குருவா,
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
சிஷ்யனா?
★ வா!
அருகில் வா!
என் அருகில் வா!
என்னோடு கலந்துவிட வா!
நான் நீயாகிவிட, நீ நானாகி விட வா!
- என்ற நிலையில் உங்களுக்குள் இருக்கும் ஆத்மா காத்துத் கொண்டே இருக்கிறது. அழைப்பை ஏற்பதும் உதாசீனப்படுத்துவதும் உங்கள் கையில்.
★ உங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கும் ஆத்மாவை நீங்கள் திரும்பிப் பார்க்க, நீங்கள் ஆத்மாவில் கலக்க உதவுவதுதான் ஒரு குருவின் பணி.
★ குருவின் பணியை முழுமையாக அனுபவிப்பவர் சிஷ்யன். ஒரு குருவின் நோக்கம் தனிமனிதருக்குள் ஆனந்தத்தை மலர வைப்பதே.
சேலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவர்களோடு கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தேன். அப்போது திடீரென ஒரு இளைஞர் எழுந்து கேள்வி கேட்க ஆரம்பித்தார். கேள்வி கேட்பதன் மூலம் என்னை மடக்கிவிட வேண்டும் என்பது அந்த இளைஞரின் நோக்கம்.
அந்த இளைஞர் எழுந்து, கேள்வி கேட்ட பாணியைப் பார்த்தவுடனேயே, அவர் நோக்கத்தைப் புரிந்துகொண்டேன்.
"நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா?" அந்த இளைஞர் என்னிடம் கேட்ட கேள்வி இதுதான்.

உண்மையான
குருவிற்கு
எந்தவொரு
காலத்திலும் பஞ்சம்
இருந்ததே இல்லை,
ஆனால்,
உண்மையான
சீடர்களுக்குத்தான்
எல்லாக்
காலங்களிலும் பஞ்சம்
இருந்து கொண்டே
இருக்கிறது.
"விவேகானந்தர், இராமகிருஷ்ணரிடம் கேட்டதைப் போல, நீயும் என்னிடம் கேட்கிறாயா?" என்று சிரித்துக் கொண்டே அந்த இளைஞரிடம் கேட்டேன்.
"ஆமாம்" என்றார் அந்த இளைஞர்.
"கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா?" என்று
விவேகானந்தர் இராமகிருஷ்ணரிடம் கேட்ட
போது, "நான் பார்த்திருக்கிறேன். உனக்கும்
காட்டுகிறேன். கடவுளைக் காண வேண்டும்
என்றால் என் பின்னாலேயே வா!" என்று
சொன்னார் இராமகிருஷ்ணர்.
குருவின் வார்த்தையின் மீது எந்தவிதமான
சந்தேகமும் கொள்ளாமல், அவரையே பின்
தொடர்ந்தார் விவேகானந்தர்.
"நான் கடவுளைப் பார்த்திருக்கிறேன். என்னுடைய இந்த இரண்டு கண்கள் மூலமாகவும் அதைத் தாண்டியும் நான் இறைவனைப் பார்த்து, அனுபவித்து அனுபூதி அடைந்திருக்கிறேன்" என்று நான் கூறும் வரை மாணவரின் முகத்தில் எவ்வளவு பரபரப்பூட்டும் கேள்வி கேட்டேன் பார் என்ற கர்வம் இளம் சிரிப்போடு ஓடிக்கொண்டிருந்தது.
அடுத்து நான் கேட்ட கேள்வியில்தான் இளைஞர் கொஞ்சம் ஆடிவிட்டார். "வா என்னோடு! இறைவனைக் காண்பக்கிறேன். நீ வரத் தயாரா?" கர்வம் கலைந்து, இளைஞரைக் கலக்கம் பற்றிக்கொண்டது. அதிர்ச்சி தாங்காமல் கூட்டத்தோடு கூட்டமாக நகர்ந்து மாயமாய் மறைந்துபோனார்.
நாம் எல்லோருமே எதிரிலிருப்பவரின் தகுதியையும் பக்குவத்தையும் ஞானத்தையும் திரும்பத் திரும்ப உரசிப்பார்க்கிறோம். நம் குரு மீது, நமக்கு இருக்கும் சந்தேகம்தான் நம்மை மீண்டும் மீண்டும் உரசிப் பார்க்க வைக்கிறது. ஆனால் நம்முடைய தகுதியையோ, பக்குவத்தையோ ஒருமுறைகூட நாம் அலசி ஆராய்வதில்லை.
உண்மையான குருவிற்கு எந்த ஒரு காலத்திலும் பஞ்சம் இருந்ததே இல்லை. ஆனால், உண்மையான சீடர்களுக்குத்தான் எல்லா காலங்களிலும் பஞ்சம் இருந்துகொண்டே இருக்கிறது.
மற்றவர் முதுகில் இருக்கும் அழுக்கைப் பற்றிக் கவலைப்படும் நாம், நம்முடைய முகத்திலிருக்கும் கரியைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.
தகுதியான குருவைத் தேடும் நாம், தகுதியான சீடராக இருப்பதில்லை. குருவைத் தரம் பார்க்கச் செய்யும் முயற்சிகளை விட்டு, உங்களுடைய உண்மையான நிறம் பார்க்க முயலுங்கள் உபயோகப்படுத்துங்கள். பிரயோஜனம் உண்டு. நாம் உண்மையிலேயே தகுதியான சீடராக மாறும்போது கடவுள், தகுதியான குருவை நம்மிடம் அனுப்பயே தீர வேண்டும். அனுப்பியே தீருவார்.
இராமகிருஷ்ணர் உயிரோடு இருந்த போது, ஆயிரக்கணக்கானோர் அவரைப் பார்த்திருக்கிறார்கள். ஆனால் சில நூறு பேர்தான் அவரின் மகிமையையும் அவர் இறைவனின் வடிவம் என்பதையும் உணர்ந்தனர்.
பக்குவமான சீடர்களால் மட்டும்தான் குருவை உணர முடியும். எனவே நம் கவனம் முழுவதும் நம்மைச் செம்மைப்படுத்திக் கொள்வதில் இருந்தாலே போதும். குரு தாமாகவே வந்து வாய்ப்பார்.
"கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா?" என்று என்னிடம் கேட்ட மாணவருக்கு, உண்மையிலேயே கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ளும் எண்ணமோ, சிந்தனையோ இல்லை.
| ப | உண்மையான குருவிற்கு எந்த ஒரு காலத்திலும் பஞ்சம் |
|---|---|
| ஞ் | இருந்ததே இல்லை. ஆனால், உண்மையான |
| ச | சீடர்களுக்குத்தான் எல்லா காலங்களிலும் பஞ்சம் |
| ம் | இருந்துகொண்டே இருக்கிறது! |
ஓரிரு ஆன்மீகப் புத்தகங்களைப் படித்துவிட்டு கடவுளைப் பற்றிய தேடுதலோ, சிரத்தையோ இல்லாமல், தங்களுடைய மேதாவித்தனத்தை மற்றவருக்குக் காட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள்தாம் இன்று அதிகம். இப்படிப்பட்ட மேதாவிகள் அதிகமாகிக் கொண்டிருப்பது வருந்தத்தக்கது. கடவுளைக் காணவேண்டும் என்றால், மிகப் பெரிய தியாகங்களைச் செய்ய வேண்டியிருக்கும். கடவுள் காசைக் கொடுத்தவுடன் டேபிளுக்கு வந்து சேருகிற இன்ஸ்டன்ட் காபயோ, டீயோ அல்ல.
நல்ல குருவின் தகுதியைச் சோதித்துப் பார்க்கும் முன், நாம் நல்ல சீடராக இருக்கிறோமா என்று சோதித்துப் பார்க்க வேண்டியது முக்கியம். நல்ல சீடராக இருந்தால், கல்லும் கடவுளாகி வாழ்வில் ஒளி காட்டும். இல்லை என்றால் கடவுளே நேரில் வந்தாலும். “எங்கிருந்து வருகிறாய்? உன் அடையாள அட்டையைக் காட்டு, நீ கடவுள் என்று நான் நம்புவதற்கு என்ன ஆதாரம் வைத்திருக்கிறாய்?" என்போம். கடவுள் என்பவர் நமக்குள்ளே இருக்கிறாரே ஒழிய, வெளியே இல்லை.
குருவைப் பற்றி நாம் அளவுக்கதிகமாகக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. உங்கள் சிரத்தை ஒன்றே இறைவனிடம் வழிகாட்டும். ஏனெனில், இறைவன் சிரத்தை வடிவமானவர். முழுமனதோடு நீங்கள் தேடினால் தேடியது நிச்சயம் கிடைக்கும்.
நீங்கள் ஆனந்தமாக வாழ முடிவு எடுக்காத வரை, குருவே நேரில் வந்தாலும் உங்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாது.
'ஆனந்தமாக வாழ முழுமனதாக முடிவு எடுத்துவிட்ட பட்சத்தில்', நீங்கள் தேடாவிட்டால்கூட குரு உங்களைத் தேடி வருவார். இதில் விந்தை என்னவென்றால், அப்படி முழுமனதாக முடிவு எடுத்துவிட்ட பட்சத்தில், உங்களால் ஒரு நொடிகூட சும்மா உட்கார்ந்து நேரத்தை வீணடிக்க முடியாது.
உங்களின் முடிவு, வாழ்க்கையின் முடிவையே மாற்றி விடும். முடிவை நீங்கள் எடுங்கள்! விடிவை இறைவன் பார்த்துக்கொள்வார்!