ஞான குரு
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
விவேகானந்தரிடம், "எல்லாவற்றையும் ஆதாரத்தோடு பேசுகிறீர்களே. கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபிக்க உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது?" என வம்பிழுக்கும் தொனியில் கேட்டார் ஒருவர்.
கணீர் குரலில் விவேகானந்தரிடமிருந்து பதில் வந்தது, "கடவுள் இருக்கிறார் என்பதை இதுவரை ஒருவராலும் நிரூபிக்க முடியாததே கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஆதாரம்!" கேள்வி கேட்டவர் இந்தப் பதிலால் ஆடிப்போனார்.
சில நிமிடங்கள் தாமதித்து கேட்டார்:
"எப்படி? விளக்கமாகச் சொல்லுங்களேன்!"
"ஒருவேளை கடவுள் இருக்கிறார் என்பதை அறிவியல் நிரூபித்து விட்டால் அறிவியல் கடவுளைவிட பெரிய விஷயமாகிவிடும். அறிவியலால் நிரூபிக்கப்படுமளவுக்கு விளையாட்டுப் பொருளல்ல கடவுள்.
கடவுள் பெரியவர். பிரமாண்டமானவர். கடவுள் இருப்பதை நிரூபிக்க முடியாததே, கடவுள் இருப்பதற்கான நிரூபணம்" எனச் சொல்லி முடித்தார் விவேகானந்தர்.
- ஒரு ஞானகுருவால்தான் இதுபோன்ற சிக்கலான கேள்விகளுக்குக் கூட நயமாகவும் எளிமையாகவும் அதே நேரத்தில் நறுக்கென்றும் சொல்ல முடியும். புதிர் கேள்விகளுக்குப் புதுப்புது பதிலளிப்பதற்காக மட்டும் ஞானகுருமார்கள் பிறப்பெடுக்கவில்லை.
வம்பிழுக்கும் மனிதரைக் கூட
அன்பொழுகும் ஆனந்த குணமுடையவராக
மாற்றப் பிறப்பெடுத்தவர்கள் தான் ஞான
குருமார்கள். ஞானகுருமார்களைச்
சரியாக அணுகுபவர்கள், மகானாக மாறப்
பிறப்பெடுத்த மனிதர்கள். நீங்கள்???

- ஒரு சீடரால்,
குருவின் வார்த்தையை அப்படியே நம்பமுடியும்.
குருவின் நேரத்தையோ, தன்
நேரத்தையோ சந்தேகங்களில்
வீணடிக்கமாட்டார்.
- ஒரு பக்தரால்,
குருவின் வார்த்தைகளைக் காது கொடுத்துக் கேட்க முடியும்.
ஆனால், நம்பி ஏற்றுக்கொள்ள நேரமாகும்.
- ஒரு பார்வையாளர்,
இந்தக் குரு உண்மையிலேயே குருதானா! என்று சோதிப்பதிலேயே நேரத்தை வீணடித்து விடுவார்.
★ சீடர், பக்தர், பார்வையாளர்
என்பது குருவை நீங்கள்
அணுகும் விதத்தைப் பொறுத்தது.
பரத ரிஷியைச் சோதித்துப் பார்க்கும் நோக்கில் தர்க்கவாதி ஒருவர் வந்தார்.
தர்க்கவாதி, "எனக்கு என்ன கற்றுக்கொடுக்க முடியும் உங்களால்?" என்று கேட்டார் கர்வக் குரலில்.
பரதரிஷி, "சமுதாயம் கற்றுத்தரும்
பாடங்களைவிட அதிகமாக நான் உனக்குக்
கற்றுத் தந்துவிட முடியாது.
ஆனால் நீ கற்றுக்கொள்ள நினைத்தால் சமுதாயத்தால் கனவில்கூட கற்றுத் தர முடியாத பாடங்கள் என்னிடம் நிறைய இருக்கிறது" என்றார் தீர்க்கமான குரலில். வார்த்தை விளையாட்டு விளையாடலாம் என்று வந்த தர்க்கவாதி வார்த்தை வராமல் நின்றார்!
| போ | மற்ற |
|---|---|
| கா | குருமார்களிடம் போகாதீர்கள் |
| தீ | என்றும் சொல்லும் |
| ர் | குருமார்களிடம் போகாதீர்கள். |
| க | |
| ள் |
> ஞானக்கருத்துக்களை
> எல்லோரும் கேட்கட்டும்.
> எல்லோருக்குள்ளும் அதைக்
> கேட்கும் விருப்பம் மலரட்டும்!
>
> - அசோக சக்கரவர்த்தி.
>
> ஞானக்கருத்துக்களைத்
> படிக்காதே. குடி!
>
> - ஜென் கூற்று
>
> ☞ சிலுசிலுவென இறங்கும்
> வசீகர வார்த்தைகள் அல்ல
> ஞானக்கருத்துக்கள். அவை...
>
> 'ஞான அநுபூதி' எனும் வைரம்
> பாய்ந்த உளிகள்!
>
> தேவையற்ற தர்க்கவாதங்களைத்
> தாண்டி, திறந்தமனதோடு அவற்றைப்
> பயன்படுத்தி பார்ப்பதே
> படிப்பதைத் தாண்டிய 'குடி'த்தல்!
> செய்து பாருங்கள். அது
> உங்களை அருமையான செதுக்கும்!
பரத ரிஷியின் பதிலை எளிதாகப் புரிந்து கொள்ள உதவும் ஒரு சூஃபி கதை...
அந்த சூஃபி மத ஞானகுரு பொதுமக்களிடம் வெகு நேரம் செலவழிப்பார். சிரித்துச் சிரித்துப் பேசுவார்.
பல விஷயங்களை வெகு பிரயத்தனப்பட்டு விளக்க முயற்சிப்பார்.
ஆனால், சீடர்களை மட்டும் கண்டுகொள்ளவே மாட்டார்.
அதே சீடர், முன்பொருநாள் பக்தராக இருந்திருப்பார், அப்போது அவரிடம் வெகு நேரம் பேசியிருப்பார்.
அதே பக்தர், சீடராகிவிட்டால் அவர் அவ்வப்போது பேசுவது சில வரிகளாத்தான் இருக்கும்.
புதிதாக வந்திருந்த சீடர் ஒருவரால், "குரு ஏன் இப்படி நடந்துகொள்கிறார்?" என்பதைப் புரிந்துகொள்ளமுடியவில்லை. எனவே நேரடி விவாதத்தில் இறங்கிவிட்டார்.
சீடர், "நீங்கள் ஏன் சீடர்களோடு மிகக் குறைந்த நேரம் மட்டுமே பேசுகிறீர்கள்? நீங்கள் எங்களைக் கண்டுகொள்வது மாதிரியே எனக்குத் தெரியவில்லை. ஏன் இப்படி?" என்று கேட்டார்.
"எல்லாம் நீங்கள் உருப்படுவதற்காகத்தான்" என்றார் தீர்க்கமான குரலில்.
"அப்படியென்றால்... பொதுமக்களோடு நீங்கள் வெகு நேரம் பேசுவது!"
"அது அவர்களுடைய நலனுக்காக.
ஒன்றைப் புரிந்துகொள். நீ இங்கே வாழ்ந்தாலும் குடும்பத்தில் வாழ்ந்தாலும் ஆன்மீக வாழ்க்கை வாழ முடியும்.
| சா | சொல்ல விரும்புவது... |
|---|---|
| த் | ஆனந்தம்! ஆனந்தம்! ஆனந்தம்! |
| தி | அது |
| ய | சாத்தியம். சாத்தியம்.. சாத்தியம்... |
| ம் | எல்லோர்க்கும்... |
| நிச்சயமாய் எல்லோர்க்கும்! |
ஆன்மீகம்தான் வாழ்க்கை, ஆனந்தம்தான் எல்லை என்று முடிவெடுத்து விட்டு வந்து விடுபவர் தான் சீடராகிறார்.
ஒரு சீடருக்கு, நான் சொல்லும் வார்த்தைகளை நம்புவதும் அதை வாழ்வில் நடைமுறைப்படுத்தி பார்ப்பதும் எளிது.
நான் சொல்வது அவர் நலனுக்காகத்தான்
என்பதைப் பூரணமாக உணர்ந்துவிட்ட
காரணத்தால், அவரிடம் சில வரிகள் நான்
பேசினாலே போதுமானது.
அதை நடைமுறைப்படுத்த பல நாட்கள் தொடர்ந்து உண்மையாக அவர் முயற்சிப்பார். ஆனால் பொதுமக்களின் கதை வேறு. தங்களுடைய வாழ்வின் ஒரு பகுதிதான் ஆன்மீகம் அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்குத் தங்கள் வாழ்க்கையையே ஆன்மீக வாழ்க்கையாக (ஆனந்தமாக) வாழ முடியும் என்று புரிய வைப்பது கடினம். அவர்கள் மனம் இந்தச் சத்யத்தை நம்பாமல் கஷ்டப்படும். அதனால் தான் பக்தர்களுக்கு நிறைய நேரம் நான் செலவிட வேண்டியிருக்கிறது. பக்தருக்கு குரு கற்றுக் கொடுக்க வேண்டும்.
சீடர் என்னிடமிருந்து கற்றுக்கொள்வார். புரிந்ததா?” என்று விளக்கம் சொல்லி முடித்தார்.
சீடர், “அதெல்லாம் சரி... எங்களுக்கும்
கற்றுக்கொடுக்க நீங்கள் ஏன் நேரத்தை செலவு
செய்யக்கூடாது?” என்று கேட்டார்.

குருவைச்
சோதிப்பவர்
பார்வையாளர்.
குருவைக்
கண்டுகொண்டவர்
பக்தர்.
குருவைப்
புரிந்துகொண்டவர்
சீடர்!
ஞானி தன் சீடர்களைப் பார்த்து, “ஏ! பசங்களா... இவர் இன்னும் பக்தனாகவே இருக்கிறார். சீடனாகவில்லை... இவர் சீடராகும்வரை, இவர் இஷ்டப்படி ஆஸ்ரமத்தில் இருக்கட்டும். இவருக்கு ஆஸ்ரம விதிகளைக் கொஞ்ச காலம் தளர்த்திவிடுங்கள்” என்று கூறிவிட்டு,
நிஜத்தை நம்பமுடியாமல் கஷ்டப்படும் சீடரைக் கருணையோடு பார்த்து, “சரியப்பா... மேலே சொல்லு, உன் பிரச்சனையை” என்று காலார புல்வெளியில் நடந்து கொண்டே கேட்டு, அன்று வெகு நேரம் அவருக்காகச் செலவு செய்தார்.
ஆன்மீகத்தை...
கற்றுக்கொள்வது சுலபம்.
கற்றுக்கொடுப்பது கடினம்.
காரணம், கற்றுக்கொள்பவர் ஞானகுருவிடமிருந்து கற்றுக்கொள்ள மனதளவில் தயாராக இருப்பார். ஆனால், ஒரு பக்தருக்கு ஞானகுரு கற்றுக் கொடுக்க முயற்சிக்கும் போது - பக்தரின் மனதை கற்றுக்கொள்ள தயார்படுத்துவதிலேயே குருவின் நேரம் வீணாகிவிடும்.
கையில் வெண்ணெய் வைத்துக்கொண்டு நெய்யைத் தேடி அலைபவர் போல், உள்ளுக்குள் பேரின்பம் இருக்க, வெளியே சிற்றின்பத்தை மனிதர்கள் தேடி அலைந்தாலும்,
தேடுபவரிடம், “மனிதா! நீ தேடுவது உன்னிடம்தான் இருக்கிறது” என்று எவ்வளவு நேரம் முயன்று புரிய வைக்க முயற்சித்தாலும்.
மனித மனது புரிந்துகொள்ள முயற்சிப்பதைவிட, புரிந்துகொள்ள முடியாதது போல் நடிப்பதிலேயே காலத்தை ஓட்டிவிடும்.
மனிதர்களும், “அப்பப்பா! ஞானகுரு சொல்வதை எல்லாம் புரிந்து கொள்வதற்கே நாம் போன பிறவியில் பெருந்தவம் செய்திருக்க வேண்டும். நம்மைப் போன்றவர்களுக்கு அவ்வளவு பெரிய ஞான விஷயங்களைப் புரிந்துகொள்வது கடினம்” என்று கூறி எளிதாகத் தப்பிக்கவே முயற்சிப்பார்.
மனம் போடும் தப்புத்தாளத்திற்கேற்ப ஆடிக்கொண்டிருக்கிறோம் என்ற உண்மை பலருக்குக் கடைசி வரை தெரிவதே இல்லை.
மனம்தான் ஆனந்தத்தை அடையும் வழியைப் புரிந்துகொள்ளவிடாமல் தடுக்கிறது என்பதைப் புரிந்துகொண்டால், ஞானகுருவின் பணி எளிதாகிவிடும். சீடராக மாறுவது மனோரீதியான மாற்றம்.
ஒரு ஆஸ்ரமத்தில் தங்குவதால் மட்டுமே சீடராகிவிட முடியாது.
ஞானகுருக்களான சைதன்யர், ராமகிருஷ்ணர், ரமணரிடம் பல சீடர்கள் குடும்பஸ்தர்களாக இருந்திருக்கிறார்கள். இவர்களின் திறந்த மனம் ஞானகுருவின் வழி காட்டுதலை அப்படியே ஏற்றுக்கொள்ளும். இது போன்றவர்களின் ஆன்மீக வளர்ச்சியும் வேகமாக இருக்கும்.
ஒரு ஞானகுருவிடமிருந்து முழுப்பலனைப் பெற விரும்பினால் மனதளவில் சீடராக இருக்க வேண்டும். மற்றதை ஞானகுரு பார்த்துக்கொள்வார்.
அர்த்தமுள்ள சம்பவம்
பத்தாயிரம் துறவிகளையும் பல லட்சம் பக்தர்களையும் கொண்ட ஜென் மடாலய குருவைப் பார்க்கச் சென்ற அரசர் கேட்டார். "உங்களிடம் எத்தனை சீடர்கள் இருக்கிறார்கள்?"
ஜென் குரு சொன்னார்: "ஓ, சீடர்களா! அதிகபட்சமாக நான்கைந்து பேர் இருக்கலாம்".
சீடராவது குருவின் நேரத்தை மிச்சப்படுத்துவதைவிட, உங்களின் நேரத்தைத் தான் அதிகம் சேமிக்கும். சீடராவது குருவின் நலனுக்காக அல்ல. உங்களுக்காக. அதற்காக மனம் திறவுங்கள்.
நான் ஞானி - இதைத் தைரியமாய் உலகுக்குச் சொல்லுங்கள்!
காணாமல் போனதால் ஆட்டுக்குட்டிகளோடு வளர்ந்த சிங்கக்குட்டி ஆட்டுக்குட்டியாகிடுமா?! அது அப்படி நம்பினால்தான் அது தகுமா?
என்றாவது ஒரு நாள், தான் ஆட்டுக்குட்டிதான் என நம்பும் சிங்கக்குட்டி நிச்சயம் நீர்நிலையை நெருங்க நேரிடும். நீர்நிலையில் தன் நிலையைப் பார்க்கும். அந்த நன்னாளில் அது, 'நான் சிங்கம்' என உணர்ந்து கொள்ளும். பின் அறிவிக்கும். சிங்கமாய் வாழும்.
இதைச் சொன்னால் நம்பமாட்டீர்கள்...
நீங்கள் ஒவ்வொருவரும் ஏற்கனவே ஞானமடைந்து விட்ட ஞானிகள்.
நம்ப மறுத்தாலும் இது உண்மையே.
உண்மை மறந்து போனதால் பத்தோடு பதினொன்றாய் வாழும் நீங்கள், 'நான் சராசரி மனிதன்' என நம்பினால் அது நிஜமாகிவிடுமா?...
தியானத்தில் என்றாவது ஒரு நாள்,
உங்களின் உண்மை நிலை
தியானநிலையில் பிரதிபலிக்கப்படும்.
'நான் ஞானி' என அறிந்துகொள்வீர்கள்.
இது நெடுங்காலத் திட்டம்.
உடனடியாய் உண்மை உணர்ந்திட எளிய வழி...
ஞானம் அடையும் வரை காத்திருக்காதீர்கள்.
இன்றே ஞானத்தையும் ஆனந்தத்தையும் வெளிப்படுத்த ஆரம்பியுங்கள்.
அது உண்மையே என்பது புரியும்.
இது கம்ப சூத்திரமல்ல. சும்மா கன்னத்தில் தட்டிச் சொல்லுங்கள்.
‘இன்றிலிருந்து நான் ஞானி.
இதை நான் கொண்டாடப் போகிறேன்!’ தைரியமாய் இதைச் செய்யுங்கள்.
ஞானியாய் வாழ்வீர்கள்.
உணர்ந்துகொள்ளுங்கள்...
உலகுக்குச்சொல்லுங்கள்.
‘ஞானி’ என்று!
இதுவரை படித்தது புதிராய் தெரிந்தால், இன்னும் ஆட்டுக் குட்டியாகவே நீங்கள் இருக்கிறீர்கள் எனத் தெரிந்து கொள்வீர்கள்.
இருந்தாலும், நீங்களும் சிங்கக்குட்டி என்பது மாற்ற முடியாத உண்மை.
இந்த புரட்சி கருத்துக்கள் உங்களை புரட்டிப் போடுமளவுக்கு உள்வாங்குங்கள்.