அறிவு! அனுபவம்!
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
★ பொதுவாக மனிதர்கள் ஞானத்தைப் பற்றி வைத்திருக்கும் கருத்துக்கள் இரண்டு,
- விஷயஞானம், அதாவது அறிவு.
- அனுபவஞானம், அதாவது அனுபவம்.
★ உண்மையான ஞானம் - விஷயஞானத்தையும் அனுபவஞானத்தையும் தாண்டியது.
★ அறிவையும் அனுபவத்தையும் தாண்டியது அனுபூதி. இந்த அனுபூதி, ஆனந்தத்தின் உச்சம். அனுபூதிதான் ஞானம்.
வெகு காலத்திற்கு முன்பு, சீன நாட்டில் முகம் பார்க்கிற கண்ணாடி முதன் முதலாக ஒருவருக்குக் கிடைத்தது. அதில் அவர் தன் முகத்தைப் பார்த்து, 'சொர்க்கத்தில் இருந்து என் தந்தையார் வந்து விட்டார்' என்று பேசத் தொடங்கினார். தனியாகச் சென்று பேசிக் கொண்டிருந்த கணவரைச் சந்தேகித்த மனைவி, ஒதுக்குப்புறமாகச் சென்று பேசிக் கொண்டிருந்த கணவரை மடக்கினார்.
அவர் கையிலிருந்த கண்ணாடியைப் பறித்து, அதில் தெரிந்த முகம், தன் முகம்தான் என்று அறியாமல் "இத்தனை காலமாய் என்னோடு வாழ்ந்துவிட்டு இப்போது வேறு ஒரு பெண்ணோடு நீங்கள் எப்படிப் பேசலாம்?" என்று கேட்டார்.
கணவரோ, "நான் எந்தப் பெண்ணோடும் பேசவில்லை. என் அப்பாவோடு பேசிக் கொண்டிருக்கிறேன்" என்றார். அந்தப் பெண்ணோ "வேறு ஒருத்தியோடு

வெறும் செய்திகளும்
அறிவும் மூளையை
நிரப்பும்.
அறிவைத் தாண்டிய
அனுபவமே
விடுதலையைத் தரும்!
பேசியது மட்டுமில்லாமல், பொய் வேறு
சொல்கிறீர்களா?" என்று கோபித்துக்
கொண்டார். இருவருக்குள்ளும் பிரச்சனை
அதிகமாகி அமளிதுமளி ஏற்பட்டது. அப்போது
அந்தப் பெண்ணானவர், "என் கணவர் வேறு
ஒரு பெண்ணோடு தொடர்பு வைத்திருக்கிறார்"
என்று கத்தினார்.
ஆனால் கணவரோ, "என் தந்தையாரோடுதான்
நான் பேசிக்கொண்டிருந்தேன்" என்றார்.
கலவரத்திற்குக் காரணமான கண்ணாடியை
வாங்கிப் பார்த்த மதபோதகர் அதிர்ச்சிக்கு
ஆளானார். "இந்தப் பகுதியில் நான்
ஒருவன்தானே மதபோதகர். என்னை
அல்லாமல் வேறு ஒரு துறவி எங்கு இருந்து
முளைத்தார்?" என்று அவர் ஆவேசமாகக்
கத்தினார். அந்தக் கண்ணாடியை அவர் கீழே
எறிந்தார் அது உடைந்து சுக்குநூறாயிற்று.
அவர் ஞானியாக இருந்திருந்தால் இது
நடந்திருக்காது.
ஞானம் என்றால் என்ன?
அறிவு என்பது வேறு. ஞானம் என்பது வேறு. ஆங்கிலத்தில் Intellect என்பதற்கும் Intelligence என்பதற்கும் என்ன வித்தியாசம் என்பதை விளக்கமாக எடுத்துச் சொல்வார்கள்.
நமது மனம் அவசியமற்ற தகவல்களால் நிரம்பி வழிகிறது. இந்தத் தகவல்களால் நிரம்பி வழிவதைத்தான் ஞானம் என்று பலர் நினைத்து விடுகிறோம். மணி ஆர்டரைக் கொண்டு வந்து தருகிறவர் பணம் அனுப்பியவரல்ல. பணத்தைக் கொண்டுவந்து சேர்த்தவர் மாத்திரமே!
ஆனால், ஞானம் என்பது முற்றிலும் வேறு. நிறைய தகவல்கள் சேகரித்து வைத்திருப்பவர்களை அறிவாளிகள் என்று அழைக்கிறோம். அறிவாளிகளின் அறிவு எப்போதும் யூகங்களாக மாத்திரமே இருக்கிறது.
மின்மினிப் பூச்சி, அது படைக்கப்பட்ட காலம் தொடங்கி ‘மினுக் மினுக்’ என்று மின்னி வருகிறது. ‘மின்மினிப் பூச்சிகளுக்கு எதற்காக வெளிச்சம் இருக்கிறது?’ என்பது மாலுமிகளுக்கு விளங்கவில்லை. அவர்கள் படகுகளைச் செலுத்துகிறபோது, இருட்டு நேரத்தில் தங்களுக்கு வெளிச்சம் ஏற்றவே, மின்மினிகளுக்கு அவ்வாறான வெளிச்சத்தை இறைவன் வழங்கி இருக்கிறான் என்று நினைத்தார்கள்.
பறவைகளோ, இருள் சூழ்ந்த காலங்களில் தங்கள் கூடுகளைச் சுத்தப்படுத்த இறைவன் இத்தகைய வெளிச்சத்தை மின்மினிக்கு அருளியிருக்கிறார் என்று நினைத்தன. ஆனால், காலப்போக்கில் இருவர் நினைத்ததும் தவறு என்று ஆனது.
ஒரு ஆண்பூச்சி மேலே இருந்து வெளிச்சம் காட்டிய ஓரிரு வினாடிகளில், பெண் பூச்சி புதருக்குள் இருந்து வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது. பிறகு ஆண் பூச்சி, பெண் பூச்சி இருக்கிற இடத்தை அறிந்துகொண்டு சரேலெனக் கீழே இறங்குகிறது. பிறகு அவர்களின் குடும்ப வாழ்க்கை நடக்கிறது. இதற்காகத்தான் மின்மினிப் பூச்சிகள் வெளிச்சம் போடுகின்றன என்பது தகவல்.
ஆனால், ஒவ்வொரு உயிரின் இனவிருத்திக்காக இறைவன் செய்திருக்கிற ஏற்பாடு இது என்பது அறிவு. வெறும் செய்திகளும் அறிவும் மூளையை நிரப்பும். அறிவைத் தாண்டிய அனுபவமே விடுதலையைத் தரும்.
ஆல்டஸ் ஹக்ஸ்லி என்கிற தத்துவஞானி உலகத்தை மேற்கு, கிழக்கு என்று பிரித்தார். மேற்கின் அடையாளம் மூளை. கிழக்கின் அடையாளம் இதயம். இதயம் என்றால் அன்பு, கருணை, பாசம். ஃபுல்டன், ஜேஷின், மார்க் டுவெயின் போன்ற சிந்தனையாளர்களும் இதில் உடன்பட்டார்கள்.
சமயங்களெல்லாம் கிழக்கே தோன்றின. புத்தர் கருணை மிகுந்தவர். லைட் ஆப் ஆசியா முழுவதும் அவர் கருணையே வெள்ளமாக வடிகிறது. இயேசு கருணை வள்ளல். ஆகவேதான் எந்த நாட்டிலும் அவரது படம் மூளை வெளிப்பட்டுத்
| அ றி வு | நிறைய தகவல்கள் சேகரித்து வைத்திருப்பவர்களை அறிவாளிகள் என்று அழைக்கிறோம்! |
|---|
தெரிவதைப் போல இல்லாமல் இதயம் வெளிப்படுவது போல் வரையப்படுகிறது. அனுபவம், அதாவது அனுபவ ஞானம் இதயத்திலிருந்து ஊற்றெடுக்கிறது.
ஆல்டஸ் ஹக்ஸ்லி இரண்டு வகை தத்துவஞானிகளைக் காட்டினார். ஒரு சாரார், காலத்துக்குட்பட்டு யோசிக்கிறவர்கள். இவர்கள் timely philosophers. மற்றொரு வகையினர் காலத்தைத் தாண்டி யோசிக்கிறவர்கள். இவர்கள் eternal philosophers.
தங்களை மாற்றிக்கொண்டு உலகத்தை மாற்ற வேண்டும் என்று நினைத்தவர்கள் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்கள். இதில் ஆதிசங்கரர், இயேசு, புத்தர் எல்லோரும் அடக்கம்.
தங்களை மாற்றிக்கொள்ளாமல் மற்றவர்களை மாற்ற முயற்சி செய்பவர்கள் முதல் வகையினர். தத்துவங்களைப் படித்துக் கொண்டு தொங்குபவர்கள்.
நம்மில் பலர் காலத்துக்குட்பட்டு யோசிக்கிறவர்கள்தான். நம்மை மாற்றிக் கொள்கிற எண்ணமே நமக்கில்லை. அதற்குள் உலகத்தை மாற்றப் புறப்பட்டு விடுகிறோம். நம்மை மாற்றிக்கொள்வதற்கு முதலில் அறிவு, அனுபவமாக மாற வேண்டும்.
பணத்தாலும் இறைவனை அடைய முடியாது. கல்வியாலும் இறைவனைக் காண இயலாது. தங்களைத் தாங்கள் தோண்டுவதே, நம்மை நாம் உணர்வதே இறைவனை அடைய ஒரே வழி.
இன்றைய கல்வி நமக்கு ஆஸ்திரேலியாவுக்கு யார் பிரதமர் என்று சொல்லித் தருகிறது. ‘ஆடுதுறை 27’ நெல்லுக்கு அடி உரம் என்ன என்பதைச் சொல்லித் தரவில்லை. நமது வேளாண்மைப் பட்டதாரிகளைவிட, விவசாயிகள் அதிகம் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
நமது கல்வி சொல்லிக்கொடுப்பவர்களையே உருவாக்குகிறது. செயல்படுத்துபவர்களை உருவாக்குவது அதன் நோக்கமாக இல்லை.
| இ | பணத்தாலும் இறைவனை அடைய முடியாது. கல்வியாலும் |
|---|---|
| றை | இறைவனைக் காண இயலாது. தங்களைத் தாங்கள் |
| வ | தோண்டுவதே, நம்மை நாம் உணர்வதே இறைவனை |
| ன் | அடைய ஒரே வழி. |
மூளை உழைப்பிற்கு முக்கியத்துவம் தரும். நமது கல்வி, இதயப்பூர்வமான படைப்பாற்றலுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. ஆகவேதான் நமது சமுதாயத்தில் ஒரே பாடத்தை 25 ஆண்டுகளாக மாறாமல் நடத்திக்கொண்டு இருக்கிற பேராசிரியர்கள் இருக்கிறார்கள்.
வேர்வை சிந்தி உழைக்கிற மரவெட்டிக்குக் குறைவான கூலியே கொடுக்கிறோம். கடினமான உழைப்பிலே அனுபவம் கனிகிறது. அறிவைச் சேர்ப்பது எளிது. அனுபவங்களை அதிகரிப்பது சற்றுக் கடினம். வெறும் அறிவு நிறைவைத் தராது. அனுபவமே மனிதருக்கு நிறைவைத் தரும்.
அறிவை அனுபவமாக மாற்ற முயற்சி
செய்தால், ஓர் உண்மை தெரியவரும் அது
பெரும்பாலான உலக அறிவுக்கும், வாழ்க்கை
அனுபவத்திற்கும் சம்பந்தமே இல்லை என்று!
வாழ்க்கைக்கு உதவாத குறிப்புகள், கருத்துகள், செய்திகள் மூளையில் பதிந்து இருந்தாலும் பதிந்திராவிட்டாலும் பயன் ஏதும் இல்லை.
தலையின் கனம் வேண்டுமானால் அறிவின் செறிவால் அதிகமாகலாம்.
முதலில் தலையின் கனத்தை அதிகப்படுத்தும் அறிவின் செறிவைக் குறைத்து, விஷயஞானத்தை (அறிவை), அனுபவ ஞானமாக்குங்கள். வாழ்வில் ஆனந்தக்காற்று வீசட்டும்.
தொடர்ந்து ஆன்மீகச் சாதகத்தில்
ஈடுபட்டுக் கொண்டே இருங்கள். அனுபூதி
நோக்கி முன்னேறிக்கொண்டே இருப்பீர்கள்!

தங்களை மாற்றிக்கொண்டு
உலகத்தை மாற்ற வேண்டும்
என்று நினைத்தவர்கள்
இரண்டாவது வகையைச்
சேர்ந்தவர்கள். இதில்
ஆதிசங்கரர், இயேசு, புத்தர்
எல்லோரும் அடக்கம்.