KAILASA Library/கதவைத் திற ... காற்று வரட்டும்!/வெறி வெறுப்புSign in
கதவைத் திற ... காற்று வரட்டும்!

வெறி வெறுப்பு

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஆனந்தி மதபோதகரைச் சந்தித்தார்.

தன் செல்ல நாய்க்குட்டி பப்பி அகால மரணமடைந்துவிட்டதால் மதவிதிப்படி தன் பப்பிக்கு ஈமச்சடங்குச் செய்ய வேண்டும் என வெகு உருக்கத்தோடு கேட்டுக்கொண்டார்.

"என்ன இது! ஒரு நாய்க்காக நான் இறைவனிடம் பேசுவதா? இது முழு மடத்தனம்" என வெறுப்புக் குரலில் வெடித்தார் மதபோதகர்.

ஆனந்தி, "ஐந்நூறு டாலர்கூட கொடுக்கத் தயாராக இருக்கிறேன். நீங்கள் முடியாது என்று சொல்லிவிட்டீர்கள். உங்களுக்குத் தெரிந்த வேறு யாராவது இந்தச் சடங்கு செய்வதாய் இருந்தால் சொல்லுங்கள். என் பப்பி எனக்கு முக்கியம்" என்றார்.

ஐந்நூறு டாலர் என ஆனந்தி சொன்னதும், "நீங்கள் ஆரம்பத்திலிருந்து தெளிவாகப் பேசவே இல்லை. உங்களுடைய நாயும் நம் மதத்தைச் சேர்ந்தது என்று சொல்லாமல் மறைத்துவிட்டீர்கள். நம் மத நாய்களுக்கு நானே எல்லாம் செய்வேனென்பது உங்களுக்குத் தெரியாது போலிருக்கிறது. பக்கத்து ஊரிலிருப்பவர் ஐந்நூறு டாலருக்கு மேல் கேட்பார். அவர் வேண்டாம்" என தன் விருப்பத்தைத் தெரிவிக்கும் குரலில் சொன்னாராம்!

  • வெறிக்கு ஒரு காரணம், வெறுப்புக்கு ஒரு காரணம்.

இரண்டுமே எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வரலாம். எதன் மீதும் ஏற்படலாம்.

காரணம், இரண்டுமே ஆசை என்னும் அசுரனுக்குப் பிறந்த குழந்தைகள்.

★ நன்றாக இருந்தால் வேரோடு பிடுங்குவது!
இல்லை என்றால் காரித்துப்புவது!
வெறுத்து ஒதுக்குவது!

  • இது மனதின் முக்கியமான குணங்களில் ஒன்று.

★ வெறியும் வெறுப்பும் மனதின் கறுப்புப் பக்கங்கள்.

★ மற்றவரை ஏமாற்றி, தான் ஏமாறுவது வெறி. தன்னை ஏமாற்றி, மற்றவரை ஏமாற்றுவது வெறுப்பு.

★ வாழத்தெரிந்தவர் எதையும் வெறுக்கமாட்டார். வாழத் தெரியாதவர் எதன் மீதும் வெறிகொள்ளவார் - வெகு எளிதாக!

ஆட்டிவிடப்பட்ட பெண்டுலம் தொடந்து இரண்டு பக்கமும் அலைந்து கொண்டே இருக்கும். வலப்பக்கம் நகர்ந்த பெண்டுலம் வலதுமுனையை அடைந்த அடுத்த நொடியே இடதுமுனை நோக்கி நகர ஆரம்பித்துவிடும்.

ஆசை என்ற உந்துதலால் தள்ளப்பட்ட மனமும் வெறி அல்லது வெறுப்பு இந்த இரண்டில் ஏதாவது ஒன்றைப் பற்றிக் கொள்ளும்.

சில நேரம் வெறி...

சில நேரம் வெறுப்பு....

  • என்ற கணக்கில்தான் பலரின் மொத்த வாழ்க்கையும் சென்று கொண்டிருக்கிறது.

கிட்டத்தட்ட எல்லா மனிதர்களுமே சமுதாயத்தின் சில அம்சங்களில் வெறியாக இருப்பது. வேறு சிலவற்றை வெறுப்பது என்பது பரவலாகிப் போன பரிதாபம்.

Nithyananda speaking

'வெறுப்பிற்குரியவர்
ஏதோவொரு வகையில்
விருப்பத்திற்குரியவர்.
இல்லாவிட்டால்
என் வெறுப்பிற்குரியவர்
எனக் காரணம் சொல்லி
திரும்பத் திரும்ப
அவரையே நினைத்துக்
கொண்டிருப்பீர்கள்?'
- ஆழ்மன ரகசியம்

பாசமும் பகையும் சில நேரங்களில்
வெறியாகவும் சில நேரங்களில்
வெறுப்பாகவும்

மதம் சிலநேரங்களில் வெறியாகவும் வெறுப்பாகவும்

காமம் என்பது சில நேரங்களில்
வெறியாகவும் சில நேரங்களில்
வெறுப்பாகவும்

பேர், புகழ் போன்றவற்றில் வெறியும்,
வெறுப்பும் - இப்படி மனித மனம் வெறி
அல்லது வெறுப்பைப் பற்றிக்கொண்டு
மனிதர்களை படாதபாடு பட வைக்கிறது.

நீதிநெறிகளைத் தங்களுக்குச்
சாதகமாக்கி சிலவற்றை வெறுப்பதும் நீதி
நெறிகளை தங்கள் மனவெறிக்காக
மீறுவதும் - இரண்டுமே மனிதரை
துன்பத்தில் மூழ்க வைத்துவிடும்.

வெறி, வெறுப்பை விளக்க ஓர் அருமையான சம்பவம்.

புத்தரிடம் சீடனாக அரசன் ஒருவன் வந்திருந்தார். புத்தர் புன்சிரிப்போடு அரசனை சீடனாக ஏற்றுக்கொண்டார். ஆனால் அங்கிருந்த மற்ற அனைவருக்கும், “இந்த அரசனைப் பற்றி எல்லாம் தெரிந்திருந்தும் ஏன் புத்தர் ஏற்றுக்கொண்டார்” என்ற கவலை.

கவலையோடு இருந்தவர்களை புத்தர் பார்த்து சிரித்துவிட்டு, “போகப் போகப் புரியும்” என்றார்.

மது, மாது, மாடமாளிகை, மக்களைத் தனக்கு அடிமையாக வைத்துத் துன்புறுத்துதல் என்று வாழ்ந்து வந்த அரசன், “தன்னைப் போல் உல்லாசமாக வாழ்ந்தவர்கள் வேறு யாரும் இருக்கக்கூடாது” என்ற கர்வவெறியில்தான் அரச வாழ்க்கையை வாழ ஆரம்பித்தான்.

உல்லாசம் என்ற பெயரில் வாழ்ந்த வாழ்க்கை, சில காலமே சந்தோஷத்தைக் கொடுத்தது. புத்தரைப் பற்றிக் கேள்விப்பட்ட அரசன் திடீரென்று எண்ணத்தை மாற்றிக் கொண்டான். “புத்தர் கூறும் நிலையான ஆனந்தத்தை எப்பாடுபட்டாவது அடைந்தாக வேண்டும்” என்ற முடிவுக்கு வந்தான்.

“இவ்வளவு காலம் சுகபோகியாக, அயோக்கியனாக கொடுங்கோலனாக வாழ்ந்த இவனால் எப்படித் துறவறம் மேற்கொள்ள முடியும்?...

எப்படிக் கடுமையான தவ, தியானங்களில் ஈடுபட முடியும்?

மது, மாது இல்லாமல் இவனால் இருக்க முடியுமா?

திமிர் பிடித்த இவனால், ஒரு குருவுக்கு கீழ் அடங்கி, ஒடுங்கி இருக்கமுடியுமா?...” என்று புத்த துறவிகள் ஒருவர் மாறி ஒருவர், அரசனை விமர்சனம் செய்தபடி இருந்தனர்.

விமர்சனம் செய்த அனைவரும் ஆச்சரியப்பட்டுப்போனார்கள்.

காரணம் - புத்த துறவிகளுக்குக் கொடுக்கப்பட்டிருந்த எல்லா விதிமுறைகளையும் அரசன் அணுகிய விதம்...

துறவிகள் காலில் அணியும் பாதுகை (செருப்பு) இல்லாமல் நடுரோட்டில் நடந்து சென்றால், அரசன் பாதுகையும் இல்லாமல் ரோட்டு ஓரத்தில் முள்ளும், கல்லும் நிறைந்த இடத்தில் நடந்துசெல்வார்...

ரஉங்களின் ஒவ்வொரு அசையும் பிரபஞ்சத்தையே உலுக்குகிறது
க- வேத ரகசியம்
சி
யஒரு எலக்ட்ரான் அசைக்கப்பட்டால் இந்தப் பிரபஞ்சமே
ம்நடுங்குகிறது. - Quantum physics

தங்களை வருத்திக்கொள்ளத் துறவிகள் ஒரு வேளை உணவு குறைத்து இரண்டு வேளை மாத்திரமே சாப்பிட்டால், அரசன் ஒரே ஒரு வேளை மாத்திரமே சாப்பிட்டான்.

குளிருக்குப் பயந்து போர்த்திக்கொள்வதற்காக கம்பளி எடுத்துச் சென்றால், அது ஒரு பற்றாகிவிடும் என்பதற்காக அந்தத் துறவிகள் போர்வைகூடப் பயன்படுத்துவதில்லை. அரசன் போர்வை பயன்படுத்தாததோடு அந்தக் குளிரிலும் மடாலாயத்திற்கு வெளியே படுக்க ஆரம்பித்தான்.

இப்படி, துறவறத்திற்கு இருந்த விதிகள் அனைத்தையும் எவ்வளவு கடுமையாகக் கடைப்பிடிக்க முடியுமோ அவ்வளவு கடுமையாக அரசன் கடைப்பிடித்தான்.

நாம் வேறு,
நிகழ்காலம் வேறு
எனப் பிரிக்கவே முடியாது!

விமர்சித்தவர்கள் அனைவவரும் வாயடைத்துப் போனார்கள். அரசன் மீது எல்லோருக்கும் மதிப்பு வர ஆரம்பத்தது.

இப்போது புத்தர் அதே புன்முறுவலோடு அனைத்தையும் கவனித்துக் கொண்டு வந்தார்.

அரசனின் கட்டுடல் மெலிந்து பார்ப்பதற்குப் பரிதாபமாக மாறிவிட்டான்.

ஒரு நாள் துறவியாக மாறிய அரசனை அழைத்தார் புத்தர்.

புத்தர், “இப்போது ஆனந்தமாக இருக்கிறாயா?” என்று கேட்டார்.

அரசன், “ இல்லை…” என்றான்.

“அப்புறம் ஏன் இன்னும் துறவியாக இருக்கிறாய்?”

“அது… துறவறம் எடுத்துக்கொண்ட முதல் சில வாரங்கள் மட்டுமே நான்

| விருப்பங்களை அனுபவிக்காவிட்டால்... | | :--- | | விரு விருப்பங்களை அனுபவிக்காவிட்டால்... | | ப்பு இன்றைய விருப்பு நாளைய வெறி! | | ம் இன்றைய வெறி நாளைய வெறுப்பு! | | அனுபவியுங்கள், விடுதலையடைவீர்கள். |

சந்தோஷமாக இருந்தேன். நாளாக நாளாக அது மறைந்துவிட்டது".

"இதுதான் உன் பிரச்சனை."

அரசனாக இருந்த போது 'மிக உல்லாசமாக வாழ்ந்தவன் நானாகத்தான் இருக்க வேண்டும்' என்ற வெறி இப்போது 'மிகச்சரியாக வாழ்ந்த துறவி நானாகத்தான் இருக்க வேண்டும்' என்ற வெறியாக மாறிவிட்டது.

சுகபோகத்தின் மீதிருந்த வெறி, இப்போது வெறுப்பாகிவிட்டது.

நிலையான ஆனந்தம் அடைய
வேண்டும் என்ற உன்னதமான நோக்கம்
மறைந்துவிட்டது. மனம், வெறி என்ற ஒரு
முனையிலிருந்து வெறுப்பு என்ற அடுத்த
முனைக்கு தாவிவிட்டது.

வெறியும் தவறு.

வெறுப்பும் தவறு.

வெறிக்கும் வெறுப்புக்கும் 'மத்தியில் வாழ்' கற்றுக்கொள். பிரச்சனை தீர்ந்துவிடும்" என்று கூறி முடித்தார் புத்தர்.

கண்ணீர் மல்க புத்தரின் காலடியில்
விழுந்த அரசன் அன்று முதல் வாழக் கற்றுக்
கொண்டார்

வெறிக்குத் தீர்வு வெறியை வெறுப்பது அல்ல.

இந்த அணுகுமுறை பணத்திலிருந்து...
மதம்... காமம் வரை எல்லாவற்றுக்கும்
பொருந்தும்.

Nithyananda

'ஆசைப்படப்பட ஆய்வருந்
துன்பம் ஆசைவிடவிட
ஆனந்தமாமே!' - திருமூலர்.

• ஆசைகள் கிளைவிட
துன்பம் கூடு கட்டும். வெறியும்
வெறுப்பும் குஞ்சு பொரிக்கும்.
ஆசையை விடு. அல்லது,
அதை அனுபவி. விடு
யோகியாவாய்! அனுபவி
தியானியாவாய்! எதை நீ
செய்தாலும் ஆனந்தமாவாய்!

ஒரு வெறியிலிருந்து தப்பிப்பதற்காக அந்த விஷயத்தை வெறுக்க ஆரம்பித்தால், வெறி மனதில் இன்னும் ஆழமாகச் சென்று மறைந்துகொள்ளும். நிலைமை முன்பை விட மோசமாகிவிடும்.

உங்கள் மனதை ஆராயுங்கள்.

உள்ளுக்குள் இருக்கும் வெறி, வெறுப்பு இரண்டையும் பட்டியலிடுங்கள். இரண்டையுமே தூக்கி எறியுங்கள். விழிப்புணர்வோடு அணுகினால் புத்தர் அரசருக்குக் கூறிய, 'மத்தியில் வாழ்வது' எப்படி என்பது புரிந்துவிடும்.

உங்களின் ஆனந்தம் நோக்கிய பயணம் இனிதே தொடரும்.

அர்த்தமுள்ள சம்பவம்...

அந்த அத்வைத ஞானி, 'புத்தரின் மத்தியில் வாழ்' என்பதை புரிந்துக்கொள்ளச் சொல்லும் உதாரணம்,

"வீணையின் கம்பி இழைகளை இறுக்க முடுக்கினால் அது அறுந்துவிடும். முடுக்காவிட்டால் வீணையை இசைக்க முடியாது. இசையை எழுப்ப, வீணை மத்தியில் முடுக்கப்பட வேண்டும்".

  • எல்லாவற்றிலும் நடுநிலையிலிருங்கள். ஆனந்த இசை வெளிப்படும்.

காத்திருப்புக் காலங்களை தியானக்காலங்களாக மாற்றுங்கள்!

ஒரு பேருந்துக்காக, ஒரு நபருக்காக, ஒரு ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் நேரங்களில், உங்களின் மனம் பொங்கியெழும்.

உங்களின் உள்ளே குடியிருக்கும் பொறுமையின்மை எட்டிப் பார்க்கும் காலங்கள் அவை!

நீங்கள் நினைத்தால், இந்தத் காலங்களையெல்லாம் தியானக் காலங்களாக மாற்ற முடியும்.

வெறியும் வெறுப்பும்தான் பொறுமையின்மையின் ஆணிவேர்கள். மனத்தடுமாற்றத்தின் காரணகர்த்தாக்கள்.

நாம் காத்திருக்கும் காலங்களில், நம்முள்ளேயிருக்கும் மேற்கண்ட மனக் குறைகள் கிண்டியெடுக்கப்படும்.

பொறுமையின்மையால் மனம் தடுமாறும் காலங்களில்...

உங்களின் கட்டுப்பாட்டை இழக்கிறீர்கள்.

விழிப்புணர்வின்மையில் விழுகிறீர்கள்!

விழிப்புச் சேர...
‘காத்திருப்பு’ உன்
திருப்புமுனை!

இதுபோன்ற காலங்களில் நீங்கள் படும் தடுமாற்றங்களை முழுமையாக அனுபவியுங்கள். சுயக்கட்டுப்பாடு அதிகமாவதை உணர்வீர்கள். விழிப்புணர்வற்ற நிலையிலிருந்து விழிப்பு நிலை நோக்கி நகர்வீர்கள்.

விழிப்பு அதிகமாக அதிகமாக நம்மைத் தடுமாற வைக்கும் மனக்குறைகள் தடுமாற ஆரம்பிக்கும்.

வாழ்வின் சஞ்சலங்கள் மறைந்து, சந்தோஷம் உதிக்கும்.