KAILASA Library/கதவைத் திற ... காற்று வரட்டும்!/நிதானமின்மைSign in
கதவைத் திற ... காற்று வரட்டும்!

நிதானமின்மை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

* கோபம், சீற்றம் என்பவை நிதானமின்மை இருப்பதற்கான வெளி அறிகுறிகள்.

* தடுமாற்ற உணர்வு, நிதானமின்மை இருப்பதற்கான உள்அறிகுறி.

* கோபப்படும் போது, சீற்றப்படும் போது, தடுமாறும் போது முழு உணர்வோடு இருப்பதுதான் விழிப்புணர்வோடு இருப்பது.

நம்எல்லோருடைய கோபமும் சிறுபிள்ளைத்தனமானது. இது மறுக்க முடியாத உண்மை.

கோபம் நம் வசம் இல்லை. கோபத்தின் வசத்தில்தான் நாம் இருக்கிறோம்.

வெளியில் ஏற்படும் சிறு மாற்றங்கள், உறவுகளின் சில தவறான நடவடிக்கைகள், எதிர்பார்த்தது எதிர்பார்த்தபடி இல்லாமல் போவது எனச் சிறு சிறு விஷயங்களுக்குத்தான் நாம் கோபப்படுகிறோம்.

வெளியில் ஏற்படும் சிறு மாற்றங்கள்தான், நம்மைச் சீற்றமடைய வைக்கின்றன.! நிலைகுலைய வைக்கின்றன.! நிதானத்தையே கலைக்கின்றன.! நிதானமின்மையை உருவாக்குகின்றன. எப்போதும் எந்தவொரு சூழ்நிலையிலும் நிதானமாக, முழுமையாக இருப்பதே ஞானம். அப்படிப்பட்ட ஒரு ஹஸித் (Hasid) ஞானி தான் ஜு-மல்கி.

portrait

தடுமாற்றுவது
உலகின்
இயல்பு.
தடுமாறுவது
மனதின்
இயல்பு.
தடுமாறாமல்
இருப்பது
ஆத்துமாவின்
இயல்பு!

ஜு-மல்கியிடம் இருக்கும் சீடர்களெல்லாம்
ஆனந்தமாக இருக்கிறார்கள். பலர் ஞானம்
அடைந்துவிட்டார்கள் என்ற செய்தி காட்டுத்
தீ போல ஊர் முழுவதும் பரவிவிட்டது.

சராசரி பரபரப்பு வாழ்க்கையிலிருந்து
கொண்டு, தனக்கு உடனடியாக ஞானம்
கிடைக்க வேண்டும் என்று விரும்பும்
கூட்டத்தைச் சேர்ந்தவர்தான் நெகெம்-ஸி.

ஒரு நாள் நெகெம்-ஸி, ஜு-மல்கியிடம்
வந்து, "எனக்கு ரொம்ப அவசரமாக ஞானம்
தேவைப்படுகிறது. உங்களால் அதை எனக்குள்
உடனடியாக ஏற்படுத்த முடியுமா?" என்று
கேட்டார்.

ஜு-மல்கி, "ஏனப்பா இவ்வளவு அவசரம்?
அவ்வளவு அவசரமாக நீ ஏன் ஞானத்தைப்
பெற வேண்டும்" என்று நெகெம்-ஸியிடம்
கேட்டார்.

"பெரிய முதலீட்டில் புது வியாபாரம் ஒன்று துவங்கி இருக்கிறேன். வியாபாரத்தை நிதானமாகக் கவனிக்கும் பக்குவம் எனக்கு இல்லை. மேலும்,

எனக்கு உறுதுணையாக இருந்த என்னுடைய தந்தைக்கும் உடல்நலம் ரொம்ப மோசமாகிக்கொண்டே வருகிறது. எனவே, எவ்வளவு சீக்கிரம் ஞானம் அடைய முடியுமோ? அவ்வளவு சீக்கிரம் ஞானம் அடைய வேண்டும். அப்போதுதான் என்னால் நிதானமாக வாழமுடியும். நான் சீக்கிரம் ஞானம் அடைவதற்கு ஏதாவது ஒரு வழியைச் சீக்கிரமாகக் கூறுங்கள்” என்று படபடப்போடு கேட்டார் நெகெம்-ஸி. ஜு-மல்கி சற்றும் மாறாத நிதானமான புன்முறுவலோடு அவரை ஏற - இறங்கப் பார்த்துவிட்டு, “குறைந்தபட்சம் பன்னிரண்டு மாதமாவது தேவைப்படும்” என்றார்.

“நீங்கள் என்ன சொன்னாலும் கேட்கிறேன். எவ்வளவு கடினமான யோகம், தியானம் செய்யச் சொன்னாலும் செய்கிறேன். ஒரு வருடம் வேண்டாம். கொஞ்சம் சீக்கிரம் ஞானம் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்” என்று கெஞ்சிக் கேட்டார் நெகெம்-ஸி. ஜு-மல்கி, “இந்த அளவுக்கு அவசரமும் தடுமாற்றமும் உனக்குள் இருந்தால் ஞானம் கிடைப்பதற்குக் குறைந்தபட்சம் ஐந்து, ஆறு வருடமாவது உழைக்க வேண்டும்” என்றார்.

நெகெம் - ஸியால் இந்தவிதமான பதிலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன் நிலையையும் அவசரத்தையும் இந்த மனிதர் கொஞ்சம்கூடப் புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறாரே என்று கோபப்பட்டார்.

ஜு-மல்கியோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் மீண்டும் நிதானமாகச் சொன்னார்.

“இவ்வளவு தடுமாற்றமும் அவசரமும் இருந்தால் ரொம்பக் கஷ்டமப்பா. குறைந்தது பத்துப் பதினைந்து வருடங்களாவது ஆன்மீகப் பாதையில்

நீஒரு விஷயத்தை ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
தாஎவ்வளவுக்கெவ்வளவு அவசரம் இருக்கிறதோ,
னஅவ்வளவுக்கவ்வளவு கோபமும் சீற்றமும் இருக்கும். கோபமும்
மிசீற்றமும் இருக்கும் அளவைப் பொறுத்து நிதானம் பாதிக்கப்பட்டு,
ன்நிதானமின்மை ஏற்படும்!
மை

இல்லாவிட்டால் ஞானம், நிதானம் பற்றி உன்னால் கற்பனையில்கூட அனுபவிக்க முடியாது" என்றார்.

நெகெம்-ஸிக்குக் குழப்பம் தாளவில்லை. "அப்போ நான் என்னதான் செய்வது?" என்றார் மிகத் தடுமாற்றத்தோடு.

ஜூ-மல்கி கருணையோடு, உன்னை நோகடிக்க வேண்டும் என்பது என் நோக்கம் அல்ல. உண்மையைப் புரிய வைக்கவே இவ்வாறு பேசினேன்.

ஒரு விஷயத்தை ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு அவசரம் இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு கோபமும் சீற்றமும் இருக்கும். கோபமும் சீற்றமும் இருக்கும் அளவைப் பொறுத்து நிதானம் பாதிக்கப்பட்டு, நிதானமின்மை ஏற்படும்.

அவசரப்படுவதை நிறுத்தி, உன்னை நீயே திரும்ப உள்முகமாகப் பார். அவசரம் குறையும். அதுவரை என் அருகில்கூட வராதே!" என்று கூறி அனுப்பிவிட்டார். அடக்க முடியாத கோபத்தோடு அங்கிருந்து வெளியேறினார் நெகெம்-ஸி.

நிலநடுக்கத்தைப் போல ஒவ்வொரு கோபத்திலும் அகநடுக்கம் ஏற்படுகிறது. நாடிநரம்புகள் உலுக்கப்படுகின்றன. ஒவ்வொரு செல்லும் கொதிக்கிறது.

இதனால் யாருக்கு என்ன பிரயோஜனம்? கொஞ்சம் யோசியுங்கள்.

நெகெம்-ஸி போலக் கோபப்படாமல், தயவுசெய்து உங்களுக்குள் ஒளிந்திருக்கும் உங்களைக் கொஞ்சம் உற்றுப்பாருங்கள்.

உ ண ர் வுகோபப்படும் போது, சீற்றப்படும் போது, தடுமாறும் போது முழுஉணர்வோடு இருப்பதுதான், விழிப்புணர்வோடு இருப்பது!

தடுமாற்றங்கள் எவ்வளவு? கோபங்கள் எவ்வளவு? எரிச்சல் எவ்வளவு என்று புரியவரும்.

நம்முடைய நிதானம் எந்த அளவுக்குக் களங்கப்பட்டு நிதானமின்மையாக மாறியிருக்கிறது என்று தெரியவரும்.

தவறுகளைக்
கண்டுபிடித்துவிட்டீர்களா? "ஆம்"
என்றால் நிதானத்திற்கான முதல் அடியை
நீங்கள் எடுத்து வைத்து விட்டீர்கள். ஆம்.
தடுமாற்றம் தன்னிடம் இருக்கிறது என்பதை
ஒப்புக்கொள்வதற்கே திறந்த மனது
வேண்டும்.

அதையும் தாண்டி, தன்னிடம்
தடுமாற்றம் எந்த வகையில், எப்படி
இருக்கிறது என்பதையும்
கண்டுபிடித்துவிட்டால் தெரிந்து
கொள்ளுங்கள், நிதானமின்மையிலிருந்து
நிதானம் நோக்கி நடக்க
ஆரம்பித்துவிட்டீர்கள்.

Nithyananda

வெளிஉலகில்
வாழும் மனிதர்கள் தங்கள்
உள்உலகத்திற்குள்
செல்வதற்கான
பாலத்தைக்
கண்டுபிப்பதுதான் -
உள்உலகச் சாதனையின்
முதல்படி!

வெளிஉலகில் வாழும் மனிதர்கள்
தங்கள் உள் உலகத்திற்குள்
செல்வதற்கான பாலத்தைக்
கண்டுபிப்பதுதான் உள்உலகச்
சாதனையின் முதல்படி!

தடுமாற்றத்தைக் கண்டுபிடிப்பது, பாலத்தைக் கண்டுபிடிப்பதற்குச் சமம். தடுமாற்றத்தைத் தாண்டுங்கள். தடுமாற்றம் அற்ற நிதானம் உங்களுக்காக உங்களுக்குள்ளேயே காத்துக் கொண்டிருக்கிறது.

தட்டுத்தடுமாறினாலும் பரவாயில்லை என்று தடுமாற்றத்திற்குள் தைரியமாக, விழிப்புணர்வோடு நுழைந்து வெளியே வருவதுதான் தடுமாற்றத்தைத் தாண்டுவதற்கான எளிய வழி.

நிதானமின்மைக்குள் புகுந்து, நிதானம் நோக்கிய பயணத்தை இந்த நிமிடம் முதல் ஆரம்பியுங்கள்.

நிதானம் பெற்றுவிட்டால் நீங்களும் ஒரு ஜு-மல்கியாக மாறமுடியும். நிம்மதியை உங்களுக்கும் உலகுக்கும் தானமாக வாரி வாரிக் கொடுக்க முடியும்!

நிதானமின்மையிலேயே வாழ்ந்தால் நெகெம்-ஸி போல் ஞானியே கூறினாலும் நமது தடுமாற்றமே நமக்குப் பெரிதாகப்பட்டு, நாமும் நொந்து மற்றவர்களையும் நோகவைத்து, நிம்மதியை இழக்க வேண்டியதுதான். யோசியுங்கள். நிதானம் நோக்கி நடக்க ஆரம்பியுங்கள்!

Portrait of Nithyananda

மனிதனை

மகானாக்கும் வழி