KAILASA Library/கதவைத் திற ... காற்று வரட்டும்!/இளமையில் சன்யாசம்!Sign in
கதவைத் திற ... காற்று வரட்டும்!

இளமையில் சன்யாசம்!

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

★ உண்மையான சன்யாசிகள் உருவாக்கப்படுவது இல்லை - பிறக்கிறார்கள். Real sanyasis are not made, they are born.

★ இளமையில் இளமையை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தாமல் இருப்பவர், இளைஞன் என்ற போர்வைக்குள் இருக்கும் கிழவன்.

★ வாழ்க்கையில் சுவை மிகுந்த பகுதி - இளமை!

★ படிப்பு, வேலை, எதிர்கால வாழ்க்கை பற்றிய பயம், இவற்றால் இன்றைய உலகில் வாழ்க்கையின் சுமைமிகுந்த பகுதி - இளமை என்றாகிவிட்டது.

என்னைப் பார்க்கிறவர்கள் "இந்த வயதில் சன்யாசமா?! அல்லது இளமையில் துறவா?" என்று கேட்கிறார்கள்.

ஒருமுறை, ஒரு கூட்டத்தில் நான் பேசிக்கொண்டிருந்தேன். கேள்வி பதிலுக்கான நேரம் வந்தது. வருணாசிரம தர்மம் பற்றிக் கேள்வி கேட்டவரோ, உடம்பெல்லாம் மூளை படைத்த ஒரு பண்டிதர். "தாங்கள் கிரகஸ்த்ததில் இருக்க வேண்டிய நேரத்தில், சன்யாசத்தில் இருக்கிறீர்களே?" என்று என்னை மடக்கப் பார்த்தார், அந்தப் பண்டிதர்.

நானோ, “தாங்கள் வானப்பிரஸ்தம் மேற்கொள்ள வேண்டிய காலகட்டத்தில் கிருகஸ்தராக இருக்கிறீர்கள்!” என்றேன். அவர் அதற்குப் பதில் ஒன்றும் பேசமுடியாமல் தலைகுனிந்து அமர்ந்துகொண்டார்.

நாட்டில் எல்லோருமே துறவிகளாகிவிடுவது சாத்தியமில்லை. ஆகவே என்னைப் போலச் சிலர் துறவிகளாகி, நாங்கள் ஆனந்தமயமாவது மாத்திரம் அல்லாமல், பிறருக்கும் ஆனந்தமயமாவதற்கான வழிகளைக் காட்டுகிறோம். இது ஒரு சமுதாயத் தேவை. இறைச்சித்தம்.

நமது வரலாற்றில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே போர் நிகழ்ந்தபோது, சிறிய அரசர்களையெல்லாம் அங்கொருவர், இங்கொருவராகச் சேர்த்துக்கொண்டார்கள். ஆனால், தமிழகத்தில் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் என்கிற மன்னன் மட்டும், எந்தப் பக்கமும் சேரவில்லை. ‘எல்லோரும் போரிடப் போனால் மக்களை வயல்களில் பாடுபட வைப்பது யார்? உணவு உற்பத்தியைப் பெருக்குவது யார்?' என்று, அந்த மன்னன் உற்பத்தியில் மாத்திரமே கவனம் செலுத்தினார். அந்தப் பெருஞ்சோற்று உதியன் சேரலாதனைப் போல ஒன்றிரண்டு பேராவது, தாங்கள் பெற்ற ஞானத்தை மற்றவர்களுக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டியிருக்கிறது.

> இளைஞனே!
> உன்னுடைய ஆனந்த
> வாழ்விற்கு நீயே
> முழுப் பொறுப்பு!

இளமையில் முடியாதது, முதுமையிலும் முடியாது. சராசரி மனிதர்களைப் பொறுத்தவரை இது உண்மை. முதுமையில் பணக்காரர்கள் ஆனவர்களும் உண்டு, பதவிக்கு வந்தவர்களும் உண்டு.

பொதுவாக நாம் பின்னால் பெறுகிற வெற்றியின் விதைகள், இளமையிலேயே ஊன்றப்படுகின்றன. இளமை என்பது வாழ்வின் சாரம். இதைப் பிழிந்து அர்ப்பணிக்காவிட்டால் உயர்ந்த நிலைகளை அடைய முடியாது.

இளமையில் உருவாகிற இந்த அர்ப்பணிப்பே ஞானமாகவோ, பணமாகவோ, பதவியாகவோ வந்து அமைகிறது. இளம்வயதில் உலகம் போகிற பொதுவான போக்கிலிருந்து தங்களை ஒதுக்கிக்கொண்டு, அரிய தவங்களால் ஞானம் பெற்றவர்கள் உண்டு.

இறைவனே சிலரைப் பிள்ளைப்பிராயத்திலேயே ஆட்கொண்டதும் உண்டு. ஆனால், அவ்வாறு நிகழ்வதற்கும் எப்போதோ, எந்தப் பிறவியிலேயோ ஒரு தேடுதல் இருந்திருக்க வேண்டும்.

சீர்காழியில் அருள்மிகு தோணியப்பர் கோயில் குளக்கரையில் பார்வதியின் பாலை அருந்தி, தோடுடைய செவியன் என்று பாடியபோது, திருஞானசம்பந்தருக்கு வயது மூன்று அல்லது ஐந்து என்று சொல்லப்படுகிறது.

நம் வரலாற்றில் ஆதிசங்கரர், விவேகானந்தர் போன்றவர்கள் இளமையிலேயே உலகத்தைத் துறந்து, பிறகு தாங்கள் வந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டார்கள்.

portrait

100% சுதந்திரமயமான

100% ஆனந்தமயமான

வாழ்வுமுறைக்

பெயர் சன்யாசம்...

வாழ்க்கை வாழ்பவருக்குப்

பெயர் சன்யாசி.

சன்யாசி ஆவதற்கு வீரர்களுக்கெல்லாம்
இல்லாத வீரம் வேண்டும். வீரர்,
அடுத்தவர்களை வெற்றி கொள்கிறார்.
சன்யாசி தன்னைத்தானே வெற்றி
கொள்கிறார். ஆகவே, எல்லோரும்
சன்யாசிகளாகி விட முடியாது.

விதை சின்னதாக இருக்கிறது என்பதற்காக,
உள்ளே ஆலமரம் இல்லை என்கிற உறுதியான
முடிவிற்கு வந்துவிடக்கூடாது. அல்லாமா
இக்பால் என்கிற கவிஞர் அழகாகச்
சொல்கிறார்.

'இளம்பிறையே!' வருந்தாதே! உனக்குள்ளேதான் பூர்ணச்சந்திரன் புதைந்திருக்கிறான்!

ஆகவே இளமைதான் வெற்றிக்கான களம். கிரிக்கெட் ஆடுகிற வீரர்களுக்கே வயது வரம்பு உண்டல்லவா? மனம் இளமையாகவே இருக்கலாம். ஆனால், முதுமையில் உடம்பு ஒத்துழைக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆகவே சாதனைகளை இளமையிலேயே தொடங்குவது நல்லது.

இந்த உலக வாழ்க்கையில் இருக்கிற நாம்
எல்லோரும் துறவிகளாக இருக்கலாம். எப்படி?
இராமகிருஷ்ண பரமஹம்சர் அழகான கதை
ஒன்று சொல்கிறார்.

"ஒரு பணக்காரர் வீட்டில் பணிப்பெண் ஒருவர் வேலைக்கு இருந்தார். அவர் அந்தப் பணக்காரரின் பிள்ளைகளை 'ஹரி, ராமா' என்றெல்லாம் கொஞ்சுவார். ஆனால் ஊரில் வறுமையில் வாடுகிற, தன்னையே நினைத்து ஏங்குகிற தனது குழந்தைகளையே நினைத்துக் கொண்டிருப்பார்" என்கிறார். அவ்வாறே நாம் இந்த உலகத்தில் இருந்தாலும், இறைச்சிந்தனையோடு இருக்க வேண்டும்.

இளமையை எதற்காக அர்ப்பணிக்கிறோமோ, அதையே வாழ்வில் வெகுமதியாகப் பெறுகிறோம். இளைஞர்கள் மாத்திரமல்ல, எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்.

ஆன்மீக வாழ்க்கை, சாதாரண வாழ்க்கை என்ற இரண்டு வகைப்பட்ட வாழ்வுமுறைகள் இல்லை.

ஆன்மீக வாழ்க்கை என்றால், ஆனந்தமயமான வாழ்க்கை என்று பொருள். மனிதர்கள் தான் ஆனந்தமாக இல்லை என்று உணர ஆரம்பித்தபின், சுயபச்சாதாபத்தால் சப்பைக்கட்டுக் கட்ட உருவாக்கப்பட்ட title தான் சாதாரண வாழ்க்கை.

எல்லோரும் ஆனந்தத்தின் உச்சிக்குச் செல்லவே ஆசைப்படுகிறோம். ஆனால், அதை நமக்குப் பிடித்த வழியில் காதல், பேர், புகழ், பணம், பதவி என்று காளை போல வேகமாக அனுபவிக்க, உழைக்க ஆரம்பிக்கிறோம்.

ஆனால், நாம் தேடும் ஆனந்தத்தை வெளியில் பெற முடியாது என்று புத்தன் முதல் இரமணமகரிஷி வரை, வெவ்வேறு மொழிகளில் புலன் இன்பத்தின் உச்சத்தை அடைந்து தாண்டியவர்கள், கூறிக்கொண்டே இருக்கிறார்கள்.

ஐந்து புலன்களின் மூலமாக இந்த உலகத்தில் நாம் அனுபவிக்கும் புலன் இன்பத்தில்கூடத் தவறே இல்லை. ஆனால் அனுபவிக்கத் தேவையான சக்தியும் புத்தியும் தேவையான அளவு இல்லாமல் சுகம், திருப்தி தேடி அலைய ஆரம்பக்கும் போதுதான், பிரச்சனையே ஆரம்பிக்கிறது.

வாழ்க்கையை அனுபவிக்கத் தேவைப்படும் சக்தியை தியானம் எளிதில் உருவாக்கித் தரும். உலகையும், மனிதர்களையும் புரிந்துகொண்டு, நிம்மதியாக இருக்க உதவும். புரிந்துகொள்ளும் தன்மையை வளர்க்க, ஞானக்கருத்துக்கள் பெரிதும் உதவும்.

தியானமும் ஞானமும் வாழ்க்கையை அனுபவிக்காமல் நழுவவிட்ட வயோதிகரைவிட, வாழ்க்கையை அணு அணுவாக அனுபவிக்கத்துடிக்கும் வாலிபருக்குத்தான் மிக மிக அவசியம்.

சுஇன்று அதிகபட்ச சுவை,
வைஅதிகபட்ச சுமை நிறைந்த
சுவாழ்க்கைப்பகுதி இளமை!
மை