KAILASA Library/கதவைத் திற ... காற்று வரட்டும்!/ஞானிகளை நம்பாதே!Sign in
கதவைத் திற ... காற்று வரட்டும்!

ஞானிகளை நம்பாதே!

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

★ நம்பினால் 100% முழுமையாக நம்புங்கள். நம்ப முடியாவிட்டால், ஞானிகளின் கூற்றுகளை 100% முழுமையாக நம்பாதீர்கள்.

★ ஞானம் பற்றிய ஞானக்கூற்றுக்கள் அனைத்தும் முக்காலத்திலும் மாறாத சத்தியங்கள்.

★ ஒரு ஞானியின் கூற்றுக்களில் நீங்கள் சிலவற்றை மாத்திரம் நம்பும் போது

1. நீங்கள் உங்களுக்குப் (அகங்காரத்திற்கு) பிடித்த விஷயங்களை மட்டும் ஒரு ஞானியிடம் இருந்து எடுத்துக்கொள்ளும் போது, உங்கள் அகங்காரத்திற்குத் தீனியிடுகிறீர்கள்.

2. காரணம், ஒரு ஞானி என்னதான் சத்தியத்தைக் கூறினாலும் அதை நீங்கள் உங்களின் மனத்தன்மையைப் பொறுத்தும் மனக் கண்ணோட்டத்தைப் பொறுத்தும் அதை மனக்கருத்தாகத்தான் புரிந்து கொள்வீர்கள்.

3. அரைகுறையாக ஒரு ஞானியின் கருத்தை நம்பும் போது, உங்கள் மனக் குறைகள் உங்களுக்கு நிறை போலத் தெரிய ஆரம்பிக்கும். அகங்காரம் உயிர் பெறும்.

4. ஞானியின் கூற்றை முழுமையாக நம்பினால் மாத்திரமே சத்தியம், சத்தியமாக உங்களை வந்து சேரும். இல்லையென்றால், சத்தியம் சாதாரண மனக்கருத்தாகவே உங்களுக்குள் நுழையும்.

5. மனக்கருத்தைப் பெற்று அகங்காரத்தை வளர்க்க, ஞானிகள் தேவையில்லை. வீதியில் விற்கப்படும் சில தரம் கெட்டபுத்தகங்களே போதும். தரம் குறைந்து பேசும் சில மேடைப்பேச்சாளர்களின் பேச்சுக்களே போதும்.

6. சத்தியத்தை முழுமையாக நம்பினால் மாத்திரமே அது உங்களுக்குள் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.

சூஃபிகளைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? நம் சித்தர்கள் மாதிரி, ஞானத்தைத் தேடி நாடோடிகளாய் அலைபவர்கள். அவர்கள் கண்டடைந்த ஞானத்தை மற்றவர்களுக்கும் எடுத்துச்சொல்வார்கள்.

பிஸ்தான் என்கிற நகரத்தில் பயாசித் என்ற சூஃபி ஞானி ஒருவர் இருந்தார். சூஃபி ஞானிகளிலேயே மிகவும் புகழ்பெற்றவர் இவர்தான்.

ஒருநாள் அந்த நாட்டு அரசர், பயாசித்தின் சீடராக விரும்பனார். அரசரே நேரில் வந்து அனுமதி கேட்டார். அரசர் அனுமதி கேட்கும்போது இல்லை என்று யாரால் சொல்ல முடியும்?

அந்த அரசருக்குச் சீடனாவதற்கு எந்தத் தகுதியும் கிடையாது என்கிற உண்மை அந்த சூஃபி ஞானிக்கும் தெரியும். என்றாலும் அந்த உண்மையை எப்படிச் சொல்ல முடியும்?

அரசரின் தகுதியின்மையை நேரடியாக எடுத்துச் சொல்வதைவிட, ஏதாவது ஒரு சம்பவத்தின் மூலம் உணர்த்திவிடலாம் என்று முடிவுசெய்தார் அந்த சூஃபி ஞானி.

"மன்னா, நாட்டில் ஞானிகளுக்குப் பஞ்சமில்லை. நிறைய பேர் சடையும் தாடியுமாய் அலையும் போது, என்னை நீங்கள் நாடி வந்தது ஏன்? நான் மிக மிகச் சாதாரணமானவன் ஆயிற்றே!" என்றார் அந்த சூஃபி ஞானி.

"ஞானியே, நீங்கள் மிக நல்ல மனிதர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால்தான் உங்களைத் தேடி வந்தேன்" என்றார் அரசர்.

"என்னைக் கொஞ்சம் உன்னிப்பாகக் கவனித்துப் பாருங்கள். அப்புறம் ஒரு முடிவுக்கு வாருங்கள்" என்றார் சூஃபி ஞானி.

சில நாட்கள் கழித்து, அந்த அரசர் காட்டுக்கு வேட்டையாடச் சென்றார். அப்போது பயாசித், ஒரு சிறிய ஏரிக்கரையில் உட்கார்ந்திருப்பதைக் கண்டார்.

Sadhguru sitting

ஞானத்தையும்
ஞானிகளையும்
தொடக்கத்தில்
ஆராய்ச்சி
செய்யலாம்,
தவறில்லை.
தொடர்ந்து ஆராய்ச்சி
செய்வதுதான்
மகா தவறு. அதனால்
பிரயோஜனம்
ஏதுமில்லை.

பயாசித் மட்டும் தனியே உட்கார்ந்திருந்தால் பரவாயில்லை. கூடவே இன்னொரு பெண்! அந்தப் பெண்ணும் ஒரு டம்ளரில் ஏதோ ஒன்றை ஊற்றி அவரிடம் கொடுத்துக்கொண்டிருந்தாள். என்ன அது?

அரசர் குழம்பிப் போனார். 'ஆஹா அவரை எவ்வளவு பெரிய ஞானியாக எண்ணிக் கொண்டிருந்தேன்! ஏரிக்கரையோரம் பெண்ணோடு உல்லாசமாக அல்லவா இருக்கிறார்! நல்லவேளை இப்போதாவது அவரைப் பற்றி நேரடியாகவே பார்த்துத் தெரிந்து கொள்ள முடிந்ததே! இனிமேல் அவரின் சீடராக ஆகக்கூடாது என்று முடிவு எடுத்தார்.

ஆனால் உண்மையில் நடந்தது என்ன? அந்த
சூஃபி ஞானியோடு இருந்த பெண், அவருடைய
சகோதரிதான். பயாசித்துக்கு அவர் ஊற்றிக்
கொடுத்தது வெறும் தண்ணீர்தான்.

அருகில் வந்து பார்த்தபின் உண்மையை உணர்ந்த அரசர், "குருவே அவசரத்தில் உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு விட்டேன். என்னை நீங்கள் சீடராக ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்று கெஞ்சினார். "என்னுடைய சீடராவதற்கு உனக்கு எந்தத் தகுதியும் இல்லை" என்று சொல்லி அனுப்பிவிட்டார் ஞானி.

ஏன் இந்தக் கதை? நம்பிக்கை வைத்து செயல்பட வேண்டிய இடத்தில், தவறாக ஆராய்ச்சி செய்யக்கூடாது என்பதைச் சொல்லத்தான்.

'ஏன்? எதற்கு?' என்கிற கேள்விகளை எழுப்புவது அறிவின் அடிப்படையான அம்சம்தான். அதற்காக எடுத்ததற்கெல்லாம் வினா எழுப்பிக் கொண்டிருந்தால், உங்களிடம் இருக்கும் நம்பிக்கை வற்றிப் போய் வறண்ட நிலம் போல ஆகிவிடுவீர்கள்.

'வெறும் நம்பிக்கை, அறியாமையில் அல்லவா நம்மைத் தள்ளிவிடும்?. கேள்விகளைக் கேட்காமல் விட்டுவிட்டால், உண்மையை எப்படித்தான் அறிந்து கொள்ளவது?' என்று கேட்கிறீர்களா? இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியும் தகவல்கள் உங்கள் ஊனக் கண்களினால் (மனக்கண்களால்) நீங்கள் தெரிந்து கொண்டவை.

உங்கள் ஊனக்கண்களைத் தாண்டி உணர்வுபூர்வமாகப்பார்க்க ஆரம்பியுங்கள். பிரபஞ்சத்தின் பிரமாண்டத்தைப் பார்த்துப் பிரமிப்பீர்கள். பிரபஞ்சமே புதிராகத் தோன்றும்.

பிரபஞ்சம் எவ்வளவு புதிர் நிறைந்ததோ, அதே அளவுக்குப் புதிர்ப்பெட்டகமாக இருப்பது உங்கள் மனம். உங்கள் மனதில் பயணம் செய்யுங்கள்.

உங்கள் மனதைப் பற்றி நீங்கள் அறியும் உண்மைகள்தான் நிரந்தரமானவை. மற்றவையெல்லாம் தற்காலிகமானவை. தற்காலிகமானதைப் பெறுவதற்காக நிரந்தரமானதை இழப்பவன் முட்டாள்.

நம்புங்கள், நம்புங்கள், நம்புங்கள்! நம்பிக்கைதான் வாழ்க்கை! நம்பிக்கைதான் எல்லாம்!

இல்லையெனில், நம்பாதீர்கள்!

நீ ர ந் த ர ம்உங்கள் மனதைப் பற்றி நீங்கள் அறியும் உண்மைகள்தான் நிரந்தரமானவை. மற்றவையெல்லாம் தற்காலிகமானவை!

அரைகுறையாக நம்பி, அரைகுறையாகப் புரிந்துகொண்டு, 'அந்த ஞானி இப்படித் தான் சொன்னார்... அவர் சொன்ன கருத்துகளிலேயே இதுதான் சரி. எனக்குப் பிடித்தது. அவர் ஞானிதான்... அதற்காக அவர் சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியுமா? அந்த ஞானி அதன் மூலம் என்ன சொல்லவரார்னா?' என்று வெட்டி வேதாந்தம் பேசி, உங்கள் பேச்சைக் கேட்டவர் 'அந்த ஞானியால்தான் இவர் இப்படி லூசு மாதிரிப்பேச ஆரம்பித்துவிட்டார்' என்று நினைத்து, ஒரு ஞானியை மற்றவர்கள் இழக்க நாம் காரணமாக இருந்துவிடக்கூடாது.

நம்பினால் 100% நம்புங்கள். வெட்டியாகப் பேசமாட்டீர்கள். வெற்றியை நோக்கி நடக்க ஆரம்பத்துவிடுவீர்கள்!

சரணாகதி...

மரத்தடியிலிருந்த ஞானியிடம் வரம் கேட்டு வந்த குடும்பஸ்தரிடம், "காட்டுக்குள் வடக்கு நோக்கிப் போ. ஒரு பெரிய குகை காண்பாய். நீ விரும்புவது அங்கேயிருக்கிறது" என்றார்.

அவர் சொன்னதை நம்பிச் சென்றவர்....

அங்கே கொட்டிக் கிடந்த வெள்ளிச்சாமான்களை அள்ளிக்கொண்டு வந்து நன்றி சொன்னார். ஞானியோ "நாளை இன்னும் கொஞ்சம் தூரம் செல்" என்றார்.

நம்பிச் சென்றவர் பொற்காசுகள் நிறைந்த இன்னொரு குகையைக் கண்டுபிடித்து, அதை அள்ளிக்கொண்டு வந்து மீண்டும் நன்றி சொன்னார்.

'இன்னும் முன்னேறிச் செல்!' என்றார் மீண்டும்.

இம்முறை வைரங்கள் நிறைந்த குகையைக் கண்டு, வேண்டிய மட்டும் அள்ளிக்கொண்டு வீடு திரும்பும் போது குடும்பஸ்தருக்கு புது யோசனை பிறந்தது...

"இவ்வளவு பொக்கிஷங்கள் இருக்குமிடம் தெரிந்தும் ஞானி இவற்றைச் சீந்தாமல் மரத்தடியில் நிம்மதியாக இருக்கக் காரணமானது எது?" என்ற கேள்வி பிறந்தது.

இம்முறை ஞானியிடம் நன்றி சொல்லாமல் அவர் காலடியில் விழுந்தார். “உங்களிடமிருக்கும் பொக்கிஷங்களைத் தாண்டிய அந்த ஏதோ ஒன்று எது? அது எனக்கு வேண்டும்" எனச் சொல்லி ஞானியிடம் சரணடைந்தார்.

  • நமக்குள்ளிருக்கும் பொக்கிஷங்களின் பொக்கிஷத்தைக் கண்டுகொள்ளவே ஒவ்வொருவரும் முயற்சிக்கிறோம். அதற்குச் சரணாகதி ஓர் எளிய வழி.
portrait

தெய்வப் படத்தை
வணங்குவதாய் சொல்லி
சரணாகதி நிகழாமலே
காலந்தள்ளலாம்.
மனிததெய்வத்திடமும்
தெய்வ மனிதனிடமும்
சரணாகதி நிகழாமல்
காலந்தள்ள முடியாது.
மனிததெய்வம் - மனிதன்
தெய்வமனிதன் - ஞானி

அது எல்லாவற்றையும் ஆண்டு
அனுபவித்தப் பின் நிகழலாம். இல்லை,
வெறும் பக்தியால், முழுஞானத்தால்,
புரிந்துகொள்ளுதலால் என எப்படி
வேண்டுமானாலும் நிகழலாம். எல்லா
தியானமுறைகளும் எல்லா போதனைகளும்
முயற்சிப்பது ஒரே ஒரு நிகழ்வை
நிகழ்த்தத்தான். அது உங்களுக்குள்
சரணாகதியைப் பிறக்கச் செய்வதே!

* ‘என் உடலும் தியானத்திற்கு வளையாது.
என் மனமும் தியானத்தால் அடங்காது .
ஆனால், எனக்கு ஆன்மீகத்தில முழு
நம்பிக்கை உண்டு' என்று கூறும்
மனிதருக்குச் சரணாகதிதான் எளிய வழி.

* ஆழ்ந்த அன்பும் நிறைந்த மரியாதையும்தான் சரணாகதிக்கு மிக மிகத் தேவையான அடிப்படை அம்சங்கள்.

* துக்கத்தைத் தாண்டி,
கவலையில்லாத ஆனந்த வாழ்விற்கு
துரிதமாக அழைத்துச் செல்லும்
ராக்கெட்தான் சரணாகதி.

* சரணாகதி வெறும் உதட்டிலிருந்து
பிறக்கக்கூடாது.
உள்ளத்தின் ஆழத்திலிருந்து
உணர்வுபூர்வமாகப் பிறக்க வேண்டும்!

சரணாகதி, அதாவது “என்னிடம் உன்னை ஒப்படைத்து விடு! நான் பார்த்துக்கொள்கிறேன்'' என்ற நம்பிக்கை எல்லா மனிதருக்கும் வாழ்வின் சில நேரங்களில், ஏதோ ஒரு இயலாத சூழ்நிலையை தாண்டி வர நிச்சயம் தேவைப்படுகிறது.

★ யாprojectிருக்க பயமேன்? ★ என் மீது உன் கவலைகளையெல்லாம் இறக்கி வைத்துவிடு! ★ பயம்வேண்டாம், ‘நாம் பார்த்துக் கொள்வோம்.

  • எல்லா மதங்களிலும் இதுபோன்ற மனதுக்கு மருந்திட்டு இதமளிக்கும் வாசகங்கள் உருவானது சரணாகதியின் அடிப்படையில் தான்.

ராமகிருஷ்ணர் வாழ்வில் நிகழ்ந்த ஒரு அருமையான சம்பவம். கிரிஷ் சந்திரகோஷ் என்ற பக்தர் ராமகிருஷ்ணரை, குருவாக பூர்ண விருப்பத்தோடுக் ஏற்றுக்கொண்டு விட்ட நேரம் அது.

கிரிஷ், "இதற்கடுத்து என் வாழ்வில் நான் செய்ய வேண்டியது என்ன?" என்று ராமகிருஷ்ணரிடம் கேட்டார்.

ராமகிருஷ்ணர், "நீ வாழும் உலகம், இறைவன் என்ற இரண்டையுமே வைத்துக்கொள். தொடர்ந்து இறைவனை காலையும், மாலையும் நினைத்துக் கொண்டிரு.

பின் இறைவன், உலகம் இதில் ஏதாவது ஒன்று எளிதாக நழுவிவிடும். நடக்க வேண்டியது நடக்கும்" என்றார்.

"சாப்பிடுவது! உறங்குவது! உடை பராமரிப்பது போன்ற உடல் தேவைகளையே நான் ஒழுங்காகக் கவனிப்பதில்லை.

இதில் காலையும் மாலையும் இறைவனை நினை என்றால் அது நடக்கிற காரியமா? கட்டாயங்களுக்குக் கட்டுப்படுவது எனக்குச் சாத்தியப்படாத ஒன்றாயிற்றே" என யோசித்து அதை எப்படி குருவிடம் சொல்வதென தயங்கிக் கொண்டிருந்தார் கிரிஷ்.

கிரிஷ் யோசிப்பதற்குப் பதிலாக, பேசியிருந்தால் என்ன பதில் தர வேண்டுமோ, அந்தப் பதிலை ராமகிருஷ்ணர் சொல்ல, சுற்றியிருந்தவர்களுக்குக் குழப்பம், கிரிஷ்க்கு சந்தோஷம்....

ராமகிருஷ்ணர், "சரியப்பா. காலையிலும் மாலையிலும் இறைவனை நினைப்பது உனக்கு இயலாத காரியம்தான்.

அதனால் உணவருந்துவதற்கு முன் ஒரு முறை, உறங்கச் செல்வதற்கு முன் ஒரு முறை இறைவனை நினைக்க முயற்சி செய்யப்பா!" என்று கருணையும் சாந்தமும் பொங்கும் குரலில் பேசினார்.

ச ர ணா க திசரணாகதி நிகழாதவரை மனிதரின் கடவுளைத் தேடி அலைவான். சரணாகதி நிகழ்ந்த கணமே மனிதனை தேடி கடவுள் ஓடி வருவார்!

"நீதிமன்றத்தில் வழக்கு இழுத்தபடி இருக்கிறது. என்னுடைய சொந்தக் கவலை, பதட்டம் எல்லாம் சேர்ந்து அலைக்கழிக்க, சில நாட்களில் காலை உணவு பத்துக்கு மேல் மதிய உணவு மணி ஐந்துக்கும் மேல் என்று சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்.

சதா கவலைகளால் அலைபாயும் மனதைக் கொண்டு சாப்பிடுகிறேன் என்ற பிரணஞ்யே இல்லாமல் சாப்பிடும் நானெல்லாம் இறைவனை சாப்பிடும் முன், தூங்கும் முன் மறக்காமல் நினைப்பது சாத்தியமா?" என்று கிரிஷ் யோசிக்க யோசிக்க...

ராமகிருஷ்ணர் அன்பு கலந்த புன்சிரிப்போடு, "சரி கிருஷ்ணா. உன்னால் இதுவும் முடியாது என்று சொல்ல நினைக்கிறாய்.

நல்லது! உன்னால் முடியவில்லை.

அதனால் என்னிடம் ஒப்படைத்து விடு. மற்றதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று நம்பிக்கை தரும் குரலில் கூறினார்.

"ஆஹா! இது எவ்வளவு சுலபம்.

எனக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. எல்லாவற்றையும் குருதேவர் பார்த்துக் கொள்வார். நல்லதும் கெட்டதும் என்னைச் சுற்றி நடப்பது அவரின் ஆன்மீக சக்தியின் வழிநடத்துதலால்தான். எனக்கு இனி கவலையில்லை" என்று கிரிஷ் சந்தோஷப்பட்டார்.

தன்னை ஒப்படைப்பது என்பது விளையாட்டு விஷயம் அல்ல.

ஒரு நாளைக்கு இரண்டே இரண்டு முறை இறைவனை நினைப்பது கடினம். இதுபோன்ற வலையில் நான் சிக்கமாட்டேன் என்று நினைத்த கிருcontrol ராமகிருஷ்ணரிடம் அன்பின் வலையில் சிக்கிக் கொண்டார்.

அதன்பின் ராமகிருஷ்ணரை அவர் நினைக்காத நிமிடமே இல்லை. அவரை முழுமையாக ராமகிருஷ்ணரின் ஆனந்த சக்தி ஆட்கொண்டுவிட்டது என்று பின்னாளில் கண்ணீர் மல்கக் கூறியிருந்தார்.

கிரிஷின் வாழ்க்கையைப் பற்றி தெரிந்துகொண்ட Mr. அனுநிதன் "நானும் ஒரு வாழும் ஞானியைச் சந்திக்க வேண்டும் சரணாகதி அடைய வேண்டும். ஆனந்தத்தில் நிரம்ப வேண்டும்" என்ற விருப்பம் எழ, வாழும் ஞானிகளைத் தேடி அலைந்திருக்கிறார்.

ஆற்றல்அகங்காரத்தில் ஆழ்ந்து வேலைசெய்யும் ஆற்றல் பெற்றது 'சரணாகதி!'.

கடைசியில் வாழும் ஞானி ஒருவரைக் கண்டுகொண்டார். அவரிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்துவிட்டு நிம்மதியாகிவிடுவது என்ற முடிவெடுத்து அவரின் ஆஸ்ரமத்தில் தங்கியிருக்கிறார். குருவிடம் தன் விருப்பத்தைக் கூறி சரணாகதி ஏற்றுக் கொள்ளக் கூறியிருக்கிறார்.

ஞானி இதைக் கேட்டுச் சிரிக்க ஆரம்பித்துவிட்டார். அநுநிதனுக்குக் குழப்பம், "ஏன் இவர் சிரிக்கிறார்?"

"கிரிஷ், ராமகிருஷ்ணரின் ஆனந்த
சக்தியால் ஆட்கொள்ளப்படுவதற்கு நடுவில்
பட்ட பாடெல்லாம் தெரியுமா?

அவருடைய இன்ப - துன்பத்தைக்கூட
அதன் பிறகு அவரால் ஆராய முடியாது. அவர்
வாழ்வில் எது நடந்தாலும் அது குருவின்
ஆசியால் தன்னுடைய நலனுக்காகத்தான்
என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஒருமுறை கிருrender[?] கிருஷ் 'நான் இதைச் செய்கிறேன்' என்று சொன்ன போது, ராமகிருஷ்ணர் உன்னையே என்னிடம் ஒப்படைத்தபின் நீ எப்படித் தானாக செயல்படமுடியும்? இறையருள் இருந்தால் இறைவன் அனுமதித்தால் செய்வேன் என்று கூற வேண்டும். புரிந்ததா? என்றிருக்கிறார்.

அதற்குக்கூட கிரிஷ்க்கு சுதந்திர மில்லை. இதெல்லாம் தெரிந்த பின்தான் இந்த முடிவு எடுத்தாயா?" என்று கேட்டிருக்கிறார்.

அனுநிதன் தயங்கி "ஆம்" என்றிருக்கிறார்.

ஆனால், அதன்பின் அங்கே ஒரு
வாரம்கூட முடியாமல் ஓடி வந்து விட்டார்.
அதன் பின்தான் பார்க்க வந்தார்.

அனுநிதனிடம், "மன அகங்காரத்தில் கள்ளத்தனத்திற்கு அளவே இல்லை.

அதற்கு வலிக்காமல் ஏதாவது ஒரு வழி
தோன்றினால் உடனே அதுசரி என்று
காண்பித்து விடும்.

portrait

எது சரணாகதி? உறவுகளோடு உராய்வில்லாமல், உணர்ச்சிகளின் கொந்தளிப்பில்லாமல் உற்சாகக் குறைவேயில்லாமல், இருக்கும் நிலை சரணாகதி நிலை. சரணாகதி நிகழ வழி என்ன? மேற்குறிப்பிட்ட சூழ்நிலைகளிலெல்லாம் வெகு நிதானத்தோடு இருக்க முயற்சி செய்யுங்கள். நிதானம் பெற உங்களுக்கு என்னென்ன மாற்றங்கள் நிகழ வேண்டுமோ அவ்வளவையும் நிகழ்த்துங்கள், சரணாகதி நிகழும்!

கொஞ்சம் அகங்காரத்தில் வலித்தால்கூட அந்த வலிக்குக் காரணமாயிருந்த இடத்தை விட்டே ஓடி வர வைத்துவிடும்.

ராமகிருஷ்ணர் கிரிஷின் அகங்காரம் கரையத் தேர்ந்தெடுத்துக் கொடுத்த டெக்னிக்தான் சரணாகதி.

சரணாகதி துவக்கத்தில் கடினம் போலத் தோன்றும். காரணம் - அகங்காரம் கரைய ஆரம்பிப்பதுதான். பயந்து விடக்கூடாது.

ஒரு வாழும் ஞானியின் செயல், சிரிப்பு, பேச்சு எல்லாமே மனிதரின் அகங்காரத்தை அழிக்கும் நோக்கில்தான் இருக்கும்.

கடினமான காலத்தைத் தாண்டினால், கிரிஷ் போல ஆனந்த சக்தியால் ஆட்கொள்ளப்படுவது சாத்தியம்தான்'' என்று சொல்லி முடித்தேன்.

சரணாகதி என்பது ஒரு அற்புதமான டெக்னிக்.

அதுவும் மனதோடு சேர்ந்து உடலும் பாதிக்கப்பட்டிருக்கும் நவநாகரீக மனிதருக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

அனுநிதனுக்கு உண்மை புரிந்தது. அதன்பின் அந்த வாழும் ஞானியை முழுமையாகப் புரிந்துகொண்டார்.

சரணாகதி உங்களின் ஒரு அங்கமாக மாறிப்போன அகங்காரத்தை எளிதாய் கலைத்துவிடும்... நீங்கள் அதைப்பற்றி புரிந்துகொண்டால்!

அர்த்தமுள்ள சம்பவம்...

ஞானமடைவது மிக எளிது என ஞானிகள் சொன்னால் மனிதர்கள் புரிந்துகொள்ள தடுமாறுகிறார்கள். ஏன்? Dr. நிட்டி இலவச கண்மருத்துவ முகாமில் கண்பார்வை இழந்தவரிடம் "சிறியதாக ஆப்ரேஷன் செய்தால் உன்னுடைய பல வருட குருடு சரியாகிவிடும். இனி கைத்தடி இல்லாமல் நடக்கலாம்" எனச் சொன்னதும், குருடர்.

"ஆப்ரேஷனுக்கு அப்புறம் என்னால் பார்க்க முடியும், என நீங்கள் சொல்வது புரிகிறது. ஆனால் கைத்தடி இல்லாமல் நடக்க முடியும் எனச் சொல்வதுதான் புரியவேயில்லை" எனச் சொன்னராம்.

  • அக்குருடருக்குக் கைத்தடியானது உடலின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. இதேபோல் துக்கம் மற்றும் இயலாமை நிறைந்த மனமானது மனிதரின் ஒரு அங்கமாக இருப்பதாக நம்புவதே தடுமாற்றத்தின் மூலகாரணம்.

நல்லதெல்லாம் நிகழ்வது இறைவனால்...

கெட்டதெல்லாம் நிகழ்வது மனிதமனத்தால்!

“'நான் மாட்டேன் போ!'” என ஒரு குட்டி மீன் அடம்பிடித்து நிற்க முயற்சித்தாலும் ஓடும் நதியில் வாழும் அது, நதியின் போக்கில் இழுத்துச் செல்லப்படும்.

மீறி அந்தக் குட்டி மீன் நிற்க முயற்சித்தாலும் தேவையில்லாமல் கஷ்டப்பட வேண்டியிருக்கும். நதியை எதிர்க்கும் மீன் தடுமாறும்! தூக்கியெறியப்படும்! தான் தண்ணீரால் துஷ்பிரயோகப்படுத்தப்படுவதாக அது நினைத்துக்கொள்ளும்! தன்னைச் சுற்றியுள்ள தண்ணீர் துளிகள் தன் சுதந்திரத்தைப் பறிப்பதாக நம்பித் தொலைக்கும்!

கடவுள் எனும் இயற்கை சக்தி,

நதியைவிடப் பல மடங்கு வேகமானது, சூட்சுமமானது.

மீனின் எண்ணங்கள் விட பல மடங்கு சூட்சுமமான மனம் கொண்ட மனிதர்கள், இயற்கையிலிருந்து புரிந்திருக்கிறார்கள்.

இயற்கையின் போக்கில் அழைத்துச் செல்லப்படுவதைவிட, தன் கற்பனைகளின் படி, நதிபோல் ஓடும் வாழ்க்கையின் எதிர்த் திசையில் செலவதையே விரும்புகிறார்.

விளைவு - தான் தடுமாற்றப்படுவதாகவும் தன்னைச் சுற்றியிருப்பவர்கள் தன்னைத் துஷ்பிரயோகம் செய்வதாகவும் தன் சுதந்திரத்தைப் பறிப்பதாகவும் நம்பித் தொலைக்கிறார்! நதியின் போக்கில் தன்னைச் சமர்பித்துவிட்ட நதிக்குப் போகும் வழியெல்லாம் கொண்டாட்டமே! நதியின் வேகத்தில் செல்வது தொடர்ந்து ராட்டினத்தில் இருப்பது போல சுகமாக இருக்கும்.

கெட்டது-

நீங்கள் எதிர்க்க

நிகழ்வது!

இயற்கையின் போக்கில் வாழ தன்னை சரணாகதி செய்துவிட்ட மனிதர், தன்னை வாழ்வெனும் இன்ப நதியின் ஒரு துளி போலவே பாவித்துக் கொள்வார். ஆனந்தமாக இருப்பார்.

ஒரு உண்மை :

வாழ்வென்னும் நதியை

எதிர்த்தாலும் எதிர்க்காவிட்டாலும் நீங்கள் இழுத்துச்செல்லப்படுவீர்கள். இயற்கை விதி.

ஒரு தியான விதி:

நல்லது இறைவனால் நிகழ்வது. கெட்டது அந்த நல்லவற்றை நம் அறியாமையால் எதிர்க்கும்போது நிகழ்வது.

நதியின் போக்கில் செல்லும் மீனைப் போல் வாழ ஆரம்பியுங்கள்.

கிடைக்காததையெல்லாம் கடவுள் கொடுத்ததுதான் என் உணர்ந்து வாழுங்கள். அப்படி வாழ்ந்துவிட்டால் நல்லதும் கெட்டதும் அசைக்காத ஆனந்த நிலையை அடைவீர்கள்.

ஒரு ஞானக்கருத்து:

வாழ்வு நம் கையில் இல்லை.

ஆனந்தம் நம் கையில் இல்லை.

எதிர்ப்பதும் துக்கப்படுவதும்தான்

நம் கையில் இருக்கிறது.

அப்புறமென்ன! கையை விரித்து

நதிக்குள் குதித்து விட வேண்டியதுதானே!

நல்லது நிகழ...

நிகழும் நல்லதை

நிகழவிட்டால்

போதும்!

Nithyananda