங்களோடிருக்கும் உடல், உயிர், மனத்தை பாழாக்குவது எந்த வகையில் நியாயம். கொஞ்சம் யோசியுங்களேன்!
* வாழ்க்கையை அனுபவிக்கத் தெரிந்தால், பிச்சைக்காரனுக்குக் கூட உலகம் சொர்க்கமாகத் தெரியும். வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியாவிட்டால், பணக்காரனுக்குக்கூட உலகம் நரகமாகத் தெரியும்.
கடந்த நூற்றாண்டில் மேற்கத்திய அறிவுலகத்தையே ஒரு கலக்குக் கலக்கியவர்கள் இரண்டு சிந்தனாவாதிகள். ஒருவர் காரல் மார்க்ஸ், இன்னொருவர் சிக்மண்ட் ஃப்ராய்ட்.
காரல் மார்க்ஸ் சொன்ன விஷயங்களில் எனக்கு மிகவும் பிடித்தது, "எதை இழந்து எதைப் பெறுகிறோம்" என்று சொன்னதுதான். எவ்வளவு அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் இவை?
ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். காலையில் எழுந்தவுடன், அழகாக எழுந்து வரும் சூரியனை ரசிக்க நமக்கு மனமில்லை. தோட்டத்தில் பலவாறாகப் பூத்துக் குலுங்கும் ரோஜா செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றி, தடவிக் கொடுக்க, நமக்கு மனம் வருவதில்லை. குழந்தையோடு கொஞ்ச நேரம், கொஞ்சி விளையாட நமக்கு நேரம் கிடைப்பதில்லை.
பணம்.... பணம்.... பணம்!.... இந்த
ஒன்றுக்காக நம் வாழ்க்கையின் சகலவிதமான
அற்புதங்களையும் இழந்து, அல்லல்படுகிறோம்.
நீங்கள் என்னதான் ஓடியாடி உழைத்தாலும்
இலட்ச இலட்சமாக, கோடி கோடியாக
சம்பாதித்தாலும் உங்களுக்கு மிஞ்சப் போவது
என்ன?
Few cars and few Bangalows மாத்திரமே சில கார்களும் சில பங்களாக்களும் தான்!
> 'வாழ்க்கையை அனுபவித்து
> வாழத் தெரிந்திருந்தால்,
> பிச்சைக்காரால்கூட
> சொர்க்கத்தை உணர்வது
> சாத்தியம்' என்றால், ஏன்
> உங்களால் முடியாது?
> உங்களையும், உங்கள்
> சூழ்நிலைகளையும் மதிக்கக்
> கற்றுக்கொள்ளுங்கள். சொர்க்கம்
> உங்களுக்குள்ளே... என்று
> கண்டுகொள்வீர்கள்!
இந்த உயிரற்ற பொருள்களுக்காக நீங்கள் எதை விலையாகக் கொடுக்கிறீர்கள் தெரியுமா? இறைவன் உங்களுக்கு வரப்பிரசாதமாகக் கொடுத்த வாழ்க்கையை! அந்த வாழ்க்கையை அனுபவிக்கக் கொடுத்த ஆனந்தசக்தியை!
ஒரு கணக்குக்காகப் பார்த்தால்கூட, உயிரற்ற பொருள்களை வாங்க உயிருள்ள வாழ்க்கையைத் தருவது எவ்வளவு பெரிய அநியாயம் என்பது புரிய வரும்.
அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு மனிதர் கடற்கரையில் எதையோ எதிர்பார்த்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தார். அவர் அருகே உட்கார்ந்திருந்த இளைஞர், "ஐயா, அப்படி என்ன ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார்.
“ஒன்றுமில்லையப்பா... ஒரு பர்ஃபெக்ட்டான பெண்ணைத் திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறேன். அதற்குத் தகுந்த பெண்கள் யாரேனும் வருகிறார்களா என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்றார் அந்த வயதானவர்.
“இத்தனை ஆண்டுகளாக நீங்கள் காத்திருந்தும் அழகான, பர்ஃபெக்ட் பெண் கிடைக்கவில்லையா?” என்று மீண்டும் கேட்டார் இளைஞர்.
“முப்பத்தைந்து வயதில் எனக்கு ஒரு
பர்ஃபெக்ட் பெண் கிடைத்தாள்” -
தயக்கத்தோடு சொன்னார் வயதானவர்.
“பிறகென்ன...! திருமணம் செய்து
கொண்டிருக்க வேண்டியதுதானே.....?”
பரபரப்பாகக் கேட்டார் இளைஞர்.
“என்னைப் போல அந்தப் பெண்ணும் பர்ஃபெக்ட்டான ஆளைத் தேடிக் கொண்டிருந்ததுதான் பிரச்சினை”. குருட்டுப்பூனை விட்டத்தில் பாய்ந்தது போல், ஏதோ ஒரு நோக்கத்தைப் பிடித்துக்கொண்டு வாழ்க்கையை உதாசீனப்படுத்துகிறார்கள்.
சாதிக்க வேண்டும் என்று நினைத்துக் கிளம்புகிறவர்கள், ஓரளவு சாதித்த பிறகு, இன்னும் இன்னும் என்று சிலர் சென்று கொண்டே இருக்கிறார்கள். எத்தனை சாதித்த பிறகும், திருப்தி அடையாதது கண்டு, எந்த சாதனையும் செய்யாமல் சாதாரண வாழ்க்கை வாழ்ந்திருக்கலாமே! என்று புலம்ப ஆரம்பித்து விடுகிறார்கள். காரணம் - வாழ்க்கையை அனுபவிக்காததுதான்.

வாழ்க்கையை
வீணடிப்பது
- ஒரு பாவம்.
ஒரு கொடுஞ்செயல் ஒரு பெருங்குற்றம்.
இயேசுநாதர் சொன்ன கதை ஒன்றை உங்களுக்குச் சொல்கிறேன்.
மிகப் பெரிய பணக்காரன் ஒருவன் ஆனந்தமாக வாழ நினைத்து மது ,மாது, மாட மாளிகை என்று தினம் தினம் வாழ்ந்து வந்தான். அதே பணக்காரனின் வீட்டுக்கு எதிரே பிச்சைக்காரன் ஒருவன் கொடிய நோயோடு வாழ்ந்து வந்தான். பணக்காரனின் எச்சில் இலையில் இருக்கும் மிச்சம் மீதியைத் தெருநாய்களின் சண்டைகளுக்கிடையே உண்டு வாழ்ந்து வந்தான்.
பணக்காரன் ஆனந்தத்திற்காகத் தேடிய வழிகள் எல்லாமே அளவுக்கதிகமாகப் பயன்படுத்தப்பட்டதால், உடலில் நோயும் மனதில் அதிருப்தியும்தான் மிஞ்சியது.
கடைசியில் பணக்காரனும் பிச்சைக்காரனும் கிட்டத்தட்ட ஒரே நாளில் இறந்தார்கள்.
சாவிற்குப் பின் நிலைமை தலைகீழாக இருந்தது. பணக்காரன் நரகத்தில் இருந்தான். கொடிய வேதனையில் தாகம் தாளாமல் நிமிர்ந்து ஒரு சொட்டு நீராவது கிடைக்காதா என்று துடித்துக்கொண்டிருந்தான்.
ஆனால் பிச்சைக்காரனோ, பரலோகத்தின் ஆபிரகாமின் மடியில் படுத்துக்கொண்டிருந்தார்
"ஆபிரகாமே! எனக்குத் தாகம் தாளவில்லை.
ஒரு சொட்டுத் தண்ணீராவது கொடுங்களேன்!" என்று கெஞ்சினான்.
"அது சாத்தியமே இல்லையப்பா" என்று சொன்னார் ஆபரகாம்.
"அப்படியானால் நரகத்தில் நான் படும் வேதனையை, அந்தப் பிச்சைக்காரனைப் பூலோகத்துக்கு அனுப்பிச் சொல்லச் சொல்லுங்களேன். என் சகோதரர்களாவது தப்பித்துக் கொள்ளட்டும்" என்று வேண்டினான் பணக்காரன்.
"அதற்கும் சாத்தியமில்லையப்பா, அந்தப் பிச்சைக்காரனே
பு
ல
ம்
ப
ல்
எத்தனை சாதித்த பின்னும் திருப்தி இல்லாமல் புலம்ப ஆரம்பித்துவிடுகிறார்கள் மனிதர்கள்.இதற்குக் காரணம் வாழ்க்கையை அனுபவிக்காததுதான்.
பூலோகத்துக்குப்போய் நீ படுகிற கஷ்டங்களைச் சொன்னாலும் அவர்கள் கேட்கமாட்டார்கள். கேலி செய்வார்கள்" என்றார் ஆபிரகாம்.
எதற்காக இந்தக் கதை?
பணக்காரர்கள் நரகத்திற்கும் ஏழைகள் சொர்க்கத்திற்கும் போவார்கள் என்று பலர் விளக்கமும் போதனையும் செய்வதற்காக இந்தக் கதை கூறப்படவில்லை. பணம் நிறைய இருப்பதால், டம்பீகமாக - வாழ்வதால் ஆனந்தமும் திருப்தியும் கிடைத்துவிடாது.
இந்த நிமிடத்தில் என்னிடம் உள்ளதே
இந்த நிமிடத்தை அனுபவிக்கப் போதும்
என்று தன்னையும் தன் சூழ்நிலையையும்
அனுபவித்து வாழ்பவருக்கு மட்டுமே
ஆனந்தமும் திருப்தியும் சொந்தம்! இந்தப்
பெரிய உண்மையைச் சொல்வதற்காகத்தான்
இந்தக் கதை.
பிச்சைக்காரரின் வாழ்வு முறை குறிப்பிடத்தக்கது. எல்லாக்கேளிக்கை, கூத்தும் இருந்தும் பணக்காரனிடம் இல்லாத ஏதோ ஒன்று பிச்சைக்காரரிடம் இருந்தது. அது அவர் தன் வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்ததன்மை. தன் சூழ்நிலையோடு இணைந்து வாழ்ந்த தன்மை.
இந்தப் புத்தகத்தைப் படிக்கும் அளவுக்கு நேரமும் பணமும் பெற்ற நீங்கள் நிச்சயம் பிச்சைக்காரராக இருக்க முடியாது.
'வாழ்க்கையை அனுபவித்து வாழத் தெரிந்திருந்தால், பிச்சைக்காரரால்கூட சொர்க்கத்தை உணர்வது சாத்தியம்' என்றால், ஏன் உங்களால் முடியாது? உங்களையும், உங்கள் சூழ்நிலைகளையும் மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். சொர்க்கம் உங்களுக்குள்ளே... என்று கண்டுகொள்வீர்கள்!
இப்படி எத்தனையெத்தனை மகா உண்மைகள் அவதாரபுருஷர்களால் கூறப்பட்டாலும் நிறைய மனிதர்கள் தங்கள் மனத்திற்குச் சரியென்று பட்டதையே செய்து, பொறியில் சிக்கிய எலிகளாகத் தவிக்கிறார்கள். தவிக்கும்போதுதான் உண்மை புரிய ஆரம்பிக்கிறது.
தவிக்கும் நிலை வரும்முன் ஒரு நிமிடம் யோசியுங்கள்... நேரத்தை வீணடிக்காமல் சூழ்நிலையை மதித்து, அனுபவித்து வாழ ஆரம்பியுங்கள். வாழ்க்கையில் சிக்கிக் கொள்ள மாட்டீர்கள். வாழ்க்கையை அனுபவிப்பீர்கள்! அனுபவித்துக் கொண்டாடுவீர்கள்!
வாழ்க்கையே ஒரு பெரிய தொடர் திருவிழா! என்று நம் முன்னோர்கள் கூறியதின் உள்அர்த்தம் உங்கள் உள்ளத்தின் அர்த்தமாக மாறும்.
வாழ்க்கையை அனுபவித்து வாழுங்கள்!