ரஸவாதம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
நவீன காலத்து ஜென் ஞானியிடம், "பரிணாம வளர்ச்சி பற்றிய உங்களின் கருத்து என்ன?" என நிருபர் ஒருவர் கேட்டதற்கு, உடனடியாக பதிலேதும் சொல்லாமல் சிரித்தவர், அங்கிருந்த பக்தர்களிடம் சொன்னார்:
"ஆனந்தத்தை அழிப்பவன் மிருகம்.
ஆனந்தமாக இல்லாதவன் மனிதன்
ஆனந்தமாக இருப்பவர் ஞானி.
ஆனந்தத்தை அளிப்பவர் குரு.
அந்த ஆனந்தம் கடவுள்!
என்னைப் பொறுத்த அளவிற்கு இதுதான் பரிணாம வளர்ச்சி" என்றார்.
இந்தப் பட்டியல்படி அடுத்த நிலைகளுக்கு நீங்களும் செல்ல முடியும். ஆனால், ரஸவாதம் நிகழ நீங்கள் அனுமதிக்க வேண்டுமே!
★ இக்கட்டுரை, “எனக்கெல்லாம் ஞானம், ஆன்மீகம் தேவையில்லை” என்று எண்ணுபவர்களுக்கும் ஆன்மீகவாதிகளுக்கும் எழுதப்பட்டது.
★ விரும்பியதும் வரும் தூக்கம்!

ஞானமடைவதற்கான வழிகளை
சாதாரண வேதிவினைகள் போல
படிப்படியாக விளக்க முடியும்.
சுவாரஸ்யமான பாடமாக
எளிதாக கற்றுக்கொள்ள
முடியும்...
உற்சாகமிகு மாணவராக
நீங்கள் மாறிய
நொடியிலிருந்து!
★ விரும்பினாலும் வராத துக்கம்!
★ உள்ளிருந்து பொங்கும் ஆனந்தம்!
★ எதனாலும் கலங்காத நிதானம்!
★ வாழ்வைக் கொண்டாட உதவும் குதூகலம்!
இவற்றோடு சேர்ந்து உடலின் ஒவ்வொரு மயிர்க்காலும் இன்பத்தில் திளைத்திருக்கும்!
ஐம்புலன்களும் உற்சாகத்தின் உச்சியில் முழுமையாக இயங்கும்.
சுருங்கச் சொன்னால் மேற்சொன்ன அனைத்துமே ஞானிகளுடைய ஆனந்த நிலையின் நூறில் ஒரு பங்கு வெளிப்பாடுகள்.
இதற்கு மேற்பட்டவற்றை விளக்கும் அளவுக்கு வார்த்தைகள் இன்னும் வளரவில்லை.
★ உடலின் ஒவ்வொரு செல்லும் தித்திக்குமளவுக்கு ஆனந்தத்தில் திளைத்திருப்பதே ஞானம். தியானம், ஆனந்தம்.
★ ஆனந்தமடைவதற்கான ரஸவாதங்களைத் தியானமுறைகள் மற்றும் ஞானக்கருத்துகள் மூலமாக எளிதாக கற்றுத் தரும் மார்க்கம்தான் ஆன்மீகம்.
'ஆன்மீகம் உங்களுக்குத் தேவையா? தேவையில்லையா?'என்பதை முடிவு செய்து விட்டு கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்!
ஞானமடைதல் என்னும் நித்ய ஆனந்தத்தை ஒரு மனிதர் தன்னுள்ளே கண்டுகொள்வதற்கான வழிகளையும், உள் உலக மாற்றங்களையும் ஒருசேர ‘ரஸவாதம்’ என்று அழைக்கிறோம்.
ரஸவாதத்தை மக்களுக்குச் சென்று சேர்க்க புதுப்புது முறைகளை ஜு-மல்கி கையாள்வது வழக்கம்.
நகரின் நாற்சந்தியில் ஒரு அறிவிப்பு பலகையை வைத்தார்.
| சிறப்புக் காட்சிகள் இரண்டு! ஞாயிறு காலை 6 மணிக்கு 1. காலில்லாதவனின் ஆட்டம் அரங்கேற்றம். 2. கையில்லாதவனின் ஓவியம் வரைதல். | | :--- |
எதிர்பார்த்தபடியே மக்கள் கூட்டத்தால் அரங்கம் நிறைந்தது. ஜு-மல்கியைக் கடவுளாக மதித்த பக்தர்களும் ஆன்மீகச் சாதகர்களும் குழுமியிருந்தார்கள்.
சரியாக 6 மணிக்கு வந்து சேர்ந்த ஜு-மல்கி சிறப்புக் காட்சிக்குப் பதிலாகப் சொற்பொழிவை ஆரம்பித்துவிட்டார். அரை மணி நேரச் சொற்பொழிவு முழுவதும், “நீங்களும் கடவுள்தான். உங்களாலும் முழுமையான ஆனந்தத்தை அனுபவிக்க முடியும்” என்பதை சுவாரஸ்யம் கலந்து வலியுறுத்திக் கொண்டிருந்தார்.
ஜு-மல்கி எவ்வளவு விளக்கமாகப் பேசினாலும் அங்கிருந்தவர்கள் “இவர் சொல்வதெல்லாம் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்குச் சாத்தியமில்லை” என்றே எண்ணிக்கொண்டிருந்தார்கள்.
திடீரென்று அரங்கத்திற்குள் ஒரு முரட்டுக் கும்பல் கத்திக்கொண்டே நுழைந்தது.
கூடவே கூடையில் ஒரு மனிதரையும் பல்லாக்கில் இன்னொரு மனிதரையும் அமர வைத்து தூக்கிக்கொண்டு வந்தது அந்தக் கும்பல். அரங்கின் அமைதியைக் கலைத்தது. அரங்கை கலவரத் தோற்றம் பற்றிக்கொண்டது.
கும்பலைச் சேர்ந்த முரடன் ஒருவன், “ஜு-மல்கி! நீர் எதோ பெரிய ஞானியாமே, உம்மால் முடியாதது என்ற ஒன்றே இல்லையாமே.
| ஞான குரு | முடியாததும் முடியும்! உங்களால் முடியும் எனச் சொல்ல வந்தவரல்ல ஞானகுரு. உங்களால் முடியாததைக்கூட எளிதாய் முடித்திட புத்தியையும் சக்தியையும் வழியையும் காட்டிட - ஊட்டிட வந்தவரே ஞானகுரு! |
உமது அறிவிப்புப்பலகையைப் பார்த்தோம். உமக்குப் பாடம் புகட்டவே கையில்லாத ஒருவனையும் காலில்லாத ஒருவனையும் அழைத்து வந்திருக்கிறோம்.
எங்கே! இந்த நொண்டியை ஓட வைத்து, கை முடமானவனை வரைய வையும் பார்ப்போம்" என்று சவால்விட்டார்கள்.
ஜு-மல்கி நிதானமாக எழுந்து தன்னுடைய ஊன்றுகோலை கால் இல்லாதவனை நோக்கி நீட்டி, "எழுந்து நட" என்றார். கை முடமானவனைப் பார்த்து, "கைகளை வீசு" என்றார்.
எதுவும் நடக்கவில்லை. அரங்கில் அமைதி.
திடீரென தன் கையில் இருந்த ஊன்றுகோலால் இருவரையும் அடித்து விளாசினார்.
அடிதாளாமல், "ஐய்யோ! அம்மா!" என்று கத்திக்கொண்டே முதலில் கால் இல்லாதவன் கூடையிலிருந்து எம்பிக் குதித்தான்.
அடுத்து கையில்லாதவன் "வேண்டாம்! வேண்டாம்!" என்று அடிகளைத் தடுத்தபடி எம்பிக் குதித்தான்.
கூத்தாடிகளை வைத்து வேஷம் போட்ட முரட்டுக்கும்பலின் கள்ளநோக்கம் கலைந்தது.
உள்உலக ஆன்மீக உண்மைகளைப் புதிராக அறிவித்து, பின் மக்களுக்கு விளக்குவது மட்டுமே ஜு-மல்கியின் வழக்கம்.
ஆனால் இன்று, திட்டமிட்டு நாடகமாடி, தங்கள் குருவை கேவலப்படுத்த நினைத்த கும்பலைத் தாக்க பக்தர்கள் முயல... ஜு-மல்கி, "நிறுத்துங்கள்! நான் அரை மணி நேரமாகச் சொல்ல முயற்சித்ததை, வெறும் அரை நிமிடத்தில் அழகாக அவர்கள் சொல்லிவிட்டார்கள்" என்றார்.
பக்தர்கள் புரியாமல் பார்க்க, தொடர்ந்து ஜு-மல்கி, "பல நாட்களாக கால்களையும், கைகளையும் இயக்க மறந்ததால் தன்னை 'முடவன்' என்று நம்பிக்கொண்டு இருப்பவர் ஆடவோ, வரையவோ முயற்சித்தால் முதலில் அவருக்கு அது வேடிக்கையாகத்தான் இருக்கும்.
அவர் முயற்சியைத் தொடர்ந்தால்... விரைவிலேயே எதிர்பாராத ஒரு
| உ ரி மை | உரிமையை விட்டுக்கொடுக்காதீர்! அங்கமெங்கும் துள்ளித்திரியும் ஞானசக்தி! அத்தனையும் ஆழ்ந்தனுபவிக்கும் பேரானந்தம்! என்ன நடந்தாலும் கலையாதிருக்கும் நிம்மதி! ஆகிய அனைத்தையும் தியான ரஸவாதத்தால் அனைவரும் அடைய முடியும். ☞ இது மனிதனின் பிறப்புரிமை! |
தருணத்தில் கைகளோ, கால்களோ இயங்க ஆரம்பித்துவிடும். தான் முடவனல்ல என்பது அனுபவமாகிவிடும்.
ஆனந்தத்தை அடைவதற்கான வாசல் கதவு நம்முள் இதே போன்றுதான் திடீரெனத் திறந்துக்கொள்ளும்.
முடவன் என்று பொய்யாக நம்பிக்கொண்டிருப்பவர், "ஏன் இவர்கள் சொல்வது போல் முயற்சிக்கக் கூடாது என யோசித்து முயன்றால் மட்டுமே அவரால் கால் இருப்பதையே உணர முடியும்."
நம் உள்ளே இருக்கும் பொக்கிஷத்தைத்தான் நான் ஆனந்தக்கடல் என்கிறேன். முயன்றால் அந்தக் கடலில் நம்மால் குதிக்க முடியும்.
உள்ளே கடல் இருப்பதைக்
கண்டுகொள்வதற்கான முயற்சிதான் தியானம்.
தியானம் என்ற குச்சியால் உள்ளே அடித்து
விளாச ஆரம்பியுங்கள். திரை விலகும். கடல்
தெரியும். செய்து பாருங்கள். புரியும்.
என்னுடைய சொற்பொழிவின்
முடிவை அருமையாகச் சொல்ல உதவிய
முரட்டு நண்பர்களுக்கு நன்றி!" என்று கூறி
தன் சொற்பொழிவை முடித்தார்.
ஆனந்தமடைவதற்கான வழிமுறை முற்றிலும் அறிவியல் பூர்வமானது.
வேதியியலில் இந்த ரஸத்தோடு இந்த
வேதிப்பொருளைச் சேர்க்க இந்தப்
பொருள்தான் கிடைக்கும் என்று
ஆணித்தரமாக எப்படிக்கூற முடியுமோ,
அதுபோல் ஆனந்தத்தையும் கூற முடியும்.
ஆனந்த வழியைப் பகுதி, பகுதியாகப் பிரித்துக் காண்பிக்க முடியும்.
உங்களுக்குள்ளிருக்கும் ஆனந்த
ரஸம் விழிப்புணர்வோடு கலந்து
விட்டால் கிடைக்கும் பொருள்களுக்குப்
பெயர் தான் ஆனந்தம். இந்த ஆன்மீகயியல்
சம்பந்தப்பட்ட வினைகள்தான் ரஸவாதம்.

தியான ரஸவாதத்தின் சூட்சும விதிகள்
- உள்ளே... பார்க்க முடியாதவற்றைத் தொடர்ந்து பார்.
- முயற்சிகளற்ற முயற்சி செய்.
- உணரமுடியாதவற்றை உணர். ஆழமாய் உணர்.
நிரூபணம்:
இவற்றைப் படித்ததும்...
புதிர்போல் உங்களுக்கு ஒரு
முறைகூட தியான அனுபவம்
கிடைக்கவில்லை என்பது
உறுதியாகிறது. சிரத்தையோடு
தியானம் செய்யுங்கள்.
ரஸவாதம் நிகழட்டும்!
நாம் நம்பினாலும், நம்பாவிட்டாலும் நாம் ஆனந்த சக்தி ஓட்டத்தில்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இருந்தும் நமக்கிது தெரியவில்லை. காரணம் - விழிப்புணர்வு விரிந்து பரவவில்லை என்பதே!
மருத்துவக் குணமும் சக்தியும் கொண்ட நவபாஷாணம் என்பது, ஒன்பது விஷங்களை ஒன்றுசேர்த்து செய்யப்படுவது. ஒன்பது விஷங்களைச் சரியான அளவில், சரியான பக்குவத்தில் சேர்த்துவிட்டால், அடுத்த நிமிடமே நவபாஷாணம் ரெடி.
இதேபோல் நம் உடலில் ஏழு சக்திமையங்கள் இருக்கிறது. அவை சம்பந்தப்பட்ட உணர்வுகளின் பக்குவத்தில் ஏற்ற தாழ்வுகள் இருக்கிறது. இந்த ஏற்ற தாழ்வுகளே உடல் - மன நோய்களுக்கு வித்திடுகின்றன.
உடலில் ஏழு சக்கரங்களின் உணர்வுகளைச் சரியாகப் பக்குவப்படுத்தி, ஏழு சக்கரங்களின் சக்தி ஒடுங்கும் இடத்திற்குள் ஒடுங்கிப்போனால், அளப்பெரிய ஆனந்தக் கடலில் நுழைந்துவிடலாம்.
இன்று விஞ்ஞானம் நன்றாக வளர்ந்திருப்பதால், ஏழு சக்கரங்களின் உணர்வுகளைப் பக்குவப்படுத்தும் ரஸவாதத்தை தனி செய்முறை தியானங்களாகவே கற்றுக்கொள்ள முடியும்.
ரஸவாதத்தை உங்களுக்குள் நிகழ்த்திப் பாருங்கள்.
உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் தியானபீடத்தின் தியான சிகிச்சை மையங்களை அணுகினால் இலவசமாகவே தியானங்களைக் கற்றுப் பயன் பெறலாம்.
அர்த்தமுள்ள சம்பவம்
ஒக்லஹாமோ யுனிவர்சிட்டியில் ஒரு மருத்துவர் என்னிடம் கேட்டார் "நான் ஞானமடைந்து விட்டேனா இல்லையா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது. உறுதிசெய்வது?"
"நீங்கள் ஞானமடைந்து விட்டால், ஞானமடைந்தேனா இல்லையா என்ற சந்தேகம் இருக்காது. துளியளவுகூட சந்தேகமேயில்லாத அனுபவம் அது! இந்தச் சந்தேகம் இருக்கும்வரை நீங்கள் ஞானமடையவில்லை என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்" என்றேன்.
• ஞானமடைய உங்களுக்குள் நிகழும் ரஸவாதங்கள் ஆழமானவை. தெளிவானவை!
ஒரு கரு பெண்ணைத் தாயாக்குகிறது...
ஒரு குரு மனிதனை ஞானியாக்குகிறார்!
நீங்கள் ஞானியாவதற்கும்
நீங்கள் ஆனந்தமடைவதற்கும்
கண்டிப்பாக ஒரு குரு இருந்தாக வேண்டுமா?
இந்த வாசகத்தைப் படித்தபின் முடிவெடுங்கள்!
| ★ தனிமனிதன் சுயமாய் முடிவெடுக்காதவரை, ஒரு குருவோடு வாழ்நாள் முழுவதும் தங்கியிருந்தாலும் கூட குருவால் உதவ முடியாது. | குரு, உன் உரு உள் உள்ள குருவை விழிக்கச் செய்பவர்! |
| ★ தனி மனிதன் சுயமாய் முடிவெடுத்து விட்டால், ஒரு குருவின் உதவி அவனுக்குத் தேவையாய் இருக்காது. ஆனந்தத்தை அவனே அடைந்திடுவான் |
அப்படியென்றால் குருவின் உதவி எதற்கு? இதற்குத்தான்...
ஆனந்தமாய் வாழ முடிவெடுக்காதவனை முடிவெடுக்க வைப்பது சுலபமல்ல. அதற்கு ரஸவாதம் நிகழவேண்டும்.
அது நிகழாவிட்டால், முடிவெடுக்காத ஒரே ஒரு காரணத்தால், பல பிறவிகளை வீணடிக்க வேண்டியிருக்கும்.
தாய் வெறும் சமூக அந்தஸ்து. இன்னொரு புனைப்பெயர் மட்டுமே. ஆனால், தாய்மை என்பது மலர்ச்சி. அது குணமுதிர்ச்சி. தாய்மை குணத்தை எவராலும் பெறமுடியும். ஒரு ஆணால் கூட முடியும்.
காரணம் - அது குணரீதியான மாற்றம். உடல்ரீதியான மாற்றமல்ல.
ஒரு பெண், தாய்மைக் குணத்தைப் பெறுவதற்கு கரு ஒரு எளிய வழி. தாய் எனும் சமூக அந்தஸ்தும், சேய் எனும் வாழும் சாட்சியும் சேரச் சேர அப்பெண்ணுள் நிகழும் ரஸவாதங்கள் அவரை தாய்மை நோக்கித் தள்ளும்.
தாய்மையைப் பெறுவது ஒரு கௌரவமான இலக்காக மாறிவிடும். பெண் முழுத்தாயாக மாறுவாள் வெகு எளிதாக... இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டால்!
ஒருவர் ஞானமடைவதற்கு குரு ஒரு எளிய வழி. தியானம் தரும் பரவச அனுபவங்களும் ஞானக்கருத்துக்கள் தரும் பக்குவங்களும் சேரச் சேர- அவருக்குள் நிகழும் ரஸவாதங்கள் அவரை ஆனந்தம் நோக்கித்தள்ளும்.
A + B = C
நீ + விழிப்பு = ஞானம்.
ஞானமடைவது என்பது குருவின் செயல்களால் ஒரு கௌரவமான இலக்காக மாறிவிடும்.
மனிதன் ஞானியாவான் வெகு எளிதாக...
.குருவைப் பயன்படுத்திக் கொண்டால்! சுயமாய் முடிவெடுத்துவிட்டால்!